தேடுதல் வேட்டை

Sunday, February 10, 2008

தகவல் தொழில்நுட்ப சுயதொழில் வாய்ப்புகள் (1) - புதிய தொடர்...

தகவல் தொழில்நுட்பத்துறையில் பணிபுரியும் பலநன்பர்களை நான் எப்போதும் கேட்கும் கேள்வி, வரும் காலத்தில் இந்த தொழில் படீரென்று விழுந்தால் என்ன செய்யப்போகிறாய் ? பொதுவாக வரும் பதில்...திருதிருவென்ற விழிப்புத்தான்...

இந்த துறை விட்டில்பூச்சியை போல குறைந்த ஆயுளோடு இருக்குமா, அல்லது ஆலமரம் போல நீண்ட ஆயுளோடு இருக்குமா என்று இந்த துறையில் பணியாற்றுபவர்களுக்கே தெரியாது...

பெரும்பாண்மையான முப்பதாயிரம் சம்பளம் வாங்குவார்கள்..ஆனால் இருபத்தைந்தாம் தேதி வந்தால், கிங்ஸில் இருந்து வில்ஸுக்கு மாறுவார்கள்....கடன் அட்டை, ஷாப்பிங் மால்கள், உயர்தர மொமைல், லேப்டாப், இண்டர்நெட்டு இணைப்புக்கு, மணிக்கணக்காக போடும் கடலைக்கான மொபைல் பில், வண்டிக்கு பெட்ரோல், வீட்டு வாடகை, முறைவாசல் என அவர்களும் நடுத்தர, மத்தியத்தர அரசு ஊழியர்போலவே இருக்கிறார்கள்...

நான் சொல்வது பெரும்பான்மையை...அட்வைஸ் மழை பொழியவில்லைங்க...ஆக்ச்சுவலா நடக்கிறதை சொன்னேன்...கண்டிப்பாக குடும்பத்துக்கு இரண்டு மாதம் ஒரு முறையோ ஆறு மாதம் ஒரு முறையோ, லோன் போட்டோ, பணத்தை சேர்த்தோ கொடுக்கிறார்கள், இல்லை என்று சொல்லவில்லை...

ஆனால் இதெல்லாம் எவ்வளவு காலத்துக்கு என்பதையும் சிந்திக்கவேண்டும்...தகவல் தொழில்நுட்பத்துறையில் சம்பாதிக்கும் பணத்தை வேறு உருப்படியான முதலீடுகள் செய்யவேண்டும் என்பது என்னுடைய வேண்டுகோள்...

சகோதரிகள் திருமணத்துக்காக மூன்றுலட்சம், நான்கு லட்சம் லோன் போடும் நன்பர்கள் உண்டுதான்...அவர்களை பொறுப்பில்லாதவர்கள் என்று நான் குற்றம் சுமத்தவில்லை, நீங்கள் சம்பாதிக்கும் பணத்தை முறையாக முதலீடு செய்யுங்கள் என்றுதான் சொல்ல வருகிறேன்...

என்னடா தகவல் தொழில்நுட்பத்துறையில் சுயதொழில் வாய்ப்புகளை பற்றி எழுதுகிறேன் பேர்வழி என்று கேப்டன் விஜயகாந்த மாதிரி அட்வைஸ் மழை பொழிகிறேன் என்று டருஜாவாதீங்க மக்கள்ஸ்...வடிவேலு கூட அட்வைஸ் செய்யும் காலம் இது...உங்கள் நன்பன், நான் செய்யக்கூடாதா...மன்னிக்கவும்..இனிமே கடிக்கல...தொடருக்கு (மேட்டருக்கு ) போயிருவோம்...

திரு.மா.சிவக்குமாரின் நன்பர் ஒருமுறை என்னை தொலைபேசியில் அழைத்து, இது குறித்து கேட்டார்...அவருக்கு நான் விளக்கிய விவரங்கள் முழுமையானது அல்ல எனினும், அந்த நிலையில் என்னுடைய பணிச்சுமை காரணமாக அவருக்கு முழு உதவியை தர இயலாது போனது...

அப்போதிலிருந்து, இதனை ஒரு முழுமையான தொடராக எழுதிவிட்டால் அனைவருக்கும் ( இந்த துறையில் இறங்க விரும்பும் அனைவருக்கும்) பயன் தருவதாக அமையுமே என்று எண்ணினேன்...

இந்த தொடர் யாருங்குங்க...கொஞ்சம் பார்க்கலாமா ?

பொதுவாக தகவல்தொழில்நுட்பத்துறையில் பணிவாய்ப்புகள் - இளம்பொறியாளர்களுக்கு அருகி வருகின்றன...ஒவ்வொரு ஆண்டும் கல்வி முடித்துவரும் பட்டதாரிகள் / பொறியாளர்களின் எண்ணிக்கை ஒரு காரணம்...தெருவுக்கு தெரு டீமுடு யுனிவர்சிட்டிகளும், முட்டுசந்துக்கு ஒரு பொறியியல் கல்லூரியுமாக தமிழகம் அதன் கல்வித்துறையில் உச்சத்தில் நிற்கிறது...

இது அல்லாமல், ஒரிஸ்ஸா, மத்தியப்பிரதேசம், ஆந்திரப்பிரதேசம் போன்ற பெரிய மாநிலங்களில் இருந்து பொறியியல் பட்டதாரிகளும், இளம்பொறியாளர்களும் சென்னைக்கு வந்து வேலைவாய்ப்புக்காக காத்திருக்கும் நிலை உள்ளது...அதனால், திறந்த நிலை போட்டி (open competition), ஆப் கேம்பஸ் (Off campus) போன்ற முறைகளில் இளம்பொறியாளர்களுக்கான போட்டித்தேர்வுகளில் நூற்றுக்கு இரண்டு பேருக்கு மட்டுமே பணிவாய்ப்பு கிடைக்கும் நிலை உள்ளது...

அந்த இருவரில் ஒருவர் மனிதவள மேம்பாட்டுத்துறையின் தலைவரின் மச்சினியாகவோ, மச்சானாகவோ இருக்க வாய்ப்புண்டு....அதுபோன்ற நிலையில் இளம்பொறியாளர்கள் சோர்ந்துவிடாமல் இதுபோன்ற சுயதொழில்களை நாடலாம்...

தகவல்தொழில்நுட்பத்துறையில் ஏற்கனவே உள்ளவர்கள், மனைவி கணிணி துறையில் பட்ட மேற்படிப்பு படித்திருப்பார்...இருந்தாலும் "வேண்டாம்மா...ஏன் கஷ்டப்படுற" என்று பாசத்தோடு வேலைக்கு அனுப்பாமல் வீட்டில் வைத்து இருப்பர்...

ஆனால் எனது அன்பு சகோதரிகளோ வீட்டில் டி.வி.டி பார்த்துக்கொண்டும், நல்ல தூக்கம் போட்டுக்கொண்டும், இணையத்தை மேய்ந்துகொண்டும் இருப்பார்கள்...அவர்கள் தாங்கள் படித்தது மறந்துபோகாமல் இருக்க அட்லீஸ்ட் இதுபோன்ற சுயதொழில்களில் இறங்கி, சம்பாதித்து, வீட்டுக்காரருக்கு சர்ப்ரைஸ் கொடுக்கலாம்...

பத்துவருடம் துபாயில் வேலை செய்துட்டேங்க...முடியல...குழந்தைகள், மனைவி, இவங்களை விட்டு இனிமே போகமுடியாது...(உங்க அன்புக்கு தலைவணங்கறேன் நன்பரே)...

நான் வேலை செய்தது வேற பீல்டு ( துறை), இருந்தாலும், கணினி அறிவு நிறையவே இருக்கு...எனக்கு ராணிப்பேட்டையிலோ, திருநெல்வேலியிலோ இருந்துக்கிட்டு மாசம் ஒரு ட்வெண்டி தவுஸன் சம்பாதிக்கறமாதிரி ஒரு ஐடியா சொல்லுங்களேன்...அப்படீங்கறீங்களா...சார்..எங்கேயும் போகாதீங்க...நான் சொல்றேன் உங்களுக்கு அய்டியா...ஓக்கே ?

என்னப்பா முன்னோட்டம், பீடிகை ரொம்ப ஓவரா கீதுன்றீங்களா ? சரி இத்தோட நிறுத்திக்குவம்...மக்களோட பின்னூட்டம் (Feedback) எப்படி இருக்குன்னு பார்த்துட்டு, மேலே தொடரலாம்....

13 comments:

வவ்வால் said...

//சரி இத்தோட நிறுத்திக்குவம்...மக்களோட பின்னூட்டம் (Feedback) எப்படி இருக்குன்னு பார்த்துட்டு, மேலே தொடரலாம்....//

செந்தழல்,

அட டா அப்போ இங்கே கும்மி அடிச்சா தான் தொடரை போடுவிங்களா(ரஜினி படம் ரேஞ்ச்சுக்கு எக்க சக்க எதிர்ப்பார்ப்ப கிண்டி விடுறிங்களே).... மக்கள்ஸ் கும்மினா ஓடி வருவாங்க , ஆனா இப்படிப்பட்ட பதிவுகளை எல்லாம் சைலண்ட் மோடில் படிச்சுட்டு போய்டுவாங்க எனவே , பின்னூட்ட எண்ணிக்கையை கணக்கில் வைத்துப்பார்க்காமல் உங்கள் அறிவை பகிர்ந்து , நாளு பேருக்கு உதவுங்க!

டைட்டில் சாங்க் மட்டுமே இம்மாம் பெரிசா போட்டா எப்படி ,.... மெயின் பிக்சரை காட்டுங்க ராசா :-))விசில் அடிச்சு தூள் கிளப்ப நான் ரெடி!

மோகன் said...

good article at the right time.as you have mentioned,many ppl in IT wants to see other options as the IT field is not stable.one more thingz,whoever been in this IT for more then 10 yrs,started feeling that,nothing much ahead to acheive.kind of saturation level they are in.
so ur article would help ppl who looks for other options......

உண்மைத்தமிழன் said...

தம்பீபீபீபீபீபீபீபீபீபீபீபீபீ
நல்ல விஷயத்தை ஆரம்பிச்சிருக்க.. பாடத்தைச் சொல்லிக் கொடுக்கத்தான் பட்டறிவு வேணும்.. துறையைப் பத்திச் சொல்றதுக்கு அனுபவ அறிவே போதுமானது..
ஆரம்பி..
அப்படியே எனக்கு ஏதாச்சும் 'மேல' போறதுக்கு வழியிருக்குமான்னு சொல்லு..
முயற்சி பண்றேன்..

Anonymous said...

மக்களோட தேவை எப்படி இருக்குன்னு தெரிஞ்சுக்கத்தான்...மேலும் டார்கெட் ஆடியன்ஸ் என்ன நினைக்கறாங்கன்னு தெரிஞ்சா இன்னும் நிறைய விஷயம் சேர்க்கலாமே..அதுக்குத்தான்...ஐயம் நாட் எக்ஸ்பெக்டிங் கும்மி ஹியர்...:)))

வெங்கட்ராமன் said...

/*****************************
திருநெல்வேலியிலோ இருந்துக்கிட்டு மாசம் ஒரு ட்வெண்டி தவுஸன் சம்பாதிக்கறமாதிரி ஒரு ஐடியா சொல்லுங்களேன்...அப்படீங்கறீங்களா...சார்..எங்கேயும் போகாதீங்க...நான் சொல்றேன் உங்களுக்கு அய்டியா...ஓக்கே ?
*****************************/
ஓக்கே ஓக்கே ஓக்கே

Anonymous said...

Start the meegic

Anonymous said...

Good. பயனுள்ள தொடர்...வாழ்த்துக்கள் ரவி!

Anonymous said...

ok.. good... for ur post... tell more and how to getting money from internet.......

Santhosh said...

Good Job Ravi Keep going. Dont expect too many comments or feedbacks.. basically namma alunga ethuku ellam comment poda matanga.. :))

Anonymous said...

it's very useful subject pls tell about that

Anonymous said...

தொடர்ந்து எழுதுங்கள். அனைவருக்கும் உபயோகமாக இருக்கட்டும்.

Gowtham.. said...

We are Hearing Impaired Students. So Can we do this job? Is it Suitable for us? Pls reply answer... I will be grateful for u from Hearing Impaired Students

CM ரகு said...

/*********
திருநெல்வேலியிலோ இருந்துக்கிட்டு மாசம் ஒரு ட்வெண்டி தவுஸன் சம்பாதிக்கறமாதிரி ஒரு ஐடியா சொல்லுங்களேன்
***********/
me too expecting this