இந்த அத்தியாயத்தில் பணிகளை வழங்கும் வலைமனைகளில் உங்களது கணக்கை உருவாக்கி, பராமரிப்பதை பற்றி படங்களுடன் சொல்கிறேன்....
அதற்கு முன்னால் உங்களுக்கான தகவல் / தகுதி விவரங்களை தனியாக ஒரு கோப்பில் வைத்துக்கொள்ளவேண்டும்...ஆங்கிலத்தில் ரெஸ்யூம் (Resume) என்று சொல்லப்படுவது இது தான்..பொதுவாக கணினி துறையில் உள்ள அனைவரிடமும் உள்ள கையேடு இது...
MS Word கோப்பாக வைத்துக்கொள்ளுதல் நலம்...இதற்கான நல்ல மாதிரிகள் தேவை எனில் ஏற்கனவே கணினி துறையில் உங்கள் நன்பர்களிடம் இருந்து பெற்றுக்கொள்ளுங்கள்...
பொதுவாக, இந்த விவரச்சீட்டில் உங்களது கல்வி,ஏற்கனவே செய்த தகவல் தொழில்நுட்ப துறை சார்ந்த - பணிகள் பற்றிய விவரங்கள், உங்களது சாதனைகள், உங்களது தொலைபேசி எண்கள், மின்னஞ்சல் முகவரிகள், உங்களால் இந்த துறையில் என்ன என்ன பணிகள் செய்யமுடியும் என்ற விவரங்கள், உங்களது பிற விருப்பங்கள் என முழுமையான தகவல்கள் இருப்பது சிறப்பு...
இதன் தேவை நீங்கள் இணையத்தில் பணிகளை ஏலம் எடுக்கும்போது கட்டாயம் உண்டு...உங்களது மின்னஞ்சலுக்கு பணிகளை அளிப்பவர் தொடர்புகொண்டால், உங்களை பற்றியதான அறிமுகத்தினை இந்த கோப்பு அழகாக வெளிப்படுத்தும்...
இந்த அத்தியாயத்தின் முக்கிய தலைப்பான "பணிகளை வழங்கும் வலைமனைகளில் உங்களது கணக்கை உருவாக்கி, பராமரிப்பதை" பற்றியதான விவரத்துக்கு வருகிறேன்...
ஏதேனும் ஒரு முக்கியமான வலைமனையை எடுத்துக்கொண்டு அதனை முழுமையாக விளக்கிவிடுகிறேன்...காரணம் நிறைய வலைமனைகள் ஏற்கனவே இருக்கின்றன, மேலும் பல வலைமனைகள் வரக்கூடும்...
இவையனைத்திலும் பணிகளை எடுப்பதற்கும், உதவி, தகவல் பக்கங்களுக்கும் ஒரே வார்த்தைகளை கொண்டு அமைத்திருக்க மாட்டார்கள்...வார்த்தைகள் / இணைய தளத்தின் அமைப்பு ஆகியவை கட்டாயம் மாறுபடும்...
என்னுடைய நோக்கம், இணைய தளத்தின் மூலம் பணிகள் ஏலம் எடுப்பது / முடிப்பது / பணம் பெறுவது பற்றிய முழுமையாக விளக்கம் கொடுக்கவேண்டும் என்பதே அன்றி, அனைத்து தளங்களின் செயல்பாடுகளை விளக்குவது அல்ல..
அதனால் முதலில் Elance.com என்ற இணைய தளத்தினை எடுத்துக்கொள்வோம்...இது இணையத்தில் பணிகளை ஏலம் விடுவதற்கும் / பெறுவதற்குமான வலைமனையாகும்...
இணையதளத்தின் முதல் பக்கம் இவ்வாறு இருக்கிறது...
இங்கே உள்ள பதிவு செய்க (Register) என்ற சுட்டியை க்ளிக்கவும்...பிறகு மேற்படி வலைமனை சொல்லும்வழி சென்று பதிவு செய்து உங்களது முதல் கணக்கை துவங்கவும்...
கீழே உள்ள படங்களை பார்வையிடுங்கள்...!!!!!!! ஈ-லேன்ஸ் வலைமனையின் உள்ளே செல்வது, உங்கள் கணக்கை உருவாக்குவது, உங்கள் பே-பால் கணக்கை இணைப்பது, மற்றும் உங்கள் தகவல்களை இணைப்பது வரை படங்களாக கொடுத்துள்ளேன்...
இங்கே நீங்கள் ஒரு தொழில் முனைவோராக பதிவு செய்யாமல் ஒரு தனிப்பட்ட நபராக பதிந்துகொள்ளுங்கள்...நீங்கள் உங்கள் பணி வாய்ப்பை தேடி இ-லேன்ஸ் வலைமனைக்கு வந்ததாக தெரிவியுங்கள்..(I want to find my work in elance)..
http://www.elance.com/p/help/provider/providerguide.html என்ற வலைப்பக்கத்தை திறந்து முழுமையாக தெரிந்துகொள்ளலாம்...சரியாக புரியவில்லை எனில் இதனை ஒரு பிரதி எடுத்து நன்றாக ஆங்கிலம் அறிந்தவர்களிடம் கொடுத்து விளக்கும்படி செய்யலாம்...
புரியாத விஷயங்களை கேட்டு அறிந்துகொள்வதில் தவறில்லை...கவுரவம் பார்த்துக்கொண்டு அதை அறிந்துகொள்ளாமல் இருப்பது தான் தவறு என்பது என்னுடைய கொள்கை...
கடைசியாக, இதெல்லாம் செய்தால் இணையத்தில் நிறைய சம்பாதிக்க முடியுமா, அப்புறம் ஏன் எல்லோரும் சம்பாதிக்கவில்லை என்று கேட்டார் ஒரு நன்பர் பின்னூட்டத்தில்...
ஒரு உதாரணம் சொல்கிறேன்...ஒரு வகுப்பில் பத்து மாணவர்கள் இருந்தால் பத்துபேருமா முதல் மதிப்பெண் பெறுகிறார்கள்...அந்த மாணவர்களில் சிறப்பானவர், திறமையானவர், நன்றாக உழைக்ககூடியவர் அல்லவா பெறுகிறார் ?
அப்போ எனக்கு ப்ராஜகட் எளிமையாக கிடைக்காதா என்று பயப்பட வேண்டாம்...தமிழரின் திறமையில் எனக்கு மிகுந்த நம்பிக்கை உள்ளது...எப்படிப்பட்ட டிரிக்ஸ்கள் உபயோகப்படுத்தி பணிகளை பெறுவது என்று நான் கூறுகிறேன்..
மேலும் இந்திய சேவைப்பணியாளர்களை தேடி வரும் நிறுவனங்கள் இந்த வலைமனைகளில் அதிகம் உள்ளன..இது போன்ற வலைமனைகள் பற்றி அறிந்தவர்களும் குறைவு...காற்றுள்ளபோதே தூற்றிக்கொள்ளலாம் வாருங்கள்...
அடுத்த பதிவில், சொந்த இணைய தளத்தை நிறுவி பராமரிக்கும் வழியை பற்றி பார்ப்போம்...என்ன வகையான மென்பொருட்கள் தேவை, எப்படி தன் கையே தனக்குதவியாக நமது இணைய தளத்தை நாமே பராமரிப்பது பற்றி விரிவாக பார்க்கலாம்...மேலும் இந்த தொடரின் முதல் அத்தியாயத்தில் வரையறை செய்த பல்வேறு வகை கேள்விகளின் பதில்களையும் பார்ப்போம்...மேலும் எப்படி விரைவாக உங்களது பணிகளை பெறுவது, என்ன ட்ரிக்ஸ் உபயோகப்படுத்தி சிறப்பான பெரிய பணிகளை பெற்று பணம் சம்பாதிக்கலாம் என்றும் சொல்கிறேன்..
டெய்ல் பீஸ் 1
கீழே கானும் தளங்கள் எல்லாம் இணையத்தில் அதிகபட்சமான பணிகளை ஏலம் விடும் முக்கிய வலைமனைகள்...
http://www.odesk.com
http://www.guru.com
http://www.getafreelancer.com
டெய்ல் பீஸ் 2
நீங்கள் உபயோகப்படுத்தும் வலை உலாவி கீழ்க்கண்டதாக இருக்கும்படி பார்த்துக்கொள்ளுங்கள்...
• IE 6.0
• IE 7.0
• Firefox 1.5
• Fierfox 2.0
• Safari 2.0
மற்ற வலை உலாவிகளை பயன்படுத்தும்போது இணைய-வழிப்பறி கொள்ளையர்களிடம் (Net Hakers) சிக்கி நீங்கள் செய்த பணிக்கான பணத்தை இழக்க வாய்ப்புள்ளது..
பி.கு: பதிவில் பல படங்களை கொடுத்துள்ளேன்....உங்களுக்கான கணக்கை உருவாக்குவதில் இருந்து, உங்களது தகவல் எப்படி வெளிப்படும் என்றும் காட்டியுள்ளேன்...என்னுடைய கணக்கில் சில தனிப்பட்ட தகவல்களை கருப்பு வர்ணம் பூசி மறைத்துள்ளேன்...அவை ஹிந்தியில் இருந்ததால் அல்ல, அவை உங்களுக்கு தேவை இல்லை என்பதால் மட்டுமே....பொறுத்தருள்க...
2 comments:
தகவல்களுக்கு மிக்க நன்றி நண்பரே. Data Entry மூலமாக வீட்டிலிருந்து பணம் ஈட்டும் தளங்களை பற்றி சொன்னால் மிகவும் உதவியாக இருக்கும்.
அன்புடன்,
நா.ஆனந்த குமார்
தகவல் தொழில்நுட்ப சுயதொழில் வாய்ப்புகள் (Part 5)
printed two times
Post a Comment