தேடுதல் வேட்டை

Friday, November 27, 2009

என்ன தொழில் செய்யலாம் - பகுதி 2



பள்ளிகளுக்கு குழந்தைகளை அனுப்பும் பலர் குழந்தைகளின் பாதுகாப்பை பற்றி எப்போதும் கவலைகொள்வார்கள்.

இந்தியா போன்ற பெரிய நாடுகளில் ஏராளமான பிள்ளைகள் படிக்கும் பள்ளிகளில், பத்து வயதுக்கு குறைந்த குழந்தைகளை டார்கெட் செய்யும் இந்த சைல்ட் டேக் தயாரிப்பை பற்றி சொல்கிறேன்.

ஐரோப்பாவில் மெடிக்கல் ஷாப்புகளில் குறைந்தது ஒரு யூரோவில் இருந்து 4 யூரோ வரை விற்கிறது.

குழந்தை வைத்திருக்கும் ஒவ்வொருவரும் கண்டிப்பாக வீட்டில் ஒன்றிரண்டு வைத்திருப்பதை பார்த்திருக்கிறேன்.

தினமும் பள்ளிக்கு அணிவித்து அனுப்பவில்லை என்றாலும், குடியரசு தினம் சுகந்திர தினம், விளையாட்டு தினம், திருவிழா என்று அதிக மக்கள் கூடும் இடங்களுக்கு குழந்தைகளை அழைத்து செல்லும்போது, அவர்களுக்கு அணிவிக்கலாம்.

பெயர், தந்தை பெயர், முகவரி, தொலைபேசி எண்கள் என்று அனைத்தும் எழுதி கையில் பேண்ட் போல அணிவிக்க பயன்படும் இந்த வகையான ஒன்று இந்தியாவில் இல்லை.

ஏன் முயலக்கூடாது ? குறைந்த பட்சம் 20 ரூபாயில் இருந்து 50 ரூபாய் வரையில் அடங்கும் வகையில் தயாரித்து மெடிக்கல் ஷாப்புகள் ஷாப்பிங் மால்களில் மார்க்கெட் செய்யலாம்..

சுயதொழில் செய்ய விரும்பும் இளையோருக்கு மீண்டும் நான் வலியுறுத்துவது இது தான். உங்களது பகுதியில் இருக்கும் மாவட்டசுயதொழில் அலுவலக அதிகாரியை சென்று சந்தியுங்கள். பொதுவாக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துடன் இணைந்தபடி இருக்கும் இது. மானியத்துடன் கூடிய கடனுதவி இருக்கிறது. ஒவ்வொரு ஆண்டும், ஒதுக்கப்படும் தொகையை செலவிட முடியாமல் அரசுக்கே திருப்பி கட்டும் மாவட்டங்களும் இருக்கின்றன. ஆகவே கண்டிப்பாக நீங்கள் மாவட்ட ஆட்சியரையோ, அல்லது மாவட்ட சுயதொழில் அலுவலரையோ சந்தியுங்கள்.

7 comments:

Anonymous said...

நல்ல தகவல். இளைஞர்கள் முன்னேற நல்ல ஆலோசனை. வாழ்த்துகள்.


பொண்டாட்டிமார்களும் இதை வாங்கிக் கட்டினா........
தொல்லை தொடர் கதைதானா?

புள்ளிராஜா

Tamil Home Recipes said...

மிகவும் அருமை

வடுவூர் குமார் said...

நல்ல தகவல்.

பூங்குன்றன்.வே said...

வேலையற்ற இளைஞர்கள் பலன் பெற உதவும் நல்ல பதிவு.பாராட்டுக்கள் ரவி ..

ரவி said...

நன்றி புள்ளிராஜா.

நன்றி தமிழ்ஹோம்ரெசிப்பீஸ்

நன்றி வடுவூர் குமார்

பூங்குன்றன் வே, நன்றி..

venkat said...

தகவல் அருமை

ரவி said...

நன்றி வெங்கட்