தேடுதல் வேட்டை

Thursday, October 15, 2009

நல்ல மேனேஜரின் நற்குணங்கள் நாலு:

மேனேஜராக ஆவது நம்மில் பலரின் நெடுநாள் கனவு. மேனேஜராக ஆகிவிட்டால் வேலை செய்ய வேண்டாம் என்று பலரைப் போல் நானும் நினைத்தது ஒரு காலம். இந்த மேனேஜர் நாள் முழுவதும் கம்ப்யூட்டரின் முன்னால் ஒக்காந்து வேலை ஏதும் செய்வதில்லை என்று நினைத்திருக்கிறேன். நான் மேனேஜராக ஆன பின்புதான் அது எவ்வளவு கடினமான வேலை என்று புரிந்தது. Middle Management இல் வேலை செயவதைப் போல கஷ்டம் வேறில்லை. மத்தளத்துக்கு ரெண்டு பக்கம் அடி விழுவது போல மேனெஜ்மெண்டிடமும் அடி வாங்கணும், டீமில் வேலை செய்வர்களிடமிருந்தும் இடி வாங்கணும். யாரிடமும் நல்ல பேர் கிடைக்காது.

கொஞ்சம் கொசுவத்தி சுத்தினா,2002 ல் என் முதல் விமானப் பயணம் சென்னையிலிருந்து தில்லிக்க்கு. ஒரு சின்ன Sales Team க்கு மேனேஜராக இருந்தவனை Branch Manager ஆக ஆக்கி தில்லிக்கு பத்தி விட்டாங்க கம்பேனியில். அந்த பயணத்திற்கு நான் என்னுடன் எடுத்துச் சென்ற புத்தகம் அப்துல் கலாம் ஐயாவின் “அக்னி சிறகுகள்”. I got the best managerial tip from that book, “Take the blame for a failure and give away the credit for success" என்பதுதான் அது. ஒரு முறை ஏவுகணை கடலில் விழுந்த போது APJ ஐயா வேலை செய்த நிறுவனத்தின் தலைவர் (தவான் என்று நினைக்கிறேன்) சொன்னாராம், இன்று பத்திரிக்கையாளர்களை நான் எதிர்கொள்கிறேன் - I will take the responsibility for this failure என்று. அதே ப்ராஜக்ட் வெற்றி அடைந்த போது, அதே தலைவர் APJ விடம் சொன்னாராம் - Go and take the press meet, it is your success என்று. அன்றிலிருந்து முடிந்தவரை இதனை கடை பிடித்து வருகிறேன். நான் ஒரு நல்ல மேனேஜரா இல்லயான்னு எனக்குத் தெரியாது, ஆனால் ஒரு Successful Manager என்று சொல்ல முடியும்.

இந்த பதிவில் ஒரு நல்ல மேனேஜருக்கு இருக்க வேண்டிய நாலு குணங்களைப் பற்றி பார்ப்போம்.

1. Set a right example and be a Leader (Not a Manager)

Always remember that anything and everything what you do is being watched and imitated by your team members.

MBA விலோ அல்லது ஏதோ ஒரு Workshop ல ஒக்காந்து நல்ல மேனேஜரா இருப்பது எப்படின்னு கத்துக்க முடியாது. நீங்க நல்ல மேனேஜரா இருக்கணும்னா ஒங்களுக்கு ஒரு நல்ல மேனேஜர் அமையணும். அவர் செய்யுறதை காப்பி அடிச்சு அதில் உங்களது ஸ்டைலை சேர்த்தால் நல்ல மேனேஜராக ஆகலாம். அதேபோல, உஙகள் டீமில் வேலை செய்யும் ஒவ்வொருவரும் உங்களை ரோல் மாடலாக பார்க்கிறார்கள் என்பதை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள்.
நீங்கள் செய்யும் ஒவ்வொரு விஷயமும் கவனிக்க படுகிறது என்பதை நினைவில் வைத்திருங்கள். இந்த விஷயத்தில் நான் கொடுத்து வைத்தவன், எனக்கு
சரியான நேரத்தில் அரவிந்த் என்று ஒரு மிகச்சிறந்த மேனேஜர் அமைந்தார். நான் இன்றைக்கும் Tips தேவைப்படும் போது அணுகுவது அவரைத்தான்.
ஒரு மேனேஜர் எப்படி இருக்கணும்னு அவரிடமிருந்தும் எப்படி இருக்கக் கூடாது என்பதை அதற்கு முன் வேலை செய்த மேனேஜரிடமிருந்தும் கத்துக்கிட்டேன்.

எல்லாரும் நேரத்துக்கு ஆபிசுக்கு வரணும்னு நெனச்சா, மொதல்ல நீங்க நேரத்துக்கு ஆபிசுக்கு போகணும். இந்த ரூல் எல்லா விஷயத்துக்கும் பொருந்தும்.

2.Call them Colleagues :
அரவிந்திடமிருந்து நான் கற்ற பாடங்களில் இதுவும் ஒன்று.

I hate the word Subordinate.Team Mate அல்லது Colleague என்று அறிமுகப் படுத்துங்கள். யாரையும் இவர் எனக்கு கீழே வேலை
செய்கிறார் என்று சொல்லாதீர்கள்.

Be a part of the team as a Leader and don't Boss around. Team Mates அனைவரையும் உங்களை பேர் சொல்லி அழைக்க வற்புறுத்துங்கள். Sir என்று அழைப்பதை தடை செய்யுங்கள். என்னுடைய டீம் மேட்ஸ் என்னை விளித்தது "Hi Sri" என்றுதான். This goes a long way in creating a bondage...

3. Don't give them fish to eat, Teach them how to Fish:

மறுபடியும் அரவிந்த் புராணம். நான் அவரிடம் ஒரு Problem கொண்டு சென்றால் அவர் எப்போதும் சொல்வது - ஸ்ரீராம், Problem இருக்குன்னு மட்டும் சொல்லாதே, அதுக்கு மூணு solution யோசித்துக் கொண்டு வா, அதில் எது சிறந்தது என்று சொல்கிறேன். அப்போல்லாம் எனக்கு பத்திக்கிட்டு வரும், யோவ் எனக்கு மூணு Solution தெரிஞ்சா நான் ஏன் உங்க கிட்ட வர்றேன்னு கத்தத் தோணும். I realized lot later that he was preparing me to live on my own and not be a Parasite.

Teach them how to fish, if you keep feeding them, they will die of hunger after you...

4. Don't shock them into changes:


மாற்றம் ஒன்றே நிலையானது, ஆனால் மாற்றம் ஒரே நாளில் நிகழ்ந்து விடாது. When facing change, Communicate as early in the process as possible. Remember that your team mates are a few steps behind you in the acceptance cycle. Give them a reasonable amount of time to adjust.

எல்லா விரல்களும் ஒரே அளவில் இருப்பதில்லை. Resistance to change ஒருவருவருக்கும் ஒவ்வொரு மாதிரி, அனைவரையும் அரவணைத்துச் செல்லுங்கள்.

மக்கள்ஸ், இதப் பத்தி எழுத ஆரம்பித்த போது ரைமிங்கா நற்குணங்கள் நாலுன்னு தலைப்பு வச்சி நாலு பாயிண்ட் எழுதணும்னு நெனச்சேன், எழுதும் போது
இன்னும் நாலு பாயிண்ட் தோணிச்சு, பதிவு ரொம்ப பெரிசா போகாம இத்தோட நிறுத்திக்கறேன்,பிடிச்சிருந்தா சொல்லுங்க, அடுதத பாகத்தில் இன்னொரு
நாலு பாயிண்ட் எழுதறேன்.

8 comments:

சிவக்குமரன் said...

எனக்கு label ரொம்ப பிடிச்சிருக்கு!!!

sriram said...

சிவக்குமரன்,
அவ்வ்வ்வ்வ்வ்வ் அப்போ பதிவு பிடிக்கலயா??

துளசி கோபால் said...

சூப்பர் பதிவு.

இதைவச்சு இன்னிக்குக் கோபாலை ஓட்டலாம்:-)))))

ரவி said...

good post sriram...

ஆதித்தன் said...

உங்கள் பதிவு மிக நன்றாக மற்றும் உபயோகமாக இருந்தது. இதைப் பற்றி இன்னும் விரிவாக எழுதினால் இன்னும் நன்றாகவும் இன்னும் உபயோகமாகவும் இருக்கும். :-)

2009kr said...

நல்ல பதிவு வாழ்த்துக்கள்

Anonymous said...

Really a good post. Please do write more giving nice tips like this.
Regards
Geetha Ramkumar

யாசவி said...

சிறப்பு

எனக்கும் நல்ல டிப்ஸ் கிடைத்தது. ஆனால் நான் நல்ல டேமேஜரை தேடிக்கொண்டிருக்கிறேன்