தேடுதல் வேட்டை

Thursday, December 14, 2006

டெஸ்டிங் படிச்சா வேலை கிடைக்குமா?

ஐடி துறையில் இல்லாதவர்கள், வேறு துறையில் பணி புரிபவர்கள், கேம்பஸ் இண்டர்வியூவில் பணி வாய்ப்பு கிடைக்காமல் தவறியவர்கள் அனைவரும் விரும்பும் துறை டெஸ்டிங். படித்தால் இரண்டு மாதத்தில் உடனடி பணிவாய்ப்பு நிச்சயம்...

சில ஆண்டுகளுக்கு முன் டெஸ்டிங் என்றாலே கேவலமான துறை, மென்பொருள் துறையில் கிடைப்பதுபோல் சம்பளம் கிடைக்காது, எதிர்காலம் அற்ற துறை என்றெல்லாம் பேசப்பட்ட டெஸ்டிங் துறை இன்று பூதாகரமாக வளர்ந்து, டெஸ்டிங் துறை இல்லாத கணிப்பொறி நிறுவனமே இல்லை என்ற நிலையையும், மற்ற மென்பொருளாளர்களை விட நிறுவனங்களில் டெஸ்டிங் படித்தவர்களை அதிகம் கொண்டுள்ள நிலையையும் கொண்டுள்ளது...

பெங்களூரு மோட்டரோலா நிறுவனத்தில் பணியாற்றும் மொத்த பணியாளர்களின் எண்ணிக்கை மூவாயிரம். அதில் 2500 பணியாளர்கள் டெஸ்டிங் செய்துகொண்டிருக்கிறார்கள்...சம்பளத்துக்கும் எந்த ஏற்றத்தாழ்வும் இல்லை...

பெங்களூர் நோக்கியா நிறுவனத்தின் அனைத்து பணியாளர்களும் டெஸ்டிங் துறையில்...இந்த துறை பூதாகரமாக வளர்ந்தது எப்படி, இதன் மேல்வளர்ச்சி எப்படி இருக்கும், எதிர்காலத்தில் இந்த துறை எந்த உயரங்களை தொடும், இதன் டெக்னிக்கல் விஷயங்கள் என்ன என்பதை சிறு தொடராக (குறுந்தொடர் என்று கொள்ளலாமே) எழுதவிருக்கிறேன்...அன்புடன் ஆதரவளிப்பீர்கள் என்று நம்புகிறேன்..

9 comments:

Anonymous said...

DEVELOPMENT துறையில் மண்டை காயுது. சீக்கிறம் எழுதுப்பா. SWITCH செய்ய விருப்பம்.

சுகுமார்.

கானா பிரபா said...

படிக்க ஆவல், சீக்கிரம் ஆரம்பியுங்கள் ரவி.

யாரோ - ? said...

வாழ்த்துக்கள் ரவி,
டெஸ்டிங் பத்தி அறிய ஆவலாக இருக்கிறது.


எப்போது.. எழுதுவீங்க??

Anonymous said...

அது மட்டும் அல்லாமல் எப்படி டெஸ்டிங் படிப்பது . எந்த டெஸ்டிங் கோர்ஸ் படிப்பது என்றும் கூறவும்.

நல்ல பதிவு.

Anonymous said...

Software Development ....... to ... to ...Testing

IT is the realface of Globalization of the Capital.

-aasath

நாமக்கல் சிபி said...

தலைவா...
நானும் டெஸ்டிங் தான்... நீங்க ஆரம்பிங்க.. நானும் வந்து ஜோதீல ஐக்கிய மாயிக்கறேன்...

சர்டிபிகேஷன் எல்லாம் பண்ணியிருக்கேன் ...

இன்னும் டெஸ்டிங்ல பெரிய தலைங்க நிறைய பேர் இருக்காங்க...

Anonymous said...

Company :- Perot System

Company Profile: A Leading MNC in Software Product Development and Software Consulting, which is the World"s Youngest SEI CMMI LEVEL-5 COMPANY, and is also a Global Fortune 500 company. Working on Multiple Domains, including, Finance, Telecom, and Healthcare to name a few, Having a staff strength of more than 20, 000, employees, working across several countries, the company is a leader in IT and is one of the top 10 IT Companies of India



Position : Developer / Sr. Developer

Skills : C#, VB.NET (Win Forms)

Experience : 3 to 4 years

Location: Bangalore

Important:
- Person should have BE / MCA / equivalent as minimum educational qualification.
- Should have valid passport

_____________________________________________________________________

Kindly mail across your updated CV asap, with your contact details for an urgent action on our part, So, that we can schedule, your interview with them at the earliest.

#and If you can forward some references too, for the same positions, kindly forward this mail to your friends, that would be a great help to us.


With Thanks & Regards

Karmvir
Ventures IT Solution
Phone :- +91-11-65101010, 65145514 / 15
Hand Phone :- +91- 9810594900
Email: hr@venturesit.com



Regards
Vikas Panwar
Ventures IT Solutions

By... VENDAN

Anonymous said...

உனக்கு வேற வேலையே இல்லையா?

வெற்றி said...

செந்தழல்,
நல்ல முயற்சி. வாழ்த்துக்கள்.