Friday, January 09, 2009

சத்யம் : தளரவேண்டாம்..

சரிந்துகொண்டிருந்த பொருளாதார சூழ்நிலையில் அவற்றை மீள கட்டமைக்கவேண்டிய பணிகளில் இருந்தவர்கள் இப்போது இன்னும் விழி பிதுங்கி நிற்கிறார்கள்...

சத்யம்...

தெரிந்த செய்திகளை சொல்லி நேரத்தை வீணாக்கவிரும்பவில்லை....தகவல் தொழில்நுட்பத்துறையில் இருப்பவர்கள் தளரவேண்டாம்...

நானும் 2000 ஆம் ஆண்டு லே ஆப் போன்ற விஷயங்களை எதிர்கொண்டவன் தான்...இரண்டு மாதங்கள் லே ஆப் செய்யப்பட்டேன்...பிறகு சூழல்கள் சரியானதும் மீண்டும் நிறுவனம் அழைத்துக்கொண்டது...

தன்னம்பிக்கையோடு இருங்கள்...Y2K பிரச்சினையில் உலகம் தட்டையாயிரும், நாம் அனைவரும் செவ்வாய் கிரகத்தில் போய் குடியேறவேண்டும் என்ற வகையில் பில்டப் இருந்தது...

அதனை கடந்துவரவில்லையா ? அதனால் இதுவும் கடந்துபோகும்...!!!

திடீர் பிரச்சினை - லே ஆப் போன்ற சவால்களை சந்திப்பவர்கள் ravi.antone@gmail.com என்ற என்னுடைய மின்னஞ்சலுக்கு தொடர்புகொள்ளவும்...

என்னால் ஆன உதவிகளை செய்கிறேன்...!!!

14 comments:

  1. சரியான நேரத்தில் நல்ல முயற்ச்சி மற்றும் பதிவு

    ReplyDelete
  2. இதே சம்பவம் கொரியா ஹுண்டாய் நிறுவனத்தில் நடக்கவில்லையா ?

    அந்த நிறுவனம் மீண்டு வரவில்லையா ?

    ReplyDelete
  3. Please do add me too @ gkavith@gmail.com

    ReplyDelete
  4. ரவி...உங்கள் பதிவுகளை விடாமல் படித்து வருகிறேன்...பல பதிவுகளில் உங்கள் மனித நேயம் தெரிகிறது..உதவும் உள்ளம் தெரிகிறது.
    வெறும் புகழ்ச்சியல்ல இது.
    எனது மனமார்ந்த பாராட்டுகள்.

    ReplyDelete
  5. சரியான நேரத்தில் மிகச்சரியான பதிவு
    எல்லாரும் போனதை பற்றி பேசிக்கொண்டிருக்கும் வேளையில், மீள்வதை பற்றி சிந்திக்கும், உதவும் பதிவு.

    ReplyDelete
  6. ஹுண்டாய் நிறுவனம் மீண்டு வந்த கதை பற்றி யாராவது எழுதினால் பரவால்லை...

    ReplyDelete
  7. நல்ல முயற்சி நண்பரே....

    ReplyDelete
  8. நல்ல பதிவு ரவி

    ReplyDelete
  9. ப்ளீஸ் ஸார்..

    என்னையும் ஒரு அபலையா சேர்த்துக்கிட்டு உங்களை மாதிரி வருஷத்துக்கு 4 தடவை நாடு, நாடா அனுப்புற மாதிரி ஒரு வேலைக்கு ஏற்பாடு பண்ணிக் குடுங்க.. புண்ணியமாப் போகும்..

    ReplyDelete
  10. //சரிந்துகொண்டிருந்த பொருளாதார சூழ்நிலையில் அவற்றை மீள கட்டமைக்கவேண்டிய பணிகளில் இருந்தவர்கள் இப்போது இன்னும் விழி பிதுங்கி நிற்கிறார்கள்...//

    தகுதியான மாற்றுத்தலைவர்கள் நிர்வகிக்கும்பொழுது நிலைகள் மாறும்.ஐம்பதாயிரத்துக்கும் மேற்பட்டவர்களின் உழைப்பு வீணாகப் போகக்கூடாது.கூடவே இந்திய திறனை உலகுக்கு முன் நிலைநிறுத்த வேண்டிய கவுரவமும் இந்தியாவுக்கு உண்டு.

    ReplyDelete
  11. Anonymous11:47 AM

    Appreciate your helping nature...

    ReplyDelete
  12. Anonymous3:54 AM

    //உண்மைத் தமிழன்(15270788164745573644) said...
    ப்ளீஸ் ஸார்..

    என்னையும் ஒரு அபலையா சேர்த்துக்கிட்டு உங்களை மாதிரி வருஷத்துக்கு 4 தடவை நாடு, நாடா அனுப்புற மாதிரி ஒரு வேலைக்கு ஏற்பாடு பண்ணிக் குடுங்க.. புண்ணியமாப் போகும்..
    //


    உ.த. அண்ணே,

    எங்க சொல்லுங்க... "க்கோ.பா.ல்"
    அய்யோ, அது கோப்பால் இல்லங்க க்கோ.பா.ல்!
    சரி மிச்ச பாடத்த நாளைக்கு பாப்போமா?

    ReplyDelete
  13. Great Way to give counseling to the needy over web. Cheers for your efforts!

    ReplyDelete

பின்னூட்ட மட்டுறுத்தல் நீக்கப்பட்டுவிட்டது. உங்கள் மனதுக்கு தோன்றிய எண்ணங்களை வெளிப்படுத்துங்கள்...நீங்கள் அளிக்கும் பின்னூட்டங்களுக்கு நீங்களே பொறுப்பாளி...நிர்வாகம் பொறுப்பல்ல...