தேடுதல் வேட்டை

Saturday, December 30, 2006

இளம்பொறியாளர்கள் - L&T - Chennai

&T InfoTech is a wholly owned subsidiary of US 4 billion engineering conglomerate Larsen & Toubro Ltd. (www.lntinfotech.com)

L&T Infotech was started in the year 1997.With a present employee strength of 6000+ L&T InfoTech has a worldwide presence with 14 international offices and 7 development centers.

Candidate Profile
BE / MCA 2006

BE Streams : IT , ECE , CSC , EEE , Mech , E&I

Eligibility :

10th STD : 60 % and Above

12th STD : 60 % and Above

BE & MCA : 70 % and Above

All papers should have been cleared in the first attempt from 10th STD onwards

If you satisfy the above criteria please WALK-IN

Date : 6th January 2006

Day : Saturday

Time : 10.00 AM to 4.00 PM

Venue :

L & T Infotech

Mount Poonamalee Road

Manapakkam

Chennai 89

Near MIOT Hospital or Chennai Trade center

Documents :
Resume
Passport size photograph 2 numbers
Xerox Copies of all mark sheets

Mail your resumes to freshers@LNTINFOTECH.com

Wish you a Very Happy New Year to All Students and Job Seekers !!!!

Wednesday, December 27, 2006

கால்சென்டர் - பி.பி.ஓவில் பணிபுரிய விருப்பமா?

அனைவருக்கும் வணக்கம்...!!!!

முறையான கல்வித்தகுதி / டிகிரி இல்லை, ஆனால் ஆங்கில அறிவும், சிறிது கணினி அறிவும் உள்ளதா உங்கள் தோழருக்கு/தோழிக்கு ? கால்சென்டர் மற்றும் பி.பி.ஓ (பிஸினஸ் ப்ராஸஸ் அவுட்சோர்ஸிங்) நிறுவனங்கள் அழைக்கின்றன !!!! இந்த துறை வருடத்துக்கு 200 % வளர்ந்து வருகிறது இந்தியாவில் !!!

பணிவாய்ப்பு : சென்னை,கோவை,மற்றும் பெங்களூரில் கால்சென்டர் - பி.பி.ஓ பணிகள்
கல்வித்தகுதி : குறைந்தபட்சம் 12 ஆம் வகுப்பு தேறிய / தவறியவர்கள்
கணினி அறிவு : குறைந்தபட்சம் கணினியை இயக்க தெரியவேண்டும் (MS Word/XL அறிவு)
கண்டிப்பாக தேவையான தகுதி : ஆங்கிலம் பேச / எழுத தெரிந்திருக்கவேண்டும்..

ரெஸ்யூமை அனுப்பவேண்டிய முகவரி : tedujobs@gmail.com

சப்ஜக்ட் லைனில்: Chennai-CCBPO-TAMIZMANAM என்று எழுதவேண்டும் ( சென்னையில் பணி தேவை என்றால்) ...கல்வித்தகுதி, முன் அனுபவம் உள்ளதா என்று தெளிவாக எழுதி அனுப்ப வேண்டும் !!!!

வளர்ந்துவரும் துறையின் வளர்ச்சியை பயன்படுத்திக்கொண்டும் நாமும் வளரலாமே !!!!!

Tuesday, December 26, 2006

இளம்பொறியாளர்கள் - Mphasis

இளம்பொறியாளர்கள் (Mphasis)

Company Profile:
At Mphasis, an EDS company, passion runs in our veins. Our state-of-the-art Mphasis Training centre may be the right place to take your engineering skills to the highest levels ,with a vision to product best-in-breed professionals, Mphasis opens tremendous career opportunities in software and software enabled space.

Eligibility:
Engineering graduates (B.E./B.TECH./M.E./M.TECH./MCA with a consistently excellent academic record) having 0-18 months of experience

தகுதி:: B.Tech/B.E./M.Tech/MCA

Location: Bangalore

Apply: Send in your Resumes to freshers_bangalore@mphasis.com

கவனிக்க:
Candidates who have applied to or been with the process either with EDS or Mphasis in the last six months need not apply

Monday, December 25, 2006

பெங்களூர் யாகூவில் பல்வகை பணிவாய்ப்புகள்..




பெங்களூரில் இயங்கும் யாகூ நிறுவனத்தில் (க்ளிக்குக) இத்தனை பணி வாய்ப்புகளா என்று வியக்கிறார் ஜிம்...தகவல் தந்த ஐயப்பனுக்கு நன்றி...

Friday, December 22, 2006

ARTICENT (ப்ளக்ஸ்ட்ரானிக்ஸ்) - 2006 இளம்பொறியாளர்கள்

ஆர்டிஸெண்ட் ( முன்பு ப்ளக்ஸ்ட்ரானிக்ஸ், அதற்கு முன்பு ஹியூக்ஸ் ஸாப்ட்வேர்) நிறுவனம், டெலகாம் துறையில் மிகச்சிறந்த நிறுவனம்...சென்னையிலும் கிளை பரப்பியுள்ளது...இந்த நிறுவனம் இளம்பொறியாளர்களை ( 2006 ஆம் ஆண்டு படிப்பை முடித்தவர்கள்) தேர்ந்தெடுக்கிறது...

இந்த நிறுவனத்தின் இணையதளத்தில் சென்று பதிவு செய்யவேண்டும்...இங்கே அழுத்துங்கள்

வாழ்த்துக்கள் !!!!

மெயின்ப்ரேம் கோர்ஸ் முடித்தவர்களுக்கு சென்னையில் பணி

எல் & டி நிறுவனம் மெயின்ப்ரேம் படித்து முடித்தவர்களை அழைக்கிறது....அதிக பணம் கட்டி இந்த படிப்பை முடித்துவிட்டு, முறையான நிறுவனங்களுக்கு சென்றால், எக்ஸ்பீரியன்ஸ் இருக்கிறதா என்ற ஒரு அதிமுக்கியமான கேள்வியை கேட்பது வழக்கம்...நாமே இப்போது தான் படித்து முடித்திருப்போம்...எக்ஸ்பீரியன்ஸுக்கு எங்கே போவது ? ஆனால் படித்து முடித்திருந்தாலே போதும், பணிக்கு எடுத்துக்கொள்கிறோம் என்று அழைக்கிறது எல் & டி. நிறுவனத்தை பற்றி நான் எதுவும் அறிமுகம் தரத்தேவை இல்லை என்றே நினைக்கிறேன்...

Experience: 1 - 2 Years ( ஐடியில்...இல்லை என்றாலும் பரவாயில்லையாமாம்)
Skills: Mainframe Trained
Eligibility:Candidates who have passesd in the year 2004,2005 with 1 year of any IT experince can walk-in.

You Need to carry the following:

Resume
PP size photo
Mainframe training certificate

Job Location: Chennai

Walkin Venue:

L&T InfotechL&T Infotech Park, Mount Poonamallee Road,Manapakkam, Chennai-600 089 Near MIOT hospital or Chennai Trade centre

Date: 21,22,25,26,27,28,29 December 2006Time: 10.00 AM to 12.00 Noon & 3.00PM to 5.00 PM

முக்கியமாக கவனிக்க வேண்டியது, இது வாக்கின் முறையில் நடைபெறுகிறது...யாருக்காகவும் காத்திருக்கவேண்டிய அவசியமில்லை...நீங்கள் அறிவுறுத்தும் நன்பர்களள நேரடியாக மெயின்ப்ரேம் படித்த கல்வி சான்றிதழையும், புகைப்படங்களையும், கொண்டுசெல்ல சொல்லுங்கள்...

வாழ்த்துக்கள் !!!!!

Wednesday, December 20, 2006

EDS புனே - இளம்பொறியாளர்கள்

ஈ.டி.எஸ் நிறுவனம் இளம்பொறியாளர்களை வரவேற்கிறது...

நிறுவனம் பற்றி...:

* World’s # 1 in Application Management Services
* World’s second largest IT Outsourcing company
* Employees: more than 126,000
* 2006 revenues: 20.6 billion
* Ranked 95th on the Fortune 500

தகுதி:

Must have passed out in 2006
Must have completed B.E/ B.Tech (C.S, IT, EEE, ECE), MCA, Msc.IT streams without any arrears
A minimum cut-off aggregate of 65% and above only will be considered
Good Communication skills
Desired ProfileMust have passed out in 2006
Must have completed B.E/ B.Tech (C.S, IT, EEE, ECE), MCA, Msc.IT streams without any arrears
A minimum cut-off aggregate of 65% and above only will be considered
Good Communication skills

எப்படி அப்ளை செய்வது: referece = Elamaran

Reference < Fresher/Name/Stream/Year of passing /University name/ aggregate percentage/college name/ Current Location --- Any Profile without this subject line will not be considered

முகவரி

EDS - Electronic Data Systems
Tower - II, Level-II
Magarpatta City,
Hadapsar
Pune - Maharashtra ,INDIA 411013

எங்கே அனுப்ப வேண்டும் :

jyotsna.wadekar@eds.com

வாழ்த்துக்கள்....!!!!

பி.எஸ்.ஸி/பிஸிஏ(2005/06) நிறைவு: டிசிஎஸ் அள்ளுகிறது


முன்பெல்லாம் மாணவர்கள் எம்.எஸ்.ஸி அல்லது எம்.ஸி.ஏ முடிக்கும்வரை பெரிய நிறுவனங்களில் பணிவாய்ப்புக்காக காத்திருக்கவேண்டும்..ஆனால் இப்போது பொறியாளர்களுக்கு கடும் பற்றாக்குறை காரணமாக பி.எஸ்.ஸி அல்லது பி.ஸி.ஏ (BSc or BCA) நிறைவு செய்திருந்தாலே போதும் என்கின்றன நிறுவனங்கள்...

உங்களுக்கு தெரிந்து பிள்ளைகள் பி.எஸ்.ஸி அல்லது பி.ஸி.ஏ 2005 அல்லது 2006 ஆம் ஆண்டு நிறைவு செய்தவர்கள் இருக்கிறார்களா ? தற்போது பூதாகரமாக வளர்ந்துள்ள டி.சி.எஸ் அவர்களை நிறைவான சம்பளத்தோடு அள்ளிக்கொள்ள தயாராக கடைவிரித்துள்ளது.....

தேர்ந்தெடுக்கப்பட்டால் முதல் ஏழு மாதம் ட்ரெய்னிங் என்று கூறுகிறார்கள்..

பத்தாம் வகுப்பு / உயர்நிலை / மற்றும் பி.எஸ்.ஸியில் முதல் வகுப்பில் தேர்வாகியிருக்கவேண்டும்...படித்தது தொலைதூரக்கல்வியாக இருக்க கூடாது...கல்விக்கு இடையில் இடைவேளை இருந்தால் ( அரியர்ஸை அப்படி டீசண்டாக சொல்லலாம்) - அது இரண்டாண்டுக்கு மேல் இருக்க கூடாது...

இளநிலையில் கணிப்பொறியியல் / இயற்பியல் / வேதியல் / கணிதம் / தகவல் தொழில்நுட்பம் / ஆகிய ஏதாவது ஒன்றில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்..

கண்டிப்பாக கவனிக்கவேண்டிய விஷயம், 23-12-2006 (ஞாயிறு) அன்று இந்த தேர்வு நடைபெறும்..காலை 9:30 மணியில் இருந்து மதியம் 1:30 மணி வரை வடபழனி TCS அலுவலகத்தில் ரெஜிஸ்ட்ரேஷன் நடைபெறும்...தேர்வர்கள் நேரடியாக குறிப்பிட்ட நேரத்தில் சென்று பதிவு செய்யவேண்டும்...

டெஸ்டிங் படிச்சா வேலை கிடைக்குமா? - 3

சரி, டெஸ்டிங் முழுமையாக படிப்பது என்று இறங்கியாகிவிட்டது...எங்கிருந்து ஆரம்பிப்பது...என்பது தெரிந்துவிட்டது...இன்னும் கொஞ்சம் சிறிய சிறிய விஷயங்களை தொட்டுக்கொண்டிருந்துவிட்டு அடுத்த அத்தியாயத்தில் இருந்து முழுமையாக பார்க்கலாம்....இந்த அத்தியாயத்திலும் சின்ன விஷயங்கள் தானா - உருப்படியாக எப்போதுதான் எழுதப்போகிறாய் என்று நீங்கள் அங்கே சூடாவது தெரிகிறது...இருந்தாலும் இதுபோன்ற முன்னுரைகள் தேவையாகத்தான் இருக்கிறது...

எக்ஸ்கியூஸ் மீ...நீங்க ப்ளாக் பாக்ஸ் (Black Box) டெஸ்டரா இல்லை ஒயிட் பாக்ஸ் (White Box) டெஸ்டரா என்று கேட்டால் புதிதாக கற்பவர் அதிர்ச்சி அடையாமல் இருக்கவேண்டும் அல்லவா ? அதற்காகவாவது நான் எளிமையான விஷயங்களை கோர்வையாக சொல்லிவிட்டால் பிறகு ஒவ்வொரு சிறிய விஷயத்தையும் விளங்கச்சொல்ல தேவை இல்லாமல் நேரடியாக விஷயத்துக்கு வர ஏதுவாக இருக்கும் அல்லவா ?

ப்ளாக் பாக்ஸ் டெஸ்டிங் என்பது ஒரு பயனாளரைப்போல் (End User) டெஸ்டிங் செய்வது...எடுத்துக்காட்டாக யாகூ மின்மடல் இணைய மென்பொருளை ( Web Application Software) நீங்கள் டெஸ்ட் செய்கிறீர்கள்...எப்படி செய்வீர்கள்....சரியான பயனாளர் பெயரையும்,கடவுச்சொல்லையும் (user id and password) கொடுத்து உள்ளே சென்று ஒரு மின் அஞ்சலை ஒரு கோப்புடன் அனுப்பி (compose a mail with a file), மின்மடலை தரவிறக்கி (Download), ஒரு மின்னஞ்சலை அழித்து (delete), அதில் உள்ள அத்துனை செயலாக்கங்களையும் (Operations or Functionalities) சோதித்து, இது வேலை செய்யுதுப்பா !!! என்று சொல்வீர்களானால் இது தான் ப்ளாக் பாக்ஸ் டெஸ்டிங்.

நீங்கள் கடுமையான உழைப்பாளியாகவும், நல்ல கலையறிவார்ந்தவராயும் ( Creativity) இருந்தால் இந்த பணியை வெகுசிறப்பாக செய்யலாம்...கிராமத்தில் இருந்து கிளம்பி வந்து எல்.ஜி நிறுவனத்தில் பணியாற்றும் நன்பர் பாலு வெகுசிறப்பாக பணியாற்றி விருதுகளை வாங்கி குவிக்கிறாரே !!! மூளையை கசக்கி பிழிந்து பணியாற்றும் பலரை விட மிக அருமையாக டெஸ்டிங் செய்து வெற்றியாளராக திகழும் பலரை எனக்கு தெரியும்...

அடுத்தது வொய்ட் பாக்ஸ் டெஸ்டிங்....இந்த முறையில் ப்ரோக்கிராமிங் நுழைகிறது....ஸ்க்ரிப்டுகள், ப்ரோக்ராமர் உருவாக்கிய மென்பொருளின் மூலத்தை ( Software Source Code) பார்த்து, அது சரியாக கட்டமைக்கப்பட்டிருக்கிறதா ? அனைத்து செயலாக்கங்களையும் (Functionality) உள்ளடக்கியுள்ளதா ? குறையிருப்பின் அவை எங்கே உள்ளது என்பது போன்ற பணி...இதற்கு நல்ல மென்பொருள் உருவாக்க அறிவு (Software Development Knowledge) தேவையாகிறது...ப்ரொக்கிராமிங்கில் இருந்து டெஸ்டிங் மாறி வரும் சில நன்பர்கள் இந்த பணியை செய்வதை நான் அறிவேன்...

ப்ளாக் பாக்ஸ் டெஸ்டிங் / ஒய்ட் பாக்ஸ் டெஸ்டிங் இவை இரண்டும் உள்ளடக்கிய ஒன்று உண்டு..அது க்ரே (Gray) பாக்ஸ் டெஸ்டிங் என்று அழைக்கப்படுகிறது...அவ்வப்போது கோடிங் வாக் த்ரோஸ் (Coding Walk Throughs) - கட்டமைக்கப்பட்ட மூலத்தை ஊடாடி பார்ப்பது - செய்யவேண்டியிருக்கும்...சில சமயம் - பயனாளரைப்போல பணியாற்றி மென்பொருளை இயக்கி பார்க்க வேண்டியதாக இருக்கும்.....

மீண்டும் இன்றே !!!

Monday, December 18, 2006

டெஸ்டிங் படிச்சா வேலை கிடைக்குமா? - 2

டெஸ்டிங் படிப்பது என்று முடிவெடுத்தாகிவிட்டது...இப்போது குழப்பமே யாரை அணுகுவது ? எப்படி படிப்பது ? இந்த துறையில் உள்ள வேலை வாய்ப்புகள் என்ன என்பதுதான்...ஆங்கில நாளிதழ்களில் புதன்கிழமைகளில் வரும் வேலைவாய்ப்பு பகுதிகளில் டெஸ்டிங் துறையில் ஆட்கள் தேவை என்று சிறிது சிறிதாக விளம்பரங்களும் வர ஆரம்பித்தன...அங்கே இங்கே விசாரித்து டெஸ்டிங் பற்றி ஒரு முழு ஐடியாவும் கிடைத்துவிட்டது...கொஞ்சம் சுருக்கமாக சொல்லப்போனால்...

* மென்பொருள் துறையின் அடிப்படை அறிவை ஆழமாக பெறுதல் வேண்டும். ( Software Engineering Life Cycle)

* டெஸ்டிங் துறையில் மேனுவல் டெஸ்டிங் (Manual Testing), ஆட்டமேஷன் டெஸ்டிங் (Automation Testing) என்று இரு பிரிவுகளில் பணிவாய்ப்பு கிடைக்கும்.

* மேனுவல் டெஸ்டிங் சொந்தமாக நாமே படித்துக்கொள்ளும் அளவில் குறைந்த அளவிலான பாடங்களை கொண்டது. நல்ல புரிதலும், சிறந்த ஆங்கில அறிவும் இருந்தால் எந்த நேர்முக தேர்வையும் அடித்து தூள் கிளப்பி விடலாம்..

* ஆட்டமேஷன் துறையில் சிறந்த பணிவாய்ப்புகள், வெளிநாட்டு வேலைவாய்ப்புகள் கணக்கில்லாமல் காத்திருக்கின்றன..

* டெஸ்டிங் துறையை தேர்ந்தெடுப்பவர்கள் குறைவு, போட்டி அதிகம் இல்லை..

* அதிகபட்ச ப்ரஷர் இல்லாமல் சிறப்பாக பணியாற்றும் வாய்ப்பு..

* டெஸ்டிங் துறையில் இருப்பவர்களுக்கு சம்பளம் குறைவு / வாய்ப்புகள் குறைவு / மதிப்பு இல்லை என்ற தகவல் பொய்யானது..

* ஆட்டமேஷன் டூல்ஸ் (Tools) வைத்திருந்தாலும் சில நிறுவனங்கள் பெரும்பாலும் மேனுவல் டெஸ்டிங்கையே நம்பியிருக்கின்றன...

பல விஷயங்கள் தெளிவாக புரிந்தது..மேனுவல் டெஸ்டிங் சொந்தமாக படித்துக்கொள்ளும் திறமை இருந்தால் படித்துக்கொள்ளலாம்..ஆனால் ஆட்டமேஷன்..கண்டிப்பாக ஏதாவது ஒரு நிறுவனத்தில் படித்தல் நலம் என்று முடிவெடுத்தோம்..ஆனால் கல்வி நிறுவனங்களில் மேனுவல் டெஸ்டிங் ஆரம்பித்து பிறகுதான் ஆட்டமேஷன் சொல்லித்தருவார்கள் என்று தகவல் கிடைத்தது...சரி அதனால் என்ன, மேனுவல் டெஸ்டிங் பற்றிய தகவல்களை நன்பர்களிடமிருந்து பெற்றும், இணையத்திலிருந்து தரவிறக்கியும் நன்றாக புரிதலுடன் தெரிந்துகொண்டால், நிறுவனத்தில் இணைந்து படிக்கும்போது இன்னும் எளிமையாகவும், விரைவாக புரிந்துகொள்ளும்படியும் இருக்குமே என்று முடிவெடுத்தோம்....

அதற்க்கு முன்னால் ஏன் எதற்க்கு இந்த டெஸ்டிங் என்று சற்று விரிவாக பார்க்கலாமா ? நான் ஒரு எளிமையான உதாரணத்தை எடுத்துக்கொள்கிறேன்..வாசகர்களில் டெக்னிக்கல் விஷயங்களை கரைத்து குடித்தவர்கள் இருப்பீர்கள்...கொஞ்சம் மன்னித்துவிடுங்கள்...

நீங்கள் ஒரு மென்பொருளை தயாரிக்கிறீர்கள் என்று வைத்துக்கொள்வோம். உதாரணமாக நோட் பேட் (Notepad). இந்து விண்டோஸ் உபயோகித்த அனைவருக்கும் அறிமுகமான ஒரு மென்பொருள்தான். இதில் நம் தகவல்களை டைப் செய்யலாம். விரும்பிய பெயரில் சேமிக்கலாம். பிறகு திறந்து பார்க்கலாம். இந்த கோப்பை அழிக்கவும் செய்யலாம்...

இதே போல் ஒரு மென்பொருளை தயாரிக்க ஒரு நிறுவனம் விரும்புகிறது. அது தன் பணியாளர்களை வைத்தோ அல்லது வேறு ஒரு நிறுவனம் மூலமோ இந்த மென்பொருளை தயாரிக்க முடிவு செய்கிறது..

இதில் ஒரு சிறிய விஷயம், தனக்கு தேவையான மென்பொருளை அந்த நிறுவனமே தயாரித்தால் அது ப்ராஜக்ட் ( Project). எடுத்துக்காட்டாக, தங்கள் பணியாளர்களின் வருகைப்பதிவேட்டினை மென்பொருளாக தயாரித்தால் அது ப்ராஜக்ட். அல்லது வேறு ஒரு நிறுவனத்துக்கு தயாரித்து கொடுத்தாலும் அது ப்ராஜக்ட் தான். ஆனால் ப்ராடக்ட் (Product) என்பது, பொது உபயோகத்துக்காக தயாரிப்பது. உதாரணமாக மைக்ரோசாப்ட் விண்டோஸ், வேர்ட், எக்ஸல் என்பன ப்ராடக்ட் ஆகும்..இந்த சிறு வித்தியாசம் கண்டிப்பாக அறிந்துகொள்ளவேண்டிய ஒன்று...!!!

முதலில் மென்பொருளை தயாரிக்க அனுமதி அளிக்கும் நிறுவனரின் மின் மடல், அல்லது ஒரு Official Request வரவேண்டும். அப்போது தான் ப்ராஜக்டை ஆரம்பிக்க முடியும் இல்லையா...சரி...அனுமதி கிடைத்துவிட்டது.

நிறுவனத்தின் மானேஜர் என்ன செய்கிறார் இப்போது ? ஒரு SRS எனப்படும் கோப்பை தயாரிக்கிறார்..இது Software requirment specification என்பதின் சுருக்கமாகும்...இந்த கோப்பில், மென்பொருள் எப்படி இருக்க வேண்டும், எந்த கணினிகளில் இயங்க வேண்டும் (விண்டோஸ் கணினியிலா / யூனிக்ஸ் (UNIX) கணினியிலா ), மென்பொருளில் என்ன என்ன Funcionality இருக்க வேண்டும் ? சேமிக்கும் வசதி இருக்கவேண்டுமா ? கோப்பை அழிக்கும் வசதி இருக்க வேண்டுமா ? ஏற்கனவே சேமித்த பெயரை மாற்றும் வசதி (Rename) இருக்க வேண்டுமா ? என்பது போல...

சற்று விரிவாக கூறிவிட்டேன்...இருந்தாலும் இவ்வாறெல்லாம் தயாரித்த மென்பொருளை அப்படியே விற்கிறோம் என்று வைத்துக்கொள்வோம்...

ப்ராஜக்ட் ஆக இருந்தாலும் சரி, ப்ராடக்ட் ஆக இருந்தாலும் சரி...முதன்முதலில் உபயோகிப்பவர் அதனை திறக்கிறார்...திறக்க மறுக்கிறது...அல்லது திறந்த பின், ஒரு செய்தியை டைப் செய்து, சேமிக்கிறார்...சேமிக்க மறுக்கிறது...சூடான மடலோடு நீங்கள் அனுப்பிய மென்பொருள் திரும்ப வருகிறது..இந்த மென்பொருளை தயாரிக்க மூன்று மாதங்கள் ஆனது என்று வைத்துக்கொள்வோம்...உழைப்பெல்லாம் வீண்...மீண்டும் ஒரு மாதம் நேரம் கேட்டு மீண்டும் கணிணி வல்லுனர்கள் இரவு பகலாக உழைக்கிறார்கள்...ஆனால் மீண்டும் விற்ற இடத்தில் சரியாக வேலைசெய்யவில்லை உங்கள் மென்பொருள்...கோபமாகும் அந்த நிறுவன அதிகாரிகள், உங்களுடனான ஆர்டரை கேன்ஸல் செய்வதோடு அல்லாமல், சரியான மென்பொருளை வழங்காததால் உங்களுக்கு உரிய பணத்தை பட்டுவாடா செய்ய மறுக்கிறார்கள்...அவர்கள் நேரத்தை வீணடித்தது காரணமாக உங்கள் மீது வழக்கும் தொடர்கிறார்கள் என்று வைத்துக்கொள்ளுங்கள்...எவ்வளவு பிரச்சினை பாருங்கள்...

இது போன்ற பிரச்சினைகள் ஏற்ப்படாமல் எவ்வாறு தடுப்பது ? அங்கேதான் டெஸ்டிங் முன்னால் வந்து நிற்கிறது...இந்த முன்னுரையை பிரிதொரு நேரத்தில் தொடரலாம்...இப்போது சற்று ப்ராக்டிக்கலுக்கு வருவோம்...

டெஸ்டிங் கல்வி பயிற்றுவிக்கும் ஒரு சிறிய நிறுவனத்தை அணுகியபோது அவர்களின் கோர்ஸ் ப்ளான் இவ்வாறு இருந்தது...

1. சாப்ட்வேர் லைப் சைக்கிள் ( Software life Cycle)
2. மேனுவல் டெஸ்டிங் ( Manual Testing)
3. ஆட்டமேஷன் டெஸ்டிங் டூல்ஸ் (Automation Testing Tools)

சற்று விரிவாக பார்க்கலாமா ?

SDLC என்று சுருக்கமாக மொழியப்படும் இது, அடிப்படை கல்வியாகும். டெஸ்டிங் என்ற ஒரு விஷயம் எங்கே ஆரம்பிக்கிறது, எங்கே முடிகிறது, என்பதினை விரிவாக அறிய இதனை தெரிந்துகொள்வது அவசியமாகும்..

சற்று விரிவாக சொல்லப்போனால் கீழ்க்கண்டவாறு அமையும்..

Analyze -> Design -> coding - > testing

முதலில் அனஸைஸ் செய்யவேண்டும் ( என்ன - எப்படி என்பதை பின்னால் விரிவாக பார்க்கலாம்), பிறகு டிஸைன். இதில் Low Level Design மற்றும் High Level Design என்று பிரிவுகள் உண்டு ( ப்ளோ சார்ட் மாதிரி இருக்கும் இது. உங்கள் மென்பொருள் பற்றிய விரிவான படவிளக்கம். பிறகு கோடிங். இங்கே நாம் ப்ரொக்ராமிங் எழுதுகிறோம். பிறகு டெஸ்டிங். மென்பொருள் சரியாக வேலை செய்கிறதா என்று பார்க்கும் பணி. தொழில் நிறுவனங்களில் QC (க்வாலிட்டி கண்ட்ரோல்) என்று ஒரு பிரிவு இருக்கும் இல்லையா ? தயாரித்த பொருள் உருப்படியாக உள்ளதா என்று சரிபார்க்கும் குழு ? அதுவே தான் மென்பொருள் நிறுவனங்களில் டெஸ்டிங் டீம்...

சரி நமது நன்பர் டெஸ்டிங் கோர்ஸில் இணைந்தாரா ? அங்கே வகுப்பில் என்ன பயிற்றுவித்தார்கள், டெஸ்டிங் வகைகள் - Types Of Testing சொல்லித்தந்தார்களா ? டெஸ்ட் ப்ளான் (Test Plan), டெஸ்ட் கேஸ் (Test Case) பற்றி விளக்கினார்களா ? டெஸ்டிங் நேர்முகத்தேர்வில் என்ன கேள்விகள் கேட்கப்படும் என்பதை சொல்லித்தந்தார்களா ? என்பதை அடுத்த பதிவில் பார்க்கலாம்...

விப்ரோ பெங்களூர்/சென்னை - டெஸ்டிங் வாக்கின்

விப்ரோ நிறுவனம் வரும் பதினாறாம் தேதி பெங்களூரில் டெஸ்டிங் பணியில் இருப்பவர்களுக்கான வாக்கின் இண்டர்வியூவை நடத்துகிறது...ஆட்டோமேஷன் டெஸ்டிங் பற்றிய அறிவு அல்லது மேனுவல் டெஸ்டிங் பற்றி தெரிந்தவர்கள் கலந்துகொள்ளலாம் என்று அறிவித்துள்ளார்கள்..

அனுபவம் : 3+ years

தகுதிகள்:

ஆட்டமேஷன் அல்லது மேனுவல் டெஸ்டிங்

1. Silk Test- 3+ yrs of exp
2. QTP- 3 + yrs of exp
3. Win runner- 4+ yrs of exp
4. Rational Robot- 4+ yrs of exp

டொமைன்: எண்டர்ப்ரைஸ் பற்றியதாக இருத்தல் நலம்..

எங்கே பணி: Bangalore and Chennai

இண்டர்வியூ எங்கே:

Times Of India Building,
MG Road, 3rd floor,SB Towers.,Bangalore-01
Contact Person : Siddu
Phone:080-41366072

தேதி: 16th Dec 2006 on Saturday.
நேரம்: 9:00 AM till 2:00 PM

வாழ்த்துக்கள் !!!!!

KNOWX இந்தியா - இளம்பொறியாளர்கள்

Knowx இளம் பொறியாளர்களை ட்ரெய்னீக்களாக பணிக்கு எடுக்கவிருக்கிறது.

பணியிடம் : பெங்களூரு

கல்வித்தகுதி : BE / BTECH / MTECH / MSC

எங்கே அனுப்புவது : hrm@knowxindia.com OR Call Sanjay - 9945696526

முகவரி:

No 56/56, 2nd floor, pushpagiri complex, opp water tank, vijayanagar bus stand, vijayanagar, Bangalore.

யூ.ஆர்.எல்: www.knowxindia.com

Sunday, December 17, 2006

டெஸ்டிங் படிச்சா வேலை கிடைக்குமா? - 1

மூன்று ஆண்டுகளுக்கு முன்னால் விடியக்காலை மூன்று மணிக்கு ஒரு கேரியர் டிஸ்கஷன் நடந்தது..அதில் கலந்துகொண்டது மூன்றே பேர்...விஷுவல் சி.ப்ளஸ் ப்ளஸில் ப்ரோக்ராமராக இருப்பவர் ஒருவர்...தினமும் பதிமூன்றில் இருந்து பதினாறு மணி நேரம் அலுவலகத்தில் ப்ரோக்ராம் எழுதி மண்டை காய்ந்துகொண்டிந்தவர் அவர்...இருக்க கொஞ்ச நஞ்ச முடியும் கொட்டிவிடுமோ என்று பீதியில் குளிரைக்கூட பொருட்படுத்தாமல் அமர்ந்திருந்தார்..

சென்னைக்கு வேலை தேடுமுகத்தான் வந்த மற்றொருவர்..அப்போதுதான் பிரபலமாகியிருந்த .நெட் படிக்கலாமா, அல்லது கால்காணி நிலத்தை விற்று மெயின்ப்ரேம் படிக்கலாமா ? டெலெகாம் கோர்ஸ் மற்றும் வேலை, ஐம்பதாயிரம் கட்டுங்கள், ஆறுமாதத்தில் வேலையை நிரந்தரமாக்குவோம் என்று ஆங்கில நாளிதழ்களில் வெளிவரும் கவர்ச்சி விளம்பரங்களை நம்பலாமா ? எளிதாக வேலை கிடைக்க வேறு ஏதாவது ஒருவழியாவது இருக்கிறதா ? என்று நொந்துகொண்டிருந்த மற்றவர்..

குட்டிக்குட்டி நிறுவனங்கள் இரண்டு மூன்றில் வேலை செய்து குறைந்த சம்பளம் பெற்றுக்கொண்டிருந்த மற்ற நன்பர்..இந்த குறைந்த சம்பளத்தில் கூட நாலு நன்பர்கள், வேலை தேடி அறையில் அமர்ந்து சீட்டுக்கட்டாடிக்கொண்டிருந்ததை கூட பொருட்படுத்தாமல், எப்படியாவது ஒரு நல்ல வேலையில் அமர்ந்துவிடுவது என்று கண்களில் எதிர்பார்ப்பு மின்ன, வழியை கண்டறியும் வேட்கையில்..

அப்போது பிரபலமாகிக்கொண்டிந்த வின் ரன்னர் (WinRunner) பற்றி நன்பர் எடுத்துரைக்க, மற்ற நன்பரோ, டாட் நெட் படிக்கலாம், அதில் தான் இனி எதிர்காலம் என்று உறுதியாக கூறினார்...ஆனால் வின் ரன்னர் மிக எளிமையானது என்றும் ஒரு வாரத்தில் படித்து முடித்துவிடலாம் என்றும், பிறகு பெரிய நிறுவனங்களில் இருந்து அழைப்பு வரும் என்று மற்ற இருவரையும் கன்வின்ஸ் செய்தார்....ப்ரோகிராமிங்கில் மண்டை காய்ந்துகொண்டிருந்த நன்பரும், வின் ரன்னர் படித்து டெஸ்டிங் துறைக்கு மாறிக்கொள்ள இசைய, மூவர் கூட்டணி உதயமானது...

முடிவெடுத்தாகிவிட்டது...வின் ரன்னர் மென்பொருளுக்கு எங்கே போவது ? யாரை அனுகுவது ? இந்த துறை முன்னேறும், கண்டிப்பாக வேலை கிடைக்கும் என்பது என்ன நிச்சயம் ? சில முடிவுகளோடும், சில கேள்விகளோடும் கலைந்தது கூட்டம்...அடுத்தது என்ன நடந்தது என்பதை அடுத்த பகுதியில் பார்க்கலாம்...

Thursday, December 14, 2006

டெஸ்டிங் படிச்சா வேலை கிடைக்குமா?

ஐடி துறையில் இல்லாதவர்கள், வேறு துறையில் பணி புரிபவர்கள், கேம்பஸ் இண்டர்வியூவில் பணி வாய்ப்பு கிடைக்காமல் தவறியவர்கள் அனைவரும் விரும்பும் துறை டெஸ்டிங். படித்தால் இரண்டு மாதத்தில் உடனடி பணிவாய்ப்பு நிச்சயம்...

சில ஆண்டுகளுக்கு முன் டெஸ்டிங் என்றாலே கேவலமான துறை, மென்பொருள் துறையில் கிடைப்பதுபோல் சம்பளம் கிடைக்காது, எதிர்காலம் அற்ற துறை என்றெல்லாம் பேசப்பட்ட டெஸ்டிங் துறை இன்று பூதாகரமாக வளர்ந்து, டெஸ்டிங் துறை இல்லாத கணிப்பொறி நிறுவனமே இல்லை என்ற நிலையையும், மற்ற மென்பொருளாளர்களை விட நிறுவனங்களில் டெஸ்டிங் படித்தவர்களை அதிகம் கொண்டுள்ள நிலையையும் கொண்டுள்ளது...

பெங்களூரு மோட்டரோலா நிறுவனத்தில் பணியாற்றும் மொத்த பணியாளர்களின் எண்ணிக்கை மூவாயிரம். அதில் 2500 பணியாளர்கள் டெஸ்டிங் செய்துகொண்டிருக்கிறார்கள்...சம்பளத்துக்கும் எந்த ஏற்றத்தாழ்வும் இல்லை...

பெங்களூர் நோக்கியா நிறுவனத்தின் அனைத்து பணியாளர்களும் டெஸ்டிங் துறையில்...இந்த துறை பூதாகரமாக வளர்ந்தது எப்படி, இதன் மேல்வளர்ச்சி எப்படி இருக்கும், எதிர்காலத்தில் இந்த துறை எந்த உயரங்களை தொடும், இதன் டெக்னிக்கல் விஷயங்கள் என்ன என்பதை சிறு தொடராக (குறுந்தொடர் என்று கொள்ளலாமே) எழுதவிருக்கிறேன்...அன்புடன் ஆதரவளிப்பீர்கள் என்று நம்புகிறேன்..

Tuesday, December 12, 2006

இளம்பொறியாளர்கள் (Tata/Calsoft/Cisco)

TATA Elxsi off-Campus Recruitment 2007 for BE/B.Tech/M.E/MTech/MSc ( சிறந்த டெலகாம் கம்பெனி, கொஞ்சம் மிட் லெவல் கம்பெனி என்று கூட வைக்கலாம்..குறைந்தபட்சம் ஒரு வருடம் இங்கே வேலை செய்தால் அனைத்து டெலகாம் டெக்னாலஜியும் அத்துபடியாகிவிடும். பிறகு நோக்கியா / மோட்டரோலா / எல்ஜி / ஸாம்ஸங் போன்ற நிறுவனங்கள் ரத்தினக்கம்பளம் விரித்து அழைப்பார்கள்..சம்பளம் - சற்று குறைவே..)

Inviting all 2007 Engineering graduates to apply for a Challenging and Exciting Career at Tata Elxsi. ( 2007 ஆம் ஆண்டு முடிப்பவர்கள் மட்டும்)

தகுதி:

BE/ B.Tech / M.E / MTech / MSc Freshers passing out in 2007. .

எந்த துறையினருக்கானது:

Computer Science, Electronics, Electronics & Communication, Electrical & Electronics, INstrumentation, Applied Electronics, DSP, VLSI.

கவனிக்க: Diploma in Electronics & Communication,M.Sc with Physics or Mathematics are also eligible.

ஆன்லைனில் அப்ளை செய்ய இங்கு தொடவும்.

http://www.tataelxsi.com/htmls/freshers.htm

*****************************************************************************

Cisco Systems ( சிஸ்கோ சிஸ்டம்ஸ்)

Cisco Systems Hiring 2006 Passout Fresh Grads ( 2006 ஆம் ஆண்டு முடித்தவர்களை அழைக்கிறது )


Cisco Systems India is hiring Fresh Grads for Global Development Center, Bangalore. The Hiring Event for the same would be on Sunday, 16th Nov 2006.

தகுதி: 2006 passout graduates only
தேவை: Minimum 60% aggregate
யாருக்கானது :Bachelors/Masters in Engineering, from CS,EEE,ECE,IT,IS streams

தேர்வு எந்த வகை:

All shortlisted candidate will be sent a confirmation mail alongwith the Register Number, Venue and timing for the Written test and Interviews thereafter, in case shortlisted in the test.

எங்கே பணி: Bangalore

தொடர்புக்கு: Ms.Amita Ashok

எங்கே அனுப்பவேண்டும்:
Please send your latest resume to apply-here@cisco.com

முக்கிய குறிப்புகள்:

* Please note that the subject line of your mail must be in the following format - ‘Ref Code-161206-Your Degree,Stream in Engineering-Year of passing-%’.

* Mails which do not have this format might not reach us , and hence may not be looked at.

* Last Date to Apply: On or before 13th Dec 2006 , 3.00 PM ( கடைசி தேதியை பாருங்கள்)

ஒரு விஷயம்:

Candidates who have passed out in the year 2005 or before will NOT be considered for this event.

******************************************************************************

California Softwares ( கலிபோர்னியா சாப்ட்வேர்ஸ்)

FRESHERS @ CALIFORNIA SOFTWARE - Calsoft recruiting Freshers as Trainees ( ட்ரெய்னீயாக தேர்ந்தெடுத்துக்கொள்கிறது)

தகுதி:

Engineers from 2006 Batch, Major Subjects CSE, IT,ECE, EEE, EIE.

Branches: CSE, IT,ECE, EEE, EIE.

தேவையான தகுதி : Eligibility: 70% in BE and ME, 75 % in X and XII standard.

எப்படி அப்ளை செய்வது - இங்கே தொடவும்: Click here to apply online


வாழ்த்துக்கள் !!!!

Sunday, December 10, 2006

XANSA - ஐடி-சென்னை-நோய்டா-பல்வகைபணிகள்

XANSA தகவல் தொழில்நுட்பத்துறையில் சிறந்து விளங்கும் நிறுவனம்...மானேஜர் / ஜாவா / டெஸ்டிங் / .நெட் போன்ற பல துறையில் பணிபுரிபவர்களை தன் குழுமத்திற்க்கு வரவேற்க்கிறது. தகவல் தொழில்நுட்பத்துறையில் அதிக சம்பளம் வழங்குவதில் பல நிறுவனங்களுக்கு முன்னோடி என்று சொன்னால் அது மிகையான ஒன்றாக இருக்காது...

விவரம் அறிய இங்கே தொடுங்கள்...வேலை வாய்ப்பு விவரம் பெறுங்கள்...கவனிக்க...பணிக்கு அப்ளை செய்யுமுன் career summary sheet ஐ டவுன்லோடு செய்து அதில் சிவியை இட்டு அனுப்பவேண்டும்...

வாழ்த்துக்கள் !!!

இளம்பொறியாளர்கள் - ATRENTA - NOIDA

இளம்பொறியாளர்கள் @ ATRENTA - NOIDA

Company Profile:

Atrenta (India) Pvt. Ltd. is a 100 % owned subsidiary of Atrenta Inc. USA. Atrenta India was formed in May 2001 and operates from its development center in Noida & Bangalore. It is led by an experienced and technically skilled management team and currently employs more than 215 professionals from premier technical institutes in India.

அனுபவம்: 0 - 3 years

கல்வித்தகுதி:

B.E./ B. Tech / M. Tech. In Computer Science / Electrical Electronics Engineering from reputed Universities / IITs / BITS

அனுபவம் - விரிவாக:

The candidate should have 0 to 3 years experience in developing state of the art GUI for popular tools preferably in the EDA industry.

தேவையான தொழில்நுட்பதகுதிகள்:

Excellent software development, programming skills. Excellent algorithm analysis skills and a excellent knowledge of data structure Must be able to demonstrate good communication skills, strong problem solving skills and attention to details. Hardware Platforms: Linux/ SUN Solaris/Window OS Software Skills: C, C++, Trolltech QT, Perl / Tcl / Tk, Verilog/VHDL Experience in GUI Development & EDA Domain would be preferred, but not a MUST requirement. Prior experience in Schematic editor, timing waveform viewer/editor, floorplan viewers or system designs would be an added advantage. Must be self-starter and motivated.

எங்கே பணி: Noida

எப்படி அனுகுவது: Send in your Resumes to career@noida.atrenta.com

Monday, December 04, 2006

H1B விசாவில் US - ஜாவா / மைக்ரோசாப்ட்

அன்பு வலைப்பதிவு நன்பர்களுக்கு...

H1B விசா வழங்கும் ஒரு நிறுவனம் தொடர்பில் உள்ளது. அவர்களுக்கு சுமார் 30 பொறியாளர்கள் கீழ்க்கண்ட வகையில் தேவை...

1. ஜாவா - வெப்ஸ்பியர்
2. மைக்ரோசாப்ட் டெக்னாலஜீஸ் ( .Net / C # , VC++, SQL)

குறைந்தபட்ச அனுபவம் இரண்டு ஆண்டுகள்...(இது ஜெனியூன் எக்ஸ்பீரியன்ஸாக இருக்க வேண்டும்...வெரிபிகேஷன் இருக்கும்)

நீங்கள் நன்பருக்கோ / உறவினருக்கோ இந்த அருமையான வாய்ப்பு பற்றி கூறி அவர்களுக்கு உதவலாம்...

இது ஒரு சிறந்த வாய்ப்பு என்று நான் சொல்லித்தான் நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டும் என்று இல்லை...

ப்ரொபைல்களை ravi.antone@gmail.com என்ற முகவரிக்கு H1B-TAMIZMANAM என்ற சப்ஜக்ட் லைனோடு விரைவில் அனுப்புங்க...

பி.கு:
நியாபகம் இருக்கட்டும் ஜெனியூன் எக்ஸ்ப்பீரியன்ஸ் ஆக இருக்கவேண்டும்...வெரிபிக்கேஷன் கொடுக்காத கம்பெனி ரெஸ்யூமில் இருந்தால் அதை நீக்கிவிடுங்க...குறைந்தபட்ச எக்ஸ்ப்பீரியன்ஸ் இரண்டில் இருந்து மூன்றாண்டுகள் என்னும்போது இது சாத்தியம்தான் இல்லையா....

வளமான வாழ்வுக்கு வாழ்த்தும் அன்பன்,
செந்தழல் ரவி

Sunday, December 03, 2006

எல்.ஜி நிறுவனத்தில் இளம்பொறியாளர்கள்

அன்புடை நெஞ்சங்களுக்கு...

கடந்த ஆண்டு எல்.ஜி பெங்களூரில் நடத்திய இளம்பொறியாளர் தேர்வில் சுமார் 300 பேர் கலந்துகொண்டார்கள்...அதில் 40 பேர் தேர்வு பெற்றார்கள்...நல்ல சம்பளமும் (3L PA) பெறுகிறார்கள்..கடந்த ஆண்டு போலவே இந்த ஆண்டும் எல்.ஜி இளம்பொறியாளர்களை தேர்ந்தெடுக்க விரும்புகிறது...

கல்வித்தகுதி : BE, MCA, B.Tech, MSc ( IT / CS). - 2005 / 2006 PASSOUT

அனுபவம் : தேவையில்லை

குறைந்தபட்ச மதிப்பெண் : 60 %

* எழுத்துத்தேர்வு பிறகு நேர்முக தேர்வு

அனுப்பவேண்டிய முகவரி tedujobs@gmail.com சப்ஜெக்ட் லைனில் LG-Tamizmanam என்று போட்டு அனுப்பினால் மிகவும் உதவியாக இருக்கும்..

வாழ்த்துக்கள்...!!!!!

சத்யம் நிறுவனத்தில் பிரஷர் ரெக்ரூட்மண்ட்

<<இன்னும் இந்த வாய்ப்பு திறந்த நிலையில் இருப்பதால் மீள்பதிவு>>நீண்ட நாட்களாக எதிர்பார்த்திருந்த சத்யம் இளம் பொறியாளர்கள் தேர்வு வந்தேவிட்டது..க்ளியர் செய்வது மிகவும் எளிது...சென்ற முறை நான் அனுப்பிய பல தேர்வர்கள் சத்யம் நிறுவனத்தில் தேர்வானது மிகவும் மகிழ்ச்சி அளித்தது...உதவி செய்த அனுபமாவிற்க்கு நன்றி தெரிவிக்கும் வேளையில் இந்த முறையும் நிறையபேர் தேர்வாகிவிடுவார்கள் என்று தோன்றுகிறது...

இந்த இடத்தில் உள்ள எக்ஸல் ஷீட்டை தரவிறக்கம் செய்து அதில் சில தகவல்களை நிரப்பி உங்கள் ரெஸ்யூமுடன் அனுப்பவேண்டும்..

பைலின் லிங்க் : http://www.evilshare.com/43dbe848-cb65-1029-b2ec-00a0c993e9d6

அதில் உங்களை சத்யம் நிறுவனத்தில் ரெபர் செய்பவரின் இமெயில் முகவரி கேட்கப்படும்..அதில் நன்பர் திவாகர் (Dhivakar_Mayakrishnan@satyam.com) இ-மெயில் முகவரியை கொடுத்திருங்க. ஆனால் அவருக்கு அனுப்ப வேண்டாம்...

ரெஸ்யூம் மற்றும் எக்ஸல் ஷீட்டை இந்த மின்னஞ்சலுக்கு ravi.antone@gmail.com என்ற முகவரிக்கு SATYAM - TAMILMANAM என்ற சப்ஜெக்ட் லைனோடு அனுப்புங்க...

முழு தகவல் - இமேஜ் வடிவில்...



இந்த இடத்தில் உள்ள எக்ஸல் ஷீட்டை தரவிறக்கம் செய்து அதில் சில தகவல்களை நிரப்பி அனுப்பவேண்டும்..இது முக்கியமான விஷயம்...

http://www.evilshare.com/43dbe848-cb65-1029-b2ec-00a0c993e9d6

வாழ்த்துக்கள்...