தேடுதல் வேட்டை

Thursday, February 26, 2009

டேட்டா எண்ட்ரி : ஏமாறவேண்டாம்...

சமீபகாலமாக டேட்டா எண்ட்ரி ப்ராஜக்ட் தருகிறோம், முதலில் ஐந்தாயிரம் நீங்க கட்டுங்க, அதுக்கப்புறம் மாதம் 2000 சம்பாதிக்கலாம் 3000 சம்பாதிக்கலாம் என்று ஆசை வார்த்தை சொல்லும் இணைய தளங்களை நம்பவேண்டாம்...

நாம் வேலை செய்வதற்கு நாம் ஏன் பணம் தரவேண்டும் என்று யோசியுங்கள்...

ஒரு வடிவேலு-பார்த்திபன் காமெடியில்

"சுலபமாக பணக்காரன் ஆவது எப்படி", ஐடியா சொல்லும்படி பார்த்திபனை நச்சரிப்பார் வடிவேலு..

"இதையே விளம்பரமா குடுறா", தலைக்கு நூறு ரூபாய் வாங்கிக்கிட்டு ஐடியா சொல்லு என்பார் பார்த்தி...

அப்புறம் கல்யாண மண்டபத்தில் வந்து உட்கார்ந்திருக்கும் நூறு ரூபாய் கொடுத்தவர்களிடம் சுப்ரமண்ய சுவாமி புகழ் முட்டையடி பெற்று ஓடுவார் வடிவேலு..

அது போல டேட்டா எண்ட்ரியால் எதையாவது சம்பாதிப்போம் என்று இந்த மாதிரி ஏமாற்ற அலைகிறார்கள்...

தலைக்கு ஆயிரம் என்று நூறு பேரிடம் வசூலித்தான் என்ன ஆகிறது ?

ஆகவே இதுபோன்ற போலி விளம்பரங்களை நம்பி ஏமாறவேண்டாம்...

Getafreelancer.com or Odesk.com போன்ற தளங்களில் சென்று ப்ராஜக்ட் எடுங்கள், செய்யுங்கள்...