தேடுதல் வேட்டை

Wednesday, December 20, 2006

டெஸ்டிங் படிச்சா வேலை கிடைக்குமா? - 3

சரி, டெஸ்டிங் முழுமையாக படிப்பது என்று இறங்கியாகிவிட்டது...எங்கிருந்து ஆரம்பிப்பது...என்பது தெரிந்துவிட்டது...இன்னும் கொஞ்சம் சிறிய சிறிய விஷயங்களை தொட்டுக்கொண்டிருந்துவிட்டு அடுத்த அத்தியாயத்தில் இருந்து முழுமையாக பார்க்கலாம்....இந்த அத்தியாயத்திலும் சின்ன விஷயங்கள் தானா - உருப்படியாக எப்போதுதான் எழுதப்போகிறாய் என்று நீங்கள் அங்கே சூடாவது தெரிகிறது...இருந்தாலும் இதுபோன்ற முன்னுரைகள் தேவையாகத்தான் இருக்கிறது...

எக்ஸ்கியூஸ் மீ...நீங்க ப்ளாக் பாக்ஸ் (Black Box) டெஸ்டரா இல்லை ஒயிட் பாக்ஸ் (White Box) டெஸ்டரா என்று கேட்டால் புதிதாக கற்பவர் அதிர்ச்சி அடையாமல் இருக்கவேண்டும் அல்லவா ? அதற்காகவாவது நான் எளிமையான விஷயங்களை கோர்வையாக சொல்லிவிட்டால் பிறகு ஒவ்வொரு சிறிய விஷயத்தையும் விளங்கச்சொல்ல தேவை இல்லாமல் நேரடியாக விஷயத்துக்கு வர ஏதுவாக இருக்கும் அல்லவா ?

ப்ளாக் பாக்ஸ் டெஸ்டிங் என்பது ஒரு பயனாளரைப்போல் (End User) டெஸ்டிங் செய்வது...எடுத்துக்காட்டாக யாகூ மின்மடல் இணைய மென்பொருளை ( Web Application Software) நீங்கள் டெஸ்ட் செய்கிறீர்கள்...எப்படி செய்வீர்கள்....சரியான பயனாளர் பெயரையும்,கடவுச்சொல்லையும் (user id and password) கொடுத்து உள்ளே சென்று ஒரு மின் அஞ்சலை ஒரு கோப்புடன் அனுப்பி (compose a mail with a file), மின்மடலை தரவிறக்கி (Download), ஒரு மின்னஞ்சலை அழித்து (delete), அதில் உள்ள அத்துனை செயலாக்கங்களையும் (Operations or Functionalities) சோதித்து, இது வேலை செய்யுதுப்பா !!! என்று சொல்வீர்களானால் இது தான் ப்ளாக் பாக்ஸ் டெஸ்டிங்.

நீங்கள் கடுமையான உழைப்பாளியாகவும், நல்ல கலையறிவார்ந்தவராயும் ( Creativity) இருந்தால் இந்த பணியை வெகுசிறப்பாக செய்யலாம்...கிராமத்தில் இருந்து கிளம்பி வந்து எல்.ஜி நிறுவனத்தில் பணியாற்றும் நன்பர் பாலு வெகுசிறப்பாக பணியாற்றி விருதுகளை வாங்கி குவிக்கிறாரே !!! மூளையை கசக்கி பிழிந்து பணியாற்றும் பலரை விட மிக அருமையாக டெஸ்டிங் செய்து வெற்றியாளராக திகழும் பலரை எனக்கு தெரியும்...

அடுத்தது வொய்ட் பாக்ஸ் டெஸ்டிங்....இந்த முறையில் ப்ரோக்கிராமிங் நுழைகிறது....ஸ்க்ரிப்டுகள், ப்ரோக்ராமர் உருவாக்கிய மென்பொருளின் மூலத்தை ( Software Source Code) பார்த்து, அது சரியாக கட்டமைக்கப்பட்டிருக்கிறதா ? அனைத்து செயலாக்கங்களையும் (Functionality) உள்ளடக்கியுள்ளதா ? குறையிருப்பின் அவை எங்கே உள்ளது என்பது போன்ற பணி...இதற்கு நல்ல மென்பொருள் உருவாக்க அறிவு (Software Development Knowledge) தேவையாகிறது...ப்ரொக்கிராமிங்கில் இருந்து டெஸ்டிங் மாறி வரும் சில நன்பர்கள் இந்த பணியை செய்வதை நான் அறிவேன்...

ப்ளாக் பாக்ஸ் டெஸ்டிங் / ஒய்ட் பாக்ஸ் டெஸ்டிங் இவை இரண்டும் உள்ளடக்கிய ஒன்று உண்டு..அது க்ரே (Gray) பாக்ஸ் டெஸ்டிங் என்று அழைக்கப்படுகிறது...அவ்வப்போது கோடிங் வாக் த்ரோஸ் (Coding Walk Throughs) - கட்டமைக்கப்பட்ட மூலத்தை ஊடாடி பார்ப்பது - செய்யவேண்டியிருக்கும்...சில சமயம் - பயனாளரைப்போல பணியாற்றி மென்பொருளை இயக்கி பார்க்க வேண்டியதாக இருக்கும்.....

மீண்டும் இன்றே !!!

8 comments:

Anonymous said...

uruppadiyana pathivukku oru feedbackum ille. mmm kaala kettupochu

Sridhar V said...

மிக நன்றாக எல்லோருக்கும் புரிகின்ற வகையில் சுத்த தமிழில் எழுதுகிறீர்கள்.

கூடிய சீக்கிரம் பெரிய பத்திரிகைகளில் உங்கள் ஆக்கங்கள் வரும் என்று தெரிகிறது.

தொடருங்கள் உங்கள் எழுத்துப் பணியை! வாழ்த்துக்கள்!

Anonymous said...

Good...I am also need to change my mind in testing.Keep it up..

Anonymous said...

Mr. Ravi,
All of us know that English is inevitable in the IT field.Why are u bent on giving all the technical matter in Tamil.I am a Tamilian and I respect your love for the language..but why are u adamant on talking about downloading etc in tamil? I feel that only people who want to enter Tamilnadu politics or become a popular writer or want to impress the ruling party do all these gimmicks..But people like you who are doing some social service..what is the need? Are there not enough sites and blogs where people exchange tamil poems
and literature and beautiful facts about Tamilnadu? I appreciate your service and have great respect for your work..but is'nt this taking things too far?

வடுவூர் குமார் said...

உங்களை தொடர்கிறேன்.

செல்வநாயகி said...

அன்பிற்கினிய ரவி,

தொடர் பயணங்கள் மற்றும் வேலைகளால் வலைப்பக்கம் வரவில்லை நான்கைந்து நாட்களாய். சக்தியில் என் பதிவில் நீங்கள் இட்டிருந்த தனிமடலைப் பார்த்தும் உடன் பதிலிடமுடியவில்லை. அதற்காக மிகவும் வருந்துகிறேன்.

நான் இப்போது இந்தியாவில் இல்லை. நான் இருக்கும் நாட்டில், நான் பணிபுரியும் துறையில், என் அலுவலகத்தில் அவர்கள் நாட்டினரை மட்டுமே எடுத்துக்கொள்கிறார்கள். ஆனால் நீங்கள் குறிப்பிட்டிருக்கும் அக்கிராமத்து நண்பர்களுக்காக இந்தியாவில் எனக்குத்தெரிந்த முதலாளி நண்பர்களோடு பேசிப்பார்த்தேன். இப்போதைக்கு அவர்கள் பணிக்கு ஆள் தேடவில்லையென்றும், தேவைப்படும்போது எனக்குச் சொல்வதாகவும் சொன்னார்கள். அப்படியேதேனும் வாய்ப்பு எனக்குத் தெரியவரும்போது உங்களுக்குக் கட்டாயம் சொல்கிறேன். உங்களின் முயற்சிகளுக்கு வாழ்த்துக்களும், நன்றியும்.

இவர்கள் எந்த ஊரில் இருக்கிறார்கள் ரவி? நானறிந்தவரையில் திருப்பூரில் இவர்களைப் போன்றவர்கள் பணியாற்ற வாய்ப்புகள் அதிகம். அவர்களுக்கு ஒத்துவருமென்றால் முயலச் சொல்லுங்களேன் ரவி.

ரவி said...

நன்றி செல்வநாயகி...

ரவி said...

ஸ்ரீ

உங்களுக்கு பிறகு பதில் சொல்கிறேன்.......