http://tedujobs.blogspot.com/2010/05/google-android-development.html
முழு நேர பணியில் இருப்பவர்கள் மற்றும் வேறு வேலை தேடிக்கொண்டிருந்தவர்கள், இதே வேலையாக இருப்பவர்கள், ஏதாவது கத்துக்க நினைச்சவர்கள் என்று கலவையான டீம் அது.
http://www.projectxandroid.com/ என்று இணைய தளம் கூட உருவாக்கியிருந்தோம்.
ஆனால் இந்த இனிஷியேட்டிவ் முலமாக கோவையில் http://marymartinsoftware.com/ என்ற மென்பொருள் நிறுவனம் நடத்திவரும் திரு சி வி ராஜு அவர்கள் இந்த பணியை தொடர்ந்து செய்ய விரும்புகிறார் என்று அறிகிறேன்.
அவரும் இரண்டு முழு நேர ஊழியர்களை வைத்து இந்த பணியை தொடர்கிறார். நானும் இரண்டு பேரை என்னுடைய நிதி உதவியை கொடுத்து அந்த பணியில் இணைக்கிறேன். (ஊதியம்)
ஆக பணி தொடர்ந்து நடைபெறும். ஜூலை 1 ல் இருந்து Kick Off ஆகும்.
இன்னும் சில இளம்பொறியாளர்கள் (Freshers) இந்த பணியில் இணைய விருப்பம் தெரிவித்துள்ளார்கள். அப்படி விரும்புபவர்கள் ஏற்கனவே Android பற்றி அறிந்தவர்களாக இருந்தால் கண்டிப்பாக இணைத்துக்கொள்ள முயல்கிறோம்.
ராஜு அவர்கள் நிறுவனம் நடத்தல், கணினி, மின்சாரம் என்று பல வகையினங்களில் செலவு செய்யவேண்டியுள்ளது . ஆகவே அனைவரையும் இணைத்துக்கொள்ள இயலாத சூழல்.
அப்படி நீங்கள் ஆண்ட்ராய்ட் படித்து - கூடவே பணி புரிய விருப்பம் என்றால், CV ராஜுவை தொடர்புகொள்ளுங்கள்.
rajucbe45@yahoo.com
9443937381
ஆண்ட்ராய்ட் ட்ரெயினிங் கட்டணம் கட்டி படித்து அதன் பின் இணையலாம். அதனால் அவரது சுமையும் குறையும். நீங்களும் தினமும் ஒரு லட்சத்து அறுபதாயிரம் மொபைல்களில் விற்கப்படும் அண்ட்ராய்ட் ப்ரொக்ராமிங்கை பழகிக்கொள்ளலாம்.
கலந்துகொண்ட அனைவருக்கும் நன்றிகள் வாழ்த்துக்கள் !!
No comments:
Post a Comment
பின்னூட்ட மட்டுறுத்தல் நீக்கப்பட்டுவிட்டது. உங்கள் மனதுக்கு தோன்றிய எண்ணங்களை வெளிப்படுத்துங்கள்...நீங்கள் அளிக்கும் பின்னூட்டங்களுக்கு நீங்களே பொறுப்பாளி...நிர்வாகம் பொறுப்பல்ல...