Monday, November 30, 2009

என்ன தொழில் செய்யலாம் - பகுதி 3

www-replant-ca_2008_wfhinton_002.jpg (500×750)

என்ன தொழில் செய்யலாம் பகுதி மூன்று. முந்தைய இரண்டு பதிவுகளுக்கு வரவேற்பளித்த புள்ளிராஜா, தமிழ் ஹோம் ரெஸிப்பி, வடுவூர் குமார்,  பூங்குன்றன் வே,  தமிழ் பிரியன் ஆகியவர்களுக்கு நன்றி.

இந்த பகுதியை முழுமையான டெக்னிக்கல் தகவல்களுடன் எழுதும் அளவுக்கு விரும்பினாலும், நேரமின்மை தடுக்கிறது.

இங்கே இந்த பதிவில் இணைத்துள்ள படத்தில் இருப்பவர் அணிந்திருக்கும் உடையில் எதாவது வித்யாசம் தெரிகிறதா ? ஏதோ கோடு போல இருக்கிறதல்லவா ?

1012344508.jpg (300×300)
அதிகமான வாகன பெருக்கத்தால் ஏராளமான சாலை விபத்துக்கள் நடைபெறும் இந்தியா போன்ற நாடுகளில் இல்லாத ஒன்று இது.

நைட் சேப்டி சட்டை. இரவில் ஒளிரும் தன்மையுடைய பட்டை அதில் இருப்பதால், வாகன ஓட்டிகளுக்கு நடைபாதையில் செல்பவர்கள், சைக்கிளில் செல்பவர்கள் இன்னும் தெளிவாக தெரிவார்கள்.

Triangle.jpg (400×300)

இங்கே காட்டியுள்ள படத்தில் முக்கோண வடிவத்தில் அந்த நைட் சேப்டி பட்டை இருப்பதால் முக்கோணமாக ரெப்ளக்ட் ஆகி தெரிகிறது.

இவற்றை சட்டையில் மட்டுமில்லாது, வாகனங்கள், லாரிகள், சைக்கிள்கள் போன்றவற்றில் பயன்படுத்துவது போல உருவாக்கலாம். (இதில் மாட்டுவண்டிகளையும் கூட சேர்த்துக்கொள்ளலாம். பெரும்பாலான விபத்துக்களுக்கு மாட்டுவண்டிகளும் காரணம்)

பொதுவாக இவை சட்டையோடு இணைந்து (*சுட்டி) விற்பனைக்கு தருகிறார்கள். தனியாக சட்டையில் இணைத்து கொள்வது போலவும் தயாரிக்கலாம்..

முந்தைய பதிவுகளில் சொன்னதுதான். நீங்கள் சுயதொழில் செய்ய விரும்பினால்,  உங்கள் பகுதியில் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இயங்கும் மாவட்ட சிறுதொழில் மைய்யத்தை அணுகி மேல்விவரம் கேளுங்கள். மானியம், கடன் வசதிகளை தமிழக அரசு செய்துதருகிறது.

முந்தைய சுயதொழில் குறித்த பதிவுகள்:

என்ன தொழில் செய்யலாம் பகுதி 1
என்ன தொழில் செய்யலாம் பகுதி 2

9 comments:

  1. திரு.ரவி, இதே போன்ற உடைகளை பகல் நேரத்திலும் எங்கள் விமான நிறுவன போக்குவரத்து அதிகாரிகள் அணிந்து இருப்பார்கள். ஆனால் இதை பற்றி நான் அவ்வளவாக அலட்டிக்கொண்டது இல்லை.ஆனால் நீங்கள் மற்றவர்களுக்கும் பயன்படும் வகையில் தகவல்கள் தந்திருப்பதை நிச்சயம் பாராட்டத்தான் வேண்டும். இந்த உடைகளை இரவில் அணிந்தால் விபத்துக்கள் கணிசமாக குறையும்.நல்ல தகவலுக்கு நன்றி..

    ReplyDelete
  2. நன்றி பூங்குன்றன்.

    அதிகாலை நான்கு மணியளவில் உளுந்தூர்பேட்டை அருகே வாகன சோதனை பணியில் இருந்த என்னுடைய உறவினர் சாலையை கடக்கும்போது பர்வீன் ட்ராவல்ஸ் மோதி எங்களைவிட்டு பிரிந்துபோனார்.

    அட்லீஸ்ட் தமிழக அரசு இரவு நேரத்தில் பணி செய்யக்கூடிய சீருடைப்பணியாளர்கள் அனைவருக்கும் இதனை இலவசமாக வழங்கவேண்டும்...

    ReplyDelete
  3. Dear Ravi,
    Its a good Idea.Thanks .
    naren

    ReplyDelete
  4. பயனுள்ள மற்றும் ஊக்கமூட்டும் பதிவு தல. தொடர்ந்து எழுதுங்க. :-)

    ReplyDelete
  5. நன்றி நரேன்..

    ReplyDelete
  6. நன்றி ரோஸ்விக்

    ReplyDelete
  7. Anonymous3:11 AM

    இது விளையாட்டல்ல. மிக அற்புதமான ஆலோசனைகள். தமிழக இளைஞர்கள் கவனத்தில் எடுக்கவேண்டும்.


    தமிழக அரசின் கவனத்திற்கு கொண்டு செல்லப்படவேண்டும்.

    பல விபத்துக்களை தடுக்க முடியும்.

    புள்ளிராஜா

    ReplyDelete
  8. மிகவும் அருமையான பதிவு.

    ReplyDelete
  9. இது போன்ற பனி பாதுகாப்பு உபகரணங்களை கட்டாயமாக்கப் ப்டவேண்டும். அப்போதுதான் விபத்துக்களை தடுக்க முடியும். அரசும் காவல் துறையும் தக்க நடவடிக்கை எடுத்தால் எதிர்காலத்தில் இது போன்ற பாதுகாப்பு உபகரணங்களுக்கு நல்ல மார்க்கெட் இருக்கும்.

    பயனுள்ள பதிவு ரவி.

    ReplyDelete

பின்னூட்ட மட்டுறுத்தல் நீக்கப்பட்டுவிட்டது. உங்கள் மனதுக்கு தோன்றிய எண்ணங்களை வெளிப்படுத்துங்கள்...நீங்கள் அளிக்கும் பின்னூட்டங்களுக்கு நீங்களே பொறுப்பாளி...நிர்வாகம் பொறுப்பல்ல...