தேடுதல் வேட்டை

Sunday, December 17, 2006

டெஸ்டிங் படிச்சா வேலை கிடைக்குமா? - 1

மூன்று ஆண்டுகளுக்கு முன்னால் விடியக்காலை மூன்று மணிக்கு ஒரு கேரியர் டிஸ்கஷன் நடந்தது..அதில் கலந்துகொண்டது மூன்றே பேர்...விஷுவல் சி.ப்ளஸ் ப்ளஸில் ப்ரோக்ராமராக இருப்பவர் ஒருவர்...தினமும் பதிமூன்றில் இருந்து பதினாறு மணி நேரம் அலுவலகத்தில் ப்ரோக்ராம் எழுதி மண்டை காய்ந்துகொண்டிந்தவர் அவர்...இருக்க கொஞ்ச நஞ்ச முடியும் கொட்டிவிடுமோ என்று பீதியில் குளிரைக்கூட பொருட்படுத்தாமல் அமர்ந்திருந்தார்..

சென்னைக்கு வேலை தேடுமுகத்தான் வந்த மற்றொருவர்..அப்போதுதான் பிரபலமாகியிருந்த .நெட் படிக்கலாமா, அல்லது கால்காணி நிலத்தை விற்று மெயின்ப்ரேம் படிக்கலாமா ? டெலெகாம் கோர்ஸ் மற்றும் வேலை, ஐம்பதாயிரம் கட்டுங்கள், ஆறுமாதத்தில் வேலையை நிரந்தரமாக்குவோம் என்று ஆங்கில நாளிதழ்களில் வெளிவரும் கவர்ச்சி விளம்பரங்களை நம்பலாமா ? எளிதாக வேலை கிடைக்க வேறு ஏதாவது ஒருவழியாவது இருக்கிறதா ? என்று நொந்துகொண்டிருந்த மற்றவர்..

குட்டிக்குட்டி நிறுவனங்கள் இரண்டு மூன்றில் வேலை செய்து குறைந்த சம்பளம் பெற்றுக்கொண்டிருந்த மற்ற நன்பர்..இந்த குறைந்த சம்பளத்தில் கூட நாலு நன்பர்கள், வேலை தேடி அறையில் அமர்ந்து சீட்டுக்கட்டாடிக்கொண்டிருந்ததை கூட பொருட்படுத்தாமல், எப்படியாவது ஒரு நல்ல வேலையில் அமர்ந்துவிடுவது என்று கண்களில் எதிர்பார்ப்பு மின்ன, வழியை கண்டறியும் வேட்கையில்..

அப்போது பிரபலமாகிக்கொண்டிந்த வின் ரன்னர் (WinRunner) பற்றி நன்பர் எடுத்துரைக்க, மற்ற நன்பரோ, டாட் நெட் படிக்கலாம், அதில் தான் இனி எதிர்காலம் என்று உறுதியாக கூறினார்...ஆனால் வின் ரன்னர் மிக எளிமையானது என்றும் ஒரு வாரத்தில் படித்து முடித்துவிடலாம் என்றும், பிறகு பெரிய நிறுவனங்களில் இருந்து அழைப்பு வரும் என்று மற்ற இருவரையும் கன்வின்ஸ் செய்தார்....ப்ரோகிராமிங்கில் மண்டை காய்ந்துகொண்டிருந்த நன்பரும், வின் ரன்னர் படித்து டெஸ்டிங் துறைக்கு மாறிக்கொள்ள இசைய, மூவர் கூட்டணி உதயமானது...

முடிவெடுத்தாகிவிட்டது...வின் ரன்னர் மென்பொருளுக்கு எங்கே போவது ? யாரை அனுகுவது ? இந்த துறை முன்னேறும், கண்டிப்பாக வேலை கிடைக்கும் என்பது என்ன நிச்சயம் ? சில முடிவுகளோடும், சில கேள்விகளோடும் கலைந்தது கூட்டம்...அடுத்தது என்ன நடந்தது என்பதை அடுத்த பகுதியில் பார்க்கலாம்...

15 comments:

Anonymous said...

//வின் ரன்னர் மென்பொருளுக்கு எங்கே போவது ? //

ரிச்சி ஸ்ட்ரீட்?

நாமக்கல் சிபி said...

உங்கள் புண்ணியத்தில் தெரியாத நிறைய விஷயங்கள் நிறையத் தெரிந்து கொள்கிறோம். நன்றி!

ரவி said...

ஏதோ எனக்கு தெரிந்ததை (மட்டும்)ஷேர் செய்கிறேன் சிபியாரே...

Anonymous said...

ப்ரோக்ராமர் எழுதிய கோடில்பிழை இருந்தால் சகித்துக்கொள்ளலாம், ஆனால் டெஸ்டர் டெஸ்ட் பண்ணிய கோடிலும் 'பக்' இருந்துத் தொலைத்தால் க்ளைண்ட் முகத்திலேயே முழிக்க முடியாது. :-) எங்கள் பணியகத்தில் டெஸ்டர்கள் படும் பாட்டைப் பார்த்ததும் டெஸ்டிங்க் பணியே என்றாலே அலர்ஜியாகி விட்டது (அதாவது பயமாக இருக்கிறது).யூனிட் டெஸ்ட் கேஸ் எழுதுவதோடு சரி.

மிக ஆர்வமூட்டும் தொடராக இருக்கிறது.தொடர்ந்து ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்.

ஒரே ஒரு சின்ன வேண்டுகோள். இதை அறிவுப்பசிக்குத் தீனி போடுவதற்காக எழுதுகிறீர்களா அல்லது அறிவு சார்ந்த பொழுதுபோக்கு அம்சத்திற்காக எழுதுகிறீர்களா? அதாவது, நாவல், த்ரில்லர் மாதிரி. அந்த மாதிரிதான் என்றால் சரி. ஆனால் ஆர்வமுடன் தகவல்களையும் இந்த துறை பற்றியும் தெரிந்துகொள்ள வரும்பொழுது நிறைய ஏமாற்றமாக இருக்கிறது, இப்படி ஆ.வி., குங்குமம், குமுதம் பாணியில் 'தொடரும்'போட்டு பாதியிலேயே முடிப்பது.

ஆரம்பத்தில் மட்டும் இப்படி என்றால் பரவாயில்லை. ஆனால் தொடர்ந்து இப்படியே இருந்தால் BP அனாவசியமாக எகுறுகிறது. :-(

ரவி said...

க்ருபா, பொழுதுபோக்கு - அல்லது பொழுதை போக்கும் எண்ணம் கண்டிப்பாக இல்லை. முதலிலேயே டெக்னிக்கல் விஷயங்களை போட்டு அறுத்தால் படிக்க விரும்பமாட்டாங்க என்று நினைத்தேன்...நீங்க என்ன சொல்கிறீர் ? உங்கள் கருத்துக்கு நன்றி.

நாமக்கல் சிபி said...

தலைவா,
எடுத்தவுடனே டூல்ஸ் கொஞ்சம் அதிகம்...

Better start with the life cycle of S/W engineering. Then go ahead with the testing concepts.

Hope u will train them to write test cases too... If u need any sample test can on any web page, i can help u...

ரவி said...

நீங்கள் சொல்வது சரிதான் வெட்டி. அப்படி தான் யோசித்து வைத்துள்ளேன். தொடர்ல நம்மாளு ஒருத்தர் டெஸ்டிங் கோர்ஸ் போறாருங்கோ...!!

வெற்றி said...

ரவி,
படித்தேன்.
பதிவுக்கு நன்றி.

வடுவூர் குமார் said...

செந்தழல் ரவி
எனக்கு இது புதுசு.
இருந்தாலும் படித்தபிறகு பார்க்கிறேன், முடியுமா என்று.
கிருபா சங்கர் சொன்ன மாதிரி சில தொடர்கள் சில பத்திரிக்கைகள் பாதியில் அம்போ என்று விட்டு விடுவது பரிதாபதக்குரியது தான்.

Divya said...

ரவி,
டெஸ்டிங் படிச்சா நிச்சயமா நல்ல வேலை வாய்ப்புகள் இருக்கிறது[ both in India and US]

You can download the free trial version of Winrunner 8.2 tool to study sample test cases, also they have QTP[quick test professional] and Load Runner trail versions to download.

http://downloads.mercury.com/cgi-bin/portal/download/index.jsp

http://www.mercury.com/us/products/quality-center/functional-testing/winrunner/

டெஸ்டிங் டூல்ஸ் படிப்பதறகு உபயோகமான தகவல்களை உங்கள் பதிவில் நீங்கள் ஷேர் செய்வது பாராட்டுக்குறியது, நன்றி ரவி!!

Keep up your good work!

Anonymous said...

ரவி, டெக்னிக்கல் விஷயம்னு இல்லை. தொடரின் ஒவ்வொரு பகுதியிலும் ஒரு விஷயத்தை முழுமையாகச் சொல்லிவிட்டால் படிக்கும் போது எனக்கு கொஞ்சம், "அப்பாடா, ஒரு மேட்டர் இன்னிக்கு தெரிஞ்சது"ங்கற த்ருப்தி இருக்கும் இல்லையா...?

ஒரு உதாரணத்திற்கு, "வின் ரன்னர் மென்பொருளுக்கு எங்கே போவது" என்ற கேள்வியுடன் அப்படியே விட்டுவிட்டீர்களே... அடுத்த பகுதி வரும்வரை காத்திருக்க வேண்டுமே... :-((

நான் ஏதோ குறை எல்லாம் சொல்வதாக நினைத்துக்கொள்ளாதீர்கள். அதனால்தான் என்னுடைய முந்தைய மறுமொழியிலேயே ஒரு வேண்டுகாளாகத்தான் கேட்டுக்கொண்டேன். இது என்னுடைய வேண்டுகோள் மட்டுமே.

நாவல் என்றால் ஒரு சஸ்பென்ஸ் வேண்டும். ஒரு தொடரின் வெற்றி தொடரின் அடுத்த பகுதியை ஆவலுடன் எதிர்பார்ப்பதில்தான் அடங்கி இருக்கிறது என்பது உண்மைதான். ஆனால் தொடர்கதையின் அடுத்த பகுதியை ஆவலுடன் எதிர்பார்ப்பதற்குக் காரணம் 'அடுத்தது என்ன ஆகியிருக்குமோ?' என்ற ஆவலில்தான். வேறு சில தொடர்களில், 'இந்த வாரம் ஏதாவது பயனுள்ளதாகத் தெரிந்து கொள்ளலாமே' என்ற ஆவல் இருக்கும். இதில் இரண்டாவது வகை ஆவலைத் தூண்டும் தொடர்தான் எனக்கு ரொம்பப் பிடிக்கும். அவ்வளவுதான். மறுபடியும், மறுபடியும், ஒரு வேண்டுகோளாகவும் என் தனிப்பட்ட விருப்பமாகவும் மட்டுமே இதைக் கேட்கிறேன்.

க்ருபாவின் மனசாட்சி: "ரொம்ப பேசறோமோ?"

ரவியின் மனசாட்சி: "ச்சே, தொல்லை தாங்க முடியலடா சாமி!!!"

கூத்தாடி said...

உங்கள் பதிவு கிருபா சங்கர் சொன்னது மாதிரி தான் இருக்கிறது ..நான் நீங்கள் எழுதுகிறது போன்ற சாப்ட் வேர் டெஸ்டிங்கில் இல்லை என்றாலும் அதன் வாய்ப்புகளும் குறைகளும் தெரியும் ..உங்கள் தொடரை முடியுங்கள் கருத்தைச் சொல்லுகிறேன்..

நிலா said...

ரவி,
உண்மையில் ஏமாற்றமாக இருக்கிறது.

எடுத்தவுடன் டூல்ஸ் போவது அஸ்திவாரம் இல்லாமல் கோபுரக் கலசத்தை நிர்மாணம் செய்வது போலிருக்கிறது.

சென்ற வாரம் இந்தியாவிலிருக்கும்ஒரு நண்பருக்கும் அமெரிக்காவிலிருக்கும் மற்றொரு நண்பருக்கும் மெசஞ்சர் மூலம் டெஸ்டிங் சொல்லிக் கொடுக்க விழைந்தேன். அடிப்படைகளைச் சொல்லிக் கொண்டே போனபோது அமெரிக்க நண்பர் ஆர்வமாகக் கேட்டுக் கொண்டு போனார். இந்திய நண்பர் பொறுமை இழந்து 'எப்போது வின்ரன்னர், லோட் ரன்னர் எல்லாம் சொல்லித் தருவீங்க?' என்றார்

நான் அதிர்ச்சியாகி, "இந்த டூல்ஸ் என்ன விலை என்று உங்களுக்குத் தெரியுமா?' என்றேன்

"தெரியாது... அப்படியென்றால் நீங்கள் இவற்றை எனக்குக் கற்றுத் தரப்போவதில்லையா?' என்றார்.
"இல்லை" என்றேன்

"வின் ரன்னர், லோட் ரன்னர் இல்லாமல் என்ன டெஸ்டிங்?" என்றார். எனக்கு அதிர்ச்சியோ அதிர்ச்சி.

என்ன செய்வது என்று தெரியாமல் எதனை அட்டோமேட் செய்ய முடியும்? நூல் நூற்பது எப்படி என்று தெரிந்தால்தானே அதனை ஆட்டோமேட் செய்ய கருவி கண்டுபிடிக்க முடியும்? ஆட்டோமேட்டட் ஸ்கிர்ப்ட்ஸும் அப்படித்தான். இல்லையென்றால் குருடர்கள் பார்த்த யானையின் கதை போல்தானிருக்கும். எங்கள் நிறுவனத்தில் அடிப்படை தெரியாமல் ஆட்டோமேட் செய்ய நான் ஒருபோதும் அனுமதிப்பதில்லை.

நண்பரின் இந்த மனோபாவம் பொதுவானதாக இருக்க வாய்ப்புள்ளது என்பதை உங்கள் பதிவு கண்டு உணர்கிறேன். ஆனால் கல்வித் தொடராக எழுதும்போது சரியான அப்ரோச் எடுத்தல் நலம்

ஒரு வேளை அடுத்த பதிவில் நீங்கள் மேனுவல் டெஸ்டிங்கிலிருந்து ஆரம்பிக்க எண்ணியிருக்கலாம். ஆனால் உங்கள் முதல் பதிவு தவறான கண்ணோட்டத்தை உருவாக்கியிருக்கிறது என்பது என் எண்ணம்

நேர்மையாக எனது கருத்தைச் சொல்லியிருக்கிறேன். பாஸிடிவாக எடுத்துக் கொள்வீர்கள் என நினைக்கிறேன்.

ரவி said...

////ஆரம்பத்தில் மட்டும் இப்படி என்றால் பரவாயில்லை. ஆனால் தொடர்ந்து இப்படியே இருந்தால் BP அனாவசியமாக எகுறுகிறது. :-( ////

உங்கள் பி.பியை குறைக்கும் பணியில் இருக்கிறேன்....

///நான் ஏதோ குறை எல்லாம் சொல்வதாக நினைத்துக்கொள்ளாதீர்கள்.///

கண்டிப்பாக கிடையாது..எழுத தூண்டுகோல் உங்கள் விமர்சனம் மட்டுமே என்பதை சொல்லிக்கொள்கிறேன்..

////'இந்த வாரம் ஏதாவது பயனுள்ளதாகத் தெரிந்து கொள்ளலாமே' என்ற ஆவல் இருக்கும். இதில் இரண்டாவது வகை ஆவலைத் தூண்டும் தொடர்தான் எனக்கு ரொம்பப் பிடிக்கும். ///

உண்மையானதும் அருமையானதுமான ஒரு கருத்து...அப்படியே ஏற்றுக்கொள்கிறேன்...அத்துடன், இதுபோன்ற தரமான குறிப்பு தொடர்ந்து எழுதும் ஒவ்வொரு பதிவுக்கும் நிச்சயம் தூண்டுகோலாக இருக்கும் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன்..

//க்ருபாவின் மனசாட்சி: "ரொம்ப பேசறோமோ?"///

மிகச்சரியாக பேசும் உங்கள் மனசாட்சிக்கு ஒரு ஓ...:))) ஒவ்வொரு முறை இந்த தொடர் பதிவின் பதிவை எழுதும்போதும் உங்கள் பின்னூட்டத்தை ஒரு முறை பார்த்துக்கொள்ளவேண்டும் என்று முடிவெடுத்துள்ளேன்...

ரவி said...

////நண்பரின் இந்த மனோபாவம் பொதுவானதாக இருக்க வாய்ப்புள்ளது என்பதை உங்கள் பதிவு கண்டு உணர்கிறேன். ஆனால் கல்வித் தொடராக எழுதும்போது சரியான அப்ரோச் எடுத்தல் நலம்///

கண்டிப்பாக மனதில் கொள்கிறேன்..!

///ஒரு வேளை அடுத்த பதிவில் நீங்கள் மேனுவல் டெஸ்டிங்கிலிருந்து ஆரம்பிக்க எண்ணியிருக்கலாம். ஆனால் உங்கள் முதல் பதிவு தவறான கண்ணோட்டத்தை உருவாக்கியிருக்கிறது என்பது என் எண்ணம்///

ஆம், சற்று விரிவாக தந்திருக்க வேண்டும்...கதை எழுதுவதுபோல ஆரம்பித்தது, நேரம் இன்மை காரணமாக விரைந்து முடிக்கவேண்டிய கட்டாயத்தில் சிறு சஸ்பென்ஸோடு முடிக்கும்படி ஆனது. இனிமேல் சிறப்பாக செயல்படுகிறேன்.

///நேர்மையாக எனது கருத்தைச் சொல்லியிருக்கிறேன். பாஸிடிவாக எடுத்துக் கொள்வீர்கள் என நினைக்கிறேன். ///

எப்போதும் பாஸிடிவ் மற்றும் ஸ்போர்ட்டிவ்வாக எடுத்துக்கொள்வது என் பழக்கம்...இப்போதும் அன்புடன் அப்படி எடுத்துக்கொள்கிறேன்..

உங்கள் கருத்து மிக அருமையானது..