தேடுதல் வேட்டை

Thursday, June 03, 2010

சுவீடன் மேற்படிப்பு - 2011, ஜனவரி சேர்க்கைக்கு விண்ணப்பம் - கட்டணமின்றி படிக்க கடைசி வாய்ப்பு


2011 செப்டம்பர் முதல் ஐரோப்பியர் அல்லாத மக்களுக்கு மேற்படிப்பில் கட்டணம் வசூலிக்கப்படப்போவதாக சுவீடன் அறிவித்து விட்டது. ஆகையால், கட்டணமின்றி படிக்க வரும் 2011 ஜனவரி சேர்க்கையே கடைசி வாய்ப்பு. குறைவான படிப்புகள் மட்டுமே இந்த சேர்க்கையில் தொடங்கினாலும், மேற்படிப்பு படிக்க ஆர்வமிருப்பவர்கள் விண்ணப்பிக்கக் கேட்டுக்கொள்கிறேன். முதுகலைப் படிப்பிற்கு(Masters) 4 கல்லூரிகளையும் இளங்கலைப் படிப்பிற்கு(Bachelors) 10 கல்லூரிகள் வரை தேர்வு செய்யலாம்.ஜூன் முதல் வாரம் முதல் சேர்க்கைக்கான விண்ணப்பங்களைப் பெறும் பணி ஆரம்பிக்கப்பட்டுவிட்டது.

நமது அண்ணா பல்கலை கழகம் நடத்தும் மைய சேர்க்கையைப்போல ஸ்டூடரா இணையத்தளம் விண்ணப்பங்களைப் பெற்றுக்கொள்ளும். முதலில் இணையத்தில் பதிந்து விட்டு பின்னர் சான்றிதழ்களின் நகல்களை நோட்டரி கையொப்பம் பெற்று சுவீடனுக்கு அனுப்ப வேண்டும்.

ஸ்டூடரா இணையதளம்https://www.studera.nu/studera/1374.html

இணையதளத்தில் விபரங்களுடன் விண்ணப்பிக்க கடைசி நாள் ஆகஸ்ட் 16 , 2010

சான்றிதழ்களின் நகல்களை அனுப்பக் கடைசி நாள் செப்டம்பர் 1, 2010

முதுகலைப் படிப்பு படிக்க விரும்புவர்கள் இந்த சுட்டியைத் தொடரவும்https://www.studera.nu/studera/1499.html

இளங்கலைப் படிப்பு படிக்க விரும்புவர்கள் இந்த சுட்டியைத் தொடரவும்https://www.studera.nu/studera/1498.html


கிளிப்பிள்ளைக்கு சொல்லிக்கொடுப்பது போல இந்த ஸ்டூடரா தளத்தில் விளக்கி இருக்கிறார்கள். நுனிப்புல் மேயாமல் தெளிவாக வாசித்து, தாங்களாகவே விண்ணப்பிக்க முடியும் என்ற நிலையில், ஆலோசனை மையங்களுக்குச் சென்று நீங்கள் பணம் படைத்தவர் எனக் காட்டிக்கொள்ள வேண்டாம். ஆலோசனை மையங்கள் தபால்காரர்கள் வேலைப் பார்ப்பதைவிட வேறு எதுவும் செய்வதில்லை. சிலப்பலப் படிப்புகள் தொலை தூர படிப்புகளாகவும் படிக்கலாம். உங்களுக்கு வேண்டிய படிப்பை கீழ்க்காணும் சுட்டியில் தேடலாம்https://www.studera.nu/aw/courseGuide.do?lang=en

இந்தியாவில் இருந்து விண்ணப்பிக்கும் பொறியியல், மருத்துவம், அறிவியல் தொழில்நுட்பம், மருந்தகப்படிப்பு பட்டதாரிகள் ஆங்கிலத்தேர்ச்சியை நிறுபிக்கும் எந்த தேர்வுகளும் எழுதத் தேவை இல்லை.https://www.studera.nu/studera/1663.html

வாழ்த்துகள் தோழர் தோழிகளே !! சுவீடிஷ் மொழியுடன் தமிழும் கலந்து ஒலிக்க நிறைய மாணவர்கள் இங்கு வர வேண்டும்.

இது தொடர்பாக முன்பு எழுதியக் கட்டுரைகள்


No comments: