தேடுதல் வேட்டை

Friday, December 04, 2009

என்ன தொழில் செய்யலாம் - பகுதி 5

இந்த பதிவில் ட்ராம்போலின் இறக்குமதி மற்றும் விற்பனை பற்றி பார்க்கலாம்..

ட்ராம்போலின் என்பது வளர்ந்த நாடுகளில் ரொம்பவும் பிரபலமான ஒரு விளையாட்டாகும். நான் பார்த்தவரை, 5 முதல் 15 வயது வரையுள்ள குழந்தைகள் இருக்கும் ஒவ்வொரு வீட்டிலும் இருக்கிறது.

Buy Trampoline என்று கூகிள் இட்டு பாருங்களேன்...100 டாலரில் இருந்து 200 டாலர் வரை நல்ல தரமான பெரிய ட்ராம்போலின்கள் கிடைக்கின்றன..அதாவது இந்திய ரூபாயில் பத்தாயிரத்துக்கும் குறைவாகவே.

இதில் இரண்டு வகை இருக்கிறது....திறந்த வகையில் ஒன்று. கீழே படம்.

trampolines_plum_products_fun_trampoline.jpg (400×299)

அனைத்து பக்கமும் பாதுகாப்பான வலைகளுடனான இரண்டாவது வகை, படம் கீழே..

8_trampoline.jpg (1024×766)

இதில் பெரியதாக ஒன்றும் டெக்னாலஜி கிடையாது. நான்கு புறமும் நிற்கும் அளவிலும், இரண்டடி அல்லது மூன்றடி உயரத்திலும் உள்ள கம்பிகள், மற்றும் நடுவில் இருக்கும் கிழியாத துணி.  அதில் ஏறி குதித்தால் கீழே வந்து உயர்ந்து செல்ல அழுத்தமான ஸ்ப்ரிங்.

மழையில் நனைந்தால் ஊறி கிழிந்து விடாமல் இருக்கும் வகையில் அந்த துணிகள் பாலித்தின் துணிகளாக இருக்கும் என்று நினைக்கிறேன். சுற்றி கட்டும் வலை கொசுவலை போன்று இன்னும் கொஞ்சம் உறுதியாக இருக்கிறது அவ்வளவு தான்.

Wet_trampoline.jpg (2048×1536)

இணையத்தில் பல இடங்களில் கூவி கூவி விற்பதால் முதலில் ஒன்றை வரவழைத்து, அதன் ஸ்பெஸிப்பிகேஷன்களை முழுமையாக தெரிந்துகொண்டு, இந்தியாவிலேயே தயாரிக்கலாம். உதாரணத்துக்கு ஒரு கடையின் இணைய சுட்டி.. முழுமையாக ஸ்பெஸிப்பிக்கேஷனும் இருக்கிறது.

பதிவை ப்ரிண்ட் செய்யும் வகையில் http://www.trampolinesales.com/airmaster_16.shtml

இந்தியாவில் ஆன்லைனில் பொருட்கள் விற்கும் இபே.இன் இணையக்கடையில் ஒரு விற்பனையாளரும் இதனை விற்கவில்லை. அதன் ஆதாரம் சுட்டி. சிபி மால் இணைய கடையில் விற்கிறது. ஆனால் அது மிக மிக சிறிய அளவினது. டெஸ்ட் செய்ய அதனை வாங்கி ஏமாந்துவிடவேண்டாம். முதலில் வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்வதே சரியானது.

முதலில் 5 to 10 நம்பர்கள் இறக்குமதி செய்து அதன் வரவேற்பை பொருத்து களத்தில் இறங்கி பணியாற்றலாம்.

மார்க்கெட் செய்வது எப்படி

ஒரு அப்பார்ட்மெண்டில் இலவசமாக இன்ஸ்டால் செய்து குழந்தைகளை ஒரு வீக் எண்ட் விளையாட விடுங்க. ட்ராம்பொலின்ல உங்களோட மொபைல் எண்ணை போட்டுவிட்டுங்க. அப்புறம் பாருங்க வரவேற்பை.

பிக்பஸார் டோட்டல் ஸ்பென்ஸர் போன்ற கடைகளையும் அணுகி முயற்சி செய்யலாம்.

இனி வரப்போகும் பகுதிகள் பற்றிய முன்னோட்டம்

பெண்களுக்கான பி.ஜி அமைக்கலாமா ?
ஐடி கம்பெனியில் வேலை செய்பவர்களுக்கான மெஸ் - சாத்தியங்கள்
அதிக முதலீடு தேவைப்படாத ட்ராவல் ஏஜென்ஸி - வாய்ப்புகள்
பொருள், சேவைகள் வாங்க விற்க இணையதளம் Craigshlist Clone
இணைய தள டொமைன் நேம் மற்றும் வடிவமைப்பு தொழில்
அனைத்து பதிப்பக புத்தகங்களுக்கான விற்பனை இணையதளம்
உடல்-குறைபாடு உள்ளவர்கள் என்ன தொழில் செய்யலாம் ? சாதகங்கள்.

இந்த வரிசையில் முந்தைய பதிவுகளை காண:

உங்களது வாக்குகளை தமிழ்மணத்திலும் தமிழிஷிலும் போடுங்கப்பா...!!!
.
.

பிற்சேர்க்கை


இந்த பதிவை உரையாடியில் அனுப்பி கருத்து கேட்டபோது மோகனன் ஒரு சொன்ன கருத்து இது.

முதலில் அப்பார்ட்மெண்டுகளில் டெமோ பீஸை காட்டி ஆர்டர் எடுத்துவிட்டு பிறகு வரவழைத்து கொடுக்கலாம்.

எனக்கு மேலும் தோன்றுவது என்னவென்றால், ஆர்டர் எடுக்கும்போது ஒரு சிறிய அட்வான்ஸ் தொகை say 1000 rs வாங்கி வைத்துக்கொண்டு அதன் பிறகு வெளிநாட்டில் இருந்து ஆர்டர் செய்யலாம்.Safe and Secure. My Best Wishes who ever do this business.
.
.

13 comments:

குறை ஒன்றும் இல்லை !!! said...

Thanks for the innovative ideas.. Im sure it might help for some one.. ofcourse for me too !!!!

செந்தழல் ரவி said...

நன்றி குறை ஒன்றும் இல்லை.

செந்தழல் ரவி said...

மோகனன், நீங்க சேட்ல சொன்ன மாதிரி, முதலில் டெமோ காட்ட்விட்டு, ஆர்டர் எடுத்து பிறகு வரவழைத்து கொடுக்கலாம்...

செந்தழல் ரவி said...

இன்னும் சொல்லப்போனால், ஆர்டர் எடுத்து, ஒரு சின்ன அட்வான்ஸை வாங்கி போட்டுக்கொண்டு அதன் பிறகு வரவழைக்கலாம்...

Bharath said...

Awesome proposals.. All of them are viable. This tramboline will be a sure hit among the kids i guess.

செந்தழல் ரவி said...

நன்றி பரத்..

naren said...

Im follow your article.

rain said...

mannikkavum. tamilil type seiya fomet selection theriyavillai.
ungal sevaiyinai nanriyudan varaverkiren. innamum kuda thangal sevaiyil local market -rku thevaiyana sila vanika ennangalai theriya paduththa vendukiren.

செந்தழல் ரவி said...

sure we do it..

rain said...

ravi sir, tamil la pinnuttam matrum idukkaikalai elutha konjam gaid pannungalen..

rain said...

ravi sir, tamil la pinnuttam matrum idukkaikalai elutha konjam gaid pannungalen..

Anonymous said...

ரொம்ப எளிது. இ;கலப்பை என்று எழுதி தேடுங்கள்..

இல்லை என்றால் உங்கள் தொலைபேசி எண்ணை மின்னஞ்சல் அனுப்புங்கள்.

பேசுகிறேன்..

rain said...

«s ÄVì.. ïV¸ ¼Ãüâ xçÅl_ >V[
禩 Ã[ªÐ\V.
åV[ ÿ - ¼\[ Rü Ã[Ðþ¼Å[.
cºïáV_ Öç> ýÂïx½þÅ>V../ungal minanjalalil enathu number anuppiyullen.. pls contact whn u r free.
thank u.