Tuesday, February 12, 2008

தகவல் தொழில்நுட்ப சுயதொழில் வாய்ப்புகள் (Part 3)

தகவல் தொழில்நுட்ப துறையில் - சுயதொழில் செய்ய ஏன் முழு நேர இணைய இணைப்பு வேண்டும் ?

நீங்கள் வசிக்கும் இடத்துக்கு அருகிலேயே கணினி மையம் இருந்தால், அதனை பயன்படுத்திக்கொள்ளலாமே...ஏன் இணைய இணைப்பு ? என்று நீங்கள் கேட்கலாம்...இணைய இணைப்பின் தேவைப்பாடு 90 சதவீதம் என்று சொல்வேன் நான்...இணைய இணைப்பு இல்லாமலேயே இந்த துறையில் சுயதொழில் முனைவோர் வெற்றிகரமாக இருக்கத்தான் செய்கிறார்கள்....

நீங்கள் செய்யும் பணி உலகளாவிய அளவில் இருப்பதால் / பொதுவாக அமெரிக்க தொழில் முனைவோர் சுயதொழில் பணியாளர்களை தேடுவதால், இந்த நேரம் என்றில்லாமல் எந்த நேரமும் உங்களுக்கு மின்னஞ்சல் வரக்கூடும்...

உங்கள் பணியை நீங்கள் நிறைவு செய்யும் நேரம் நள்ளிரவு எனில் அந்த நேரத்தில் நீங்கள் மின்னஞ்சல் அனுப்பினால், அவை உடனே உங்கள் வாடிக்கையாளருக்கு கிடைக்கப்பெறும்...நீங்கள் பணியை விரைந்து முடித்ததை கட்டாயம் பாராட்டுவார்கள்...

இணைய மையத்துக்கு சென்று இரவு இரண்டு மணிக்கு கதவைத்தட்டினால் நன்றாக இருக்குமா ? அல்லது அந்த நேரம் வரை திறந்திருக்கும் இணைய மையம் தான் உள்ளதா தமிழகத்தில்...

ஆகவே, இணைய இணைப்பு இருந்தால் மிகவும் சிறப்பு...அவ்வாறு இணைய இணைப்பு கிடைக்கப்பெறாத இடத்தில் இருந்தீர்களேயானால், சில வரையறைகளுக்குட்பட்டே இந்த தொழில் செய்யமுடியும் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன்...

தகவல் தொழில்நுட்பத்துறையில் சுயதொழில் செய்ய கடன் அட்டை (கிரெடிட் கார்ட்) ஏன் வேண்டும் ?

பணிகளை நீங்கள் பெறப்போவது இணையத்தில்...பணிகளை முடித்து அனுப்பப்போவதும் இணையத்தில்...ஆகவே உங்கள் பணிகளுக்கான சம்பளமும் இணையத்தில் தான் உங்களுக்கு கிடைக்கும்...

இணையத்தில் பணப்பரிமாற்றம் செய்ய பே-பால் கணக்கை பெரும்பாலான வாடிக்கையாளர்கள் உபயோகப்படுத்துவார்கள்...இந்தியாவைச்சேர்ந்த வாடிக்கையாளார்கள் எனில் உங்கள் வங்கி கணக்குக்கு அவர்களால் பணம் செலுத்த இயலும்...ஆனால் பெரும்பாலான வாடிக்கையாளர்கள் அமெரிக்கா / ஐரோப்பா / பிரிட்டன் போன்ற நாடுகளில் இருப்பதால் கட்டாயம் உங்களுக்கு ஒரு பே-பால் கணக்கு தேவைப்படுகிறது...

பே-பால் கணக்கு உருவாக்குவது என்பதை அதற்கான அத்தியாயத்தில் பார்க்கலாம்...ஆனால் உங்கள் பணத்தை பே-பாலில் பெறவேண்டும் என்றால் உங்களுக்கு பே-பால் கணக்கு கட்டாயமாக இருக்கவேண்டும் என்பதை மட்டும் இப்போது அறிந்துகொள்ளுங்கள்...

பே-பால் கணக்கை உருவாக்க உங்களுக்கு ஒரு வங்கி கடன் அட்டை கணக்கு கட்டாயமாக தேவைப்படுகிறது...

கீழே உள்ள இணைய முகவரியில் சில வங்கிகளில் கடன் அட்டைக்கு விண்ணப்பிப்பதற்கான சுட்டியை தந்துள்ளேன்..

ஐசிஐசிஐ வங்கி http://www.icicibank.com/pfsuser/cards/creditcard/cc_home.htm
பாரத ஸ்டேட் வங்கி http://www.sbicard.com/sbi/
ஹெச்.டி.எப்.சி வங்கி https://hdfcbank.com/personal/cards/default.htm

கடன் அட்டை பற்றி உங்களுக்கு தெளிவான பார்வை இல்லை எனில் இது குறித்து அறிந்துள்ள அல்லது ஏற்கனவே கடன் அட்டை வைத்துள்ள உங்களது நன்பர்கள் யாரையாவது நாடுதல் சால சிறந்தது...

உங்களுடைய தேவைக்கு தகுந்தது போல குறைந்த பண அளவு கொண்டதாகவோ, அல்லது அதிக பண அளவு கொண்டதாகவோ ஒரு கடன் அட்டையை தேசியமயமாக்கப்பட்ட அல்லது தனியார் வங்கிகளிலோ பெற்றுக்கொள்ளுங்கள்...

தகவல் தொழில்நுட்பத்துறையில் சுயதொழில்: புதிய மின்னஞ்சல் உருவாக்குங்கள்...

இணையம் தொடர்பான தொழிலில் அல்லது கணிப்பொறி சம்பந்தமான துறையில் நீங்கள் ஏற்கனவே இருந்தால் மின்னஞ்சல் கணக்கு துவங்குதல் பற்றி சொல்லவேண்டிய அவசியம் ஏதும் இல்லை...

இருந்தாலும், புதிய பயனர்கள், கணிணி துறை சாராதவர்கள் இந்த கட்டுரையை படிக்கும் போது பயனுள்ளதாக இருக்கவேண்டும் என்பதால் புதிய மின்னஞ்சல் உருவாக்குதல் பற்றியும் சொல்லவேண்டிய அவசியமாகிறது...

ஏற்கனவே உங்களுக்கு ஒரு மின்னஞ்சல் கணக்கு இருந்தாலும் பரவாயில்லை...இணையம் மூலம் தொழில்முனைவோராக செயல்படப்போகும் உங்களுக்கு கண்டிப்பாக இதற்கென தனி மின்னஞ்சல் இருப்பது பயன் தரும்...

உங்களுக்கென ஒரு ஜி-மெயில் கணக்கை துவங்கிக்கொள்ளுங்கள்...

இங்கே செல்லுங்கள் www.gmail.com

உங்கள் மின்னஞ்சல் கணக்கு ப்ரொபெஷனலாக இருக்கட்டும்...கூடுமானவரை ஆங்கில பெயர்கள் அல்லது சிறிய/நறுக்கான பெயர்கள் பலன் தரும்...

உங்கள் கடவுச்சொல்லை (Password) எண்கள்,எழுத்துக்கள் கலந்த கலவையாக வைத்துக்கொள்ளுங்கள்...கூடுமானவரை உங்கள் கடவுச்சொல்லை அடுத்தவரிடம் கூறுவதை தவிர்க்கவும்...

பே-பால் ( Paypal) கணக்கு துவங்குவது எப்படி ?

முதலில் பே-பால் என்றால் என்ன என்று தெரிந்துகொள்ளுங்கள்...பே-பால் என்பது இணையத்தின் வழி பணப்பரிமாற்றம் செய்யும் எளிய முறையாகும்...இந்த முறையில் உலகெங்கும் உள்ள மின்னஞ்சல் கணக்குக்கு பணம் அனுப்ப இயலும்...

முதலில் பே-பால் இணைய தளத்தை பற்றிய முழுமையான அறிமுகத்தை பே-பால் தளத்தின் உதவிப்பக்கத்தில் சென்று (help page) கற்கலாம்...

பே-பால் தளத்தில் மூன்று விதமான கணக்குகள் உண்டு...சிறிய அளவில் பணப்பரிமாற்றம் செய்ய தனிப்பட்ட கணக்கு, பிரிமியர் கணக்கு (சிறிய இணையதள தொழில்முனைவோருக்கான - இணைய தளத்தில் பொருட்களை விற்போருக்கான கணக்கு), பிஸினஸ் கணக்கு ( அதிக அளவில் பணப்பரிமாற்றம் செய்யக்கூடிய / நிறுவனங்கள் உபயோகப்படுத்தும் கணக்கு).

இணையதள சுயதொழில் தொடங்கும் நமக்கு தனிப்பட்ட கணக்கு (Personal Account) போதுமானது...

பே-பால் உதவித்தளத்தில் உள்ள முக்கியமான இரண்டு கேள்வி-பதில்களை இங்கே பார்க்கலாம்...

கேள்வி : பே-பால் தளத்தின் சேவை இலவசமா ?

பதில் : ஆம். பே-பால் தளத்தின் சேவை முற்றிலும் இலவசமானது....பே-பால் கணக்கை உருவாக்குவதும், பே-பால் சேவைத்தளத்தின் மூலம் உலகெங்கிலும் உள்ள உற்றார் உறவினருக்கு பணத்தை அனுப்புவதும் முழுவதும் இலவச சேவையாகும்...பே-பால் கணக்கில் இருந்து உங்கள் வங்கி கணக்குக்கு பணத்தை பரிமாற்றம் செய்வதும் முழுமையான இலவச சேவையாகும்..

கேள்வி:என்னுடைய முகவரியை / என்னுடைய இருப்பிடத்தை பே-பால் நிறுவனத்துக்கும், மற்றவர்களுக்கும் உறுதிப்படுத்துவது எப்படி ?

பதில்:உங்களது கடன் அட்டை விவரத்தை பே-பால் நிறுவனத்துக்கு அளியுங்கள்...பே-பால் நிறுவனம் உங்களுக்கு கடன் அட்டை தந்த வங்கியோடு / அல்லது நிறுவத்தோடு தொடர்புகொண்டு, உங்களது இருப்பிடத்தை உறுதிசெய்துகொள்ளும்...

இந்த பதிவில் 8 படங்களை இணைத்துள்ளேன்...



முதல் படம்...உங்கள் கணக்கை தேர்வு செய்யும் இடம்





இரண்டாவது,மூன்றாவது படம் : உங்களது தனிப்பட்ட தகவல்கள், உங்கள் புதிய மின்னஞ்சல், கடவுச்சொல் (மின்னஞ்சலின் கடவுச்சொல் அல்ல, புதிய கடவுச்சொல்லை தாருங்கள்), உங்களது கணக்கு திருடப்பட்டால் / மறந்துபோகப்பட்டால் அதனை திரும்பப்பெற உங்களுக்கு மட்டுமே தெரிந்த சில தனிப்பட்ட விவரங்கள்.



நான்காவது படம்: மூன்று இடங்களில் அம்புக்குறியிட்டுள்ளேன்..முதலில் பே-பால் இணைய தளத்தின் விதிகளுக்கு கட்டுப்படுகிறீர்கள் என்பதை அறிவிக்க Yes என்ற பொத்தானை அழுத்துங்கள்...கீழே குறியிட்டுள்ள எண்ணை கட்டத்துக்குள் டைப் செய்யுங்கள்...சைன் அப் என்ற பொத்தானை அழுத்துங்கள்...அவ்வளவுதான்...



ஐந்தாவது படம்: இப்போது இறுதியாக உங்களது கிரெடிட் கார்டு அல்லது டெபிட் கார்டு விவரத்தை தரவேண்டும்...

உங்கள் பே-பால் கணக்கு உருவாக்கப்பட்டு உங்களது புதிய மின்னஞ்சலுக்கு உறுதிசெய்வதற்கான மின்னஞ்சல் பே-பால் இணைய தளத்திலிருந்து அனுப்பப்படும்...அதனை அழுத்தி, உங்கள் கணக்குக்குள் உள் நுழையலாம்...



ஆறாவது படத்தில், என்னுடைய (செந்தழல் ரவி) பே-பால் கணக்குக்குள் நுழைந்துள்ளேன்...இப்படித்தான் உங்களது கணக்கும் காட்சியளிக்கும்...

இப்போது எவ்வாறு பே-பால் இணைய தளத்தில் பண பரிமாற்றம் செய்வது என்று பார்க்கலாம்...

உங்கள் மின்னஞ்சலை உங்களது வாடிக்கையாளரிடம் கொடுத்துவிட்டால் அவர் அந்த மின்னஞ்சலுக்கு பணத்தை பே-பால் மூலம் அனுப்பிவிடுவார்...அவ்வாறு அவர் அனுப்பிய தகவல் உங்களுக்கு தெரிந்தவுடன், பே-பால் இணைய தளத்துக்கு சென்று உங்கள் கணக்கை (My Account) தெரிவு செய்யுங்கள்..பிறகு அங்கே உள்ள Withdraw என்ற சுட்டியை அழுத்துங்கள்...(படத்தை பாருங்கள்)..



பிறகு அங்கே Withdraw funds to your bank account (உங்கள் வங்கி கணக்குக்கு பணத்தை பரிமாற்றம் செய்யுங்கள்) என்ற சுட்டியை காண்பீர்கள்...அந்த சுட்டியை தெரிவு செய்யுங்கள்...

பிறகு எந்த வங்கி கணக்குக்கு உங்கள் பணத்தை (பே-பால் கணக்கிலிருந்து) அனுப்பவேண்டும் என்ற பக்கத்துக்கு வந்து சேருவீர்கள்...



இங்கே நீங்கள் உங்கள் நாடு, பெயர், வங்கி, வங்கி கணக்கு எண் (இருமுறை உள்ளீடு செய்யவேண்டும்), மற்றும் IFSC (Indian Financial System Code) ஆகியவற்றை உள்ளீடு செய்யவேண்டும்...IFSC என்பது மத்திய ரிசர்வ் வங்கியால் அங்கீகரிக்கப்படதற்கான அத்தாட்சி எண் ஆகும்...கீழே உதாரண பட்டியல் தருகிறேன்...

ICICI BANK LTD ICIC0TREA00 (மும்பை 51)
INDIAN BANK IDIB000C080 (ராஜாஜி சாலை பிரிவு, சென்னை)
ING VYSYA BANK LTD. VYSA0000001 (எம்.ஜி ரோடு பிரிவு, பெங்களூர்)
BANK OF INDIA BKID000PIGW (மும்பை)
CANARA BANK CNRB0RTGS01 (மும்பை)

உங்களது வங்கி கிளையில் இந்த IFSC எண்ணை தெரிந்துகொண்டு அதனை உள்ளீடு செய்யுங்கள்...

பிறகு மேற்கொண்டு Continue பொத்தானை அழுத்தி தளம் சொல்லும் வகையில் செயல்படுங்கள்..

பே-பால் தளம் பற்றி போதுமான விவரங்கள் தந்திருக்கிறேன்...மேலதிக தகவல்களை அடுத்த பதிவில் அளிக்கிறேன்...

அடுத்த பதிவில், உங்களுக்கான ரெஸ்யூம் அல்லது தகுதி தகவல்களை உருவாக்குதல், மற்றும் பணிகளை ஏலம் எடுக்கும் தளங்களில் பதிவு செய்தல் போன்றவை பற்றி சொல்கிறேன்...உங்கள் கருத்துக்களை சொல்லுங்கள்...நீங்கள் எதிர்பார்ப்பதை சொல்லுங்கள்...எதாவது விடுபட்டுள்ளது என்றால் அதனை சொல்லுங்கள்...தவறுகளை திருத்தி, தொடர் முழுமையான தகவல்களுடன் இருக்க உதவுங்கள்....

16 comments:

  1. செந்தழல்,

    இது வரையில் கொஞ்சம் நான் கேள்விப்பட்டதெல்லாம்(அதில் எல்லாம் சந்தேகமாகவே இருக்கும், சரியா என்று, இப்போது சந்தேகமும் தீர்ந்துவிட்டது) வருகிறது, நீங்கள் விளக்கமாகவும் சொல்வதால் எளிதாக புரிகிறது. மேலும் தொடருங்கள்.

    ReplyDelete
  2. Anonymous4:46 AM

    யோவ்....!!

    எப்படிய்யா இப்படி உருப்படியா எழுதவெல்லாம் மனசு வருது உனக்கு...?

    ஹி ஹி கோச்சுக்காதே மாமூ...ஒரு உருப்படியான விஷயத்தை இங்கே பார்த்தவுடன்கொஞ்சம் பீலிங் ஆயிட்டேன்....அத்தான்...ஹி ஹி...........

    ReplyDelete
  3. Anonymous4:58 AM

    simply super.Continue your great work.

    ReplyDelete
  4. Pay Pal கணக்கு வைத்திருந்தாலும் இதுவரை அதை உபயோகப்படுத்தியதில்லை.
    படங்கள் உபயோகமாக இருக்கிறது.

    ReplyDelete
  5. Anonymous5:36 AM

    பயனுள்ள பதிவு , நன்றி!

    -அகிலன்

    ReplyDelete
  6. நல்ல பதிவு. ஆவலாக காத்திருக்கிறேன்.

    ReplyDelete
  7. Anonymous8:24 AM

    நான் புதியதாக ஒரு ப்ளாக் தொடங்கியிருக்கிறேன், ஒரு நாள் ஆன பின்பும் எந்த சொல் கொடுத்து தேடினாலும் என்னுடைய ப்ளாக்கை தேடுபொறி காட்டுவதில்லை. என்ன செய்வது, தயவு செய்து சொல்கிறீர்களா? என்னுடைய ப்ளாக் sivaakumaritnews.blogspot.com

    ReplyDelete
  8. Anonymous2:29 PM

    if i create my paypal account first i need bank credit card or no need ?

    ReplyDelete
  9. ///poraali said...
    if i create my paypal account first i need bank credit card or no need ?
    ///

    ஆம் சகோதரரே...உங்களுக்கு கடன் அட்டை வேண்டும்...

    ReplyDelete
  10. //நான் புதியதாக ஒரு ப்ளாக் தொடங்கியிருக்கிறேன், ஒரு நாள் ஆன பின்பும் எந்த சொல் கொடுத்து தேடினாலும் என்னுடைய ப்ளாக்கை தேடுபொறி காட்டுவதில்லை. என்ன செய்வது, தயவு செய்து சொல்கிறீர்களா? என்னுடைய ப்ளாக் sivaakumaritnews.blogspot.com///

    நன்பரே, நீங்கள் தமிழ் வலைப்பதிவர் உதவிப்பக்கத்தை நாடலாமே ?

    உங்கள் பதிவை தேடுபொறியில் இணைக்க கேட்டபோது எஸ் என்பதை தேர்ந்தெடுத்தீர்களா ?

    ReplyDelete
  11. பகிர்தலுக்கு நன்றி நண்பரே...

    பே பால் கணக்கு துவக்குதல் குறித்த விளக்கம் பயனுள்ளது....

    ReplyDelete
  12. Anonymous1:01 AM

    பலதரப்பட்ட கடன் அட்டைகள் வங்கிகளால் வழங்கப்படுவதால் நமக்கு தோதுவான ஏதாவது ஒன்றை மட்டும் சுலபமானதாக அறிமுகப்படுத்துங்கள்.
    ICICI என்றால் நலம்.

    ReplyDelete
  13. தம்பி.. உருப்படியான பதிவு..

    மொக்கையையெல்லாம் ஓரங்கட்டிப்போட்டு கலக்கு தம்பி கலக்கு..

    Paypal பற்றி நானும் இப்போதுதான் தெரிந்து கொண்டேன்..

    உதவிக்கு நன்றி..

    ReplyDelete
  14. simply wow........

    ReplyDelete
  15. Anonymous2:54 AM

    Search IFSC Codes of any Indian Bank Branch only at http://www.netinfobase.com

    IFSC Codes of SBI, Bank of Baroda, Syndicate Bank, ICICI Bank, AXIS Bank and almost all the banks of India.

    Click to Visit Netinfobase.com

    ReplyDelete
  16. Naan paypal account create panniten.. naan bank account add panninen.. but they told me paypal deposit two samll amount to ur account to verify.. but i m not got any deposit from paypal.. how to verify the bank account in paypal..?

    ReplyDelete

பின்னூட்ட மட்டுறுத்தல் நீக்கப்பட்டுவிட்டது. உங்கள் மனதுக்கு தோன்றிய எண்ணங்களை வெளிப்படுத்துங்கள்...நீங்கள் அளிக்கும் பின்னூட்டங்களுக்கு நீங்களே பொறுப்பாளி...நிர்வாகம் பொறுப்பல்ல...