தேடுதல் வேட்டை

Tuesday, August 26, 2008

இண்டர்வியூ Tipsஅம்மா, அப்பாவுக்குக் கூட பயப்பட மாட்டோம், 'இண்டர்வியூ'ங்குற ஒரு வார்த்தையை கேட்டவுடனே அடி வயித்துல 'லகலகலக'தான்.

இண்டர்வியூல போய் உட்கார்ந்த உடனே நாக்குல தண்ணி எல்லாம் வத்திப்போயி, 'பே..பே..'ன்னு ஊமை மாதிரி நாம பேச, இண்டர்வியூ எடுக்கறவர் நமக்கு பெப்பே காட்டிட்டு வேற ஆளை செலக்ட் பண்ணிடுவார்.

இத்தனைக்கும் நமக்கு எல்லாம் தெரிஞ்சிருக்கும். நம்மளை விட 'சரக்கு' கம்மியா, பர்ஸண்டேஜ் கம்மியா, கம்யூனிக்கேஷன் ஸ்கில் கம்மியா இருக்குற ஒருத்தர் அந்த வேலையை கொத்திட்டு போயிடுவார். அப்ப நாம என்ன தப்பு பண்ணினோம்..? 'தவறான பாதையில் வேகமாக ஓடி என்ன பயன்..?' அப்படின்னு ஒரு பழமொழி இருக்கு... அதேதான்.

ஏன் நமக்கு மட்டும் இண்டர்வியூ ஊத்திக்கிது..?

நெட்வொர் புக்கை பிரிச்சு மேஞ்சிருப்போம், நெட்வொர்க்கிங் பேப்பர்ல 90% தூக்கியிருப்போம். ஆனா இண்டர்வியூவுல "வாட் ஈஸ் த செவன் லேயர்ஸ்" னு கேட்டாங்கன்னா, நாக்கு மேல் அண்ணத்துல ஒட்டிக்கும். அரை மணி நேரம் பேருக்கு கேள்விகளை கேட்டுட்டு, 'எவ்ளோ அடிச்சாலும் தாங்குறாண்டா, இவன் ரொம்ப நல்லவன்'னு நம்மளை வெளிய அனுச்சுட்டு, வேற யாராவது மொக்கைக்கு ஆஃபரை கொடுத்துருவாங்க. எப்படி இதை சரி செய்யறது..?

1.நேரத்துக்கு போயிடனும். 9 மணிக்கு இண்டர்வியூன்னா 8 மணிக்கே கில்லியா இண்டர்வீயூ ஹால் முன்னாடி இருந்தோம்னா, தேவையில்லாத டென்ஷனை தவிர்க்கலாம்.

2. அழுக்கு ஜீன்ஸ் எல்லாம் ஊர் சுத்த ஓ.கே. இண்டர்வியூவுக்கு நல்ல தூய்மையான ட்ரெஸ் போட்டுட்டு போங்க.

3. தன்னம்பிக்கையோடவும், சிரிச்ச முகத்தோடவும் (பயத்தை வெளிய காட்டக்கூடாதுல்ல...) இண்டர்வியூ பண்றவங்களை எதிர்கொள்ளுங்க. (அதுக்காக 'அடிக்கடி' சிரிச்சுக்க வேணாம்).

4. கேள்வி கேட்டா மட்டும் பதிலை ஆரம்பிங்க. இண்டர்வியூ ரூம்குள்ள போனவுடனே, 'ஐயாம் சங்கீதா அண்டு ஐ ஹாவ் ஒன் ஃபாதர் அண்ட் ஒன் மதர்'னு ஆரம்பிக்க வேணாம்.

5. உங்க எக்ஸாம்பிள்ஸ்/ பதில் கேள்விக்கு ரிலேட்டிவ்வா இருக்கட்டும். அவசியமில்லாத விஷயங்களை அள்ளிவிட வேண்டாம்.

6. உடல் மொழின்னு ஒன்னு இருக்கு. அதாங்க பாடி லாங்வேஜ். நிமிர்ந்த நன்னடை, நேர்கொண்ட பார்வைன்னு நம்ம பழங்காலத்துலயே பாடி லாங்வேஜ் பத்தி 'பாடி' வெச்சிருக்காங்க நம்ம புலவர்கள். ஐ காண்டாக்ட் (Eye Contact) ரொம்ப முக்கியம். இண்டர்வியூ எடுக்கறவங்களை நேரா பார்த்து பேசுங்க. எங்கேயோ வானத்தை பார்த்துக்கிட்டு பதில் சொல்ல வேண்டாம்.

7. நல்லா கம்பர்ட்டபிளா சேர்ல உட்காருங்க. ரொம்ப மரியாதை கொடுக்கறமாதிரி, சேர் நுனியில உக்கார்ந்து, அப்புறம் கீழ விழுந்துட போறீங்க. அதுக்காக வீட்டு ஹால்ல டி.வி. பார்க்குற மாதிரி கால் கால் தூக்கிப் போட்டுகிட்டும் உட்கார வேண்டாம்.நீங்க உட்கார்ந்திருக்க தோரணையிலயே உங்க தன்னம்பிக்கை வெளிப்படனும்.

8. இண்டர்வியூல எப்போதும் பாசிட்டிவ்வா பேசுங்க. 'உங்க க்ளாஸ்ல எத்தனை பேர் பெயில்?'னு கேட்டா, எத்தனை பேர் பாஸ்னு பதில் சொல்லனும். அதுக்காக மறுத்து பேசக்கூடாதுன்னு இல்ல. நீங்க முழுமையா நம்புற ஒரு விஷயத்தை இண்டர்வியூ பண்றவர் தப்புன்னு சொன்னா தயங்காம அதை மறுத்துப் பேசலாம். 'ஆமாம் சாமி' கோஷ்டிகளை விட நல்லா விவாதம் செய்பவர்களையே கம்பெனிகள் விரும்பும்.

9. எந்த கேள்விக்கும் தயங்கி, தயங்கி பதில் சொல்லாதீங்க. தெரியும்னா தெரியும், தெரியாதுன்னா தெரியாது. தலையை ஒன்னு ஆமான்னு ஆட்டுங்க, இல்லைன்னா இல்லைன்னு ஆட்டுங்க. ரெண்டு பக்கமும் ஆட்டி குழப்(ம்)பாதீங்க. இது உங்களோட தன்னம்பிக்கையை சோதிக்கும் முக்கியமான டெஸ்ட்.

10. 'நீங்க ஏதாவது கேட்க விரும்புகிறீர்களா?' என்று கேட்டா, கண்டிப்பா உங்களுக்கு தோன்றியதை கேளுங்க. 'இன்னைக்கு புதன் கிழமைதானே'னு டுபுக்கு கேள்விகளா கேட்காம, உருப்புடியா 'இந்த நிறுவனத்தில் என்னுடைய வேலை என்னவாக இருக்கும்?' அப்படிங்குற மாதிரி கேளுங்க.

11. உங்களை போகச்சொன்னவுடன் 'நன்றி' சொல்லிட்டு, வெளிய வாங்க.

கடைசி ட்ரிக்: இண்டர்வியூ நடக்கும்போது நீங்க கம்பர்ட்டபுளா இல்லைன்னு நினைச்சீங்கன்னா ஒரு க்ளாஸ் தண்ணீர் கேளுங்க. அவங்களும் ஒரு காலத்துல இண்டர்வியூ அட்டர்ண் பண்ணவங்கதான். கண்டிப்பாக உதவுவாங்க. நீங்களும் கொஞ்சம் ஆசுவாசப்படுத்திக்க நேரம் கிடைக்கும். இண்டர்வியூவர் மைண்ட் செட் சரியில்லைன்னா (அவர் ஏதாவது பர்சனலா ஓகேவா இல்லைன்னா...) இந்த சின்ன கேப் அதை சரி பண்ண உதவும். இந்த கார்டும் ஒர்க் அவுட் ஆகலைன்னா, இந்த ஏஸ் கார்டை போட்டுப் பார்க்கலாம்.

வாழ்த்துக்கள்!

Monday, August 18, 2008

B.E/ B.Tech/MCA - படித்தவர்களுக்கு வேலைவாய்ப்பு!!

பணியின் பெயர் : குவாலிட்டி என்ஜினியர்

தேவைப்படும் திறமைகள் : Metric Analysis,CMMI, Data Analysis,Six Sigma

நல்ல தொடர்புத் திறனும், பேச்சுத்திறமையும் இருப்பது கூடுதல் தகுதி.

Should have:

Hands on inpletation of quality management system(QMS) complaint with CMM/CMMI and ISO standards.

Good exposure on Metric Analysis and Data Analysis.

Ability to handle SQA functions for multiple projects independently.
Conducted trainings on QMS, project team trainings and auditor trainings.

அனுபவம் : 3 முதல் 5 வருடங்கள் இருக்க வேண்டும்.

கல்வித்தகுதி : B.E/ B.Tech/MCA

3 பேர் உடனடியாக பணிக்கு தேவைப்படுகிறார்கள்.

பணியிடம் : பெங்களூரு

உங்களைப் பற்றிய சுயவிவரங்களை உடனடியாக அனுப்பவேண்டிய மின்னஞ்சல் முகவரி : ravi.antone@gmail.com

Wednesday, April 16, 2008

Peoplesoft - உடனடி தேவை

Job Title: People Soft EPM, Peoplesoft ESA, Peoplesoft HCM, Peoplesoft CRM, Peoplesoft FSCM

Description: The incumbent should have

1. Should have atleast five years of IT experience

2. Should have worked on technical side of PeopleSoft for at least three years and atleast one year in PeopleSoft 8.9 or above and PeopleTools 8.46 or above.

3. Should have working experience of Five PeopleSoft projects in the capacity of developer

4. Proficient in Application designer, People Tools, People Code, Application Engine, File Layout, Application Packages, SQR, PS Query, Crystal Reports, Integration Broker, Component Interface

Job Title: People Soft DBA

Description: The incumbent should have

1. Installation & Creation of PIA ( Mandatory )

2. PeopleSoft Security Administration ( Mandatory )

3. Implementation & Enable an Integration Broker Handlers.

4. Scheduling the batch processes as per the business requirements. ( Mandatory )

5. SQR , nVision & Crystal Report setups and configurations for support users & end-users. ( Mandatory )

6. Time to Time implementations & configurations of business application processes for documentations.

7. Load balances of PIA server processes.

8. Enable the continuity setups & processes incase of server failures / crashes.

9. Weblogic & Tuxedo administration activities.

10. Capable to handle the different environments like Demo - Development - Test - Gold - QA - Production. ( Mandatory )

11. Good to have Oracle DBA activities which are related to People Soft Administration purpose.

12. Good trouble shooting skills for PS Administrator activities.

13. As per the GSC recommendations time to time apply the patch updations & upgradation in all environments. ( Mandatory )

14. Movement of Customized objects from various environments. (Mandatory )

15. Good knowledge of DataMover to execute the people soft related scripts.

16. Strong PS Admin knowledge on PeopleTools 8.49 & Application 9 ( HCM , FSCM , EPM , CRM & Portal ). (Good to have)

Monday, March 31, 2008

இளம்பொறியாளர்கள் / .நெட் / SQL சர்வர் தெரியுமா ?

.நெட் / எஸ்.கியூ.எல் சர்வர் தெரிந்தவர்கள் இருக்கிறீர்களா ? இளம்பொறியாளர்களாக இருந்தாலும் பரவாயில்லை...

புருணை நாட்டில் சிறப்பான பணிவாய்ப்பு காத்திருக்கிறது...

விசா / பணி உரிமை போன்றவற்றை நிறுவனமே ஏற்பாடு செய்து தருகிறது...

சிறந்த சம்பளம்...

ரெஸ்யூம் அனுப்ப வேண்டிய முகவரி ravi.antone@gmail.com

Sunday, March 30, 2008

PHP - .Net - SQL தெரியுமா ? புருனை நாட்டில் வேலைவாய்ப்பு

உங்களுக்கு PHP, .Net, SQL போன்றவைகளில் மென்பொருட்களை தயாரிக்கும் திறன் உண்டா ?

இளம்பொறியாளர்கள், ஏற்கனவே பணியில் இருப்பவர்கள் (இரண்டு ஆண்டு அனுபவம்) விண்ணப்பிக்கலாம்...

தங்குமிடம், விசா போன்றவைகளை புருணை நாட்டு நிறுவனமே ஏற்பாடு செய்கிறது...

- தேர்ந்தெடுக்கப்படும் நபர் தனித்து இயங்கும் ஆற்றல் பெற்றவராக இருக்கவேண்டும்...
- சிறந்த சம்பளம் வழங்கப்படும்...

தொடர்புகொள்ள வேண்டிய மின்னஞ்சல் முகவரி ravi.antone@gmail.com

Thursday, March 27, 2008

ஸ்வீடன் - பணிவாய்ப்புகள் (Mobile Domain - Development)

சுவீடன் நகர் ஸ்டாக்ஹோம் - சோனி எரிக்ஸனில் பணிபுரிய மொபைல் டெக்னாலஜியில் இருப்பவர்களுக்கு அருமையான வாய்ப்பு....

குடியுரிமை அல்லது வொர்க் பர்மிட் போன்றவைகளுக்கு சோனி எரிக்ஸன் நிறுவனமே ஏற்பாடு செய்கிறது...

தேவையான தகுதிகள் : MMS, WAP, SMTP, EMAIL போன்றதொரு மொபைல் அப்ளிக்கேஷன் டெவலப்மெண்ட் ( Phone Development Kit அல்லது Ericsson Mobile Platform ல் பணி புரிந்துகொண்டிருந்தால் சிறப்பு...)

அனுபவம் : குறைந்தது மூன்று ஆண்டுகள் !!!

சம்பளம் : சோனி எரிக்ஸன் - ஸ்வீடன் இண்டஸ்ட்ரி ஸ்டேண்டர்ட் சம்பளத்தை வழங்கும்...

தொடர்புகொள்ளவேண்டிய முகவரி : tedujobs@gmail.com (send resume)

உங்கள் நன்பர்களுக்கு தெரியப்படுத்துங்களேன்...!!!

Saturday, March 22, 2008

மார்க்கெட்டிங் எக்ஸிகியூட்டிவ் (சென்னை / பெங்களூர்)

சென்னை, பெங்களூரில் பணிபுரிய மார்க்கெட்டிங் எக்ஸிகியூட்டிவ்ஸ் தேவை. சொந்தமாக இரண்டு சக்கர வாகனம் இருத்தல் சிறப்பு. (இல்லை என்றால் நிறுவனம் தரும், லைசென்ஸ் தேவை)

பணி : மார்க்கெட்டிங்

கல்வி : குறைந்தபட்சம் இளநிலை

தேவையான தகுதி : ஆங்கில அறிவு இருக்கவேண்டும்

சம்பளம் : ரூ 5,000

* ஏற்கனவே வேறு பணியில் இருப்பவர்கள் பகுதி நேர பணியாக இதனை செய்யலாம்.

தொடர்புகொள்ளவேண்டிய மின்னஞ்சல் : tedujobs@gmail.com

Wednesday, March 19, 2008

பத்தாவது வரை படித்த SC/ST மாணவர்களுக்கு சினிமாத்துறையில் இலவச கல்விவாய்ப்பு!

சினிமாத்துறையில் கல்வி கற்க விரும்பும் ஏழை SC/ST மாணவர்களுக்கு தமிழக அரசு மாதம் ரூபாய் ஐநூறு உதவித்தொகையோடு இலவசக்கல்வி கற்க வகை செய்திருக்கிறது. மாணவர்கள் பத்தாவது வகுப்பு வரை படித்திருந்தால் போதுமானது.

மேலும் விபரங்களுக்கு!

நன்றி : பிரமிட் சாய்மீரா

Monday, March 03, 2008

தகவல் தொழில்நுட்ப சுயதொழில் - கோவையில் சந்திப்பு

தகவல் தொழில்நுட்ப சுயதொழில் பற்றி நான் எழுதிய தொடர் பற்றி அறிந்திருப்பீர்கள்...இது குறித்து அறிந்த முதலீட்டாளர்கள் / பணிகளை நிறைவேற்றித்தரும் நிறுவனம் அமைக்க விரும்புபவர்கள் தொடர்புகொண்டார்கள்...

பணிகளை நிறைவேற்றும் துறையில் கால்பதிக்க விரும்பும் மாணவ மாணவிகள், குடும்பத்தலைவிகள், வெளிநாடுகளில் வசிக்கும் நன்பர்கள் தொடர்புகொண்டார்கள்...

கடந்த சில வாரங்களாக வேறு நிறுவனத்திற்கு மாறுதல், மற்றும் சில சொந்த காரணங்களால் என்னால் இதில் ஈடுபட முடியவில்லை...(அப்படி இருந்தாலும் - வார இறுதிகளில் மட்டுமே இந்த வழிகாட்டுதலை என்னால் செய்யமுடியும்...)

ஆனால் இந்த தொழிலில் முழு நேரமாக ஈடுபட விரும்பும் நன்பர்கள் / முதலீட்டாளர்களின் கேள்விகளுக்கு பதில் கூற / வழிகாட்ட இயலவில்லை...

அதனால் திரு.ஓசை செல்லா தலைமையில் கோவையில் முதலீட்டாளர்கள் / தொழில் முனைவோர் சந்திப்பு நடத்தலாம் என்று முடிவு செய்யப்பட்டுள்ளது...

கோவையில் சிறு சந்திப்பு மற்றும் விளக்க கூட்டம், மற்றும் தொழில் முனைவோருக்கான வழிகாட்டுதலை நடத்தும் இந்த முயற்சியை திரு. ஓசை செல்லா அடுத்த வார இறுதியில் (மார்ச் 15 (சனிக்கிழமை) அல்லது மார்ச் 16 (ஞாயிறு) ஆகிய தேதிகளில் ஒன்றில் நடத்த இருக்கிறார்...

உரையாற்றுவோர் / கலந்துகொள்வோர் பட்டியல் வெளியிடப்படாது...நிகழ்ச்சி நிரல் முடிவு செய்யப்படவில்லை...

விரும்புவோர் ஓசை செல்லா அவர்களை 099946 22423 என்ற எண்ணில் தொடர்புகொண்டு பதிவு செய்துகொள்ளவும்...(எந்த பதிவு கட்டணமும் கிடையாது)

வாருங்கள்...தொழில் முனைவோராக திரும்பி செல்லுங்கள் !!!!!!!

Saturday, March 01, 2008

சோனி-எரிக்ஸன் ( பெங்களூர்) - பணிவாய்ப்புகள்

சோனி எரிக்ஸன் பெங்களூர் கிளையில் (புதிய ஆப்ஷோர் செண்டர்) பணி வாய்ப்புகள் ஏராளம்...கீழ்க்கண்ட துறைகளில் பணியாளர்களை தேர்ந்தெடுக்க விழைகின்றது இந்த நிறுவனம்...

- Mobile Application Development ( MMS, SMS, EMS, Media CodeX, Mailer, WAP)
- Device Drivers (RTOS)
- Mobile Testing ( Protocols, Automation with Tcl/Tk, Knowledge in Agilent / Anritsu is a Plus)
- QA (Quality Process)

அனைத்து பணிகளுக்கும் குறைந்தபட்சம் இரண்டு ஆண்டுகள் அனுபவம் தேவை, இளம்பொறியாளர்கள் மன்னிக்கவும்....

எங்கே அனுப்புவது : ravi.antone@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்பவும்..

குறிப்பு : டெஸ்டிங் மற்றும் டெவலப்மெண்ட் துறையில் தேர்ந்தெடுக்கப்படுபவர்களுக்கு முதல் மூன்று மாதம் ஸ்வீடனில் ட்ரெயினிங் இருக்கும்.

Wednesday, February 27, 2008

ஜாவா பணியாளர்களுக்கு உடனடி வேலைவாய்ப்பு!

உங்களுக்கு “ஜாவா” தெரியுமா?

இரண்டு ஆண்டுகள் இத்துறையில் அனுபவம் இருக்கிறதா?

உடனே உங்கள் Resumeஐ கீழ்க்கண்ட முகவரிக்கு மின்னஞ்சல் செய்யுங்கள். பிரகாசமான எதிர்காலத்துக்கு வாழ்த்துக்கள்!

manjanatha.rr@kengroup.co.in

Tuesday, February 26, 2008

Admin/Helpdesk Executives மற்றும் Front office Executives உடனே தேவை!

Postion :- Admin/Helpdesk Exe
Salary :- 5.5K to 6.5 K Gross PM ( Regular position, PF,ESI includes)
Exp :- Freshers will be ok , exp can also apply
Place of work :- HCL- ETA Techno Park -Navalur
No.of Vacancy : 4
contact person :- selvi@tero-technology.com
Contact # :9790931448

Postion :- Front office Exe
Salary :- 5.5K to 6.5 K Gross PM ( Regular position, PF,ESI includes)
Exp :- Freshers will be ok , exp can also apply
Place of work :- HCL- ETA Techno Park -Navalur
No.of Vacancy : 2
contact person :- selvi@tero-technology.com
Contact # :9790931448

எங்கள் வலைப்பூவுக்கு விடாமல் வேலைவாய்ப்பு செய்திகள் தந்து உதவும் சகோதர உள்ளத்துக்கு நன்றி!!!

Tuesday, February 19, 2008

வேலை பார்க்க சூடானுக்கு போறீங்களா?

கீழ்க்கண்ட பணியிடங்களுக்கு அவசரமாக ஆட்கள் தேவை. பணியிடம் : சூடான்

1) பவர் பிளாண்ட் சூபரிண்டெண்ட் (2 நபர்)
2) பவர் பிளாண்ட் மெயிண்டனன்ஸ் என்ஜீனியர் (2 நபர்)
3) பவர் பிளாண்ட் ஆபரேட்டர் (2 நபர்)
4) பவர் பிளாண்ட் மெக்கானிக் (10 நபர்)
5) பவர் பிளாண்ட் எலக்ட்ரிசியன் (10 நபர்)

மற்ற விவரங்கள்

- தேர்ந்தெடுக்கப்படுபவர் இரு வாரங்களுக்குள்ளாக பணியில் சேர தயாராக இருத்தல் வேண்டும்.

- ஒரு நாளைக்கு 12 மணி நேரம் தொடர்ச்சியாக விடுப்பில்லாமல் 35 நாட்கள் பணிபுரியத் தயாராக இருத்தல் வேண்டும்

- அடுத்த 35 நாட்களுக்கு விடுப்புடன் கூடிய விடுமுறை. விடுப்பில் தாய்நாட்டுக்கு சென்று வரக்கூடிய வசதி.

- 35 நாட்கள் வேலை, 35 நாட்கள் விடுமுறை என்பது தொடர்ச்சியாக அமையும்.

- கவர்ச்சிகரமான சம்பளம்

- எண்ணெய் மற்றும் எரிவாயு நிறுவனங்களில் பணிபுரிந்திருந்தால் முன்னுரிமை


உடனே தொடர்பு கொள்ள : 9790931448
மின்னஞ்சலில் தொடர்பு கொள்ள : selvi@tero-technology.com

முயற்சி திருவினையாக்கும்!
முயலாமை - முயல், ஆமை கதையில் முயலுக்கு நேர்ந்த கதியை கொடுக்கும்!!

தகவல் தொழில்நுட்ப சுயதொழில் வாய்ப்புகள் (Part 6)

உங்களுக்கு ஒரு இணைய தள முகவரி வேண்டும்...www.mysoftwarecompany.com என்று தேர்ந்தெடுக்கலாம் என்று யோசித்து வைத்துள்ளீர்கள்...அந்த இணைய தளத்தை முன்பே யாரும் வைத்திருக்கிறார்களா என்று முதலில் தெரிந்துகொள்ளவேண்டும் அல்லவா ?

(Who Is he) ஹூ ஈஸ் ஹீ ? அப்படீன்னா " யார் அவர்" அப்படீன்னு அர்த்தம்...அட நீங்க எல்.க்கே.ஜி புள்ளை இல்லைங்க...இந்த அளவு அடிப்படையில் இருந்து சொல்லிக்கொடுக்கறதுக்கு...இணையத்துல ஹூ ஈஸ் அப்படீன்னு அடிச்சா யாரு வெப்சைட் ஓனர்னு கண்டுபிடிச்சிடலாம்..

www.whois.com என்ற இணைய வலைமனையில் சென்று உங்களுக்கு தேவையான முகவரியை வாங்கலாம் அல்லது உங்களது இணைய தள பெயர் முன்பே எடுக்கப்பட்டுவிட்டதா அல்லது இன்னும் அவெய்லபிள் ஆக உள்ளதா என்பதை காணலாம்...

நல்ல இணைய தளத்தை ரெஜிஸ்டர் செய்வது மிகப்பெரிய தொழிலாகும்...வண்டிக்கு பேன்ஸி நம்பர் போட்டுட்டுக்கொண்டு "கெத்" ஆக செல்லும் பணக்காரர்களைப்போல, சிறந்த வார்த்தைகள் கோர்க்கப்பட்ட இணைய தளங்களின் மதிப்பு சொல்லில் அடங்காது...

ஹாட்மெயில் (www.hotmail.com) என்ற இணைய தள முகவரியை ரெஜிஸ்டர் செய்தார் இந்தியாவை சேர்ந்த சபீர் பாட்டியா என்ற வடநாட்டுக்காரர்...உலக பெரும் பணக்காரரார் பில்கேட்ஸால் நடத்தப்படும் மைக்ரோசாப்ட் நிறுவனம் அதனை கிட்டத்தட்ட நானூறு கோடி விலைக்கு வாங்கியது.....

மொத்தமாக அந்த இணையதளத்தை உருவாக்க ஆயிரம் ரூபாயை சபீர் பாட்டியா செலவழித்திருப்பார்...பாருங்கள் அதன் மதிப்பை...ஹூ ஈஸ் இணைய தளத்தில் இருந்து ஒரு படத்தை கொடுத்துள்ளேன்...

உங்களால் சொந்தமாக இணைய தளத்தை வாங்க / பராமரிக்க முடியவில்லை என்றால் அதனை கற்றுக்கொள்வதே தகவல் தொழில்நுட்ப சுயதொழிலின் முதல் படி...

ஆச்சு...வெப்சைட் வாங்கியாச்சு...ஆனால் அதில் கோப்புகளை இணைப்பது, சுயமாக மின்னஞ்சல்கள் உருவாக்குவது ( இணைய தளத்தை வாங்கும்போது அதில் இலவச இணைப்பாக இருபத்தைந்து மின்னஞ்சலாவது தருவார்கள்...உம்: உங்கள் இணைய தளம் www.madurai.com என்றால் pandiyan@madurai.com என்று நீங்கள் உங்கள் பெயரில் மின்னஞ்சல்களை உருவாக்கிக்கொள்ளலாம்..)

கஸ்டமர் கண்ட்ரோல் பேனல் என்று ஒன்றை தருவார்கள்...கடவுச்சொல் கொடுத்து உள்ளே சென்று உங்கள் இணையதளத்தை முழுவதும் நீங்களே பராமரித்துக்கொள்ளலாம்...இணைய கண்ட்ரோல் பேனல் (Control panel) எப்படி காட்சியளிக்கும் என்பதை காட்ட ஒரு படம் கொடுத்துள்ளேன்...படத்தின் மேல் அழுத்தி பெரிதாக பார்க்கவும்...

சரி...இப்போது நமது கட்டுரையின் முக்கிய பகுதிகளுக்கு வருவோம்...சில முக்கிய விடயங்களை கேள்வி பதில் வடிவில் பார்க்கலாம்...

கேள்வி : டேட்டா எண்டரி, இணையத்தில் வீட்டில் இருந்தே சம்பாதிக்கும் தொழில்கள் போன்றவற்றில் பணப்பரிமாற்றம் முறையாக நடைபெறுமா ?

இணைய தளங்கள் முழுமையான பாதுகாப்பை வழங்குகின்றன...மேலும் பணிகளை ஏலம் எடுக்க வரும் நபர்களும் உங்களை ஏமாற்ற வேண்டும் என்று கங்கனம் கட்டிக்கொண்டு வருவதில்லை...அங்கொன்றும் இங்கொன்றுமாக சில சம்பவங்கள் நடைபெறத்தான் செய்கின்றன என்றாலும், அதன் சதவீதம் நூற்றுக்கு ஐந்து என்ற அளவிலேயே உள்ளது...எஸ்குரோ (escrow) அக்கவுண்ட் என்று ஒரு முறை உள்ளது...

நமது பணி ஆரம்பிக்கும் முன்பே பணி வாய்ப்பை வழங்குபவர் குறிப்பிட்ட தொகையை முதலீடு செய்யவேண்டும்...பணி நிறைவடைய நிறைவடைய, நாம் அந்த தொகையில் குறிப்பிட்ட பகுதியை அளிக்குமாறு கேட்கலாம்...பணியை வழங்குபவரும் குறிப்பிட்ட தொகையை திறந்துவிடுவார்...அதனை பெற்றுக்கொண்டு மேற்கொண்டு நமது பணியை தொடரலாம்...

நீண்ட கால அடிப்படையில் பணி வாய்ப்பை தேடுபவர்கள் எஸ்குரோவை கண்டிப்பாக பயன்படுத்துதலின் மூலம், நமக்கு வரவேண்டிய பணம் இருப்பதை உறுதி செய்துகொண்டு மன நிம்மதியுடன் பணியாற்றலாம்...

சுயதொழில் வாய்ப்புகளில் சம்பாதிக்க என்ன என்ன அடிப்படையான தேவைகள் ? என்னமாதிரியான தொழில் நுட்ப அறிவு தேவை ? தொழிற்கல்வி / இணையம் பற்றிய கல்வி / தகவல் தொழில் நுட்ப படிப்பு போன்றவற்றை படித்திருந்தால் தான் இது போன்ற தொழிலில் இறங்க முடியுமா ? அல்லது குறைந்த பட்ச கணிணி அறிவு போதுமானதா ?

கண்டிப்பாக ஆங்கில அறிவு தேவை...பெரிய தொழில்நுட்ப அறிவு ஒன்றும் தேவையில்லை எனினும், வெப் டிசைனிங், வெப்சைட் மானேஜ்மண்ட், எக்ஸெல் , வேர்ட், பி.பி.டி போன்றவைகளில் முறையாக பணியாற்ற தெரிந்திருக்கவேண்டும்...

அதைவிட சிறப்பான தகுதியாக நான் நினைப்பது, கூகுள், யாகூ போன்ற தேடுதளங்களில் தேவையான விவரங்களை உடனடியாக தேடி பெறும் திறமையையே...நமக்கு தேவையான விவரங்களை திரட்டித்தரத்தான் இந்த தேடுதளங்கள் உள்ளன...

ஆனால் எதையாவது தேடவேண்டும் என்றால் குப்பை போல பல ஆயிரக்கணக்கான தளங்களை நம் கண்முன்னே கொண்டு வரும் இந்த தேடுதளங்களில் இருந்து, நமது பணிக்கு தேவையான விவரத்தை அண்ணப்பட்சி போல் உறிஞ்சி எடுக்கும் திறமையே உண்மையான திறமையாகும்...

மேலும் என்னுடைய கருத்து, பணிக்கு தக்கவாறு திறமைகளை வளர்த்துக்கொள்வதே...வெப் டிசைனிங் தெரியும், ஆனால் வெப் சைட்டை டேட்டாபேஸ் உடன் இணைத்து தகவல்களை உள்ளீடு செய்ய தெரியாது என்றால் அதனை கற்க வேண்டும்...

சுருங்கச்சொல்லின், டேட்டா எண்டரி பணிக்கு, கணினையை இயக்க தெரிந்து நன்றாக டைப்படிக்க தெரிந்தால் போதும்...ஆனால் ஒரு தொழில் முனைவோராக மாறப்போகும் நீங்கள் கணிணி இணைய பணிகள், போட்டோஷாப், வெப் டிசை, லோகோ டிசைன், வெப் சர்ச்சிங் போன்ற அனைத்தையும்...அட...ஆதி முதல் அந்தமாக கற்றுக்கொண்டேடேடே இருத்தல் நலம்...

உங்கள் கல்வித்தகுதியை பார்த்து அல்லாமல் உங்கள் திறமையை பார்த்து பணிகளை தரும் துறை இதுங்க....

இந்த பணிகளை தனியாக செய்ய முடியுமா அல்லது குறைந்த பட்சமாக ஓரிரு உதவியாளர்கள் போதுமா ?

அது நீங்கள் எடுக்கும் ப்ராஜக்டை பொறுத்தது...ஒன்றிரண்டு பணிகள் மட்டும் எடுக்கிறீர்கள்...தனியாளாக இந்த தொழிலில் இருக்கப்போகிறீர்கள் என்றால் நீங்கள் மட்டுமே போதும்...ஆனால் உங்கள் பணிகள் அதிகரிக்க அதிகரிக்க ( பத்து பதினைந்து ப்ராஜக்ட்ஸ் எடுத்துட்டீங்கன்னு வெச்சிக்கோங்க...) அப்போது கண்டிப்பாக உங்களுக்கு பணிகளை பொறுத்து உதவியாளர்கள் வேண்டும்...

எவ்வளவு ஆரம்ப முதலீடாக இடவேண்டும் ? தொழிலில் இறங்கிய உடனே லாபம் கிடைக்குமா ? எவ்வளவு ஆண்டு வருமானம் கிடைக்கும் ?

ஆரம்ப முதலீடு, ஒரு இணைய இணைப்புடன் கூடிய ஒரு கணினி, மற்றும் ஒரு க்ரெடிட் கார்ட் ( இதற்கு ஒன்றும் செலவு ஆகாது, இலவசமாகவே ஐ.சி.ஐ.சி.ஐ, சிட்டிபாங்க், பாரத ஸ்டேட் வங்கி ஆகியவர்கள் தருகிறார்கள்)..

ஒரு பே-பால் அக்கவுண்ட் ( உங்கள் க்ரெடிட் கார்ட் வெரிப்பிக்கேஷனுக்கு ஒரு 3 டாலர் செலவாகும்)...நீங்கள் இரவில் கண்விழித்து இணையத்தில் ப்ராஜக்ட் தேடும்போது சூடாக ஒரு சாயா...

மொத்தத்தில் முப்பதில் இருந்து நாற்பதாயிரம் வரை செலவாகும்..பக்கத்து கம்ப்யூட்டர் செண்டரில் வெப் டிசைனிங், ஸ்போக்கன் இங்கிலீஷ் கோர்ஸ் சேர்ந்துகொண்டால் மேலும் ஒரு அய்ந்தாயிரம்....

அவ்வளவு தான்...தொழில் முனைவோராக உருவெடுக்க தயாராகிட்டீங்களே !!! நன்றி...!!!! இவ்வளவு நேரம் என்னுடைய தொடரை படிச்சதுக்கு...!!!!

டெயில் பீஸ்:

இணைய தளங்களை வாங்க விற்க என்று இணையத்தில் செயல்படும் ஒரு இணைய புரோக்கர் www.sedo.com நிறுவனத்தார், இவர்களின் ஆண்டு வருமானம் ஒரு மில்லியன் டாலர்கள்...

பின் குறிப்பு...

தகவல் தொழில் நுட்ப சுயதொழில் பற்றிய தொடர் நிறைவடைந்தது, உங்கள் கருத்துக்களை, கேள்விகளை என் முன்னால் வையுங்கள்...தொழில் ரகசியங்கள் என்று பெரிதாக ஒன்றும் இல்லை இந்த துறையில்...எல்லாமே எல்லாருக்குமே தெரியும்...Now You also know everything.....அவ்வளவு தான்...!!!!!!!!!!!!...Best Wishes...!!!!!!!!!!!

Saturday, February 16, 2008

தகவல்தொழில்நுட்ப சுயதொழில் : எங்களுடன் இணைய தயாரா ?

வலைப்பதிவர்களே, நன்பர்களே..

தகவல் தொழில்நுட்ப சுயதொழில் பற்றி நான் எழுதிவரும் தொடர் பற்றி அறிந்திருப்பீர்கள்...

நான் இந்த துறைபற்றி நான்கைந்து ஆண்டுகளாக அறிந்திருந்தாலும் / ஈடுபட்டிருந்தாலும், நான் ஒரு தொழிலாளராக நிறுவனங்களில் பணியாற்றுவதால், என்னுடைய பணி நேரத்தை முழுமையாக இதில் ஈடுபடுத்துவது முடியாத காரியம்...

அதனால் நமது வலைப்பதிவர்களிள் ஏற்கனவே சுயதொழிலில் ஈடுபட்டிருப்பவர்களின் டேலண்ட்ஸை ஒருங்கினைத்து, ஒரு டீமை உருவாக்கலாம் என்று நினைக்கிறேன்...

ப்ராஜக்ட் எடுப்பது, ரெவன்யூவை ஷேர் செய்வது, பல்வேறு விதமான டெக்னிக்கல், நான் டெக்னிக்கல் டேலண்ட்ஸ் ஒருங்கிணைப்பது போன்றவற்றை பற்றி விவாதிக்கலாம் வாருங்கள்...

- டேட்டா எண்ட்டரி
- விர்ச்சுவல் அஸிஸ்டண்ட்
- வெப்சைட் க்ரியேஷன், மெயிண்டெனன்ஸ்

போன்ற துறைகளிள் ஏராளமான ப்ராஜக்ட்ஸ் இருக்கின்றன...

வாருங்கள் - ஒன்றினைந்து சாதிப்போம்....!!!

பி.கு : என்னுடைய மின்னஞ்சல் ravi.antone@gmail.com

தகவல்தொழில்நுட்ப சுயதொழில் : எங்களுடன் இணைய தயாரா ?

வலைப்பதிவர்களே, நன்பர்களே..

தகவல் தொழில்நுட்ப சுயதொழில் பற்றி நான் எழுதிவரும் தொடர் பற்றி அறிந்திருப்பீர்கள்...

நான் இந்த துறைபற்றி நான்கைந்து ஆண்டுகளாக அறிந்திருந்தாலும் / ஈடுபட்டிருந்தாலும், நான் ஒரு தொழிலாளராக நிறுவனங்களில் பணியாற்றுவதால், என்னுடைய பணி நேரத்தை முழுமையாக இதில் ஈடுபடுத்துவது முடியாத காரியம்...

அதனால் நமது வலைப்பதிவர்களிள் ஏற்கனவே சுயதொழிலில் ஈடுபட்டிருப்பவர்களின் டேலண்ட்ஸை ஒருங்கினைத்து, ஒரு டீமை உருவாக்கலாம் என்று நினைக்கிறேன்...

ப்ராஜக்ட் எடுப்பது, ரெவன்யூவை ஷேர் செய்வது, பல்வேறு விதமான டெக்னிக்கல், நான் டெக்னிக்கல் டேலண்ட்ஸ் ஒருங்கிணைப்பது போன்றவற்றை பற்றி விவாதிக்கலாம் வாருங்கள்...

- டேட்டா எண்ட்டரி
- விர்ச்சுவல் அஸிஸ்டண்ட்
- வெப்சைட் க்ரியேஷன், மெயிண்டெனன்ஸ்

போன்ற துறைகளிள் ஏராளமான ப்ராஜக்ட்ஸ் இருக்கின்றன...

வாருங்கள் - ஒன்றினைந்து சாதிப்போம்....!!!

பி.கு : என்னுடைய மின்னஞ்சல் ravi.antone@gmail.com

மைக்ரோசாஃப்ட் அமெரிக்காவில் அதித்தி டெக்னாலஜிஸ் வழியாக பணிவாய்ப்பு

மைக்ரோசாஃப்ட் அமெரிக்காவில் அதித்தி டெக்னாலஜிஸ் வழியாக பணிவாய்ப்பு...

Hi Friends,
There is a project in Microsoft USA . Aditi Technologies will send you to US through H1B visa. Aditi technologies schedule walk-in on this Saturday or Sunday at Bangalore .

Position Requires – Software Engineer, Team Lead, and Tech Lead.
Experience – 4 to 8 years

Work location – USA
Interview Locations – Bangalore

For other location candidates we can arrange a telephonic also.
Requires Skills

Good expose in – ASP.NET, VB.NET, C# and SQL Server

Very good communication skills.
Advance C# Knowledge will be preferably.

Please let us know your interest to explore the same.
You can also refer to your friends who are in the same field.

Please share your profile along with the following information:-

Total Experience

Relevant Experience

Current CTC

Expected CTC
!
Notice PeriodLook forward to hear from you


If interested, pleas e revert back your updated CV to hr.sunakshi@gmail.com
Please send your word format update resumes in kind reply as soon as possible for faster processing. Please forward this message to your friends & colleagues, who would be interested.


Note: Please send your profile with Salary details and now we need only Bangalore candidate.

Please mentioned given below: -
Current salary:
Expected salary:
Notice period:
Thanks Regards,
Sunakshi
hr.sunakshi@gmail.com

Friday, February 15, 2008

Peoplesoft CRM

Requirement:
Should have atleast five years of IT experience 2. Should have worked on technical side of PeopleSoft for at least three years and atleast one year in PeopleSoft 8.9 or above and PeopleTools 8.46 or above. 3. Should have working experience of Five PeopleSoft projects in the capacity of developer 4. Proficient in Application designer, People Tools, People Code, Application Engine, File Layout, Application Packages, SQR, PS Query, Crystal Reports, Integration Broker, Component Interface.
Contact ilamurugu at gmail

Thursday, February 14, 2008

தகவல் தொழில்நுட்ப சுயதொழில் வாய்ப்புகள் (Part 5)

இந்த அத்தியாயத்தில் பணிகளை வழங்கும் வலைமனைகளில் உங்களது கணக்கை உருவாக்கி, பராமரிப்பதை பற்றி படங்களுடன் சொல்கிறேன்....

அதற்கு முன்னால் உங்களுக்கான தகவல் / தகுதி விவரங்களை தனியாக ஒரு கோப்பில் வைத்துக்கொள்ளவேண்டும்...ஆங்கிலத்தில் ரெஸ்யூம் (Resume) என்று சொல்லப்படுவது இது தான்..பொதுவாக கணினி துறையில் உள்ள அனைவரிடமும் உள்ள கையேடு இது...

MS Word கோப்பாக வைத்துக்கொள்ளுதல் நலம்...இதற்கான நல்ல மாதிரிகள் தேவை எனில் ஏற்கனவே கணினி துறையில் உங்கள் நன்பர்களிடம் இருந்து பெற்றுக்கொள்ளுங்கள்...

பொதுவாக, இந்த விவரச்சீட்டில் உங்களது கல்வி,ஏற்கனவே செய்த தகவல் தொழில்நுட்ப துறை சார்ந்த - பணிகள் பற்றிய விவரங்கள், உங்களது சாதனைகள், உங்களது தொலைபேசி எண்கள், மின்னஞ்சல் முகவரிகள், உங்களால் இந்த துறையில் என்ன என்ன பணிகள் செய்யமுடியும் என்ற விவரங்கள், உங்களது பிற விருப்பங்கள் என முழுமையான தகவல்கள் இருப்பது சிறப்பு...

இதன் தேவை நீங்கள் இணையத்தில் பணிகளை ஏலம் எடுக்கும்போது கட்டாயம் உண்டு...உங்களது மின்னஞ்சலுக்கு பணிகளை அளிப்பவர் தொடர்புகொண்டால், உங்களை பற்றியதான அறிமுகத்தினை இந்த கோப்பு அழகாக வெளிப்படுத்தும்...

இந்த அத்தியாயத்தின் முக்கிய தலைப்பான "பணிகளை வழங்கும் வலைமனைகளில் உங்களது கணக்கை உருவாக்கி, பராமரிப்பதை" பற்றியதான விவரத்துக்கு வருகிறேன்...

ஏதேனும் ஒரு முக்கியமான வலைமனையை எடுத்துக்கொண்டு அதனை முழுமையாக விளக்கிவிடுகிறேன்...காரணம் நிறைய வலைமனைகள் ஏற்கனவே இருக்கின்றன, மேலும் பல வலைமனைகள் வரக்கூடும்...

இவையனைத்திலும் பணிகளை எடுப்பதற்கும், உதவி, தகவல் பக்கங்களுக்கும் ஒரே வார்த்தைகளை கொண்டு அமைத்திருக்க மாட்டார்கள்...வார்த்தைகள் / இணைய தளத்தின் அமைப்பு ஆகியவை கட்டாயம் மாறுபடும்...

என்னுடைய நோக்கம், இணைய தளத்தின் மூலம் பணிகள் ஏலம் எடுப்பது / முடிப்பது / பணம் பெறுவது பற்றிய முழுமையாக விளக்கம் கொடுக்கவேண்டும் என்பதே அன்றி, அனைத்து தளங்களின் செயல்பாடுகளை விளக்குவது அல்ல..அதனால் முதலில் Elance.com என்ற இணைய தளத்தினை எடுத்துக்கொள்வோம்...இது இணையத்தில் பணிகளை ஏலம் விடுவதற்கும் / பெறுவதற்குமான வலைமனையாகும்...

இணையதளத்தின் முதல் பக்கம் இவ்வாறு இருக்கிறது...இங்கே உள்ள பதிவு செய்க (Register) என்ற சுட்டியை க்ளிக்கவும்...பிறகு மேற்படி வலைமனை சொல்லும்வழி சென்று பதிவு செய்து உங்களது முதல் கணக்கை துவங்கவும்...

கீழே உள்ள படங்களை பார்வையிடுங்கள்...!!!!!!! ஈ-லேன்ஸ் வலைமனையின் உள்ளே செல்வது, உங்கள் கணக்கை உருவாக்குவது, உங்கள் பே-பால் கணக்கை இணைப்பது, மற்றும் உங்கள் தகவல்களை இணைப்பது வரை படங்களாக கொடுத்துள்ளேன்...

இங்கே நீங்கள் ஒரு தொழில் முனைவோராக பதிவு செய்யாமல் ஒரு தனிப்பட்ட நபராக பதிந்துகொள்ளுங்கள்...நீங்கள் உங்கள் பணி வாய்ப்பை தேடி இ-லேன்ஸ் வலைமனைக்கு வந்ததாக தெரிவியுங்கள்..(I want to find my work in elance)..http://www.elance.com/p/help/provider/providerguide.html என்ற வலைப்பக்கத்தை திறந்து முழுமையாக தெரிந்துகொள்ளலாம்...சரியாக புரியவில்லை எனில் இதனை ஒரு பிரதி எடுத்து நன்றாக ஆங்கிலம் அறிந்தவர்களிடம் கொடுத்து விளக்கும்படி செய்யலாம்...

புரியாத விஷயங்களை கேட்டு அறிந்துகொள்வதில் தவறில்லை...கவுரவம் பார்த்துக்கொண்டு அதை அறிந்துகொள்ளாமல் இருப்பது தான் தவறு என்பது என்னுடைய கொள்கை...

கடைசியாக, இதெல்லாம் செய்தால் இணையத்தில் நிறைய சம்பாதிக்க முடியுமா, அப்புறம் ஏன் எல்லோரும் சம்பாதிக்கவில்லை என்று கேட்டார் ஒரு நன்பர் பின்னூட்டத்தில்...

ஒரு உதாரணம் சொல்கிறேன்...ஒரு வகுப்பில் பத்து மாணவர்கள் இருந்தால் பத்துபேருமா முதல் மதிப்பெண் பெறுகிறார்கள்...அந்த மாணவர்களில் சிறப்பானவர், திறமையானவர், நன்றாக உழைக்ககூடியவர் அல்லவா பெறுகிறார் ?

அப்போ எனக்கு ப்ராஜகட் எளிமையாக கிடைக்காதா என்று பயப்பட வேண்டாம்...தமிழரின் திறமையில் எனக்கு மிகுந்த நம்பிக்கை உள்ளது...எப்படிப்பட்ட டிரிக்ஸ்கள் உபயோகப்படுத்தி பணிகளை பெறுவது என்று நான் கூறுகிறேன்..

மேலும் இந்திய சேவைப்பணியாளர்களை தேடி வரும் நிறுவனங்கள் இந்த வலைமனைகளில் அதிகம் உள்ளன..இது போன்ற வலைமனைகள் பற்றி அறிந்தவர்களும் குறைவு...காற்றுள்ளபோதே தூற்றிக்கொள்ளலாம் வாருங்கள்...

அடுத்த பதிவில், சொந்த இணைய தளத்தை நிறுவி பராமரிக்கும் வழியை பற்றி பார்ப்போம்...என்ன வகையான மென்பொருட்கள் தேவை, எப்படி தன் கையே தனக்குதவியாக நமது இணைய தளத்தை நாமே பராமரிப்பது பற்றி விரிவாக பார்க்கலாம்...மேலும் இந்த தொடரின் முதல் அத்தியாயத்தில் வரையறை செய்த பல்வேறு வகை கேள்விகளின் பதில்களையும் பார்ப்போம்...மேலும் எப்படி விரைவாக உங்களது பணிகளை பெறுவது, என்ன ட்ரிக்ஸ் உபயோகப்படுத்தி சிறப்பான பெரிய பணிகளை பெற்று பணம் சம்பாதிக்கலாம் என்றும் சொல்கிறேன்..

டெய்ல் பீஸ் 1

கீழே கானும் தளங்கள் எல்லாம் இணையத்தில் அதிகபட்சமான பணிகளை ஏலம் விடும் முக்கிய வலைமனைகள்...

http://www.odesk.com
http://www.guru.com
http://www.getafreelancer.com

டெய்ல் பீஸ் 2

நீங்கள் உபயோகப்படுத்தும் வலை உலாவி கீழ்க்கண்டதாக இருக்கும்படி பார்த்துக்கொள்ளுங்கள்...

• IE 6.0
• IE 7.0
• Firefox 1.5
• Fierfox 2.0
• Safari 2.0

மற்ற வலை உலாவிகளை பயன்படுத்தும்போது இணைய-வழிப்பறி கொள்ளையர்களிடம் (Net Hakers) சிக்கி நீங்கள் செய்த பணிக்கான பணத்தை இழக்க வாய்ப்புள்ளது..

பி.கு: பதிவில் பல படங்களை கொடுத்துள்ளேன்....உங்களுக்கான கணக்கை உருவாக்குவதில் இருந்து, உங்களது தகவல் எப்படி வெளிப்படும் என்றும் காட்டியுள்ளேன்...என்னுடைய கணக்கில் சில தனிப்பட்ட தகவல்களை கருப்பு வர்ணம் பூசி மறைத்துள்ளேன்...அவை ஹிந்தியில் இருந்ததால் அல்ல, அவை உங்களுக்கு தேவை இல்லை என்பதால் மட்டுமே....பொறுத்தருள்க...

தகவல் தொழில்நுட்ப சுயதொழில் வாய்ப்புகள் (Part 5)

இந்த அத்தியாயத்தில் பணிகளை வழங்கும் வலைமனைகளில் உங்களது கணக்கை உருவாக்கி, பராமரிப்பதை பற்றி படங்களுடன் சொல்கிறேன்....

அதற்கு முன்னால் உங்களுக்கான தகவல் / தகுதி விவரங்களை தனியாக ஒரு கோப்பில் வைத்துக்கொள்ளவேண்டும்...ஆங்கிலத்தில் ரெஸ்யூம் (Resume) என்று சொல்லப்படுவது இது தான்..பொதுவாக கணினி துறையில் உள்ள அனைவரிடமும் உள்ள கையேடு இது...

MS Word கோப்பாக வைத்துக்கொள்ளுதல் நலம்...இதற்கான நல்ல மாதிரிகள் தேவை எனில் ஏற்கனவே கணினி துறையில் உங்கள் நன்பர்களிடம் இருந்து பெற்றுக்கொள்ளுங்கள்...

பொதுவாக, இந்த விவரச்சீட்டில் உங்களது கல்வி,ஏற்கனவே செய்த தகவல் தொழில்நுட்ப துறை சார்ந்த - பணிகள் பற்றிய விவரங்கள், உங்களது சாதனைகள், உங்களது தொலைபேசி எண்கள், மின்னஞ்சல் முகவரிகள், உங்களால் இந்த துறையில் என்ன என்ன பணிகள் செய்யமுடியும் என்ற விவரங்கள், உங்களது பிற விருப்பங்கள் என முழுமையான தகவல்கள் இருப்பது சிறப்பு...

இதன் தேவை நீங்கள் இணையத்தில் பணிகளை ஏலம் எடுக்கும்போது கட்டாயம் உண்டு...உங்களது மின்னஞ்சலுக்கு பணிகளை அளிப்பவர் தொடர்புகொண்டால், உங்களை பற்றியதான அறிமுகத்தினை இந்த கோப்பு அழகாக வெளிப்படுத்தும்...

இந்த அத்தியாயத்தின் முக்கிய தலைப்பான "பணிகளை வழங்கும் வலைமனைகளில் உங்களது கணக்கை உருவாக்கி, பராமரிப்பதை" பற்றியதான விவரத்துக்கு வருகிறேன்...

ஏதேனும் ஒரு முக்கியமான வலைமனையை எடுத்துக்கொண்டு அதனை முழுமையாக விளக்கிவிடுகிறேன்...காரணம் நிறைய வலைமனைகள் ஏற்கனவே இருக்கின்றன, மேலும் பல வலைமனைகள் வரக்கூடும்...

இவையனைத்திலும் பணிகளை எடுப்பதற்கும், உதவி, தகவல் பக்கங்களுக்கும் ஒரே வார்த்தைகளை கொண்டு அமைத்திருக்க மாட்டார்கள்...வார்த்தைகள் / இணைய தளத்தின் அமைப்பு ஆகியவை கட்டாயம் மாறுபடும்...

என்னுடைய நோக்கம், இணைய தளத்தின் மூலம் பணிகள் ஏலம் எடுப்பது / முடிப்பது / பணம் பெறுவது பற்றிய முழுமையாக விளக்கம் கொடுக்கவேண்டும் என்பதே அன்றி, அனைத்து தளங்களின் செயல்பாடுகளை விளக்குவது அல்ல..அதனால் முதலில் Elance.com என்ற இணைய தளத்தினை எடுத்துக்கொள்வோம்...இது இணையத்தில் பணிகளை ஏலம் விடுவதற்கும் / பெறுவதற்குமான வலைமனையாகும்...

இணையதளத்தின் முதல் பக்கம் இவ்வாறு இருக்கிறது...இங்கே உள்ள பதிவு செய்க (Register) என்ற சுட்டியை க்ளிக்கவும்...பிறகு மேற்படி வலைமனை சொல்லும்வழி சென்று பதிவு செய்து உங்களது முதல் கணக்கை துவங்கவும்...

கீழே உள்ள படங்களை பார்வையிடுங்கள்...!!!!!!! ஈ-லேன்ஸ் வலைமனையின் உள்ளே செல்வது, உங்கள் கணக்கை உருவாக்குவது, உங்கள் பே-பால் கணக்கை இணைப்பது, மற்றும் உங்கள் தகவல்களை இணைப்பது வரை படங்களாக கொடுத்துள்ளேன்...

இங்கே நீங்கள் ஒரு தொழில் முனைவோராக பதிவு செய்யாமல் ஒரு தனிப்பட்ட நபராக பதிந்துகொள்ளுங்கள்...நீங்கள் உங்கள் பணி வாய்ப்பை தேடி இ-லேன்ஸ் வலைமனைக்கு வந்ததாக தெரிவியுங்கள்..(I want to find my work in elance)..http://www.elance.com/p/help/provider/providerguide.html என்ற வலைப்பக்கத்தை திறந்து முழுமையாக தெரிந்துகொள்ளலாம்...சரியாக புரியவில்லை எனில் இதனை ஒரு பிரதி எடுத்து நன்றாக ஆங்கிலம் அறிந்தவர்களிடம் கொடுத்து விளக்கும்படி செய்யலாம்...

புரியாத விஷயங்களை கேட்டு அறிந்துகொள்வதில் தவறில்லை...கவுரவம் பார்த்துக்கொண்டு அதை அறிந்துகொள்ளாமல் இருப்பது தான் தவறு என்பது என்னுடைய கொள்கை...

கடைசியாக, இதெல்லாம் செய்தால் இணையத்தில் நிறைய சம்பாதிக்க முடியுமா, அப்புறம் ஏன் எல்லோரும் சம்பாதிக்கவில்லை என்று கேட்டார் ஒரு நன்பர் பின்னூட்டத்தில்...

ஒரு உதாரணம் சொல்கிறேன்...ஒரு வகுப்பில் பத்து மாணவர்கள் இருந்தால் பத்துபேருமா முதல் மதிப்பெண் பெறுகிறார்கள்...அந்த மாணவர்களில் சிறப்பானவர், திறமையானவர், நன்றாக உழைக்ககூடியவர் அல்லவா பெறுகிறார் ?

அப்போ எனக்கு ப்ராஜகட் எளிமையாக கிடைக்காதா என்று பயப்பட வேண்டாம்...தமிழரின் திறமையில் எனக்கு மிகுந்த நம்பிக்கை உள்ளது...எப்படிப்பட்ட டிரிக்ஸ்கள் உபயோகப்படுத்தி பணிகளை பெறுவது என்று நான் கூறுகிறேன்..

மேலும் இந்திய சேவைப்பணியாளர்களை தேடி வரும் நிறுவனங்கள் இந்த வலைமனைகளில் அதிகம் உள்ளன..இது போன்ற வலைமனைகள் பற்றி அறிந்தவர்களும் குறைவு...காற்றுள்ளபோதே தூற்றிக்கொள்ளலாம் வாருங்கள்...

அடுத்த பதிவில், சொந்த இணைய தளத்தை நிறுவி பராமரிக்கும் வழியை பற்றி பார்ப்போம்...என்ன வகையான மென்பொருட்கள் தேவை, எப்படி தன் கையே தனக்குதவியாக நமது இணைய தளத்தை நாமே பராமரிப்பது பற்றி விரிவாக பார்க்கலாம்...மேலும் இந்த தொடரின் முதல் அத்தியாயத்தில் வரையறை செய்த பல்வேறு வகை கேள்விகளின் பதில்களையும் பார்ப்போம்...மேலும் எப்படி விரைவாக உங்களது பணிகளை பெறுவது, என்ன ட்ரிக்ஸ் உபயோகப்படுத்தி சிறப்பான பெரிய பணிகளை பெற்று பணம் சம்பாதிக்கலாம் என்றும் சொல்கிறேன்..

டெய்ல் பீஸ் 1

கீழே கானும் தளங்கள் எல்லாம் இணையத்தில் அதிகபட்சமான பணிகளை ஏலம் விடும் முக்கிய வலைமனைகள்...

http://www.odesk.com
http://www.guru.com
http://www.getafreelancer.com

டெய்ல் பீஸ் 2

நீங்கள் உபயோகப்படுத்தும் வலை உலாவி கீழ்க்கண்டதாக இருக்கும்படி பார்த்துக்கொள்ளுங்கள்...

• IE 6.0
• IE 7.0
• Firefox 1.5
• Fierfox 2.0
• Safari 2.0

மற்ற வலை உலாவிகளை பயன்படுத்தும்போது இணைய-வழிப்பறி கொள்ளையர்களிடம் (Net Hakers) சிக்கி நீங்கள் செய்த பணிக்கான பணத்தை இழக்க வாய்ப்புள்ளது..

பி.கு: பதிவில் பல படங்களை கொடுத்துள்ளேன்....உங்களுக்கான கணக்கை உருவாக்குவதில் இருந்து, உங்களது தகவல் எப்படி வெளிப்படும் என்றும் காட்டியுள்ளேன்...என்னுடைய கணக்கில் சில தனிப்பட்ட தகவல்களை கருப்பு வர்ணம் பூசி மறைத்துள்ளேன்...அவை ஹிந்தியில் இருந்ததால் அல்ல, அவை உங்களுக்கு தேவை இல்லை என்பதால் மட்டுமே....பொறுத்தருள்க...

Wednesday, February 13, 2008

EJB-JMS- சிங்கப்பூர் வேலைவாய்ப்பு

என் ட்டர் பிரைஸ் ஜாவா பீன் (EJB) மற்றும் ஜாவா மெசேஜிங் சர்வீஸ் (JMS)தெரிந்தவர்களுக்கு சிங்கப்பூரில் பணிவாய்ப்பு

Company : Zensar Technology

Skills : EssentialDesirable

3 - 5 years of IT experience.

2-3 years of experience in working with distributed applications written in Java. Experience in J2EE applications using Weblogic, Websphere etc utilizing J2EE features such as JMS, EJB?s etc.

Willingness to do support and working in shifts including night shifts

Working Experience in Financial Institutions, espeicailly Broker Dealers involving trade processing such as Validation and E! nichment, Street Side Processing

Creating and maintaining SLA?s
1-2 years of C++ experience


Job Location : Singapore Long Term -Base Location Pune


Just revert back with below Detail

Full Name (First -Middle -Last)

Date of Birth:

Qualification:

Current Role :

Total Exp:

J2ee Exp in Months /Years

Jms Exp in Months /Years

Domain Specialisation if Any:

R u Willing to do support and working in shifts including night shiftsReason for Change :

Current Location :

Current Salary :

Expected Salary :

Joining Period :

R u Interested to relocate to Singapore

Have u been Interviewed by Zensar Earlier :
Contact person: Kiran Bajaj ( Recruitment , JAV Consultancy Software Services , Board : 022 2! 5624130)

Mob: 9323520850

Email: career@javconsultant.com

Immediate Opening in USA

Requirements:

Primary Skills:

• Architecture, integration and maintenance of Application Servers in single, clustered and farm environments

• Problem management and root cause analysis

• Systems analysis and capacity planning

• Solid understanding of Microsoft IIS and .Net

• Solid Understanding of Microsoft Operating System

Secondary Skills:

• Support and maintenance of development and production systems including incident management, patch management, security management

• Understanding of Microsoft technologies including Clustering, Active Directory, SMS, VB scripting

• Understanding of Citrix, IB

Understanding of Citrix, IBM Websphere, BEA WebLogic, VMware

• Understanding of Operating System Security

• Understanding MS SQL Server

• Understanding of switching and routing

• Understanding of Firewalls and Load Balancing

• Basic Linux administration

• Programming experience & knowledge a definite plus.

Required Qualification/Skills:

• MINIMUM 5+ years Experience in large Windows environments

• BS in Computer Science or related (MCSE, other certs) REQUIRED

• Excellent written and verbal communication skills

• Highly motivated.


Position @ USA
Candidate MUST posses H1B visa..
Contact immediately at ilamurugu at gmail

Tuesday, February 12, 2008

தகவல் தொழில்நுட்ப சுயதொழில் வாய்ப்புகள் (Part 4)

சென்ற அத்தியாயத்தில் மின்னஞ்சலை உருவாக்குதல், ஏன் முழுநேர இணைய இணைப்பு வேண்டும், கடன் அட்டை ஏன் வேண்டும், பே-பால் கணக்கு ஏன் வேண்டும், எப்படி உருவாக்குவது போன்றவைகளை பார்த்தோம்...

இப்போது இந்த பதிவில், சொந்தமாக இணையதளம் உருவாக்குவது, பராமரிப்பது போன்றவைகளை தொட்டுச்செல்லலாம்...மேலும் இணைய தளங்களில் சுயதொழில் பணிகளை ஏலம் விடும் தளங்களில் நமக்கான கணக்கை உருவாக்குவதையும், நம்முடைய விவரங்கள் அங்கே எப்படி காட்சியளிக்கவேண்டும் என்பதையும் காணலாம்...

சொந்த இணையதளம் - ஏன் வேண்டும் ?

தகவல்தொழில்நுட்ப சுயதொழிலில் உள்ள அனைவருக்கும் சொந்தமாக இணைய தளம் கண்டிப்பாக இருக்கும்...இணைய தளம் இல்லாதவர்களும் இந்த தொழிலில் இருக்கத்தான் செய்கிறார்கள்...ஆனால் இணைய தளம் வைத்திருப்பவர்கள், தங்கள் இணையதளத்தில் தாங்கள் என்ன விதமான பணிகளை செய்யமுடியும் (Services), தங்களுடைய சேவையை பெற்ற நிறுவனங்கள் யாவை (Clients), தங்களை எப்படி தொடர்புகொள்ளலாம் (Contact Information) போன்ற தகவல்களை அளிக்கலாம்.....

காதை கிட்டே கொண்டுவாங்க தோழரே...ஒரு ரகசியம் சொல்றேன்...பொதுவாக பணிகளை ஏலம் விடும் தளங்களில் நாம் ஏலம் கேட்கும்போது, நமது மின்னஞ்சலை சேவையை பெறும் நபர்கள் / நிறுவனங்களிடம் வெளிப்படையாக அறிவிக்க முடியாது...ஏன் என்றால் இந்த இணைய தளங்கள் மின்னஞ்சலை வெளிப்படையாக காட்டினால் நிறுவனங்கள் - சேவை அளிப்பவர்களை நேரடியாக தொடர்புகொண்டுவிடுவார்களே...

அதன் பிறகு சேவைகளை ஒழுங்குசெய்து ஒட்டுமொத்தமாக பட்டியலிடும் இணைய தளத்துக்கு வேலை இல்லாமல் போய்விடுமே...இன்னும் எளிமையாக சொன்னால் TOLET போர்டை பார்த்து நேரடியாக வீட்டு உரிமையாளரை வாடகைக்கு வருபவர் தொடர்புகொண்டால் வீட்டு புரோக்கர் நிலை ? இங்கே வீட்டு உரிமையாளர் நீங்கள்...வீடு தேடுபவர், உங்களுக்கு பணிவாய்ப்பை அளிக்கும் நிறுவனம்...வீட்டு புரோக்கர்: சேவைகளை ஒழுங்கு செய்யும் இணைய வலைமனைகள்..(உதாரணம்: getafreelancer.com, elance.com, guru.com)...

இப்போது தெளிவாக புரிந்திருக்கும் உங்களுக்கு...ஆனால் சொந்த இணைய தளம் வைத்திருப்பதற்கும், இந்த வீட்டு புரோக்கர் கதைக்கும் என்ன சம்பந்தம் ? இதென்ன கட்டைவண்டிக்கும் குட்டைப்பையனுக்கும் முடிச்சுபோடும் கதையாக உள்ளதே என்கிறீர்களா ? இருக்கிறது...சம்பந்தம் இருக்கிறது...

வீட்டு உரிமையாளர் வைக்கும் TOLET போர்டை எந்த வீட்டு புரோக்கராவது விரும்புவாரா ? அவரது தொழிலை பாதிப்பதே இந்த ஐந்தெழுத்து போர்டு தானுங்களே ? வீட்டு உரிமையாளருக்கும் வீட்டைத்தேடுபவருக்கும் நேரடியாக சம்பந்தம் ஏற்ப்படுத்தும் இந்த டுலெட் போர்ட் போலத்தான் சேவை அளிக்கும் நீங்கள் உங்கள் மின்னஞ்சலை சேவையை கேட்கும் நிறுவனங்களிடம் நேரடியாக அளிப்பது...

இதனை இந்த இணைய தளங்கள் (getafreelancer,elance,guru) போன்றவை கட்டாயம் தடுக்கும்...உங்கள் மின்னஞ்சலை நேரடியாக கொடுப்பதை மென்பொருள் நிரலிகளின் மூலம் (software coding) தடுப்பதோடு அல்லாமல், அடிக்கடி இணைய தளத்தை பார்வையிட்டு, மின்னஞ்சல் வழங்குவதை தடுத்துவிடுவார்கள்...

இங்கேதான் உங்கள் சொந்த இணைய தளம் உங்களுக்கு துணைபுரியப்போகிறது...உங்கள் சொந்த இணைய தளத்தில் உங்களது தொடர்புக்கான மின்னஞ்சல், தொலைபேசி போன்றவை இருந்தால், சேவை வழங்கும் நிறுவங்கள் உங்களை நேரடியாக தொடர்புகொள்ள வசதியாக இருக்கும்தானே...

சொந்த இணைய தளம் வைத்திருத்தலின் அவசியமான காரணம் இது என்பேன் நான்...மேலும் சில பயன்களும் சொந்த இணைய தளத்தில் உள்ளன...எல்லாவற்றையும் தொகுத்து தருகிறேன், பாருங்கள்...

1. சொந்த இணைய தளத்தில் உங்கள் சேவை திறன்களை பட்டியலிடலாம்...எடுத்துக்காட்டாக நீங்கள் Data Entry துறையில் சிறப்பானவர் என்றால் ஏற்கனவே நீங்கள் செய்த பணிகள் பற்றி சொல்லலாம்...

2. உங்கள் பணியிடம், பணியாளர்கள் திறன்கள் பற்றி புகைப்படம், அறிவிக்கைகள் மூலம் சொல்லலாம்...இது சேவையை உங்களிடம் வழங்குபவர்களிடம் ஒரு நம்பிக்கையை ஏற்ப்படுத்தும்...

3.உங்களது தொடர்பு எண் / மின்னஞ்சல் / முகவரி ஆகியவற்றை வெளியிடலாம்..

4.First Impression is the Best Impresstion என்று ஆங்கிலத்தில் சொல்லுவார்கள்..உங்கள் சொந்த வலைத்தளத்தின் அழகான, நேர்த்தியான வடிவமைப்பு மூலம் சேவை வாடிக்கையாளரை கவரலாம்..

(கூடுமானவரை, யார் உதவியையும் நாடாமல் நீங்களே இந்த வடிவமைப்பை செய்யவேண்டும் என்பது என்னுடைய அன்பான வேண்டுகோள்)

5.நீங்கள் ஏற்கனவே செய்த பணிகளின் பட்டியல், உங்கள் திறமைகளின் பட்டியல், உங்கள் வேலை நேரம், உங்களது குறைந்த செலவில் அதிக சேவையை தரும் திறன், உங்களது இணைய இணைப்பு போன்றவற்றை விரிவாக சொல்லலாம்...

உங்களை சொந்த இணைய தளம் உருவாக்க சொல்லிவிட்டென்...ஆனால் இதற்கு எவ்வளவு செலவாகும் என்று சொல்லி கட்டுரையை முடித்துக்கொள்கிறேன்...நீங்களே உங்கள் இணைய தளத்தை வடிவமைத்து பராமரித்துக்கொள்வீர்கள் என்றால் ஒரு ஆண்டுக்கு 500 ரூபாயில் இருந்து 1000 ரூபாய் வரை ஆகும்...(ஒவ்வொரு ஆண்டும் இணைய தளத்தை ரினியூவல் செய்யவேண்டும் - பிரிபெய்ட் மொபைலை ரீசார்ஜ் செய்வது போல்)

இணைய தள சேவை வழங்கும் நிறுவனமே உங்கள் வலைப்பக்கங்களை வடிவமைக்க வேண்டும் என்றால், உங்கள் தேவைக்கேற்ப, அந்த நிறுவனத்தின் உழைப்புக்கேற்ப தொகை மாறுபடும்...கூடுமானவரை எளிமையானதாகவும் அழகாகவும் உங்கள் வலைப்பக்கம் இருக்கும்படி பார்த்துக்கொள்ளுங்கள்...நீங்கள் வடிவமைத்தாலும் சரி, உங்கள் நன்பர் வடிவமைத்தாலும் சரி, உங்கள் இணையதள சேவை வழங்குபவர் வடிவமைத்தாலும் சரி...

டெய்ல் பீஸ்: NDA என்றால் என்ன ? நான் டிஸ்க்லோஸர் அக்ரீமெண்ட் என்பதாகும்...இது சேவையை வழங்குபவருக்கும் சேவை செய்பவருக்கும் இடையே ஏற்படுத்தப்படுவதாகும்...அதாவது சேவையை வழங்கும் நிறுவனத்தை பற்றியோ, அதன் செயல்பாடுகள் பற்றியோ நான் எங்கும் வெளியிடமாட்டேன் என்ற உறுதிமொழியை சேவை செய்பவர் (அதுதான் நீங்கள்) ஏற்பதாகும்...

நீங்கள் சொந்த இணைய தளம் உருவாக்க என்ன செய்யலாம்....ம்ம்ம்..இவரை தொடர்புகொள்ளலாம்...webmediaconsultant@gmail.com (திரு.ஓசை செல்லா). கோவையை சேர்ந்த செல்லா இணைய தளம் உருவாக்குதல் மற்றும் வடிவமைத்தல் பணிகளை செய்துவருகிறார்...என்னுடைய சொந்த இணைய தள சேவையை வழங்குபவர் திரு.செல்லா அவர்கள்...அவரது தொ.பே. எண் : 09994622423.

கட்டுரை பற்றி உங்கள் கருத்துக்களை தெரிவியுங்கள்...!!!!!!!!!!!!! கட்டுரையை மெருகேற்ற உங்கள் ஆலோசனைகளை தெரிவியுங்கள்...என்னுடைய மின்னஞ்சல் முகவரி : ravindran@lge.com

கட்டுரை கொஞ்சம் நீண்டுவிட்டது...அடுத்த கட்டுரையில், பணிகளை வழங்கும் வலைமனைகளில் உங்களது கணக்கை உருவாக்கி, பராமரிப்பதை பற்றி படங்களுடன் சொல்கிறேன்...

தகவல் தொழில்நுட்ப சுயதொழில் வாய்ப்புகள் (Part 3)

தகவல் தொழில்நுட்ப துறையில் - சுயதொழில் செய்ய ஏன் முழு நேர இணைய இணைப்பு வேண்டும் ?

நீங்கள் வசிக்கும் இடத்துக்கு அருகிலேயே கணினி மையம் இருந்தால், அதனை பயன்படுத்திக்கொள்ளலாமே...ஏன் இணைய இணைப்பு ? என்று நீங்கள் கேட்கலாம்...இணைய இணைப்பின் தேவைப்பாடு 90 சதவீதம் என்று சொல்வேன் நான்...இணைய இணைப்பு இல்லாமலேயே இந்த துறையில் சுயதொழில் முனைவோர் வெற்றிகரமாக இருக்கத்தான் செய்கிறார்கள்....

நீங்கள் செய்யும் பணி உலகளாவிய அளவில் இருப்பதால் / பொதுவாக அமெரிக்க தொழில் முனைவோர் சுயதொழில் பணியாளர்களை தேடுவதால், இந்த நேரம் என்றில்லாமல் எந்த நேரமும் உங்களுக்கு மின்னஞ்சல் வரக்கூடும்...

உங்கள் பணியை நீங்கள் நிறைவு செய்யும் நேரம் நள்ளிரவு எனில் அந்த நேரத்தில் நீங்கள் மின்னஞ்சல் அனுப்பினால், அவை உடனே உங்கள் வாடிக்கையாளருக்கு கிடைக்கப்பெறும்...நீங்கள் பணியை விரைந்து முடித்ததை கட்டாயம் பாராட்டுவார்கள்...

இணைய மையத்துக்கு சென்று இரவு இரண்டு மணிக்கு கதவைத்தட்டினால் நன்றாக இருக்குமா ? அல்லது அந்த நேரம் வரை திறந்திருக்கும் இணைய மையம் தான் உள்ளதா தமிழகத்தில்...

ஆகவே, இணைய இணைப்பு இருந்தால் மிகவும் சிறப்பு...அவ்வாறு இணைய இணைப்பு கிடைக்கப்பெறாத இடத்தில் இருந்தீர்களேயானால், சில வரையறைகளுக்குட்பட்டே இந்த தொழில் செய்யமுடியும் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன்...

தகவல் தொழில்நுட்பத்துறையில் சுயதொழில் செய்ய கடன் அட்டை (கிரெடிட் கார்ட்) ஏன் வேண்டும் ?

பணிகளை நீங்கள் பெறப்போவது இணையத்தில்...பணிகளை முடித்து அனுப்பப்போவதும் இணையத்தில்...ஆகவே உங்கள் பணிகளுக்கான சம்பளமும் இணையத்தில் தான் உங்களுக்கு கிடைக்கும்...

இணையத்தில் பணப்பரிமாற்றம் செய்ய பே-பால் கணக்கை பெரும்பாலான வாடிக்கையாளர்கள் உபயோகப்படுத்துவார்கள்...இந்தியாவைச்சேர்ந்த வாடிக்கையாளார்கள் எனில் உங்கள் வங்கி கணக்குக்கு அவர்களால் பணம் செலுத்த இயலும்...ஆனால் பெரும்பாலான வாடிக்கையாளர்கள் அமெரிக்கா / ஐரோப்பா / பிரிட்டன் போன்ற நாடுகளில் இருப்பதால் கட்டாயம் உங்களுக்கு ஒரு பே-பால் கணக்கு தேவைப்படுகிறது...

பே-பால் கணக்கு உருவாக்குவது என்பதை அதற்கான அத்தியாயத்தில் பார்க்கலாம்...ஆனால் உங்கள் பணத்தை பே-பாலில் பெறவேண்டும் என்றால் உங்களுக்கு பே-பால் கணக்கு கட்டாயமாக இருக்கவேண்டும் என்பதை மட்டும் இப்போது அறிந்துகொள்ளுங்கள்...

பே-பால் கணக்கை உருவாக்க உங்களுக்கு ஒரு வங்கி கடன் அட்டை கணக்கு கட்டாயமாக தேவைப்படுகிறது...

கீழே உள்ள இணைய முகவரியில் சில வங்கிகளில் கடன் அட்டைக்கு விண்ணப்பிப்பதற்கான சுட்டியை தந்துள்ளேன்..

ஐசிஐசிஐ வங்கி http://www.icicibank.com/pfsuser/cards/creditcard/cc_home.htm
பாரத ஸ்டேட் வங்கி http://www.sbicard.com/sbi/
ஹெச்.டி.எப்.சி வங்கி https://hdfcbank.com/personal/cards/default.htm

கடன் அட்டை பற்றி உங்களுக்கு தெளிவான பார்வை இல்லை எனில் இது குறித்து அறிந்துள்ள அல்லது ஏற்கனவே கடன் அட்டை வைத்துள்ள உங்களது நன்பர்கள் யாரையாவது நாடுதல் சால சிறந்தது...

உங்களுடைய தேவைக்கு தகுந்தது போல குறைந்த பண அளவு கொண்டதாகவோ, அல்லது அதிக பண அளவு கொண்டதாகவோ ஒரு கடன் அட்டையை தேசியமயமாக்கப்பட்ட அல்லது தனியார் வங்கிகளிலோ பெற்றுக்கொள்ளுங்கள்...

தகவல் தொழில்நுட்பத்துறையில் சுயதொழில்: புதிய மின்னஞ்சல் உருவாக்குங்கள்...

இணையம் தொடர்பான தொழிலில் அல்லது கணிப்பொறி சம்பந்தமான துறையில் நீங்கள் ஏற்கனவே இருந்தால் மின்னஞ்சல் கணக்கு துவங்குதல் பற்றி சொல்லவேண்டிய அவசியம் ஏதும் இல்லை...

இருந்தாலும், புதிய பயனர்கள், கணிணி துறை சாராதவர்கள் இந்த கட்டுரையை படிக்கும் போது பயனுள்ளதாக இருக்கவேண்டும் என்பதால் புதிய மின்னஞ்சல் உருவாக்குதல் பற்றியும் சொல்லவேண்டிய அவசியமாகிறது...

ஏற்கனவே உங்களுக்கு ஒரு மின்னஞ்சல் கணக்கு இருந்தாலும் பரவாயில்லை...இணையம் மூலம் தொழில்முனைவோராக செயல்படப்போகும் உங்களுக்கு கண்டிப்பாக இதற்கென தனி மின்னஞ்சல் இருப்பது பயன் தரும்...

உங்களுக்கென ஒரு ஜி-மெயில் கணக்கை துவங்கிக்கொள்ளுங்கள்...

இங்கே செல்லுங்கள் www.gmail.com

உங்கள் மின்னஞ்சல் கணக்கு ப்ரொபெஷனலாக இருக்கட்டும்...கூடுமானவரை ஆங்கில பெயர்கள் அல்லது சிறிய/நறுக்கான பெயர்கள் பலன் தரும்...

உங்கள் கடவுச்சொல்லை (Password) எண்கள்,எழுத்துக்கள் கலந்த கலவையாக வைத்துக்கொள்ளுங்கள்...கூடுமானவரை உங்கள் கடவுச்சொல்லை அடுத்தவரிடம் கூறுவதை தவிர்க்கவும்...

பே-பால் ( Paypal) கணக்கு துவங்குவது எப்படி ?

முதலில் பே-பால் என்றால் என்ன என்று தெரிந்துகொள்ளுங்கள்...பே-பால் என்பது இணையத்தின் வழி பணப்பரிமாற்றம் செய்யும் எளிய முறையாகும்...இந்த முறையில் உலகெங்கும் உள்ள மின்னஞ்சல் கணக்குக்கு பணம் அனுப்ப இயலும்...

முதலில் பே-பால் இணைய தளத்தை பற்றிய முழுமையான அறிமுகத்தை பே-பால் தளத்தின் உதவிப்பக்கத்தில் சென்று (help page) கற்கலாம்...

பே-பால் தளத்தில் மூன்று விதமான கணக்குகள் உண்டு...சிறிய அளவில் பணப்பரிமாற்றம் செய்ய தனிப்பட்ட கணக்கு, பிரிமியர் கணக்கு (சிறிய இணையதள தொழில்முனைவோருக்கான - இணைய தளத்தில் பொருட்களை விற்போருக்கான கணக்கு), பிஸினஸ் கணக்கு ( அதிக அளவில் பணப்பரிமாற்றம் செய்யக்கூடிய / நிறுவனங்கள் உபயோகப்படுத்தும் கணக்கு).

இணையதள சுயதொழில் தொடங்கும் நமக்கு தனிப்பட்ட கணக்கு (Personal Account) போதுமானது...

பே-பால் உதவித்தளத்தில் உள்ள முக்கியமான இரண்டு கேள்வி-பதில்களை இங்கே பார்க்கலாம்...

கேள்வி : பே-பால் தளத்தின் சேவை இலவசமா ?

பதில் : ஆம். பே-பால் தளத்தின் சேவை முற்றிலும் இலவசமானது....பே-பால் கணக்கை உருவாக்குவதும், பே-பால் சேவைத்தளத்தின் மூலம் உலகெங்கிலும் உள்ள உற்றார் உறவினருக்கு பணத்தை அனுப்புவதும் முழுவதும் இலவச சேவையாகும்...பே-பால் கணக்கில் இருந்து உங்கள் வங்கி கணக்குக்கு பணத்தை பரிமாற்றம் செய்வதும் முழுமையான இலவச சேவையாகும்..

கேள்வி:என்னுடைய முகவரியை / என்னுடைய இருப்பிடத்தை பே-பால் நிறுவனத்துக்கும், மற்றவர்களுக்கும் உறுதிப்படுத்துவது எப்படி ?

பதில்:உங்களது கடன் அட்டை விவரத்தை பே-பால் நிறுவனத்துக்கு அளியுங்கள்...பே-பால் நிறுவனம் உங்களுக்கு கடன் அட்டை தந்த வங்கியோடு / அல்லது நிறுவத்தோடு தொடர்புகொண்டு, உங்களது இருப்பிடத்தை உறுதிசெய்துகொள்ளும்...

இந்த பதிவில் 8 படங்களை இணைத்துள்ளேன்...முதல் படம்...உங்கள் கணக்கை தேர்வு செய்யும் இடம்

இரண்டாவது,மூன்றாவது படம் : உங்களது தனிப்பட்ட தகவல்கள், உங்கள் புதிய மின்னஞ்சல், கடவுச்சொல் (மின்னஞ்சலின் கடவுச்சொல் அல்ல, புதிய கடவுச்சொல்லை தாருங்கள்), உங்களது கணக்கு திருடப்பட்டால் / மறந்துபோகப்பட்டால் அதனை திரும்பப்பெற உங்களுக்கு மட்டுமே தெரிந்த சில தனிப்பட்ட விவரங்கள்.நான்காவது படம்: மூன்று இடங்களில் அம்புக்குறியிட்டுள்ளேன்..முதலில் பே-பால் இணைய தளத்தின் விதிகளுக்கு கட்டுப்படுகிறீர்கள் என்பதை அறிவிக்க Yes என்ற பொத்தானை அழுத்துங்கள்...கீழே குறியிட்டுள்ள எண்ணை கட்டத்துக்குள் டைப் செய்யுங்கள்...சைன் அப் என்ற பொத்தானை அழுத்துங்கள்...அவ்வளவுதான்...ஐந்தாவது படம்: இப்போது இறுதியாக உங்களது கிரெடிட் கார்டு அல்லது டெபிட் கார்டு விவரத்தை தரவேண்டும்...

உங்கள் பே-பால் கணக்கு உருவாக்கப்பட்டு உங்களது புதிய மின்னஞ்சலுக்கு உறுதிசெய்வதற்கான மின்னஞ்சல் பே-பால் இணைய தளத்திலிருந்து அனுப்பப்படும்...அதனை அழுத்தி, உங்கள் கணக்குக்குள் உள் நுழையலாம்...ஆறாவது படத்தில், என்னுடைய (செந்தழல் ரவி) பே-பால் கணக்குக்குள் நுழைந்துள்ளேன்...இப்படித்தான் உங்களது கணக்கும் காட்சியளிக்கும்...

இப்போது எவ்வாறு பே-பால் இணைய தளத்தில் பண பரிமாற்றம் செய்வது என்று பார்க்கலாம்...

உங்கள் மின்னஞ்சலை உங்களது வாடிக்கையாளரிடம் கொடுத்துவிட்டால் அவர் அந்த மின்னஞ்சலுக்கு பணத்தை பே-பால் மூலம் அனுப்பிவிடுவார்...அவ்வாறு அவர் அனுப்பிய தகவல் உங்களுக்கு தெரிந்தவுடன், பே-பால் இணைய தளத்துக்கு சென்று உங்கள் கணக்கை (My Account) தெரிவு செய்யுங்கள்..பிறகு அங்கே உள்ள Withdraw என்ற சுட்டியை அழுத்துங்கள்...(படத்தை பாருங்கள்)..பிறகு அங்கே Withdraw funds to your bank account (உங்கள் வங்கி கணக்குக்கு பணத்தை பரிமாற்றம் செய்யுங்கள்) என்ற சுட்டியை காண்பீர்கள்...அந்த சுட்டியை தெரிவு செய்யுங்கள்...

பிறகு எந்த வங்கி கணக்குக்கு உங்கள் பணத்தை (பே-பால் கணக்கிலிருந்து) அனுப்பவேண்டும் என்ற பக்கத்துக்கு வந்து சேருவீர்கள்...இங்கே நீங்கள் உங்கள் நாடு, பெயர், வங்கி, வங்கி கணக்கு எண் (இருமுறை உள்ளீடு செய்யவேண்டும்), மற்றும் IFSC (Indian Financial System Code) ஆகியவற்றை உள்ளீடு செய்யவேண்டும்...IFSC என்பது மத்திய ரிசர்வ் வங்கியால் அங்கீகரிக்கப்படதற்கான அத்தாட்சி எண் ஆகும்...கீழே உதாரண பட்டியல் தருகிறேன்...

ICICI BANK LTD ICIC0TREA00 (மும்பை 51)
INDIAN BANK IDIB000C080 (ராஜாஜி சாலை பிரிவு, சென்னை)
ING VYSYA BANK LTD. VYSA0000001 (எம்.ஜி ரோடு பிரிவு, பெங்களூர்)
BANK OF INDIA BKID000PIGW (மும்பை)
CANARA BANK CNRB0RTGS01 (மும்பை)

உங்களது வங்கி கிளையில் இந்த IFSC எண்ணை தெரிந்துகொண்டு அதனை உள்ளீடு செய்யுங்கள்...

பிறகு மேற்கொண்டு Continue பொத்தானை அழுத்தி தளம் சொல்லும் வகையில் செயல்படுங்கள்..

பே-பால் தளம் பற்றி போதுமான விவரங்கள் தந்திருக்கிறேன்...மேலதிக தகவல்களை அடுத்த பதிவில் அளிக்கிறேன்...

அடுத்த பதிவில், உங்களுக்கான ரெஸ்யூம் அல்லது தகுதி தகவல்களை உருவாக்குதல், மற்றும் பணிகளை ஏலம் எடுக்கும் தளங்களில் பதிவு செய்தல் போன்றவை பற்றி சொல்கிறேன்...உங்கள் கருத்துக்களை சொல்லுங்கள்...நீங்கள் எதிர்பார்ப்பதை சொல்லுங்கள்...எதாவது விடுபட்டுள்ளது என்றால் அதனை சொல்லுங்கள்...தவறுகளை திருத்தி, தொடர் முழுமையான தகவல்களுடன் இருக்க உதவுங்கள்....

Monday, February 11, 2008

தகவல் தொழில்நுட்ப சுயதொழில் வாய்ப்புகள் (Part 2)

இந்த பதிவில் தகவல் தொழில்நுட்ப சுயதொழில் முனைவோருக்கான (Freelance Providers in IT Industry) அடிப்படை தேவைகள் (Basic Needs) என்ன என்ன என்று பார்ப்போம்...இவற்றில் சில விடயங்கள் உங்களுக்கு ஏற்கனவே தெரிந்திருக்கும், அல்லது முழுமையான அறிவு இருக்கும்...

கணிணி துறையில் பொட்டி தட்டும் உங்களில் சிலருக்கு சில விடயங்கள் "டப்பா" போல் தோன்றினாலும், எளிமையாக சொல்வதன் மூலம் பலரை சென்று சேர்வது தான் இந்த தொடரின் நோக்கம்...அதனால் ஏற்கனவே "பொட்டி" தட்டும் அன்பர்கள் மன்னித்து, பொறுத்தருளவேண்டும்...

மேலும் நான் ஏதாவது உளறல்ஸ் செய்தால், உடனடியாக "பஞ்ச்" கொடுக்கவும் தயங்கவேண்டாம் தோழர்களே....

சரி பேக் டு மேட்டர்...கீழே காணும் இவை தான் அடிப்படை தேவைகள்...பார்த்துக்கொள்ளுங்கள்..விரிவான விவரம் அடுத்த பதிவில் பார்க்கலாம்...

1.அட்டையுடன் கூடிய வங்கி கணக்கு (Bank A/C with Debit Card) அல்லது கடன் அட்டை (Credit Card) - இது கட்டாயமான ஒன்று (Mandatory)...இணையத்தில் பணப்பரிமாற்றம் செய்ய / பே-பால் கணக்கு உருவாக்க என இவை தேவைப்படும்...

2.மின்னஞ்சல் பயனர். (இ-மெயில் ஐடி கட்டாயம் இருக்கவேண்டும். மேலும் இந்த மின்னஞ்சலை கண்ட கண்ட இடத்தில் கொடுத்துவைக்காமல் இருக்கவேண்டும்.. (புதிய கணக்காக உருவாக்கிக்கொள்ளவேண்டும்)

3.பே பால் அக்கவுண்டு (an Account from Pay-Pal) - இது என்ன, எப்படி உருவாக்குவது என்பதை பின்னால் பார்க்கலாம்...

4.முழு நேர இணைய இணைப்பு. (24 hours Internet). இதனை கட்டாய தேவை என்று சொல்ல முடியாவிட்டாலும், முழு நேர இணைய இணைப்பு கண்டிப்பாக நல்ல பலன் தரும்..

5.என்ன வகையான பணிகளை செய்து பொருளீட்டப்போகிறீர்கள் என்று ஒரு ப்ரொபைலை வரையறுத்துக்கொள்ளுங்கள்...(Create a Resume). அடிப்படை கணினி அறிவு மட்டும் பெற்றவர் எனில் அதற்கு தகுந்தது போல உருவாக்கிக்கொள்ளுங்கள்...உங்களால் ஒரு இணைய தளத்தை வடிவமைக்க முடியும் எனில் அதற்கு தகுந்தது போல உருவாக்கிக்கொள்ளுங்கள்...பின்னால் வரும் பதிவுகளில் இதற்கான மாதிரி வடிவமைப்பை தருகிறேன்...இதில் உங்கள் சொந்த வலைப்பதிவு அல்லது சொந்த இணையத்தளம் (Own website) இருந்தால் இன்னும் சிறப்பு...

6.பணிகளை தரும் இணைய தளங்களில் கணக்கு www.getafreelancer.com, www.elance.com ஆகிய இரு தளங்களில் முதலில் ஒரு கணக்கை உருவாக்கிக்கொள்ளுங்கள்....இந்த தளங்களில் உள்ள உதவி பக்கங்களை (Help pages) நன்றாக படித்து தெளிந்துகொள்ளுங்கள்...

https://www.getafreelancer.com/news/articles.html
http://www.elance.com/p/help/index.html

7. ஓக்கே...இப்போது நாம் நமது சொந்த நிறுவனத்தை உருவாக்கலாமா ? ஆமாம்...உங்கள் நிறுவனத்தை உருவாக்குங்கள்...ஒரு இணைய தளத்தை உருவாக்குங்கள்...அதற்கான பெயரை தேர்ந்தெடுங்கள்...இனைய தளத்தை wordpress, blogger போன்ற இலவச போர்ட்டல்களிலும் உருவாக்கலாம்...அல்லது இணைய தளம் உருவாக்கித்தரும் தொழிலில் உள்ளவர்களை / அல்லது நல்ல அறிவு பெற்றவர்களை தொடர்புகொண்டு (உதாரணம் : ஓசை செல்லா / ரவிஷங்கர் கண்ணபிரான்) உங்கள் வலைப்பக்கத்தை உருவக்குங்கள்...உங்கள் வலைப்பக்கத்தை நீங்கள் தான் உருவாக்கவேண்டும்...சரியா...சொந்த வலைப்பக்கமாக இருந்தால் (உதாரணம் www.mypage.com) நல்ல வரவேற்பு இருக்கும்...ஒரு வலைப்பக்கத்தை உருவாக்குவது எப்படி என்பது பற்றி பின்னால் எழுதுகிறேன்...மொத்தமாக 500ல் இருந்து 1000 ரூபாய்க்குள் முடிந்துபோகிற சங்கதி இது...

8. ரெடி ஸ்டார்ட் மியூஸிக்...இனிமே நீங்கள் பணிகளை ஏலம் விடும் இணைய தளங்களில் சென்று நேரடியாக பணிகளை ஏலத்தில் கேட்கலாம்...என்ன ஏலமா என்று அதிராதீர்கள்...ஏலம் தான்...பணிகள் மொத்தமாக கொட்டிக்கிடக்கும்...உங்களுடைய அறிவு / வாய்ப்புகளை பொறுத்து, தகுதிவாய்ந்த ப்ராஜக்டுகளை நீங்கள் ஏலம் கேட்கலாம்.....ஏலம் விடுபவர் விரும்பினால் உங்களுக்கே அந்த பணி கிடைக்கும்...அந்த பணியை நிறைவேற்றி பணத்தை பெறலாம்...

மேலும் பின்னால் வரும் அத்தியாயங்களில் நான் எழுதப்போவது இவைகள் தான்..

1. பணியை செய்துமுடித்தபின் பணத்தை கொடுக்காமல் ஏமாற்றினால் என்ன செய்வது ? எனக்கு பாதுகாப்பு இருக்கிறதா ?
2. எப்படி ப்ராஜக்டை வெல்வது (பொதுவாக) உங்களுக்கு ப்ராஜக்ட் கிடைக்கிறது என்பதை விட, ப்ராஜக்டை ஜெயிப்பது என்றே ஆங்கிலத்தில் சொல்கிறார்கள்..(Winning the bid / Project)..ஏன் என்றால் ப்ராஜக்டை ஜெயித்து நீங்கள் வெற்றிகரமாக முடித்தால் உங்களுக்கு பெரும் தொகை அல்லவா வரப்போகிறது ?
3. பணிகள் எளிதாக கிடைக்குமா ? இந்த தொழிலில் ஏற்கனவே யாரும் இல்லையா என்ன ? போட்டி இருக்கிறதா ? எனில் எப்படி ?

Sunday, February 10, 2008

தகவல் தொழில்நுட்ப சுயதொழில் வாய்ப்புகள் (1) - புதிய தொடர்...

தகவல் தொழில்நுட்பத்துறையில் பணிபுரியும் பலநன்பர்களை நான் எப்போதும் கேட்கும் கேள்வி, வரும் காலத்தில் இந்த தொழில் படீரென்று விழுந்தால் என்ன செய்யப்போகிறாய் ? பொதுவாக வரும் பதில்...திருதிருவென்ற விழிப்புத்தான்...

இந்த துறை விட்டில்பூச்சியை போல குறைந்த ஆயுளோடு இருக்குமா, அல்லது ஆலமரம் போல நீண்ட ஆயுளோடு இருக்குமா என்று இந்த துறையில் பணியாற்றுபவர்களுக்கே தெரியாது...

பெரும்பாண்மையான முப்பதாயிரம் சம்பளம் வாங்குவார்கள்..ஆனால் இருபத்தைந்தாம் தேதி வந்தால், கிங்ஸில் இருந்து வில்ஸுக்கு மாறுவார்கள்....கடன் அட்டை, ஷாப்பிங் மால்கள், உயர்தர மொமைல், லேப்டாப், இண்டர்நெட்டு இணைப்புக்கு, மணிக்கணக்காக போடும் கடலைக்கான மொபைல் பில், வண்டிக்கு பெட்ரோல், வீட்டு வாடகை, முறைவாசல் என அவர்களும் நடுத்தர, மத்தியத்தர அரசு ஊழியர்போலவே இருக்கிறார்கள்...

நான் சொல்வது பெரும்பான்மையை...அட்வைஸ் மழை பொழியவில்லைங்க...ஆக்ச்சுவலா நடக்கிறதை சொன்னேன்...கண்டிப்பாக குடும்பத்துக்கு இரண்டு மாதம் ஒரு முறையோ ஆறு மாதம் ஒரு முறையோ, லோன் போட்டோ, பணத்தை சேர்த்தோ கொடுக்கிறார்கள், இல்லை என்று சொல்லவில்லை...

ஆனால் இதெல்லாம் எவ்வளவு காலத்துக்கு என்பதையும் சிந்திக்கவேண்டும்...தகவல் தொழில்நுட்பத்துறையில் சம்பாதிக்கும் பணத்தை வேறு உருப்படியான முதலீடுகள் செய்யவேண்டும் என்பது என்னுடைய வேண்டுகோள்...

சகோதரிகள் திருமணத்துக்காக மூன்றுலட்சம், நான்கு லட்சம் லோன் போடும் நன்பர்கள் உண்டுதான்...அவர்களை பொறுப்பில்லாதவர்கள் என்று நான் குற்றம் சுமத்தவில்லை, நீங்கள் சம்பாதிக்கும் பணத்தை முறையாக முதலீடு செய்யுங்கள் என்றுதான் சொல்ல வருகிறேன்...

என்னடா தகவல் தொழில்நுட்பத்துறையில் சுயதொழில் வாய்ப்புகளை பற்றி எழுதுகிறேன் பேர்வழி என்று கேப்டன் விஜயகாந்த மாதிரி அட்வைஸ் மழை பொழிகிறேன் என்று டருஜாவாதீங்க மக்கள்ஸ்...வடிவேலு கூட அட்வைஸ் செய்யும் காலம் இது...உங்கள் நன்பன், நான் செய்யக்கூடாதா...மன்னிக்கவும்..இனிமே கடிக்கல...தொடருக்கு (மேட்டருக்கு ) போயிருவோம்...

திரு.மா.சிவக்குமாரின் நன்பர் ஒருமுறை என்னை தொலைபேசியில் அழைத்து, இது குறித்து கேட்டார்...அவருக்கு நான் விளக்கிய விவரங்கள் முழுமையானது அல்ல எனினும், அந்த நிலையில் என்னுடைய பணிச்சுமை காரணமாக அவருக்கு முழு உதவியை தர இயலாது போனது...

அப்போதிலிருந்து, இதனை ஒரு முழுமையான தொடராக எழுதிவிட்டால் அனைவருக்கும் ( இந்த துறையில் இறங்க விரும்பும் அனைவருக்கும்) பயன் தருவதாக அமையுமே என்று எண்ணினேன்...

இந்த தொடர் யாருங்குங்க...கொஞ்சம் பார்க்கலாமா ?

பொதுவாக தகவல்தொழில்நுட்பத்துறையில் பணிவாய்ப்புகள் - இளம்பொறியாளர்களுக்கு அருகி வருகின்றன...ஒவ்வொரு ஆண்டும் கல்வி முடித்துவரும் பட்டதாரிகள் / பொறியாளர்களின் எண்ணிக்கை ஒரு காரணம்...தெருவுக்கு தெரு டீமுடு யுனிவர்சிட்டிகளும், முட்டுசந்துக்கு ஒரு பொறியியல் கல்லூரியுமாக தமிழகம் அதன் கல்வித்துறையில் உச்சத்தில் நிற்கிறது...

இது அல்லாமல், ஒரிஸ்ஸா, மத்தியப்பிரதேசம், ஆந்திரப்பிரதேசம் போன்ற பெரிய மாநிலங்களில் இருந்து பொறியியல் பட்டதாரிகளும், இளம்பொறியாளர்களும் சென்னைக்கு வந்து வேலைவாய்ப்புக்காக காத்திருக்கும் நிலை உள்ளது...அதனால், திறந்த நிலை போட்டி (open competition), ஆப் கேம்பஸ் (Off campus) போன்ற முறைகளில் இளம்பொறியாளர்களுக்கான போட்டித்தேர்வுகளில் நூற்றுக்கு இரண்டு பேருக்கு மட்டுமே பணிவாய்ப்பு கிடைக்கும் நிலை உள்ளது...

அந்த இருவரில் ஒருவர் மனிதவள மேம்பாட்டுத்துறையின் தலைவரின் மச்சினியாகவோ, மச்சானாகவோ இருக்க வாய்ப்புண்டு....அதுபோன்ற நிலையில் இளம்பொறியாளர்கள் சோர்ந்துவிடாமல் இதுபோன்ற சுயதொழில்களை நாடலாம்...

தகவல்தொழில்நுட்பத்துறையில் ஏற்கனவே உள்ளவர்கள், மனைவி கணிணி துறையில் பட்ட மேற்படிப்பு படித்திருப்பார்...இருந்தாலும் "வேண்டாம்மா...ஏன் கஷ்டப்படுற" என்று பாசத்தோடு வேலைக்கு அனுப்பாமல் வீட்டில் வைத்து இருப்பர்...

ஆனால் எனது அன்பு சகோதரிகளோ வீட்டில் டி.வி.டி பார்த்துக்கொண்டும், நல்ல தூக்கம் போட்டுக்கொண்டும், இணையத்தை மேய்ந்துகொண்டும் இருப்பார்கள்...அவர்கள் தாங்கள் படித்தது மறந்துபோகாமல் இருக்க அட்லீஸ்ட் இதுபோன்ற சுயதொழில்களில் இறங்கி, சம்பாதித்து, வீட்டுக்காரருக்கு சர்ப்ரைஸ் கொடுக்கலாம்...

பத்துவருடம் துபாயில் வேலை செய்துட்டேங்க...முடியல...குழந்தைகள், மனைவி, இவங்களை விட்டு இனிமே போகமுடியாது...(உங்க அன்புக்கு தலைவணங்கறேன் நன்பரே)...

நான் வேலை செய்தது வேற பீல்டு ( துறை), இருந்தாலும், கணினி அறிவு நிறையவே இருக்கு...எனக்கு ராணிப்பேட்டையிலோ, திருநெல்வேலியிலோ இருந்துக்கிட்டு மாசம் ஒரு ட்வெண்டி தவுஸன் சம்பாதிக்கறமாதிரி ஒரு ஐடியா சொல்லுங்களேன்...அப்படீங்கறீங்களா...சார்..எங்கேயும் போகாதீங்க...நான் சொல்றேன் உங்களுக்கு அய்டியா...ஓக்கே ?

என்னப்பா முன்னோட்டம், பீடிகை ரொம்ப ஓவரா கீதுன்றீங்களா ? சரி இத்தோட நிறுத்திக்குவம்...மக்களோட பின்னூட்டம் (Feedback) எப்படி இருக்குன்னு பார்த்துட்டு, மேலே தொடரலாம்....

Saturday, February 09, 2008

தகவல் தொழில்நுட்பத்துறை - சுயதொழில் வாய்ப்புகள்

தகவல் தொழில்நுட்பத்துறையில் சுயதொழில் வாய்ப்புகள் உள்ளனவா ? வீட்டில் இருந்தே கணிணி உதவியுடம் பணம் சம்பாதிக்க இயலுமா ? டேட்டா எண்டரி போன்ற துறையில் தொழில் வாய்ப்புக்களை எங்கிருந்து பெறுவது ? இந்த வேலை வாய்ப்புகளை அளிப்பவர்கள் எங்குள்ளனர் ? அவர்களை தொடர்புகொள்வது எப்படி ? டேட்டா எண்டரி, இணையத்தில் வீட்டில் இருந்தே சம்பாதிக்கும் தொழில்கள் போன்றவற்றில் பணப்பரிமாற்றம் முறையாக நடைபெறுமா ? அவ்வாறு சுயதொழில் வாய்ப்புகளில் சம்பாதிக்க என்ன என்ன அடிப்படையான தேவைகள் ? என்னமாதிரியான தொழில் நுட்ப அறிவு தேவை ? தொழிற்கல்வி / இணையம் பற்றிய கல்வி / தகவல் தொழில் நுட்ப படிப்பு போன்றவற்றை படித்திருந்தால் தான் இது போன்ற தொழிலில் இறங்க முடியுமா ? அல்லது குறைந்த பட்ச கணிணி அறிவு போதுமானதா ? இந்த பணிகளை தனியாக செய்ய முடியுமா அல்லது குறைந்த பட்சமாக ஓரிரு உதவியாளர்கள் போதுமா ? எவ்வளவு ஆரம்ப முதலீடாக இடவேண்டும் ? தொழிலில் இறங்கிய உடனே லாபம் கிடைக்குமா ? எவ்வளவு ஆண்டு வருமானம் கிடைக்கும் ? பே-பால் (Pay Pal) என்றால் என்ன ? பே-பால் அக்கவுண்டு உருவாக்குவது எப்படி ? இதுபோன்ற தொழில்களில் ஈடுபட கடன் அட்டை கட்டாயம் இருக்கவேண்டுமா ? நாம் செய்யும் பணிக்கு கட்டாயம் பணம் வருமா அல்லது ஏமாற்றுபவர்கள் இந்த தொழிலில் இருக்கிறார்களா ? எஸ்க்குரோ (Escrow) என்றால் என்ன ? தொழில்முனைவோருக்கான பாதுகாப்பு இந்த துறையில் இருக்கிறதா ? எந்த எந்த தளங்களில் ப்ராஜக்ட் எடுக்கலாம் ?

இதுபோன்ற கேள்விகளுக்கு விடையளிக்க வருகிறது,"தகவல் தொழில்நுட்பத்துறை - சுயதொழில் வாய்ப்புகள்" என்ற தொடர்...

Monday, January 28, 2008

INFOSYS - இளம்பொறியாளர்கள்...

The Infosys India Graduate Hiring Program offers you a chance to refer those individuals whom you feel have it in them to be an Infoscion!!!

The quest is on for:

Unit: Independent Validation Solutions (IVS)

Role of: Assistant Engineer-Testing

Eligibility Criteria:

B.Sc (Computer Science/ Electronics/ Mathematics/ Physics/ Statistics only) or BCA graduate students. B.Sc/BCA should be a regular course. Full time post graduate candidates need not apply.
Candidates who have graduated in 2005, 2006 & 2007 batch are eligible to apply.
Average of 60% (inclusive of languages) in Class X, XII & Graduation
Candidate should not have participated in the Infosys selection process in the last 9 months
Candidates should have good communication skills.
Candidate should be willing to relocate.
You can send in the resumes to graduates@infosys.com on/before 29th January, 2008. Further to which, the short listed candidates will be informed via e-mail about the selection process.Candidates selected from the hiring process will be required to join Infosys Technologies Ltd in February 2008.

Tuesday, January 15, 2008

கூகுள் அழைக்கிறது பொறியாளர்களை

பொறியாளர்களை கூகுள் அழைக்கும்
இந்த
சுட்டியில் சென்று பாருங்களேன்

அழைப்பு வந்தாலே சிறப்பு. தேறினால் மேலும் சிறப்பு.

Sunday, January 13, 2008

CGN CHENNAI - இளம்பொறியாளர்கள்...

Internship / Trainee

Experience : 0 - 1 Years

Location : Chennai

Education : UG - B.Tech/B.E. - Mechanical

PG - Any PG Course - Any Specialization

Job Description: Person from any Engineering background.
Fresher who can gather information on various industries and also help out on vendor analysis.

Desired Candidate Profile: Engineer from a mechanical background

இந்த இணைய தள முகவரிக்கு சென்று பதிவு செய்யவும்...

http://vfreshers.com/freshers-jobs-cgn-chennai/