தேடுதல் வேட்டை

Monday, October 30, 2006

சேல்ஸ் மேனேஜர் - பப்ளிஷிங் கம்பெனி

பெங்களூரை மையமாக கொண்ட பப்ளிஷிங் கம்பெனியில் சேல்ஸ் மானேஜர் தேவைப்படுகிறது. சிறந்த சம்பளம் உறுதி..

கம்பெனியை பற்றி அறிய இங்கே கிளிக்கவும்.

உங்கள் பணியை பற்றி மேலதிக தகவல் பெற இங்கே கிளிக்கவும்.

உங்கள் ரெஸியூமை அனுப்பவேண்டிய முகவரி : banu@pathwaycareer.com (உதயபானு) , தொலைபேசி எண் :080-23327855 / 23525023.

Thursday, October 26, 2006

உங்கள் உதவி தேவை

எந்த முயற்ச்சியும் மற்றவர்களின் உதவியின்றி வெற்றி பெறாது என்பது என் கருத்து...We Def. Need Hands...இது நான் அடிக்கடி சொல்லும் வாக்கியம்...

இதுபோன்ற முயற்ச்சி எடுக்கும்போது எனக்கு தெரிந்த அளவில் கணிப்பொறி துறை, டெலெகாம் பற்றி நான் சொல்லலாம்...மற்றபடி, பப்ளிஷிங், அட்வர்டைசிங், மார்க்கெட்டிங், கன்ஸ்ட்ரக்ஷன் என்று உள்ள பல துறைகளில், அந்த அந்த துறைகளில் உள்ளவர்கள் தான் கூற முடியும்...

ஆஸ்திரேலியாவில் குடியுரிமை / வேலை வாய்ப்பு பற்றி என்னால் எழுதமுடியும்...ஆனால் கனாடா / சிங்கப்பூர் / அமெரிக்கா பற்றி அந்த நாட்டில் உள்ளவர்கள் உதவினால்தான் எழுதமுடியும்...

தமிழர்கள் ஆப்ரிக்க நாடுகளில் இருக்கிறார்கள்...ஐரோப்பிய நாடுகளில் இருக்கிறார்கள்...தமிழனில் கால் படாத கண்டமே இல்லை எனலாம்...ஆகவே உங்களூரில் இருக்கு வேலைவாய்ப்பு, கல்வி விபரங்கள்..நீங்கள் அறிந்த துறைகள்...என எனக்கு எழுதுங்களேன்...

உங்கள் எழுத்து சுகந்திரமாக வெளியிடப்படும்...எனக்கு இந்த முயற்ச்சியில் உதவுவீங்கதானே....

அன்பின்,
செந்தழல் ரவி

Wednesday, October 25, 2006

என்ன எழுதலாம்...

என்ன எழுதலாம் ? உங்களுக்கு தெரிஞ்சா நீங்க சொல்லுங்க..இப்போதைக்கு...

0. என்ன படித்தால் நல்ல எதிர்காலம் ? (இது மாணவர்களுக்கு)

1. படித்துக்கொண்டிருப்பவர்கள் நல்ல வேலைவாய்ப்பு கிடைக்க மேற்க்கொண்டு என்ன படிக்கலாம் ?

2.கல்வியை முடித்தபின் எப்படி இம்ரூவ் செய்து வேலைக்கு போகலாம் ?

3.ஒரு பீல்டில் இருந்து மற்ற பீல்டுக்கு வருவது எப்படி ? உதாரணமா மற்ற பீல்டில் இருப்பவர்கள் என்ன படித்து IT பீல்ட் வரலாம் ?

4.வெளிநாட்டு வேலைவாய்ப்புகள் என்ன ? மற்ற நாடுகளின் ஒர்க் பர்மிட் அல்லது பி.ஆர் (PR) வாங்க என்ன முறைமைகள் ? குடியுரிமை பெற எவ்வாறு தயார் செய்யவேண்டும் ?

5. சுயமாக தொழில் செய்ய விரும்புபவர்கள் எவ்வாறு முன்னோக்கி செல்லவேண்டும் ? வீட்டில் இருந்தே சம்பாதிப்பது எப்படி ?

இதுபோன்ற தகவல்களை கொடுக்கலாம் என்று உள்ளேன்..நீங்கள் உங்களுக்கு தெரிந்த தகவல்களை ( அனுபவப்பூர்வமாக இருக்கும் அல்லவா) கட்டுரையாக கொடுத்தால் வெளியிடுகிறேன்...

உதாரணத்துக்கு ஆஸ்திரேலியா / சிங்கப்பூர் / கனடா பற்றி அங்குள்ள வேலை வாய்ப்புகள், எவ்வாறு அங்கு செல்வது, முதலில் நீங்கள் சந்தித்த பிரச்சினைகள் என்ன ? என்பது போன்ற தகவல்களை கொடுத்தால் மிக பயனுள்ளதாக இருக்கும்...

அன்பின்,
செந்தழல் ரவி

முதல் முயற்ச்சி

அன்பின் வலைப்பதிவர்களே..

இந்த முயற்ச்சிக்கு உங்கள் ஆதரவு கிடைக்கும் என்று எண்ணி முதல் வலையிதழை கொண்டு வருகிறேன்..

அன்புடன்,
செந்தழல் ரவி