தேடுதல் வேட்டை

Friday, July 24, 2009

டேட்டா எண்ட்ரி பணி

டேட்டா எண்ட்ரி பணி ஒன்று உள்ளது..

இந்த பணியை செய்ய...

1. உங்களிடம் இணைய இணைப்பு இருக்கவேண்டும்
2. குறைந்தபட்ச கணிப்பொறி அறிவு தேவை
3. பொறுமையாக, நுணுக்கமாக செய்யவேண்டும்..

அதனால் பெண்களுக்கு முன்னுரிமை தரலாம் என்று இருக்கிறேன்...

இந்த பதிவின் பின்னூட்டமாக உங்கள் மின் அஞ்சலை அனுப்பவும்...மேல் விவரங்கள் மின் அஞ்சலில் தெரிவிக்கிறேன்...!!!!

Wednesday, July 15, 2009

ஆன்ராய்ட் / ப்ளாக்பெரி / ஜே2எம்.இ டெவலப்பர்கள் தேவை

அன்ராய்டு, ப்ளாக்பெரி அல்லது ஜே2எமி இல் குறைந்தபட்சம் ஒரு ஆண்டு அனுபவம்

ஹேண்ட் ஹெல்ட் ப்ரொக்ராமிங்கில் அல்லது சி.சி.ப்ளஸ் ப்ளஸ் அல்லது எம்பெடட் சிஸ்டம் இதில் குறைந்தபட்சம் 4 ஆண்டு அனுபவம் தேவை.

மொபைல் ப்ரொக்ராமிங்கில் க்ளையண்ட் சர்வர் அப்ளிக்கேஷன் டெவலப் செய்ய தேவையான அனுபவம் தேவை.

இவற்றில் ஏதாவது ஒன்றில் அனுபவம் இருந்தால்...

feeba@surlin.com or call me at 9980015060

வாழ்த்த்துக்கள்...!!!!

Sunday, July 12, 2009

டிகிரி படித்த சிவகங்கையில் நிரந்தரமாக இருக்க விருப்பம் உள்ளவர்கள் தேவை.

சிவகங்கையில் இருக்கும் தேங்காய் நாரில் இருந்து விவசாய மூலப்பொருள் ஏற்றுமதி செய்யும் எங்கள் நிறுவனத்திற்கு டிகிரி படித்த சிவகங்கையில் நிரந்தரமாக இருக்க விருப்பம் உள்ளவர்கள் தேவை. பதவி : commercial executive, பதவி - 7,000 முதல் 10,000 வரை தகுதிக்கேற்ப தரப்படும். freshers can also apply : dpiwanted@gmail.com

மூலப்பதிவு : http://mayilviji.blogspot.com/2009/07/blog-post_10.html

Friday, July 10, 2009

சோனி எரிக்ஸன் ஸ்வீடனில் இருந்து பணியாற்றும் வாய்ப்பு இது...!!!

சோனி எரிக்ஸன் ஸ்வீடனில் இருந்து பணியாற்றும் வாய்ப்பு இது...!!!

ஒரு சின்ன ஸ்னாப்ஷாட்.

- 5 முதல் 10 ஆண்டு அனுபவமுள்ள சீனியர் டெஸ்ட் எஞ்சினீயர்கள்
- கல்வித்தகுதி MSC, MCA, BE, ME, BSC ஆக இருக்கலாம்.
- பணி Android அல்லது சோனி எரிக்சன் EMP ப்ளாட்பார்ம் ஆக இருக்கும்.
- டெஸ்ட் ஆட்டோமேஷன் பற்றி கொஞ்சம் தெரிந்திருத்தல் அவசியம்.

ரெஸ்யூமை ravi.antone@gmail.com என்ற முகவரிக்கு அனுப்பவும்.

முழு விவரத்தை டீட்டெயில் ஆக கீழே கொடுத்துள்ளேன்..

We are seeking 5-10 Years experienced Senior Test Engineers with SW development knowledge that shall work on our Core SW system test team for Android and/or OSE platforms.
|
| Example of work activates in the team:
|
| · Design, implement and execute API test scripts in a test harness for OSE or Android platform in the areas
| o Stability
| o Duration
| o Performance
| o Power Management
| · Analyze of issues
| · Execute CTS test suite for Android
|
| This team shall have a broad understanding of the entire system and the team will become the system experts in Core SW Verification
|
| Competence
| ·· Test development Experience - Script and/or SW Development competence
| · Analyst capabilities
| · Knowledge of Test Methods, Test design Techniques
| · ISEB/ISTQB certified is a plus
| · Experience from Automated test design and execution
| · Knowledge about the Android system and how you test on Android
| · Experience from STE and/or QualCom platforms is a plus
| · Working at SEMC with SEMC references is a plus
| · Master of science or relevant education

send resumes to ravi.antone@gmail.com Subject Line : SWEDEN ANDROID

Thursday, July 09, 2009

சிவில், மெக்கானிக்கல், எலக்ட்ரிக்கல் எஞ்சினீயர்களுக்கு பணிவாய்ப்பு...

சிவில், மெக்கானிக்கல், எலக்ட்ரிக்கல் எஞ்சினீயர்களுக்கு பணிவாய்ப்பு...

பணியிடம் > சென்னை
அனுபவம் > இரண்டில் இருந்து மூன்று ஆண்டுகள்...

பணி மெயிண்டெனன்ஸ் ஆக இருக்கும். சம்பளம் மற்ற விவரங்கள் நேர்முகத்தேர்வுக்கு அழைப்பு வந்தால் தெரிவிக்கப்படும்...

உங்கள் ரெஸ்யூம் மின்னஞ்சல் அனுப்பவேண்டிய முகவரி carecatalyst@gmail.com

நன்றி !!!!

Tuesday, July 07, 2009

கேம்பஸே வரலையாமே ?இந்த வருஷம் பெரிய பெரிய காலேஜுல கூட கேம்பஸே வரலையாமே ? என்று நன்பர் ஒருவர் கேட்டார்.

ஆம். முற்றுப்புள்ளி.

ஏன் வரலை ? எதுக்கு வரலை என்பதை பற்றியதல்ல இந்த இடுகை. அது உங்களுக்கே தெரியும். பொருளாதார மந்த சூழ்நிலை. ப்ளா. ப்ளா.

ப்ரெஷ்ஷாக படிப்பை முடித்துவிட்டு வந்தவர்களுக்கு இருக்கும் ஆப்ஷன்கள் என்ன ?

ஆப்ஷன் A : ஒரு இன்ஸ்ட்டியூட்டில் சேர்ந்து கல்லூரியில் ஒழுங்காக படிக்காமல் போன ஜாவா, சி, எஸ்.க்யூ.எல் ஆகியவற்றை உண்மையாக படிப்பது..

இதில் Pros and Cons - நல்லது and கெட்டது


1.ஒழுங்கான இன்ஸ்ட்டுயூட்டில் சேரவில்லை என்றால் காசு வேஸ்ட்.
2.முழு உள்ளத்தோடு, புரிந்து படிக்கவில்லை என்றாலும் காசு வேஸ்ட்.
3.வீட்டில் பைக்குக்கு தொடர்ந்து பெட்ரோல் காசு வாங்கவும், உங்கள் பிகர் சேர்ந்துள்ள இன்ஸ்ட்டியூட்டில் சேரவும் இந்த ஆப்ஷனை தேர்ந்தெடுத்தீர்கள் என்றால் டோட்டல் வேஸ்ட்.

கொஞ்சம் பணம் செலவாகும். இருந்தாலும், முறையாக பயன்படுத்தப்பட்டால் ஆப்ஷன் A, மார்க்கெட் சிரடையும்போதோ அல்லது அதற்கு முன்னாலோ உங்களுக்கு ஒரு நல்ல வேலையை வாங்கித்தர வாய்ப்புண்டு..


ஆப்ஷன் B : வேலை தேடி சென்னை, பெங்களூர் போன்ற பெரு நகரங்களுக்கு பொட்டியை கட்டுவது.

இதில் Pros and Cons - நல்லது and கெட்டது

1. மீண்டும் பெற்றோர் தொந்தரவு இல்லாமல் தம் தண்ணி ஷோக்கு என்று ஜாலியாக இருக்கலாம். மாதம் மாதம் ஊரு பக்கம் வந்து மூன்றாயிரம் நான்காயிரம் என்று வாங்கி செல்லலாம்.
2. பெங்களூர் சென்னை என்று ஊர் சுத்தி, ஐனாஸ், ஐமாக்ஸ், சத்யம், பிவிஆர் என்று நல்ல சினிமாக்களை தொடர்ந்து பார்க்கலாம்.
3. நல்ல கம்பெனியில் வேலைபார்க்கும் சீனியர்களை தொடர்புகொண்டு, அவர்கள் உதவியோடு ரெஸ்யூம் தயாரித்து, அவர்களுடைய அட்வைஸ்படி கூகிள் அண்ட்ராய்ட், உபுண்டு லினக்ஸ் என்று லேட்டஸ்ட் டெக்னாலஜி படிக்கலாம்.

சில சமயம் கஷ்டமாக இருந்தாலும், நன்றாக பயன்படுத்தப்பட்டால், நல்ல உலக அனுபவம் கிடைக்கும். சில சமயம் உங்கள் வாழ்க்கையையே மாற்றிவிடும். பெரும்பாலும் சூப்பராக. சிறும்பாலும் சுமாராக..

ஆப்ஷன் C : வீட்டிலேயே வெட்டியாக பொழுதை கழிப்பது

இதில் Pros and Cons - நல்லது and கெட்டது

1. வீட்டில் இருந்தபடி அண்ட்ராய்ட், ஜே2எம்இ, லைனக்ஸ் என்று கணினியில் பழகலாம், இணையத்தில் லேட்டஸ்ட் டெக்னாலஜியை பிரித்து மேயலாம். ரெஸ்யூம் தயாரித்து, இளம்பொறியாளர்களை அழைக்கும் கம்பெனிகளை தொடர்ந்து தொடர்புகொண்டு பணி வாய்ப்பை பிடிக்கலாம்.

2. இண்டர்நெட் இணைப்புக்கான செலவை டாடி தலையில் கட்டி, நான்கு வருடம் கஷ்டப்பட்டு படித்த களைப்பை போக்க, ஆர்க்குட் மேய்ந்து, இட்லிப்பொடி வைத்து தோசை சாப்பிட்டு, சந்தோஷமாக மதிய உறக்கம் போடலாம்.

3.பக்கத்து வீட்டு ஜன்னலை வளர்ந்துவிட்ட கண்ணோடு ரூட் விட்டு, கே.டிவியில் இதுவரை பார்க்காத மொக்கை படம் எல்லாம் பார்த்து, கம்பூட்டர் கேம்ஸ் ஆடி, தம்பியிடம் வம்படித்து, அப்பாவிடம் அவ்வப்போது திட்டு வாங்கி, அம்மாவிடம் சண்டையிட்டுக்கொண்டு, குஜாலாகவே இருக்கலாம்...

கொஞ்சமும் கஷ்டமில்லாத ஈஸியான இந்த ஆப்ஷன் C, பெரிதாக பண செலவு எதுவும் வைக்காது. அதிஷ்டம் இருந்தால் ஒரு நல்ல வேலை கூட கிடைக்க வாய்ப்பு உண்டு. இருந்தாலும் நீங்கள் ஒரு மகா மொக்கையான மனிதராக, வெத்துவேட்டாக உருவாக வாய்ப்புண்டு..

ஆப்ஷன் D : கிடைத்த வேலையை செய்வது

இதில் Pros and Cons - நல்லது and கெட்டது

1. மார்க்கெட்டிங்கோ, ஹார்ட்வேர் எஞ்சினீயர் வேலையோ, அல்லது தினத்தந்தி வரி விளம்பரத்தில் வரும் டி.டி.பி ஆப்பரேட்டர், ஐந்தாயிரம் சம்பளம் பணியையோ செய்யலாம்.

2.உங்களுக்கு விரும்பம் இல்லாத சில நேரங்களில் கூட கடுமையான வெய்யிலில் அலையும் வாய்ப்பு உள்ள ஆப்ஷன் இது. வயிற்றுக்கு வேளா வேளைக்கு சோறு கிடைக்கும் என்று சொல்ல முடியாது. சில சமயம் குறிப்பிட்ட நாளைக்குள் சம்பளம் கிடைக்கும் வாய்ப்பு இல்லை, அல்லது சம்பளமே கிடைக்கும் வாய்ப்பு இல்லை.

3.இந்த வேலையை செய்துகொண்டிருக்கும்போது லேட்டஸ்ட் டெக்னாலஜியை அப்டேட் செய்துகொள்ளவேண்டிய கட்டாயம் உங்களுக்கு உண்டு. ஆகவே நீங்கள் இரட்டிப்பு மடங்கு உழைப்பை சிந்தவேண்டியது இருக்கும்...அப்போது தான் மார்க்கெட் சீரடையும்போது உங்கள் மனதுக்கு பிடித்த விருப்ப பணியை தேர்ந்தெடுத்து செல்ல முடியும்...

கொஞ்சம் கடினமான ஆப்ஷன் இது, இருந்தாலும், சிறப்பாக பயன்படுத்தப்பட்டால், உலக அனுபவம், உள்ளூர் அனுபவம், லேட்டஸ்ட் ட்ரெண்ட்ஸ், வாழ்க்கையின் நெளிவு சுளிவுகள், பேச்சுத்திறமை என்று எல்லாம் கிடைத்து புடம் போட்ட தங்கத்தில் பொதிந்த வைரமாக நீங்கள் மாற வாய்ப்பு உண்டு.

ஆப்ஷன் E : ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ் தேர்வுகளை நடத்தும் மத்திய அரசு தேர்வுகளுக்கோ அல்லது NET போன்ற ப்ரொபஸர் வேலைக்கு போற தேர்வுகளுக்கோ அல்லது IELTS போன்ற வெளிநாட்டு படிப்புக்கான ஆங்கில தேர்வுகளுக்கோ தயார் செய்வது.

இதில் Pros and Cons - நல்லது and கெட்டது

1.தினமும் பத்து மணி நேரம் பதினாறு மணி நேரம் படித்து ஐ.ஏ.எஸ் அதிகாரியான தமிழர்களை பற்றிய செய்திகளை படித்திருக்கிறேன். கடினமாக உழைத்தால் மட்டுமே உங்களால் இதில் ஜெயிக்க முடியும்.
2. NET எக்ஸாம் எழுதலாம். Phd படிக்கலாம். உங்களுக்கு ஆசிரியப்பணி பிடிக்கும் என்றால் களத்தில் இறங்கினால் வெற்றி நிச்சயம்.
3. வெளிநாட்டில் படித்தால் வேலை கிடைக்கும், ஜெயித்துவிடலாம் என்பது சுத்த ஹம்பக். 100ல் பத்து பேரே சிறப்பான, படிப்புக்கு தகுந்த வேலையை வெளிநாட்டில் படித்து முடித்து அதன் பின் செய்கிறார்கள்.

இந்த ஆப்ஷனை நிறையபேர் எடுத்தால் தமிழ்நாட்டில் இருந்து அற்புதமான ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ் அதிகாரிகள் உருவாக வாய்ப்புண்டு.

இளைய தலைமுறை ப்ரொபஸர்கள், இந்த தலைமுறையை புரிந்துகொண்ட ஆசிரியர்களும் நமக்கு கிடைப்பார்கள்.

வங்கி கடன் பல லட்சத்துடன் வெளிநாட்டில் பிஸ்ஸா தட்டியோ, அல்லது ப்ளேட் கழுவியோ கஷ்டப்பட்டு, அதன் பிறகு நல்ல வேலையுடன் அங்கேயே செட்டில் ஆகவோ, அல்லது இந்தியா திரும்பவோ வாய்ப்புண்டு.

கடைசியாக, உழைப்பும் தன்னம்பிக்கையும் விடா முயற்சியும் மட்டுமே உங்களை கரைசேர்க்கும். வெற்றியாளராக உருவாக்கும். சாதனையாளராக மெருகேற்றும். அல்லது அட்லீஸ்ட் உங்கள் சொந்த காலில் உங்களை நிற்கவைக்கும்.

ஒரு அரியருடன் கம்யூட்டர் சைன்ஸ் முடித்து வெளியே வந்த எனக்கு இரண்டு நூறு ரூபாய்கள் என்னுடைய முதல் சம்பளம். ஒரு ப்ரிண்டிங் ப்ரஸ்ஸில். இன்றைக்கு என்னுடைய சொந்த காலில் நிற்கிறேன்...இங்கே அதிகம் எழுதினால் தற்பெருமையாகிவிடும்..அவ்வளவுதான் சொல்லமுடியும்.

நல்ல மாட்டுக்கு ஒரு சூடு...நல்ல பிள்ளைகளுக்கு ஒரு பதிவு..!!!
..
..