தேடுதல் வேட்டை

Wednesday, December 20, 2006

பி.எஸ்.ஸி/பிஸிஏ(2005/06) நிறைவு: டிசிஎஸ் அள்ளுகிறது


முன்பெல்லாம் மாணவர்கள் எம்.எஸ்.ஸி அல்லது எம்.ஸி.ஏ முடிக்கும்வரை பெரிய நிறுவனங்களில் பணிவாய்ப்புக்காக காத்திருக்கவேண்டும்..ஆனால் இப்போது பொறியாளர்களுக்கு கடும் பற்றாக்குறை காரணமாக பி.எஸ்.ஸி அல்லது பி.ஸி.ஏ (BSc or BCA) நிறைவு செய்திருந்தாலே போதும் என்கின்றன நிறுவனங்கள்...

உங்களுக்கு தெரிந்து பிள்ளைகள் பி.எஸ்.ஸி அல்லது பி.ஸி.ஏ 2005 அல்லது 2006 ஆம் ஆண்டு நிறைவு செய்தவர்கள் இருக்கிறார்களா ? தற்போது பூதாகரமாக வளர்ந்துள்ள டி.சி.எஸ் அவர்களை நிறைவான சம்பளத்தோடு அள்ளிக்கொள்ள தயாராக கடைவிரித்துள்ளது.....

தேர்ந்தெடுக்கப்பட்டால் முதல் ஏழு மாதம் ட்ரெய்னிங் என்று கூறுகிறார்கள்..

பத்தாம் வகுப்பு / உயர்நிலை / மற்றும் பி.எஸ்.ஸியில் முதல் வகுப்பில் தேர்வாகியிருக்கவேண்டும்...படித்தது தொலைதூரக்கல்வியாக இருக்க கூடாது...கல்விக்கு இடையில் இடைவேளை இருந்தால் ( அரியர்ஸை அப்படி டீசண்டாக சொல்லலாம்) - அது இரண்டாண்டுக்கு மேல் இருக்க கூடாது...

இளநிலையில் கணிப்பொறியியல் / இயற்பியல் / வேதியல் / கணிதம் / தகவல் தொழில்நுட்பம் / ஆகிய ஏதாவது ஒன்றில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்..

கண்டிப்பாக கவனிக்கவேண்டிய விஷயம், 23-12-2006 (ஞாயிறு) அன்று இந்த தேர்வு நடைபெறும்..காலை 9:30 மணியில் இருந்து மதியம் 1:30 மணி வரை வடபழனி TCS அலுவலகத்தில் ரெஜிஸ்ட்ரேஷன் நடைபெறும்...தேர்வர்கள் நேரடியாக குறிப்பிட்ட நேரத்தில் சென்று பதிவு செய்யவேண்டும்...

No comments: