முந்தைய பதிவுகளை 'நன்று' சொன்ன வெங்கட், ரோஸ்விக், நரேன் ஆகியவர்களுக்கு நன்றி.
இங்கே படத்தில் நீங்கள் பார்ப்பது ஸ்டேக்போர்டுகள். அனைத்து வளர்ந்த நாடுகளிலும் ரொம்பவே பேபஸ்.
இளையோர்களின் விருப்பத்தேர்வாக இந்த ஸ்டேக்போர்ட் ஒவ்வொரு வீட்டிலும் இடம்பெறும்.
நம் நாட்டில் ஏன் இது பரவலாக அறிமுகம் ஆகவில்லை, அல்லது அறிமுகமாகி தோல்வியடைந்தது என்று பார்த்தால், நமது முந்தைய குண்டும் குழியுமான சாலைகள் மட்டுமே காரணம்.
இப்போது சாலைகள் அனைத்தும் சீரடைந்துவிட்டன என்று சொல்லமுடியாவிட்டாலும், அப்பார்ட்மெண்ட் கலாச்சாரம் பரந்துவிரிந்துவிட்டது.
ஒவ்வொரு அப்பார்ட்மெண்ட்டும் கொஞ்சமாவது ப்ளே ஏரியா என்று ஒதுக்குகிறார்கள், அல்லது அப்பார்ட்மெண்ட்டுக்குள் தரமான சிமெண்ட் சாலைகளை போட்டுவிடுகிறார்கள்.
ஆகவே இந்த ப்ராடக்டை அறிமுகப்படுத்தினால் உண்மையில் சூப்பர்ஹிட் ஆகும். இதனை இந்தியாவிலேயே தயாரிப்பதற்கு பதில், முதலில் குறைந்த அளவில் இறக்குமதி செய்து, ஒரு பத்து பதினைந்து கூட போதும், அதனை நேரடியாகவும், ஷாப்பிங் மால்கள் மூலமும் விற்பனை செய்ய முயற்சி செய்யலாம். அது ஹிட் ஆனால் அதன் பிறகு மேலே சிறப்பாக செய்யலாம்.
இதன் முக்கிய அம்சம், இதன் சக்கரங்கள். இவை தரமானதாக இருந்தால் மட்டுமே உழைக்கும். தரம் இல்லையென்றால் கண்டிப்பாக மார்க்கெட்டில் எடுபடாது. ஆகவே இந்தியாவிலேயே தயாரிப்பதாக இருந்தால் இதனை கண்டிப்பாக கவனித்துக்கொள்ளவேண்டும்.
விலை : இங்கே நல்ல தரமான ஸ்டேக்போர்ட் பத்து யூரோ அளவில், அதாவது நம்மூரு காசு ஆயிரம் ரூபாய்க்கு குறைவாக மாஸ் ப்ரொடக்ஷன் செய்து விற்கிறார்கள். ஆகவே, இறக்குமதி செய்தாலும் ஆயிரம் ரூபாய்க்கு கண்டிப்பாக செய்யமுடியும். மேலே ஆயிரம் வைத்துக்கூட முதலில் டார்கெட் செய்யலாம்.
இந்த ஸ்டேக் போர்ட்டு போன்ற சமாச்சாரங்கள் மார்க்கெட்டில் வந்தால் உடனே வாங்கும் 10 சதவீத கஸ்டமர்களை முதலில் டார்கெட் செய்து வெற்றியடைந்தாலே நீங்கள் ராஜா.
மேலும் இந்த ஸ்டேக்போர்டு வகை வகையான டிசைன்களில், பெண்களுக்கு தனி, குழந்தைகளுக்கு தனி, கடுமையாக பயன்படுத்தும் இளையோர்களுக்கு தனி என்று வகை வகையாக வருவதால், மிகப்பெரிய மார்க்கெட் கண்டிப்பாக இருக்கிறது...!!!
இடுகையை முடிக்குமுன் வழக்கம்போல சொல்வதை சொல்லிவிடுகிறேன். தமிழக அரசு சுயதொழில் முனைவோருக்காக தனியாக பெரிய தொகையை ஒதுக்கிவருகிறது. மாவட்டந்தோறும் உள்ள மாவட்ட சுயதொழில் மைய அலுவலகத்தில், தனி அலுவலரும் உண்டு. மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தோடு அமைந்தது இது. அந்த அலுவலரை சந்தியுங்கள். அவர்கள் வைத்திருக்கும் ப்ராஜெக்ட் லிஸ்டை பாருங்கள். மானியத்தோடு கடன் வசதியும் உண்டு. வாழ்த்துக்கள்..!!
இடுகையை முடிக்குமுன் வழக்கம்போல சொல்வதை சொல்லிவிடுகிறேன். தமிழக அரசு சுயதொழில் முனைவோருக்காக தனியாக பெரிய தொகையை ஒதுக்கிவருகிறது. மாவட்டந்தோறும் உள்ள மாவட்ட சுயதொழில் மைய அலுவலகத்தில், தனி அலுவலரும் உண்டு. மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தோடு அமைந்தது இது. அந்த அலுவலரை சந்தியுங்கள். அவர்கள் வைத்திருக்கும் ப்ராஜெக்ட் லிஸ்டை பாருங்கள். மானியத்தோடு கடன் வசதியும் உண்டு. வாழ்த்துக்கள்..!!
இனி வரப்போகும் பகுதிகள் பற்றிய முன்னோட்டம்
ட்ராம்போலின் இறக்குமதி, விற்பனை
பெண்களுக்கான பி.ஜி
ஐடி கம்பெனியில் வேலை செய்பவர்களுக்கான மெஸ்
அதிக முதலீடு தேவைப்படாத ட்ராவல் ஏஜென்ஸி
பொருள், சேவைகள் வாங்க விற்க இணையதளம் Craigshlist Clone
இணைய தள டொமைன் நேம் மற்றும் வடிவமைப்பு தொழில்
அனைத்து பதிப்பக புத்தகங்களுக்கான விற்பனை இணையதளம்
இந்த வரிசையில் முந்தைய பகுதிகளை வாசிக்க கீழே உள்ள சுட்டிகளை பயன்படுத்தலாம்.
15 comments:
http://cgi.ebay.in/Tear-Down-The-Road-With-This-Sleek-N-Cool-Skate-Board_W0QQitemZ300370949862QQcmdZViewItemQQptZLH_DefaultDomain_203?hash=item45ef80f6e6#ht_1760wt_1165
இபே இந்தியாவில் விற்பனை செய்கிறார்கள். அங்கிருந்தும் வாங்கலாம்.
நல்ல தகவல். நன்றிகள் பல.
Dear Ravi,
How to register Top level Domains(TLD)?
Pl.explain it in web design article.
hai,
elan,
your r giving every recruitment suggestions and self employement will be very nice...
thanking you.
நன்றி ரவி.. பயனுள்ள தகவல்கள்..
தங்களுடைய பதிவுகளை எங்கள் ஊர் இளைஞர்களுக்கு தொடர்ந்து படிக்கச்சொல்லி வருகிறேன்..
கணினி உலகில் தற்பொழுது பிரபலமாகி வரும் Crowdsourcing பற்றிய எனது குறிப்புகளை இங்கே காணுமாறு வேண்டுகிறேன்..
http://kaaranam1000.blogspot.com/2009/08/crowdsourcing.html
பல்வேறு சிறுதொழில்களின் தொகுப்பு என்று ஒரு வல்லுனர் தொகுத்துள்ள பெரிய லிஸ்ட் இங்கே
http://crowdsourcingexamples.pbworks.com/
நன்றி மீண்டும்...
http://kaaranam1000.blogspot.com
உண்மையில் வாழ்கைக்கு உபயோகமான பதிவுகள் தல. தொடர்ந்து வருவதற்கு மிக நன்றி. :-)
machan kalakura poo.....
ரவி தகவல்கள் அருமை..ஸ்கேட்போர்டா...ஸ்டேக்போர்டா??/
ப்ளாக் பாண்டி நன்றி...
நரேன் நன்றி...
இளம நன்றி
காரணம் ஆயிரம் நன்றி, உங்களது சுட்டிகள் பயனுள்ளவை. தனியாக எழுதும் அளவுக்கு விஷயம் உள்ளது..
ரோஸ்விக் நன்றி...
வங்கு சுந்தர், நன்றி. விப்ரோ ஓப்பனிங்ஸ் போட்டிருக்கேன். என் பேரை போட்டு ரெஸ்யூம் வந்தாக்கா உள்ள தள்ளிவிடு..
அமுதா கிருஷ்ணன். ஸ்கேட் போர்டுதான்..
எனக்கு ஒரு எழுத்தை மாற்றி போட்டு படிக்கும் வியாதி இருக்கிறது.
அது எழுதும்போதும் வந்துவிட்டது போல.
நிவாரணத்தை நிர்வாணம் என்று சொல்லி வாத்தியாரிடம் அடிவாங்கிய சம்பவமும் உண்டு. அவ்வ்வ்வ்...
Post a Comment