சென்னை : இந்திய அரசுத் துறை வங்கிகளில் மிகப் பெரிய வங்கியான பாரத ஸ்டேட் வங்கி இந்த நிதி ஆண்டில் மட்டும் 13000 பேருக்கு புதிய வேலை வாய்ப்புகளை வழங்க உள்ளது. இதுதவிர மேலும் 17,000 பணியாளர்களை மற்ற பொதுத்துறை வங்கிகள் நியமிக்க உள்ளன.
நாடு முழுவதும் உள்ள இதன் கிளைகளுக்கு பல்வேறு பணியிடங்கள் காலியாக உள்ளதால், இந்த பணியாளர்களைத் தேர்வு செய்வதற்கான வேலைகளில் தீவிரமாக இறங்கியுள்ளது இந்த வங்கி.
கடந்த நிதியாண்டு நாடு முழுவதும் உள்ள அனைத்து பொதுத்துறை வங்கிகளுக்கும் சேர்த்து 33000 பணியாளர்கள் வேலைக்கு அமர்த்தப்பட்டனர்.
இந்த ஆண்டும் கிட்டத்தட்ட அதே அளவிலான பணியாளர்கள் நியமிக்கப்பட உள்ளனர்.
முதல் கட்டமாக ஆபீசர்கள், மார்க்கெட்டிங் மற்றும் ரெக்கவரி (ரூரல்), மற்றும் டெக்னிக்கல் (பண்ணை துறை) பிரிவுகளில் புதிய ஆட்களை வேலைக்கு எடுக்கப் போவதாக இன்ஸ்டியூட் ஆஃப் பேங்கிங் பெர்சனல் செலக்ஷன் இயக்குநர் பாலச்சந்திரன் அறிவித்துள்ளார்..
நன்றி >> http://thatstamil.oneindia.in/news/2009/06/10/business-banking-sector-recruits-30000-employees.html
No comments:
Post a Comment