
இணைய அரட்டையில் ஒரு அறியாத முகம்.
ஹல்லோ.
ஹலோ. வணக்கம். சொல்லுங்க. யார் நீங்க ?
நான் நீங்க SAP ல வேலை செய்யறீங்களா ?
என்ன வேண்டும் ?
வேலை தேடிக்கொடுங்க. வெளிநாட்ல வேலை வேண்டும். கண்டிப்பாக வெளிநாடு. ரெஸ்யூம் அனுப்பறேன்.
எவ்வளவு வருட அனுபவம் உங்களுக்கு ?
2.8 வருடம். SAP ல வேலை செய்யறேன். அதே SAP ல வெளிநாட்டுல வேலை வாங்கி கொடுங்க. ரெஸ்யூம் அனுப்பறேன்.
ஹலோ. ஹோல்ட் ஆன். மூன்று வருடத்துக்கு பக்கமாக எக்ஸ்பீரியன்ஸ் உள்ள நீங்க ஏன் உங்களுக்கான வேலையை நீங்களே தேடிக்கொள்ளக்கூடாது ?
முகம் தெரியாத ஒரு ஆளிடம் வந்து, வேலை வாங்கி கொடு என்று வம்படிக்கிறீர்களே ?
எங்கே போனது உங்களது தன்னம்பிக்கை ? சுய தேடல் ?
உங்களுக்கு என்று சொந்தமாக ஒரு வேலை தேடும் தன்னம்பிக்கையை கூட இழந்துவிட்டபிறகு எப்படி உங்களால் சுயமாக வேலையை செய்யமுடியும் ?