தேடுதல் வேட்டை

Saturday, January 24, 2009

எளிய தமிழில் SQL - பாகம் 1

தமிழ்நெஞ்சத்தின் இந்த முயற்சியை மனதார பாராட்டி மகிழ்கிறேன்...

எளிய தமிழில் SQL - பாகம் 1
SQL என்பதன் விரிவு என்ன?

Structured Query Language

SQLன் பயன்கள் யாவை?

Databaseன் தகவல்களைத் தேடி எடுப்பது,
புதிய தகவலை ஏற்றுவதற்கு,
பழைய விவரங்களை மாற்றுவதற்கு,
அழிப்பதற்கு மற்றும் இன்னும் நிறைய விசயங்களுக்கு SQL பயன்படுகிறது.
Database களில் இருக்கும் தகவல்களை எடுக்க / கொடுக்க SQL உதவுகிறது.

Query என்றால் கேள்வி, விசாரணை, தேடுதல் என அர்த்தம் கொள்ளலாம்.


சரி எடுத்த எடுப்பில் Database என ஆரம்பித்துவிட்டேன்.
அது என்ன Database?

பாய்ஸ் படத்தில் நடிகர் செந்தில், மணிகண்டனுடன் ஒரு கையடக்க நோட்டுப்புத்தகத்தை வைத்துக்கொண்டு ”எந்தக் கோவிலில் எந்த நேரத்தில் என்ன கொடுப்பார்கள்”? என புள்ளிவிவர அறிக்கை விடுவார்.

ஒரு வசனம் பேசுவார் - Information, Information is Wealth என்பார். அது யாரோ எழுதிக்கொடுத்த வசனம் அல்ல. எழுத்தாளர் சுஜாதா பாய்ஸ் படத்துக்காக எழுதிக்கொடுத்த வசனம்தான். இது ஒரு நகைச்சுவை உதாரணம்.

கீழே ஒரு எளிய Table வடிவம் ஒன்றைத் தருகிறேன்.

ஒவ்வொரு வகுப்பறைக்கும், ஒரு வருகைப்பதிவேடு வைத்திருப்பார்கள்.
அதில் மாணவர் பெயர், தேதி போன்றவை இருக்கும். அதில் தினமும் மாணவர் வந்திருக்கிறாரா? இல்லையா எனக் குறித்துக்கொள்வார்கள்.

மாத இறுதியில் ஒரு குறிப்பிட்ட மாணவர் எத்தனை நாட்கள் வந்திருந்தார்? அல்லது எத்தனை நாட்கள் வரவில்லை எனக் கணக்கிட்டுக்கொள்ளலாம்.

இதில் மாணவர் பெயர், தேதி முதலியவற்றை Field அல்லது Column எனலாம்.
மாணவரின் பெயர் எழுத்து வடிவில் இருக்கும்.
அதனை String / Character / Variable character என்போம்.

தேதி என்பது month-date-year அல்லது date/month/year போன்ற ஒரு வடிவில் அமைந்திருக்கும். இது இரண்டாவது Field ஆகும்.

மாணவர் பெயர் ---> character(50)
தேதி ---> datetime

ஒரு மாணவருக்காக எவ்வளவு எழுத்துகளை அதிகபட்சமாக ஒதுக்குகிறோம் என்பதே அடைப்புக்குறிக்குள் தரப்படுகிறது.

உதாரணமாக மாணவரின் பெயர் ‘Babu’ எனக் கொண்டால் அவருடைய பெயரின் எழுத்துக்களின் எண்ணிக்கை 4.
’valpaiyan @ Arun The Hero’ எனக் கொண்டால் அவருடைய பெயரின் ஒட்டுமொத்த எழுத்துக்களின் எண்ணிக்கை 25.

இப்படி ஒவ்வொருவரின் பெயரில் உள்ள எழுத்துக்களின் எண்ணிக்கை வித்தியாசப்படுகிறது. ஆகவே நாமாகவே ஒரு உச்சமதிப்பு ஒன்றை கொடுத்துவிடவேண்டும். இங்கே character(50) எனக் கொடுத்தால் Name என்கிற Field / Column ல் அதிகபட்சமாக 50 எழுத்துக்களைப் பதிவுசெய்ய இயலும் எனக் கொள்க.


மாணவர் பெயர் ---> character(50)
தேதி ---> datetime இவை இரண்டும் இரண்டு Column எனக் கொண்டால், இவற்றினை ஒட்டுமொத்தமாக ஒரு Table எனலாம்.

ஒரு Table என்பது பல Field களின் தொகுப்பு.

ஒரு Field என்பது குறிப்பிட்ட ஒரே மாதிரியான தகவலின் தொகுப்பு.

ஒவ்வொரு Fieldலும் நாம் பதிவு செய்யப்போகிற தகவலின் அடிப்படையில், எந்த மாதிரியான தகவலைப் பதிவு செய்யப் போகிறோம் என்பதை அதன் Data Type மூலம் நிர்ணயிக்கலாம்.

மாணவரின் பெயரை character(50) என்றோம். இங்கே 50 என்பது எத்தனை எழுத்துக்கள் என்பதைக் குறிக்கிறது. character என்பது ஒரு Data Type ஆகும்.

தேதி --> datetime இங்கு datetime என்பது மற்றொரு வகை Data Type ஆகும்.

எழுத்துக்களைப் பதியும்போது character, எண்களைப்பதியும்போது numbers (int,bigint,decimal,float). தேதியைக் குறிக்கும்போது datetime என ஒவ்வொரு வகையான தகவலுக்கும் ஒவ்வொரு DataType உள்ளது.

ஆகவே Data Type என்பது தகவலின் வகையைக் குறிப்பதாகும்.

SQL வாயிலாக ஒரு Table ஐ உருவாக்க / மாற்ற / அழிக்க / தகவலைத் தேட இயலும்.

Table என்பதில் பல Columns இருக்கும். ஒவ்வொரு Columnன் தகவலின் வகையை DataType மூலம் நிர்ணயிக்கலாம். எவ்வளவு எழுத்துகள் என்பதை அடைப்புக்குறிக்குள் சொல்கிறோம்.

உங்கள் கணினியில் SQL கட்டளைகளை இயக்கிப் பார்ப்பதற்காக Microsoft SQL Server 2005 Express Edition மென்பொருளை இலவசமாகத் தரவிறக்கி உங்கள் கணினியில் நிறுவிக்கொள்ளவும்.

பின் குறிப்பு : வாரத்திற்கு 2 முறையாவது இந்த எளிய தமிழில் SQL என்கிற தொடர் பதிவுகளை அளிக்கலாம் என முன்வந்துள்ளேன். உங்கள் ஆதரவு தேவை.

பல பதிவுகளை பிற ஆங்கில வலைப்பூக்களில் இருந்து மொழிபெயர்த்துப் போட்டிருக்கிறேன். அதற்கு ஆதரவளித்த அன்புள்ளங்களுக்கு நன்றி. அதுபோல இந்தத் தொடரின் வெற்றி உங்கள் கையில்தான் உள்ளது.

முதலில் சில terms உங்களுக்குக் குழப்பமாக இருப்பினும் தொடர்ந்து படியுங்கள். இங்கே குறிப்பிடும் உதாரணங்களை கணினியில் செய்து பாருங்கள். வித்தியாசத்தை நீங்களே உணர்வீர்கள்.

இங்கே இனிவரும் காலங்களில் நான் கொடுக்கப்போகும் உதாரணங்களை இயக்கிப் பார்க்க இந்த இலவச மென்பொருளை உங்கள் கணினியில் நிறுவிக்கொள்ளவும்.

http://www.microsoft.com/downloads/details.aspx?FamilyID=220549b5-0b07-4448-8848-dcc397514b41&DisplayLang=en

எனது நோக்கம் என்னவெனில் இந்தத் தொடரின் மூலம் புதியவர்களுக்கு Database பற்றியும், SQL பற்றியும் அறிந்துகொள்ளும் ஒரு வாய்ப்பை உருவாக்கித் தருவதே.

நன்றிகளுடன்,

தமிழ்நெஞ்சம்.

Sunday, January 18, 2009

தொலைதூர இணைய வழியில் வணிக மேலாண்மை




பொறியியல் , தொழில்நுட்ப நிறுவனங்களில் பணிபுரிபவர்கள் வணிகமேலாண்மையில் பட்டப்படிப்பு படித்து வைத்துக்கொள்வது பொதுவாக விரும்பத்தக்கது. முழுநேரப்படிப்பில் சேர முடியாததால் பகுதி நேர, தொலைதூர வழிமுறைகளில் அரசு சார்ந்த அல்லது தனியார் பல்கலை கழகங்களில் படிப்பார்கள். மேலாண்மை படிப்புகளுக்கு தனியார் நிறுவனங்கள் / பல்கலை கழகங்கள் அதிகக்கட்டணம் வசூலிக்கின்றன. அரசு சார்ந்த பல்கலைகழகங்களில் தரம்/பாடத்திட்டம் நன்றாக இருந்தாலும், முழுநேர படிப்பிற்கு போட்டி போடும் அளவுக்கு இல்லை.

இந்நிலையில் தொலைதூர வழியில் வணிகமேலாண்மை/நிர்வாக இயலில் மேற்படிப்பு படிக்க விரும்புவர்களுக்கு வரப்பிரசாதமாக சுவீடனில் பிலெக்கிஞ்ச் கல்லூரி (Blekinge Institute of Technology) தொலைதூர இணைய வழியில் வணிக மேலாண்மைப் படிப்பை வழங்குகிறது. இரண்டு வருட வேலை அனுபவம் இருந்திருந்தால் இதற்கு விண்ணப்பிக்கலாம். ஒரு வருடப்படிப்பிற்கு 60 ECTS மதிப்பீடுகளைத் தருகிறது. இதில் குறிப்பிடத்தக்க விசயம் என்னவெனில் 30 ECTS வைத்திருந்தால் சுவீடனில் வேலைக்கான கடவுச்சீட்டு(விசா) பெற்றுக்கொள்ள வழிமுறை உண்டு. பொதுவாக சுவீடனில் கல்வித்தரம் அமெரிக்கா/ஆஸ்திரேலியா/இங்கிலாந்து நாடுகளின் அளவுக்கு உண்டு. பலபடிப்புகளில் சுவீடனில் தரம் , கடுமையான பாடத்திட்டம் நமது அறிவுத்திறனை மேம்படுத்தும் வகையில் அமைந்துள்ளது.

போனவருடம் 70 இடங்களுக்கு கிட்டத்தட்ட 2500 விண்ணப்பங்கள் வந்திருக்கின்றன. இப்படிப்பில் சேருவதற்குக் கட்டணம் ஏதும் கிடையாது.இதுவரை சுவீடனில் எந்த படிப்பிற்கும் கட்டணம் கிடையாது. ஆனால் அடுத்த ஆண்டு முதல் ஐரோப்பியர் அல்லாதவருக்கு கட்டணம் என சட்டம் இயற்றி விட்டார்கள். அடுத்த வருடம் இதே படிப்பிற்கு 3 லட்சம் வரை கட்டணம் வசூலிக்கப்படலாம். ஆகையால் இந்த வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன்.

MBA Programme 60 ECTS Fulltime In internet Autumn 09 என்பதைத் தேர்வு செய்து விபரங்களைப் பார்க்கலாம்.

விண்ணப்பிக்க இந்த சுட்டியைச் சொடுக்கவும்

இணையதளத்தில் விண்ணப்பிக்க கடைசி நாள் பிப்ரவரி 1.

சான்றிதழ்களை அனுப்ப கடைசி நாள் பிப்ரவரி 15

2009 செப்டம்பரில் படிப்புத் துவங்கும்.

------

ஸ்டுடரா தளம் மூலம் சுவீடன் பல்கலைக் கழகங்களில் மேற்படிப்புக்கு விண்ணப்பிக்கும் நாள் கடந்து விட்டாலும், பிலெக்கிஞ்ச் கல்லூரியின் தளம் வாயிலாக விண்ணப்பிக்கும் கெடு பிப்ரவரி 1 ஆம் தேதி வரை உள்ளது.

அதிக பட்சம் மூன்று படிப்புகள் வரை விண்ணப்பிக்கலாம். இணையத்தில் விண்ணப்பித்து விட்டு, பிப்ரவரி 15 ஆம் தேதிக்குள் தங்களது சான்றிதழ்களை தபாலில் அனுப்ப வேண்டும்.
சுவீடனில் மேற்படிப்பு படிக்க இந்திய அறிவியல்/பொறியியற்/தொழில்நுட்ப பட்டதாரிகளுக்கு ஆங்கிலத் தேர்வு இல்லை.

பிலெக்கிஞ்ச் கல்லூரி மென்பொருள் பொறியியலுக்கு பெயர் போனக் கல்லூரி.மென்பொருள் துறையில் பொறியியல் படிப்பு படிக்க விரும்புபவர்கள் இதனைத் தேர்வு செய்யலாம்.

பின்வரும் சுட்டியில் வழங்கப்படும் படிப்பின் விபரங்களும் விண்ணப்பிக்கும் சுட்டியும் உள்ளது.

http://www.bth.se/apply

விபரங்கள் தேவைப்படின் எனது மின்னஞ்சல் முகவரியில் rrselvakumar@gmail.com தொடர்பு கொள்ளுங்கள். என்னால் முடிந்தவரை பதில் அளிக்கிறேன். தரமானக் கல்வி இலவசமாகக் கிடைக்கும்பொழுது தவறவிட்டுவிடக்கூடாது. இதை தங்கள் நண்பர்கள்/ உறவினர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

முழுக்க முழுக்க , நீங்களே விண்ணப்பிக்க முடியும். எந்த வித கன்சல்டன்சி நிறுவனங்களையும் தொடர்பு கொண்டு பணத்தை வீண் செய்ய வேண்டாம்.

2009 செப்டம்பரில் படிப்புத் துவங்கும்.

-----

தமிழ் தெரியாத நண்பர்களுக்கு அனுப்ப, ஆங்கிலத்திலும்


Blekinge Inst Of Technology (one of the known university in Software Engineering) offers Online MBA program (1 Year).
Minimum Experience is 2 years.
The successful completion of Online MBA program earns 60 ECTS points, which would help you to get Sweden Work Permit/ Visa.
The quality and standards of MBA program in Sweden is more or less same as US/UK/Aus.
Until now, there is NO tuition fee for the course. However, from next year onwards, the Swedish goverment (which owns Blekinge Inst of Technology) would charge close to Rs. 3 L for all Non-European students (due to recent law).
Indian Engineering & Science graduates do NOT need to take up TOEFL exam to do the MBA in Sweden.
Important Dates for Sep 2009 (Autumn 2009)
Last date for applying for the Online MBA program via Internet is Feb 1st.
Last date for submitting certificates is Feb 15th.

The link for applying the Online MBA program is http://www.bth.se/apply
There is NO need to contact any consultancy to apply for the online MBA program.
Blekinge Inst of Technology offers several other Masters programs (like Infomatics, Mathematical Modelling and Simulations, Game Design, Electrical Engg, Software Engg, etc). All the courses are listed on the left side of the link (http://www.bth.se/apply)
If you are interested in doing MBA, please consider this option. Please pass this information to your friends who may utilize this opportunity.


http://vinaiooki.blogspot.com/2009/01/online-mba-in-sweden.html

Wednesday, January 14, 2009

பைத்தான் / இ.எம்.பி ப்ளாட்பார்ம் / ப்ரொட்டக்கால் டெஸ்டிங்

பைத்தான் தெரியுமா ?

இ.எம்.பி ப்ளாட்பார்ம்ல வொர்க் பண்ணியிருக்கீங்களா ?

மொபைல் ப்ரொட்டக்கால் டெஸ்டிங்ல ?

வைபை, ஒயர்லெஸ், ரவுட்டர்ஸ், ஐபி, யூ.எஸ்.பி மாதிரி எதிலாவது வேலை செய்திருக்கீங்களா ?
நார்வே (ஆன்ஸைட்) ல வொர்க் பண்ண விருப்பம் இருக்கா ?

ரெஸ்யூம் அனுப்புங்க...சம்பளம் யூரோவில்...ஒர்க் பர்மிட், குடும்பத்தோடு வசிக்கும் வசதி, அப்பார்மெண்ட், இன்ஸ்யூரன்ஸ், இத்யாதி இத்யாதி...

என்னுடைய மின்னஞ்சல் : ravi.antone@gmail.com

வாழ்த்துக்கள்

Tuesday, January 13, 2009

டெவலப்மெண்ட் / டெஸ்டிங் : இமேஜ் ப்ராசஸிங்

ஸ்வீடன் மற்றும் ஐதராபாத்தில் பணிபுரிய Imaging Formats, Codecs, Manipulation Algorithms & Image Processing or Image Signal Processing போன்ற துறைகளில் குறைந்தபட்சம் 1ல் இருந்து இரண்டு வருடம் அனுபவம் உள்ள தகவல் தொழில்நுட்ப வல்லுனர்கள் தேவை...

மொத்தம் 10 பேரை தேர்வு செய்ய இருக்கிறோம்...ஐந்து பேர் சுவீடனில் நிரந்தரமாகவும், 5 பேர் ஐதராபாத்திலும் பணிபுரியவேண்டும்...

4 சீனியர் எஞ்சினீயர்கள் - 2 ஸ்வீடன், 2 இந்தியா4 இளம் எஞ்சினீயர்கள் - 2 ஸ்வீடன், 2 இந்தியா2 டெஸ்ட் எஞ்சினீயர்கள் - 1 ஸ்வீடன், 1 இந்தியா...

இமேஜ் ப்ராசசிங் மற்றும் மல்ட்டிமீடியா, கோடெக்ஸ், இமேஜ் ப்ராசசிங் அல்காரிதம் பற்றி தெரிந்திருக்கவேண்டும்..

பேயர் அல்காரிதம் ஆர் ஜி பி கலர் கோட்ஸ், ஆப்டீனா போன்றதொரு ரெபரன்ஸ் வன்பொருளில் பணியாற்றிய அனுபவம் இன்னும் சிறப்பு...

ஏற்கனவே என்னுடைய மின்னஞ்சலுக்கு ரெஸ்யூம் அனுப்பியவர்கள் தயவுசெய்து மன்னிக்க, இப்போது மீண்டும் அனுப்புமாறு பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன்..

Imaging Formats, Codecs, Manipulation Algorithms & Image Processing or Image Signal Processing.

Strong knowledge of Multimedia formats/technologies/tools
• Past experience implementing Imaging/Audio/Video technologies for embedded products
• Working exposure on various Imaging formats (JPEG/GIF/JPEG2000/MJPEG/PNG), Video
standards (MPEG1/2/4) and Audio (AAC/AMR/MP3) is a plus
• Proven capability and command in C/C++ Programming languages with debugging skills
• Strong in object oriented analysis, design and validation
• Familiar with ARM7/ARM9 architecture and ALP programming.
• Previous experience in working with any one of the DSP platform(TI/ADI/Qualcomm)
• Knowledge of multimedia streaming protocols (RTSP/RTP/SIP) is a plus
• Eye for details, Meticulous, strong documentation and communication capabilities
• Strong math ability with an eye for optimized algorithm implementations or cross platform
porting
• Excellent problem solving skills and ability to work under pressure
• Knowledge of Image Processing (Algorithms, Effects, Codes, Optimization, Applications)
and Camera Architectures.
• Worked on Embedded System design porting, optimizing in Assembly level and platform
integration.
• Familiarity with MPEG4/MPEG2/AAC/AMR/H264/WMA and other codec standards.
• Ability to drive self and eager to learn quickly.
• Good understanding of various phases of testing and Testing frameworks
• Good exposure on Performance tuning and Debugging skills
• Knowledge on Mobile Handset Domain as a plus.
• Ability to work independently and as a team player under challenging work environment
with continuously exploring new technologies.

Salry is not a Constain for the Right Candidate !!!

To Send CV : ravi.antone@gmail.com

Wish you all the Best...!!!

Friday, January 09, 2009

சத்யம் : தளரவேண்டாம்..

சரிந்துகொண்டிருந்த பொருளாதார சூழ்நிலையில் அவற்றை மீள கட்டமைக்கவேண்டிய பணிகளில் இருந்தவர்கள் இப்போது இன்னும் விழி பிதுங்கி நிற்கிறார்கள்...

சத்யம்...

தெரிந்த செய்திகளை சொல்லி நேரத்தை வீணாக்கவிரும்பவில்லை....தகவல் தொழில்நுட்பத்துறையில் இருப்பவர்கள் தளரவேண்டாம்...

நானும் 2000 ஆம் ஆண்டு லே ஆப் போன்ற விஷயங்களை எதிர்கொண்டவன் தான்...இரண்டு மாதங்கள் லே ஆப் செய்யப்பட்டேன்...பிறகு சூழல்கள் சரியானதும் மீண்டும் நிறுவனம் அழைத்துக்கொண்டது...

தன்னம்பிக்கையோடு இருங்கள்...Y2K பிரச்சினையில் உலகம் தட்டையாயிரும், நாம் அனைவரும் செவ்வாய் கிரகத்தில் போய் குடியேறவேண்டும் என்ற வகையில் பில்டப் இருந்தது...

அதனை கடந்துவரவில்லையா ? அதனால் இதுவும் கடந்துபோகும்...!!!

திடீர் பிரச்சினை - லே ஆப் போன்ற சவால்களை சந்திப்பவர்கள் ravi.antone@gmail.com என்ற என்னுடைய மின்னஞ்சலுக்கு தொடர்புகொள்ளவும்...

என்னால் ஆன உதவிகளை செய்கிறேன்...!!!

நார்வேயில் நர்சு பணி

நார்வே நாட்டில் நர்சு பணி காத்திருக்கிறது...இந்தியாவில் உள்ள நார்வேஜியன் எம்பஸி விளம்பரம் கொடுத்திருக்கிறார்கள்...

http://www.norwayemb.org.in/visas/visas/position+a+nurses+in+norway.htm

குளிர் நாடென்றாலும் அற்புதமான நாடு நார்வே...நல்ல தரமான சம்பளமும் உண்டு என்று தெரிகிறது...

உங்களுக்கு அறிந்தவர் தெரிந்தவர் நர்சு படிப்பு முடித்திருந்தால் அவர்களுக்கு சொல்லவும்.,.