அபுதாபியில் இருக்கும் Zayed குழுமம் வருங்கால எரிசக்திப்போட்டி என்ற போட்டியை நடத்துகிறது. அதில் வெற்றிபெறும் தனிநபர் அல்லது குழு அல்லது நிறுவனத்துக்கு 1.5 மில்லியன் அமெரிக்க டாலர்கள் பரிசாக வழங்குவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த பதிவை எழுதும் நேரம் போட்டியில் கலந்துகொள்ளும் தேதி நிறைவடைந்துவிட்டாலும், இந்த போட்டி ஒவ்வொரு ஆண்டும் நடைபெறுவதால், அடுத்த ஆண்டுக்கான வெற்றியாளர் ஏன் ஒரு தமிழனாக இருக்கக்கூடாது என்ற ஆவலில் இங்கே பதிவு செய்கிறேன்.
இணைய தளம் http://www.zayedfutureenergyprize.com/
வருங்காலத்தில் எரிபொருள் அல்லது எரிசக்தி அல்லது எனர்ஜி உலக இயக்கத்தில் முக்கிய பங்கை வகிக்கப்போகிறது.
மாறிவரும் இயற்கை சூழல், பருவ மாற்றம், இந்த பூமியை வாழ தகுதியற்றதாக ஆக்கும் சூழல் வெகு தொலைவில் இல்லை. அதனால், சக்தியை முறையாக பயன்படுத்துவது, சுற்றுச்சூழலுக்கு பாதிப்பில்லாத புதிய எரிபொருட்கள், எரிசக்திகள், இயக்குமுறைகளை கண்டறிவது போன்றவை மிஷன் க்ரிட்டிக்கல் ஆகும்.
ஆஸ்திரேலியாவில் சூரிய சக்தியால் இயங்கும் வாகனங்களின் 3000 கிலோமீட்டர் நீள ஓட்டப்பந்தயம் நடக்கிறது. சீனாவில் உள்ள ஒரு நிறுவனம், 250 கிலோமீட்டர் நிற்காமல் ஓடும் பேட்டரி காரை உருவாக்கியுள்ளது. வீட்டின் மேல் சூரிய ஒளியை கிரகிக்கும் கருவிகளை பொருத்துவதன் மூலம் முழு வீட்டுக்கும் தேவையான மின்சாரத்தை பெறலாம் என்று கண்டறிகிறார்கள். நீங்கள் கண்டறியும் முறை, தேவையான சக்தியையும் தரவேண்டும், அதே சமயம், எக்காலத்துக்கும் பயன்படும் முறையாகவும், எக்காலத்திலும் கிடைக்கக்கூடிய மூலப்பொருளைக்கொண்டும் இருக்கவேண்டும். எதையும் சார்ந்து இருக்கக்கூடாது.
உலகில் எண்ணை வளம் அனைத்தும் எப்படியும் ஒருநாள் தீர்ந்துபோகும். காற்றாலையோ, சூரிய சக்தி மின்சாரமோ, காற்றையும் சூரியனையும் நம்பியுள்ளது. அப்படி சார்ந்திராமல், தானாக இயங்கும் ஒரு இயந்திரம், அல்லது புதிய வகை எரிபொருள் ஏன் கண்டறியப்படக்கூடாது ? ஹைட்ரஜன் எரிபொருள் கொண்டு இயங்கும் ஹைப்ரிட் கார்கள் வந்துவிட்டன, ஆனால் அவற்றின் தயாரிப்பு செலவும் இயக்கும் செலவும் மிக அதிகம். ஆக நீங்கள் எப்படிப்பட்ட ஒரு தீர்வை தரவேண்டும் என்பதை யோசியுங்கள்.
மூலிகை பெட்ரோல் என்ற உடான்ஸ் ராமர்பிள்ளை தீர்வாக இல்லாமல், எங்கேயும் எப்போதும் நிரூபிக்கக்கூடிய வகையில், அறிவியல் தீர்வாக, குறைந்த செலவில் இயக்கக்கூடிய வகையில் சிறந்த மற்றும் எளிய தீர்வாக இருக்கவேண்டும். மின்சாரம் தடைப்பட்ட காலத்தில் ஈழத்தில் சைக்கிளை சுற்றி அதில் இருந்து வரும் மின்சாரத்தை பயன்படுத்தி பல்பை எரியவிடுவார்களாம், ரேடியோ கேட்பார்களாம்.
ஆக, இந்த பரிசுத்தொகையை ஒரு மோட்டிவேஷனாக எடுத்துக்கொண்டு ஒரு சிறந்த தீர்வை தர மாணவர்கள் முன்வரவேண்டும். ரினியூவபுள் எனர்ஜியை கல்லூரி இறுதி ஆண்டு ப்ராஜக்ட் ஆக எடுக்கவேண்டும். முன்வருவார்களா வருங்கால வெற்றியாளர்கள் ?
3 comments:
அட..நல்ல விஷயம் தான்..
நல்ல விசயம்.
நன்றி வினோத் , மகேஷ்
Post a Comment