Thursday, February 26, 2009

டேட்டா எண்ட்ரி : ஏமாறவேண்டாம்...

சமீபகாலமாக டேட்டா எண்ட்ரி ப்ராஜக்ட் தருகிறோம், முதலில் ஐந்தாயிரம் நீங்க கட்டுங்க, அதுக்கப்புறம் மாதம் 2000 சம்பாதிக்கலாம் 3000 சம்பாதிக்கலாம் என்று ஆசை வார்த்தை சொல்லும் இணைய தளங்களை நம்பவேண்டாம்...

நாம் வேலை செய்வதற்கு நாம் ஏன் பணம் தரவேண்டும் என்று யோசியுங்கள்...

ஒரு வடிவேலு-பார்த்திபன் காமெடியில்

"சுலபமாக பணக்காரன் ஆவது எப்படி", ஐடியா சொல்லும்படி பார்த்திபனை நச்சரிப்பார் வடிவேலு..

"இதையே விளம்பரமா குடுறா", தலைக்கு நூறு ரூபாய் வாங்கிக்கிட்டு ஐடியா சொல்லு என்பார் பார்த்தி...

அப்புறம் கல்யாண மண்டபத்தில் வந்து உட்கார்ந்திருக்கும் நூறு ரூபாய் கொடுத்தவர்களிடம் சுப்ரமண்ய சுவாமி புகழ் முட்டையடி பெற்று ஓடுவார் வடிவேலு..

அது போல டேட்டா எண்ட்ரியால் எதையாவது சம்பாதிப்போம் என்று இந்த மாதிரி ஏமாற்ற அலைகிறார்கள்...

தலைக்கு ஆயிரம் என்று நூறு பேரிடம் வசூலித்தான் என்ன ஆகிறது ?

ஆகவே இதுபோன்ற போலி விளம்பரங்களை நம்பி ஏமாறவேண்டாம்...

Getafreelancer.com or Odesk.com போன்ற தளங்களில் சென்று ப்ராஜக்ட் எடுங்கள், செய்யுங்கள்...

10 comments:

  1. மிக்க நன்றிங்க...

    ReplyDelete
  2. இண்டர்நெட்டுல இதே பொழப்பாத்தான் எக்கச்சக்க ஃபிராடுங்க திரியறாங்கிய!

    :)

    ReplyDelete
  3. விழிப்புணர்வு ஏற்படுத்த முனைந்ததுக்கு நன்றி.

    ReplyDelete
  4. இந்த திட்டம் இரண்டு வருடங்களுக்கு முன்னர் இரண்டு இந்திய 'தொழில் வல்லுனர்களால்' அறிமுகப்படுத்தப்பட்டு இரண்டாயிரம் பேரிடமிருந்து சில பல லட்சங்கள் லவட்டப்பட்ட வரலாறு இருக்கிறது...!!!

    ஆகவே மக்களே அவதானம் தேவை...!

    பார்க்க: தொடர்புடைய பதிவு

    ReplyDelete
  5. பதிவுக்கு நன்றி...

    ReplyDelete
  6. நான், தங்களுடன் ‘சாட்’ பண்ணும்போது, ஒரு சந்தேகம்னு கேட்டேன். அதையே பதிவாக்கிவிட்டீர்கள். தகவலுக்கு நன்றி. தங்களிடம் இந்த ஆலோசனை பெறவில்லையென்றால் நானும் ஏமாந்து இருப்பேன்.

    ReplyDelete
  7. Anonymous2:17 AM

    நல்ல பயனுள்ள பதிவு. ரொம்ப நன்றிங்க

    ReplyDelete
  8. நாங்க எங்க ரூம்ல போன மாசம்தான் நெட் இணைப்பு கொடுத்தோம். online/offline data entry jobs ad பாத்துட்டு எதாவது பண்ணலாம்னு இருந்தோம்.
    உங்களோட இந்த news.. timely helps..
    ரொம்ப நன்றி..

    ReplyDelete
  9. thank u very much...

    ReplyDelete

பின்னூட்ட மட்டுறுத்தல் நீக்கப்பட்டுவிட்டது. உங்கள் மனதுக்கு தோன்றிய எண்ணங்களை வெளிப்படுத்துங்கள்...நீங்கள் அளிக்கும் பின்னூட்டங்களுக்கு நீங்களே பொறுப்பாளி...நிர்வாகம் பொறுப்பல்ல...