வலைப்பதிவின் மூலம் கொஞ்சமேனும் துட்டு தேத்த முடிந்தால் நல்லாயிருக்கும் தானே ? நாலு மொக்கை பின்னூட்டம் போடும் நேரத்தினை செலவழித்து மாதம் 100 டாலருக்கு குறையாமல் சம்பாதிக்கும் வழியை உங்களுக்கு நான் சொல்லித்தரப்போறேன்...
சில நாட்களுக்கு முன் வெளியிட்ட டேட்டா எண்ட்ரி விளம்பரத்துக்கு நிறைய ரெஸ்பான்ஸ், ப்ராஜக்டை கொடுத்துவிட்ட பின்னும் பலர் கேட்டுக்கொண்டிருந்தது உறுத்தலாக உள்ளது...
எளிமையாக நேர்மையாக வலைப்பதிவு மற்றும் அதன் விளம்பரங்கள் மூலம் சம்பாதிக்கும் வழி உள்ளது..அதனை அனைவருக்கு சொல்லும் விதமாக இந்த ஒளிபரப்பை செய்யவிருக்கிறேன்...
இதனை நேரடி ஒளி & ஒலிபரப்பாக செய்யவிருக்கிறேன்...ஆமாங்க லைவ் டெலகாஸ்ட்...யூஸ்ட்ரீம் அல்லது லைவ்ஸ்ட்ரீம் வெப் தளங்களில் நேரடி ஒளிபரப்பு வசதியை இலவசமாக தருகிறார்கள்...
நேரடியாக என்னையும் என்னுடைய கணினி திரையை பார்க்கலாம், கேட்கலாம்..உங்கள் கேள்விகளை அதில் உள்ள சேட் மூலம் கேட்கலாம், உங்கள் சந்தேகங்களை உடனுக்குடன் ஆன்லைனில் நிவர்த்தி செய்கிறேன்...அல்லது இந்த பதிவில் பின்னூட்டமாகவும் உங்கள் சந்தேகங்களை எழுதுங்கள்..
இதனை இரண்டு பாகமாக செய்யலாம் என்று எண்ணம்..முதல் பாகம் வலைப்பதிவு, ஆட்சென்ஸ், இணையம் போன்ற பல நுணுக்கங்கள் தெரியாதவர்களுக்காக...இதில்
வலைப்பதிவை உருவாக்குவது எப்படி ?
எத்தனை வலைமுகவரிகளை உருவாக்கலாம் ?
கூகிள் விளம்பரங்களை அதில் நிறுவுவது எப்படி
பின் நம்பர் என்றால் என்ன ?
டேக்ஸ் தகவலை இணைப்பது எப்படி ?
தவறான க்ளிக் செய்யக்கூடாது ஏன் ?
எப்படி பணம் உங்களுக்கு வரும் ?
இதில் எதாவது பிரச்சினைகள் உள்ளதா ?
யார் உங்களுக்கு பணம் தருகிறார்கள் ?
இந்த தொழிலில் கூகிளின் பங்கு என்ன ?
அடுத்த பாகம், ஏற்கனவே ஆட் சென்ஸ் போன்றவைகளை போட்டுவிட்டு, என்னடா காசு வரலையே என்று தேவுடு காப்பவர்களுக்காக...
எஸ்.ஸி.ஓ என்றால் என்ன ?
கூகிள் ட்ரென்ஸ் எப்படி பயன்படுத்தவேண்டும் ?
கூகிள் அனால்டிக்ஸ்ஸை எப்படி பயன்படுத்தவேண்டும் ?
இன்வேலிட் க்ளிக்ஸ் செய்து அதில் இருந்து மீள்வது எப்படி ?
உங்கள் ஆட் சென்ஸ் அக்கவுண்ட் பேன் செய்யப்பட்டால் ?
அவ்வளவுதாங்க...
ஏன் கூகிள் ஆட் சென்ஸ் என்று ஒரு கேள்வியை எழுப்பக்கூடும்...இப்போதைக்கு ரிலையபிளாக வலைப்பதிவர்களுக்கு மாதா மாதம் காசு அனுப்புவது கூகிள் ஆட் சென்ஸ் தானுங்க...
மற்றபடி லைவ் டெலகாஸ்டின் சுட்டியை இன்னோரு பதிவின் மூலம் தருகிறேன்,அல்லது இந்த பதிவிலேயே எழுதுகிறேன்..ஆனால் இதனை எப்போது செய்வது என்று நீங்க தாங்க சொல்லனும்...வெள்ளிக்கிழமை வரை நான் பிஸி, சனிக்கிழமை செய்யலாம் என்று உள்ளேன்...
நிறையபேர் அலுவலகத்தில் உள்ள ஓய்வு நேரத்தில் இணையத்தில் மேய்வதால், பின்னூட்டத்தில் தெரிவித்தால், வெள்ளிக்கிழமை உங்களுக்காக லீவ் போட்டுட்டு, இந்திய நேரத்தில் அல்லது எல்லோருக்கும் பொதுவான நேரத்தில் செய்கிறேன்..
முடிந்தால் வீடியோவாக பதிவுசெய்து, வலையேற்றம் செய்கிறேன்...ஆனால் உறுதியாக இதனை சொல்லமுடியாது...லைவ் ஸ்ட்ரீமில் வீடியோ வசதி உள்ளதா என்று தெரியவில்லை, ஆனால் யூஸ்ட்ரீமில் உள்ளது, ஆனால் யுஸ்ட்ரீம் க்வாலிட்டி சரியில்லை..
அட்டகாசம். வாழ்த்துக்கள்
ReplyDeleteசிறந்ததொரு பயனுள்ள முயற்சி..............வாழ்த்துக்கள்.......... நேரடி ஒளி, ஒலி பரப்பை வலையேற்றம் செய்யுமாறும் கேட்டுக்கொள்கிறேன்.........
ReplyDeletenalla muyarchi thaan vaalthukkal
ReplyDeleteநல்ல முயற்சி/ வழிகாட்டுதால்.. இந்த ஒளிபரப்பு எப்போ நடக்குது ?
ReplyDeleteYes, really great. Congratulations. When will u going to do?
ReplyDeleteGreat sir,
ReplyDeleteEppo seiyap poringa?????????????????
Hi Ravi and Team.
ReplyDeleteகூகிள் ஆட்சென்ஸ் - புதிய பதிவர்களுக்காக - Please read this also