
அம்மா, அப்பாவுக்குக் கூட பயப்பட மாட்டோம், 'இண்டர்வியூ'ங்குற ஒரு வார்த்தையை கேட்டவுடனே அடி வயித்துல 'லகலகலக'தான்.
இண்டர்வியூல போய் உட்கார்ந்த உடனே நாக்குல தண்ணி எல்லாம் வத்திப்போயி, 'பே..பே..'ன்னு ஊமை மாதிரி நாம பேச, இண்டர்வியூ எடுக்கறவர் நமக்கு பெப்பே காட்டிட்டு வேற ஆளை செலக்ட் பண்ணிடுவார்.
இத்தனைக்கும் நமக்கு எல்லாம் தெரிஞ்சிருக்கும். நம்மளை விட 'சரக்கு' கம்மியா, பர்ஸண்டேஜ் கம்மியா, கம்யூனிக்கேஷன் ஸ்கில் கம்மியா இருக்குற ஒருத்தர் அந்த வேலையை கொத்திட்டு போயிடுவார். அப்ப நாம என்ன தப்பு பண்ணினோம்..? 'தவறான பாதையில் வேகமாக ஓடி என்ன பயன்..?' அப்படின்னு ஒரு பழமொழி இருக்கு... அதேதான்.
ஏன் நமக்கு மட்டும் இண்டர்வியூ ஊத்திக்கிது..?
நெட்வொர் புக்கை பிரிச்சு மேஞ்சிருப்போம், நெட்வொர்க்கிங் பேப்பர்ல 90% தூக்கியிருப்போம். ஆனா இண்டர்வியூவுல "வாட் ஈஸ் த செவன் லேயர்ஸ்" னு கேட்டாங்கன்னா, நாக்கு மேல் அண்ணத்துல ஒட்டிக்கும். அரை மணி நேரம் பேருக்கு கேள்விகளை கேட்டுட்டு, 'எவ்ளோ அடிச்சாலும் தாங்குறாண்டா, இவன் ரொம்ப நல்லவன்'னு நம்மளை வெளிய அனுச்சுட்டு, வேற யாராவது மொக்கைக்கு ஆஃபரை கொடுத்துருவாங்க. எப்படி இதை சரி செய்யறது..?
1.நேரத்துக்கு போயிடனும். 9 மணிக்கு இண்டர்வியூன்னா 8 மணிக்கே கில்லியா இண்டர்வீயூ ஹால் முன்னாடி இருந்தோம்னா, தேவையில்லாத டென்ஷனை தவிர்க்கலாம்.
2. அழுக்கு ஜீன்ஸ் எல்லாம் ஊர் சுத்த ஓ.கே. இண்டர்வியூவுக்கு நல்ல தூய்மையான ட்ரெஸ் போட்டுட்டு போங்க.
3. தன்னம்பிக்கையோடவும், சிரிச்ச முகத்தோடவும் (பயத்தை வெளிய காட்டக்கூடாதுல்ல...) இண்டர்வியூ பண்றவங்களை எதிர்கொள்ளுங்க. (அதுக்காக 'அடிக்கடி' சிரிச்சுக்க வேணாம்).
4. கேள்வி கேட்டா மட்டும் பதிலை ஆரம்பிங்க. இண்டர்வியூ ரூம்குள்ள போனவுடனே, 'ஐயாம் சங்கீதா அண்டு ஐ ஹாவ் ஒன் ஃபாதர் அண்ட் ஒன் மதர்'னு ஆரம்பிக்க வேணாம்.
5. உங்க எக்ஸாம்பிள்ஸ்/ பதில் கேள்விக்கு ரிலேட்டிவ்வா இருக்கட்டும். அவசியமில்லாத விஷயங்களை அள்ளிவிட வேண்டாம்.
6. உடல் மொழின்னு ஒன்னு இருக்கு. அதாங்க பாடி லாங்வேஜ். நிமிர்ந்த நன்னடை, நேர்கொண்ட பார்வைன்னு நம்ம பழங்காலத்துலயே பாடி லாங்வேஜ் பத்தி 'பாடி' வெச்சிருக்காங்க நம்ம புலவர்கள். ஐ காண்டாக்ட் (Eye Contact) ரொம்ப முக்கியம். இண்டர்வியூ எடுக்கறவங்களை நேரா பார்த்து பேசுங்க. எங்கேயோ வானத்தை பார்த்துக்கிட்டு பதில் சொல்ல வேண்டாம்.
7. நல்லா கம்பர்ட்டபிளா சேர்ல உட்காருங்க. ரொம்ப மரியாதை கொடுக்கறமாதிரி, சேர் நுனியில உக்கார்ந்து, அப்புறம் கீழ விழுந்துட போறீங்க. அதுக்காக வீட்டு ஹால்ல டி.வி. பார்க்குற மாதிரி கால் கால் தூக்கிப் போட்டுகிட்டும் உட்கார வேண்டாம்.நீங்க உட்கார்ந்திருக்க தோரணையிலயே உங்க தன்னம்பிக்கை வெளிப்படனும்.
8. இண்டர்வியூல எப்போதும் பாசிட்டிவ்வா பேசுங்க. 'உங்க க்ளாஸ்ல எத்தனை பேர் பெயில்?'னு கேட்டா, எத்தனை பேர் பாஸ்னு பதில் சொல்லனும். அதுக்காக மறுத்து பேசக்கூடாதுன்னு இல்ல. நீங்க முழுமையா நம்புற ஒரு விஷயத்தை இண்டர்வியூ பண்றவர் தப்புன்னு சொன்னா தயங்காம அதை மறுத்துப் பேசலாம். 'ஆமாம் சாமி' கோஷ்டிகளை விட நல்லா விவாதம் செய்பவர்களையே கம்பெனிகள் விரும்பும்.
9. எந்த கேள்விக்கும் தயங்கி, தயங்கி பதில் சொல்லாதீங்க. தெரியும்னா தெரியும், தெரியாதுன்னா தெரியாது. தலையை ஒன்னு ஆமான்னு ஆட்டுங்க, இல்லைன்னா இல்லைன்னு ஆட்டுங்க. ரெண்டு பக்கமும் ஆட்டி குழப்(ம்)பாதீங்க. இது உங்களோட தன்னம்பிக்கையை சோதிக்கும் முக்கியமான டெஸ்ட்.
10. 'நீங்க ஏதாவது கேட்க விரும்புகிறீர்களா?' என்று கேட்டா, கண்டிப்பா உங்களுக்கு தோன்றியதை கேளுங்க. 'இன்னைக்கு புதன் கிழமைதானே'னு டுபுக்கு கேள்விகளா கேட்காம, உருப்புடியா 'இந்த நிறுவனத்தில் என்னுடைய வேலை என்னவாக இருக்கும்?' அப்படிங்குற மாதிரி கேளுங்க.
11. உங்களை போகச்சொன்னவுடன் 'நன்றி' சொல்லிட்டு, வெளிய வாங்க.
கடைசி ட்ரிக்: இண்டர்வியூ நடக்கும்போது நீங்க கம்பர்ட்டபுளா இல்லைன்னு நினைச்சீங்கன்னா ஒரு க்ளாஸ் தண்ணீர் கேளுங்க. அவங்களும் ஒரு காலத்துல இண்டர்வியூ அட்டர்ண் பண்ணவங்கதான். கண்டிப்பாக உதவுவாங்க. நீங்களும் கொஞ்சம் ஆசுவாசப்படுத்திக்க நேரம் கிடைக்கும். இண்டர்வியூவர் மைண்ட் செட் சரியில்லைன்னா (அவர் ஏதாவது பர்சனலா ஓகேவா இல்லைன்னா...) இந்த சின்ன கேப் அதை சரி பண்ண உதவும். இந்த கார்டும் ஒர்க் அவுட் ஆகலைன்னா, இந்த ஏஸ் கார்டை போட்டுப் பார்க்கலாம்.
வாழ்த்துக்கள்!