தேடுதல் வேட்டை

Tuesday, February 19, 2008

தகவல் தொழில்நுட்ப சுயதொழில் வாய்ப்புகள் (Part 6)

உங்களுக்கு ஒரு இணைய தள முகவரி வேண்டும்...www.mysoftwarecompany.com என்று தேர்ந்தெடுக்கலாம் என்று யோசித்து வைத்துள்ளீர்கள்...அந்த இணைய தளத்தை முன்பே யாரும் வைத்திருக்கிறார்களா என்று முதலில் தெரிந்துகொள்ளவேண்டும் அல்லவா ?

(Who Is he) ஹூ ஈஸ் ஹீ ? அப்படீன்னா " யார் அவர்" அப்படீன்னு அர்த்தம்...அட நீங்க எல்.க்கே.ஜி புள்ளை இல்லைங்க...இந்த அளவு அடிப்படையில் இருந்து சொல்லிக்கொடுக்கறதுக்கு...இணையத்துல ஹூ ஈஸ் அப்படீன்னு அடிச்சா யாரு வெப்சைட் ஓனர்னு கண்டுபிடிச்சிடலாம்..

www.whois.com என்ற இணைய வலைமனையில் சென்று உங்களுக்கு தேவையான முகவரியை வாங்கலாம் அல்லது உங்களது இணைய தள பெயர் முன்பே எடுக்கப்பட்டுவிட்டதா அல்லது இன்னும் அவெய்லபிள் ஆக உள்ளதா என்பதை காணலாம்...

நல்ல இணைய தளத்தை ரெஜிஸ்டர் செய்வது மிகப்பெரிய தொழிலாகும்...வண்டிக்கு பேன்ஸி நம்பர் போட்டுட்டுக்கொண்டு "கெத்" ஆக செல்லும் பணக்காரர்களைப்போல, சிறந்த வார்த்தைகள் கோர்க்கப்பட்ட இணைய தளங்களின் மதிப்பு சொல்லில் அடங்காது...

ஹாட்மெயில் (www.hotmail.com) என்ற இணைய தள முகவரியை ரெஜிஸ்டர் செய்தார் இந்தியாவை சேர்ந்த சபீர் பாட்டியா என்ற வடநாட்டுக்காரர்...உலக பெரும் பணக்காரரார் பில்கேட்ஸால் நடத்தப்படும் மைக்ரோசாப்ட் நிறுவனம் அதனை கிட்டத்தட்ட நானூறு கோடி விலைக்கு வாங்கியது.....

மொத்தமாக அந்த இணையதளத்தை உருவாக்க ஆயிரம் ரூபாயை சபீர் பாட்டியா செலவழித்திருப்பார்...பாருங்கள் அதன் மதிப்பை...



ஹூ ஈஸ் இணைய தளத்தில் இருந்து ஒரு படத்தை கொடுத்துள்ளேன்...

உங்களால் சொந்தமாக இணைய தளத்தை வாங்க / பராமரிக்க முடியவில்லை என்றால் அதனை கற்றுக்கொள்வதே தகவல் தொழில்நுட்ப சுயதொழிலின் முதல் படி...

ஆச்சு...வெப்சைட் வாங்கியாச்சு...ஆனால் அதில் கோப்புகளை இணைப்பது, சுயமாக மின்னஞ்சல்கள் உருவாக்குவது ( இணைய தளத்தை வாங்கும்போது அதில் இலவச இணைப்பாக இருபத்தைந்து மின்னஞ்சலாவது தருவார்கள்...உம்: உங்கள் இணைய தளம் www.madurai.com என்றால் pandiyan@madurai.com என்று நீங்கள் உங்கள் பெயரில் மின்னஞ்சல்களை உருவாக்கிக்கொள்ளலாம்..)

கஸ்டமர் கண்ட்ரோல் பேனல் என்று ஒன்றை தருவார்கள்...கடவுச்சொல் கொடுத்து உள்ளே சென்று உங்கள் இணையதளத்தை முழுவதும் நீங்களே பராமரித்துக்கொள்ளலாம்...



இணைய கண்ட்ரோல் பேனல் (Control panel) எப்படி காட்சியளிக்கும் என்பதை காட்ட ஒரு படம் கொடுத்துள்ளேன்...படத்தின் மேல் அழுத்தி பெரிதாக பார்க்கவும்...

சரி...இப்போது நமது கட்டுரையின் முக்கிய பகுதிகளுக்கு வருவோம்...சில முக்கிய விடயங்களை கேள்வி பதில் வடிவில் பார்க்கலாம்...

கேள்வி : டேட்டா எண்டரி, இணையத்தில் வீட்டில் இருந்தே சம்பாதிக்கும் தொழில்கள் போன்றவற்றில் பணப்பரிமாற்றம் முறையாக நடைபெறுமா ?

இணைய தளங்கள் முழுமையான பாதுகாப்பை வழங்குகின்றன...மேலும் பணிகளை ஏலம் எடுக்க வரும் நபர்களும் உங்களை ஏமாற்ற வேண்டும் என்று கங்கனம் கட்டிக்கொண்டு வருவதில்லை...அங்கொன்றும் இங்கொன்றுமாக சில சம்பவங்கள் நடைபெறத்தான் செய்கின்றன என்றாலும், அதன் சதவீதம் நூற்றுக்கு ஐந்து என்ற அளவிலேயே உள்ளது...எஸ்குரோ (escrow) அக்கவுண்ட் என்று ஒரு முறை உள்ளது...

நமது பணி ஆரம்பிக்கும் முன்பே பணி வாய்ப்பை வழங்குபவர் குறிப்பிட்ட தொகையை முதலீடு செய்யவேண்டும்...பணி நிறைவடைய நிறைவடைய, நாம் அந்த தொகையில் குறிப்பிட்ட பகுதியை அளிக்குமாறு கேட்கலாம்...பணியை வழங்குபவரும் குறிப்பிட்ட தொகையை திறந்துவிடுவார்...அதனை பெற்றுக்கொண்டு மேற்கொண்டு நமது பணியை தொடரலாம்...

நீண்ட கால அடிப்படையில் பணி வாய்ப்பை தேடுபவர்கள் எஸ்குரோவை கண்டிப்பாக பயன்படுத்துதலின் மூலம், நமக்கு வரவேண்டிய பணம் இருப்பதை உறுதி செய்துகொண்டு மன நிம்மதியுடன் பணியாற்றலாம்...

சுயதொழில் வாய்ப்புகளில் சம்பாதிக்க என்ன என்ன அடிப்படையான தேவைகள் ? என்னமாதிரியான தொழில் நுட்ப அறிவு தேவை ? தொழிற்கல்வி / இணையம் பற்றிய கல்வி / தகவல் தொழில் நுட்ப படிப்பு போன்றவற்றை படித்திருந்தால் தான் இது போன்ற தொழிலில் இறங்க முடியுமா ? அல்லது குறைந்த பட்ச கணிணி அறிவு போதுமானதா ?

கண்டிப்பாக ஆங்கில அறிவு தேவை...பெரிய தொழில்நுட்ப அறிவு ஒன்றும் தேவையில்லை எனினும், வெப் டிசைனிங், வெப்சைட் மானேஜ்மண்ட், எக்ஸெல் , வேர்ட், பி.பி.டி போன்றவைகளில் முறையாக பணியாற்ற தெரிந்திருக்கவேண்டும்...

அதைவிட சிறப்பான தகுதியாக நான் நினைப்பது, கூகுள், யாகூ போன்ற தேடுதளங்களில் தேவையான விவரங்களை உடனடியாக தேடி பெறும் திறமையையே...நமக்கு தேவையான விவரங்களை திரட்டித்தரத்தான் இந்த தேடுதளங்கள் உள்ளன...

ஆனால் எதையாவது தேடவேண்டும் என்றால் குப்பை போல பல ஆயிரக்கணக்கான தளங்களை நம் கண்முன்னே கொண்டு வரும் இந்த தேடுதளங்களில் இருந்து, நமது பணிக்கு தேவையான விவரத்தை அண்ணப்பட்சி போல் உறிஞ்சி எடுக்கும் திறமையே உண்மையான திறமையாகும்...

மேலும் என்னுடைய கருத்து, பணிக்கு தக்கவாறு திறமைகளை வளர்த்துக்கொள்வதே...வெப் டிசைனிங் தெரியும், ஆனால் வெப் சைட்டை டேட்டாபேஸ் உடன் இணைத்து தகவல்களை உள்ளீடு செய்ய தெரியாது என்றால் அதனை கற்க வேண்டும்...

சுருங்கச்சொல்லின், டேட்டா எண்டரி பணிக்கு, கணினையை இயக்க தெரிந்து நன்றாக டைப்படிக்க தெரிந்தால் போதும்...ஆனால் ஒரு தொழில் முனைவோராக மாறப்போகும் நீங்கள் கணிணி இணைய பணிகள், போட்டோஷாப், வெப் டிசை, லோகோ டிசைன், வெப் சர்ச்சிங் போன்ற அனைத்தையும்...அட...ஆதி முதல் அந்தமாக கற்றுக்கொண்டேடேடே இருத்தல் நலம்...

உங்கள் கல்வித்தகுதியை பார்த்து அல்லாமல் உங்கள் திறமையை பார்த்து பணிகளை தரும் துறை இதுங்க....

இந்த பணிகளை தனியாக செய்ய முடியுமா அல்லது குறைந்த பட்சமாக ஓரிரு உதவியாளர்கள் போதுமா ?

அது நீங்கள் எடுக்கும் ப்ராஜக்டை பொறுத்தது...ஒன்றிரண்டு பணிகள் மட்டும் எடுக்கிறீர்கள்...தனியாளாக இந்த தொழிலில் இருக்கப்போகிறீர்கள் என்றால் நீங்கள் மட்டுமே போதும்...ஆனால் உங்கள் பணிகள் அதிகரிக்க அதிகரிக்க ( பத்து பதினைந்து ப்ராஜக்ட்ஸ் எடுத்துட்டீங்கன்னு வெச்சிக்கோங்க...) அப்போது கண்டிப்பாக உங்களுக்கு பணிகளை பொறுத்து உதவியாளர்கள் வேண்டும்...

எவ்வளவு ஆரம்ப முதலீடாக இடவேண்டும் ? தொழிலில் இறங்கிய உடனே லாபம் கிடைக்குமா ? எவ்வளவு ஆண்டு வருமானம் கிடைக்கும் ?

ஆரம்ப முதலீடு, ஒரு இணைய இணைப்புடன் கூடிய ஒரு கணினி, மற்றும் ஒரு க்ரெடிட் கார்ட் ( இதற்கு ஒன்றும் செலவு ஆகாது, இலவசமாகவே ஐ.சி.ஐ.சி.ஐ, சிட்டிபாங்க், பாரத ஸ்டேட் வங்கி ஆகியவர்கள் தருகிறார்கள்)..

ஒரு பே-பால் அக்கவுண்ட் ( உங்கள் க்ரெடிட் கார்ட் வெரிப்பிக்கேஷனுக்கு ஒரு 3 டாலர் செலவாகும்)...நீங்கள் இரவில் கண்விழித்து இணையத்தில் ப்ராஜக்ட் தேடும்போது சூடாக ஒரு சாயா...

மொத்தத்தில் முப்பதில் இருந்து நாற்பதாயிரம் வரை செலவாகும்..பக்கத்து கம்ப்யூட்டர் செண்டரில் வெப் டிசைனிங், ஸ்போக்கன் இங்கிலீஷ் கோர்ஸ் சேர்ந்துகொண்டால் மேலும் ஒரு அய்ந்தாயிரம்....

அவ்வளவு தான்...தொழில் முனைவோராக உருவெடுக்க தயாராகிட்டீங்களே !!! நன்றி...!!!! இவ்வளவு நேரம் என்னுடைய தொடரை படிச்சதுக்கு...!!!!

டெயில் பீஸ்:

இணைய தளங்களை வாங்க விற்க என்று இணையத்தில் செயல்படும் ஒரு இணைய புரோக்கர் www.sedo.com நிறுவனத்தார், இவர்களின் ஆண்டு வருமானம் ஒரு மில்லியன் டாலர்கள்...

பின் குறிப்பு...

தகவல் தொழில் நுட்ப சுயதொழில் பற்றிய தொடர் நிறைவடைந்தது, உங்கள் கருத்துக்களை, கேள்விகளை என் முன்னால் வையுங்கள்...தொழில் ரகசியங்கள் என்று பெரிதாக ஒன்றும் இல்லை இந்த துறையில்...எல்லாமே எல்லாருக்குமே தெரியும்...Now You also know everything.....அவ்வளவு தான்...!!!!!!!!!!!!...Best Wishes...!!!!!!!!!!!

6 comments:

பகீ said...

You can use www.who.is instead of www.whois.com. This is a web 2.0 site.

And one more thing, If you are thinking of buying a small or medium size web hosting, just contact me.

Thanks.

(PS : Senthalal ravi anna, If you think the second part is not appropriate to publish, don't publish this comment. Thanks)
Sorry not to be in tamil.

கழுகு said...

நல்ல கட்டுரை. என்னைபோல சுய தொழில் தொடங்க வேண்டும் என்ற ஆர்வம் மிக்கவர்களுக்கு வழிகாட்டியாக இருக்கும். உங்கள் பனிக்கும் பனி தொடரவும் வாழ்த்துகள்

Anonymous said...

தோழர் ரவி அவர்களுக்கு இருக்கும் நல்ல மனசு அவ்வளவு சீக்கிரம் யாருக்கும் வராது. அவரின் மெயில் ஐடி இருந்தா கொடுங்களேன். ஒரு தேங்ஸ் சொல்லணும் அவ்வளவுதான்.

ராஜிவ் காந்தி.M said...

அக்கவுண்ட் கார்ட் மட்டும் போதுமா. க்ரெடிட் கார்ட் கண்டிப்பா வேணுமா?

Unknown said...

i want homebased computer job.i know typewriting only.please contact. email:cmkanagaraj1983@gmail.com.cell:9345378147

Chennai boy said...

ரவி சார் மிகவும் உபயோகமான தகவல்களை எங்களுடன் பகிர்ந்து கொண்ட உங்களுக்கு என் நன்றிகள். நான் ஒரு தளத்தில் பதிவு செய்து தாங்கள் சொல்லியபடி முயற்சி செய்தேன். ஆனால் சாதாரண வேலைக்கே பயங்கர போட்டியாக இருக்கிறதே? என்ன மாதிரி கத்து குட்டிகள் இவற்றை எல்லாம் மீறி ஜெயிப்பது எப்படி. தயவு செய்து இலகுவாக வேலை கிடைக்க கூடிய வலைத்தளங்கள் இருந்தால் சொல்லுங்களேன்.(எதுவுமே இலகுவாக கிடைக்காது) நான் இப்போது வேலை இழந்து நிற்கிறேன். நல்ல ஆலோசனைகள் கொடுக்கவும். நன்றி.