தேடுஜாப்ஸ் தள வாசகர்களுக்கு வணக்கம் மற்றும் இங்கு எழுத வாய்ப்பளித்த செந்தழல் ரவிக்கு நன்றி.
ரவி நான் எனது வலைப்பூவில் (http://bostonsriram.blogspot.com) கிறுக்கியிருந்த சிலவற்றைப் பார்த்து ஏமாந்து எனக்கு ஒரு Invite அனுப்பியிருந்தார், நாமளும் ரவுடியாக இது ஒரு நல்ல வாய்ப்புன்னு உடனே ஜீப்பில் ஏறிவிட்டேன், இனிமேல் இந்த தளத்தில் என்னுடைய எழுத்துக்களையும் நீங்க படிச்சுத்தான் ஆகணும், அது உங்க தலையெழுத்து, ஹி ஹி...
முதல்ல ஒரு சுய அறிமுகம்.உங்களில் சில பலருக்கு என்னைப் பற்றி தெரிந்து / தெரியாமல் இருக்கலாம் (சிலருக்கு தெரிந்தும் பலருக்கு தெரியாமலும்).
நான் கடந்த 16.5 வருடங்களாக Sales / Marketing துறையில் பணி புரிந்து வருகிறேன்.இதுவரை சென்னை, புதுதில்லி மற்றும் பாஸ்டனில் வேலை பார்த்துள்ளேன். தற்போது பெரும்பாலான நேரம் தமிழ்மணத்தில் மேயவது மற்றும் கொஞ்சூண்டு ஆணி புடுங்குவது பாஸ்டனில் ஒரு IT Consulting Company இல் Head - Marketing ஆக.
இந்த தளத்தில் இதுவரை வேலை வாய்ப்பு செய்திகள் மட்டுமே வந்துள்ளது. நான் இங்கு Spoken English, Interview Tips, Resume Making,Personality Development, US Work Visa பற்றியெல்லாம் எழுத எண்ணியுள்ளேன். முதல்ல ஒண்ணு ரெண்டு பதிவுகள் போட்டு விட்டு உங்களின்
கருத்து / ஆலோசனை / கேள்விகளின் படி தொடரலாம் என்றிருக்கிறேன்.
இந்த இடுகையில் Interview வில் கேட்கப்படும் 5 Tricky கேள்விகள் பற்றியும் எப்படி பதில் சொல்வது என்பது பற்றியும் பார்க்கலாம்.
உங்களது துறை சார்ந்த கேள்விகளுக்கு (Technical Question) பதில் சொல்வது எப்படின்னு உங்களுக்கு தெரியும். ஆனால் சில Open Ended/Explorative கேள்விகளுக்கு எவ்வாறு பதில் சொல்வது என்பதில் பலருக்கு குழப்பம் இருக்கு, அது மாதிரி ஒரு அஞ்சு கேள்விகள் இங்கே : (பெரும்பாலும் இண்டர்வியூக்கள்
ஆங்கிலத்திலேயே நடத்தப் படுகின்றன, எனவே ஆங்கிலம் அதிகம் இருக்கும் கோச்சிக்காதீங்க)
1. Tell me about Yourself :
பல இண்டர்வியூக்களில் இதுதான் முதல் கேள்வி (இது கேள்வியா??) This is not a question but an Open ended statement (Open ended, closed ended பத்தி மேலதிக தகவல்கள் வேணும்னா சொல்லுங்க, வேறொரு சந்தர்ப்பத்தில் சொல்கிறேன்).
இது உங்களின் English Speaking Ability, Communication skills பத்தி தெரிந்து கொள்ளக் கேட்கப்படுவது.(இவை ரெண்டும் ஒன்றல்ல,பல பேர் நெனைக்கிறா மாதிரி)
இதுக்கு ரொம்ப சின்னதாவும் இல்லாம ரொம்ப பெரிசாவும் இல்லாம பதில் சொல்லணும்.
Myself Sriram, Born in Chennai,studied at Ramakrishna school, graduated from Gurunanak college in Velachery, chennai with Major in Maths, having one mother, one father, one wife, one brother, one sister ன்னு சொன்னீங்கன்னா கேட்பவருக்கு கொட்டாவி வருவதும் வேலை கிடைக்காது என்பதும் நிச்சயம்.
This allows candidates a choice of what they think is important to impart about themselves. When you hear this statement, hear "Tell me about your professional self". Give only information that will help the interviewer decide to hire you.
கொஞ்சம் பர்சனல் விஷயங்களும் நிறைய எக்ஸ்பீரியன்ஸ் பத்தியும் சொல்லணும். உங்க பேரிலிருந்து ஆரம்பிக்காதீர்கள், கேட்பவருக்கு உங்கள் பேர் கண்டிப்பா தெரிஞ்சிருக்கும். I have a bachelors degree in Mathematics and a MBA from a premier institute, I have 16+ yrs of experiene in Sales and Marketing, I have been in office automation sales all along my career which is very vital for your organization, I am an Highly organized invidual who keep the orgainization's goals ahead of my personal goals which will result in higher productivity for a prospective employer like you ன்னு ஒவ்வொரு பாயிண்டையும் கம்பெனிக்கு பாஸ்டிவாக மாத்தி சொல்லுங்கள். வேலையில் நீங்கள் சாதித்தவற்றைப் பற்றி மறக்காமல் குறிப்பிடுங்கள் (accomplishments at work).
நீங்கள் ஏதாவது certification வைத்திருந்தால் (OCP, Sun certified java professional etc) அது பற்றியும் குறிப்பிடுங்கள்.
2. Why do you want to work for us:
உங்களின் சமயோசித புத்தியை சோதிப்பதற்கும், உங்கள் திறமைகளை எப்படி அந்த வேலைக்கு ரிலேட் செய்கிறீர்கள் என்பதை பாக்கவும் கேட்கப்படும் கேள்வி இது.
I need a job and you need a Java Developer, so I want to work for you ன்னு சொல்லாதீங்க அது எல்லாருக்கும் தெரியும்.
வேலைக்கு முயற்சி செய்யும் கம்பெனியை பத்தி தெரியாம கதை விடாதீங்க, இந்த கம்பேனியில் பிடுங்குற ஆணிகள்தான் உலகிலேயே சிறந்த ஆணிகள்ன்னு
பொய் சொல்லாதீங்க.
Talk about your top three or four skills (எனக்கு அத்தனையெல்லாம் கெடயாது, சும்மா அடிச்சு விடுவேன்)match them to the tasks of the job.Tell them something that you know about their company that makes you really want to work for them. Show how your goals and objectives are compatible with theirs.
அந்த கம்பேனியில் உங்களுக்கு பலரைத் தெரிந்திருந்தால், 1-2 பேரை மட்டும் சொல்லுங்கள், அனைத்து பேரையும் சொல்லாதீர்கள், முக்கியமாக மிக உயர்ந்த பதவியில் இருப்பவரின் பெயரை சொல்லாதீர்கள். குழு சேர்ப்பது, ரெகமண்டேஷன் HR டிபார்ட்மெண்டுக்கு பிடிக்காது (அவை அவர்கள் மட்டுமே செய்ய வேண்டிய விஷயங்கள், they dont like competition)
3. What are your Strengths and Weaknesses:
The trick with this question is to move quickly to something more relevent about your candidacy. Interviewers will not fall for the old trick so many like to use of projecting a strength as a weakness (for ex"I am a perfectionist") Also, dont say things like " I am a Hard worker" they dont need donkeys. They need people who would use more Brains than Calories.
உங்களின் உண்மையான மூன்று Strengths மற்றும் ஒரு வீக்னெஸ் பற்றி சொல்லுங்கள். Talk about a clear action plan to over come that weakness with a deadline you have set for yourself.
I tend to give all possible disounts in a negotiation which I consider as a weakness. I am working on it by reading books on how to negotiate and by attending sessions with trainers who have mastered the art of negotiation. They help me to stay focussed and to correct my problem. I am hopeful of negotiating betterabout 90 days.
இந்த மாதிரி சொல்லுவது கண்டிப்பா நல்ல பலனைத் தரும்.
4. What salary figure do you have in mind?
Any question about how much money you want to make should only be asked if you are a serious candidate for the job. Try to postpone this question until all other questions are asked. Ask the interviewer if he/she is convinced about your candidacy and if salary is the only thing standing between you and the offer. If pressed for a quick reply, quote a range rather than a single figure.
நீங்க எவ்வளவு கொடுத்தாலும் ஒத்துக்கறேன்னு சொல்லக் கூடாது, நாம என்ன ஜெயலலிதாவா - ஒரு ரூபாய்க்கு வேலை செய்ய?
இதுக்கு பதில் சொல்ல நீங்க கொஞ்சம் Ground Work செய்யணும்.உங்கள் நண்பர்களிடமோ அல்லது உங்கள் ரெஸ்யூமேவை கம்பெனிக்கு அனுப்பிய HR agency யிடமோ அந்த கம்பெனியின் Salary Structure பற்றி கேட்டுத் தெரிந்து கொள்ளுங்கள். அதுக்கு ஏத்தா மாதிரி ஒரு ரேஞ்ச் சொல்லுங்கள்.
அவர்கள் Negotiate செய்தால் அப்போது Negative Statement ஐ கண்டிப்பாகத் தவிர்க்கவேண்டும். I will not accept a salary which is less than 10Lakhs என்று சொல்லாமல், An offer which is in excess of 10Lakhs per annum will make me accept the same immediately என்று சொல்வது ஒரே அர்த்ததை தந்தாலும் பின்னரை சொல்வது நல்லது.
The Mantra is "Never close the door in any negotiation". Always keep the conversation going and keep presenting your case with your positives until you get what you need.
உங்களின் தற்போதைய சம்பளத்தை அதிகமாக சொல்லாதீர்கள். இப்போதெல்லாம் Payslip / Bank Statment copy கேட்கிறார்கள். இப்போது நீங்கள் ஐந்து லட்சம் வாங்கிக் கொண்டு இருந்தாலும் பத்து லட்சம் கேட்பதில் தடையேதுமில்லை. எனக்கு இப்படி ஒரு முறை நடந்தது. Interviewer என்னைப்
பார்த்துக் கேட்டது “How can you expect 2X when you are currently getting only X?" அதற்கு நான் சொன்னது “My current package should have no bearing on what I should be getting or what I deserve. You are going to pay me for what I would be doing and not for what I did earlier". என் தைரியம் பாராட்டப்பட்டதோடு வேலையும் கொடுக்கப் பட்டது.
5. Why are you looking for Change? அல்லது Why did you leave your job?
வேலையில் இருந்து கொண்டு வேலை தேடினால் :
நீங்கள் எதிர்நோக்கியிருக்கும் வேலை எவ்வாறு உங்களை முன்னேற்றும் என்று விரிவாகச் சொல்லுங்கள். நீங்கள் செய்து கொண்டிருக்கும் வேலையில் எவ்வாறு Saturation Point எட்டி விட்டது என்று விளக்குங்கள். கண்டிப்பாக வேலை செய்யும் கம்பெனி பத்தியோ மேனேஜர் பத்தியோ தவறாக சொல்லதீர்கள். அதிக சம்பளத்துக்காக என்று சொல்லாதீர்கள், அதுவே உண்மையாக இருப்பினும்.
வேலை இழந்திருந்தால் :
In this case, You must take the Bull by the Horn and say that you have been fired. State your case without emotion or blame and show how you will or have corrected the problem.
கண்டிப்பாக வேலை பார்த்த கம்பெனி பத்தியோ மேனேஜர் பத்தியோ தவறாக சொல்லாதீர்கள். நிதி நெருக்கடியால் வெளியேற்றப்பட்டதாகச் சொல்லலாம்....
நான் ஒரு அஞ்சு கேள்விகள் பத்தி சொன்னேன். இப்பொ நீங்க இந்த கேள்விக்கு எப்படி பதில் சொல்வீங்கன்னு சொல்லுங்க.
Do you have any other interviews going on ? அல்லது What other opportunities are you pursuing?
இதுக்கு பதிலை பின்னூட்டத்திலோ அல்லது இன்னொரு இடுகையிலோ சொல்கிறேன்.
என்றும் அன்புடன்
பாஸ்டன் ஸ்ரீராம்
nsriram73@gmail.com
bostonsriram.blogspot.com
14 comments:
இந்த தளத்தில் மாடரேஷன் இருக்கா இல்லயான்னு தெரியல, சும்மா ஒரு டெஸ்ட்
ம்ம்ம் - நல்ல தகவல்கள் - இருப்பினும் நேர்முகத்தேர்வு என்பது சொல்லிக் கொடுத்தபடி சொன்னாலும் வெற்றி பெற இயலாது. இவை எல்லாம் வேலை தேடுபவர்களுக்கு உதவும் குறிப்புகளே தவிர - அவரவர்கள் தங்களைப் பல வழிகலீல் தயார் செய்து கொள்ள வேண்டும்.
Thank you.
Useful information.
கலக்கலான இடுகை !!! நல்ல தகவல்கள் !!!!!
சீனா சார்.
இதனை நல்லதொரு அடிப்படையாக வைத்துக்கொள்ளலாமே ?
என்னைப்பொறுத்தவரை சில பசங்க, டெல் மி அபவுட் யுவர்செல்பை கூட நல்ல ஸ்ட்ரக்சர் செய்து வைக்கமாட்டாங்க. எதாவது உளறிடுவாங்க. நல்ல வாய்ப்பும் பறிபோயிருக்கு...
உங்கள் தன்னடக்கத்துக்கு தலைவணங்குகிறேன் பாஸ்டன் ஸ்ரீராம்.
மார்க்கெட்டிங் பற்றியும் எழுதுங்க..
நன்றி அக்கான்ஷா
this s really nic....
this s nic post
hi.. good start.. keep it up.. i m frm Velachery..
Thanks Sriram. Most people say how to answer but don't give sample answers. Your sample answers are nice and usefull.
And if you don't mind please name some good books that can help on these issues. Thanks
உபயோகமான தகவல்கள் ஸ்ரீராம். உங்களுக்கும் உங்களை எழுத அழைத்த ரவிக்கும் நன்றிகள்
Very much helpful.
Thanx ram.
நன்றி சீனா ஐயா
நன்றி அகான்ஷா
நனறி ரவி, அடக்கமெல்லாம் ஒண்ணுமில்ல, நெஜமாவே சரக்கு கம்மி
நன்றி சக்தி
நன்றி அருள், நான் இருப்பது பாஸ்டனில், சொந்தங்கள் எல்லாம் மடிப்பாக்கத்தில்...
நன்றி செந்தில், நான் அதிகமா புத்தகமெல்லாம் படிக்கறதில்ல, ஆனாலும் எந்த தலைப்புல வேணும்னு சொன்னீஙகன்னா சொல்றேன்
நன்றி ராஜா
நன்றி அனானி ஐயா...
Post a Comment