தேடுதல் வேட்டை

Thursday, November 26, 2009

என்ன தொழில் செய்யலாம் - பகுதி 1

சிறிய முதலீட்டில் நாம் செய்யக்கூடிய தொழில் வாய்ப்புகள் பற்றி இந்த பகுதியில் எழுத முயல்கிறேன்.



இரண்டு நாட்களுக்கு முன் ஒரு நன்பரின் வீட்டு வாசலில் இந்த சோலார் விளக்குகளை பார்த்தேன். மிக குறைந்த விலைதான். நல்ல சூரிய ஒளி இருக்கும் நாட்களில் குறைந்தது நான்கு மணி நேரம் ஒளி தருவதாக சொன்னார்.

இதைபோன்ற சோலார் விளக்குகளை உருவாக்க, தேவை சோலார் பேனல்கள். முன்பு விலை மிக அதிகமாக இருந்த சோலார் பேனல்கள், இப்போது மிக மலிவாக, இரண்டு டாலர்கள் என்ற அளவில் கூட கிடைக்கின்றன.

ரினியூவபுள் எனர்ஜியை நோக்கி உலகமே படையெடுத்துக்கொண்டிருக்கும் இந்த காலத்தில் இது மிகச்சிறந்த தொழில்வாய்ப்பு.

மின்சாரம் அடிக்கடி தடைப்படும் ஒரு நாட்டில் இருக்கும் நமக்கு, குறைந்தது வீடு முழுக்க ஒளி தரும் வகையில் சோலார் விளக்கு ஒன்றை 500 ரூபாய்க்கும் குறைவாக தயாரித்து விற்பனைக்கு கொண்டுவர முடியுமா என்பது கேள்வி.

2 Sunarx Solar Trackers

ஆனால் அவ்வாறு செய்யும் பட்சத்தில் அது ஒரு சூப்பர் ஹிட் ப்ராடக்ட் ஆக மக்கள் மனதில் இடம்பிடிக்கும். குறிப்பாக கிராமங்களில். மேலும் இதுபோன்ற சோலார் பேனல்கள் மூலம் மொபைலையும் சார்ஜ் செய்யும் வகையில் வடிவமைக்கலாம். ஏற்கனவே உள்ள சோலார் மொபைல் சார்சர்கள் விலை அதிகமாக இருக்கிறது.

கல்லூரி மாணவர்களும் இதனை ஒரு ப்ராஜக்ட் ஆக எடுத்து செய்யலாம். வாழ்த்துக்கள்.

தமிழ்மணம் நிறுவனர் காசி சாரின் சேவை மேஜிக் கூட இப்படிப்பட்ட ஒரு காஸ்ட் எபக்டிவ் இன்னவேஷன் தான்.

மற்றபடி பொதுவாக, சொந்த தொழில் செய்ய விரும்புபவர்கள் மாவட்ட சிறுதொழில் மையத்தினை அணுகி, அவர்கள் வைத்திருக்கும் ப்ராஜக்ட் லிஸ்டை ஒருமுறை பாருங்கள். நல்ல மானியத்துடன் கடன் வசதியும் இருக்கிறது. வருடம் 400 கோடி அளவுக்கு மானியத்துக்கென்றே ஒதுக்குகிறார்கள். இளைஞர்கள் தான் தகுந்த ப்ராஜக்ட் ப்ளான்களுடன் அணுகுவதில்லை என்று அங்கே சந்தித்த ஊழியர் ஒருவர் தெரிவித்தார்...

4 comments:

Tamil Home Recipes said...

மிகவும் அருமை

Thamiz Priyan said...

எங்க புது வீட்டுக்கு கூட சூரிய ஒளியில் இயங்கும் மின் விளக்குகள் பொருத்த சோலார் பேனல்கள் விலையை இணையத்தில் தேடினேன். சுமார் 100 வாட்ஸ் அளவுக்காக பேனல்களின் விலையே 500 டாலர் வரை இருந்தது. 500 * 50 = 25,000. இந்த காசு இருந்தால் 25 வருடத்திற்கு 100 வாட்ஸ்க்கு கரண்ட் பில் கட்டி விடலாம் என்று விட்டு விட்டேன்.. சீப்பா கிடைச்சா நல்லா இருக்கும்.

ரவி said...

நன்றி தமிழ் பிரியன். நான் நேற்று நம்ம ஊர் காசு 500 ரூபாயில் சிறப்பான ஒரு லைட்டை வாங்கினேன்.

ரவி said...

இப்ப பேனல் விலை குறைஞ்சுட்டது.