தேடுதல் வேட்டை

Tuesday, February 12, 2008

தகவல் தொழில்நுட்ப சுயதொழில் வாய்ப்புகள் (Part 4)

சென்ற அத்தியாயத்தில் மின்னஞ்சலை உருவாக்குதல், ஏன் முழுநேர இணைய இணைப்பு வேண்டும், கடன் அட்டை ஏன் வேண்டும், பே-பால் கணக்கு ஏன் வேண்டும், எப்படி உருவாக்குவது போன்றவைகளை பார்த்தோம்...

இப்போது இந்த பதிவில், சொந்தமாக இணையதளம் உருவாக்குவது, பராமரிப்பது போன்றவைகளை தொட்டுச்செல்லலாம்...மேலும் இணைய தளங்களில் சுயதொழில் பணிகளை ஏலம் விடும் தளங்களில் நமக்கான கணக்கை உருவாக்குவதையும், நம்முடைய விவரங்கள் அங்கே எப்படி காட்சியளிக்கவேண்டும் என்பதையும் காணலாம்...

சொந்த இணையதளம் - ஏன் வேண்டும் ?

தகவல்தொழில்நுட்ப சுயதொழிலில் உள்ள அனைவருக்கும் சொந்தமாக இணைய தளம் கண்டிப்பாக இருக்கும்...இணைய தளம் இல்லாதவர்களும் இந்த தொழிலில் இருக்கத்தான் செய்கிறார்கள்...ஆனால் இணைய தளம் வைத்திருப்பவர்கள், தங்கள் இணையதளத்தில் தாங்கள் என்ன விதமான பணிகளை செய்யமுடியும் (Services), தங்களுடைய சேவையை பெற்ற நிறுவனங்கள் யாவை (Clients), தங்களை எப்படி தொடர்புகொள்ளலாம் (Contact Information) போன்ற தகவல்களை அளிக்கலாம்.....

காதை கிட்டே கொண்டுவாங்க தோழரே...ஒரு ரகசியம் சொல்றேன்...பொதுவாக பணிகளை ஏலம் விடும் தளங்களில் நாம் ஏலம் கேட்கும்போது, நமது மின்னஞ்சலை சேவையை பெறும் நபர்கள் / நிறுவனங்களிடம் வெளிப்படையாக அறிவிக்க முடியாது...ஏன் என்றால் இந்த இணைய தளங்கள் மின்னஞ்சலை வெளிப்படையாக காட்டினால் நிறுவனங்கள் - சேவை அளிப்பவர்களை நேரடியாக தொடர்புகொண்டுவிடுவார்களே...

அதன் பிறகு சேவைகளை ஒழுங்குசெய்து ஒட்டுமொத்தமாக பட்டியலிடும் இணைய தளத்துக்கு வேலை இல்லாமல் போய்விடுமே...இன்னும் எளிமையாக சொன்னால் TOLET போர்டை பார்த்து நேரடியாக வீட்டு உரிமையாளரை வாடகைக்கு வருபவர் தொடர்புகொண்டால் வீட்டு புரோக்கர் நிலை ? இங்கே வீட்டு உரிமையாளர் நீங்கள்...வீடு தேடுபவர், உங்களுக்கு பணிவாய்ப்பை அளிக்கும் நிறுவனம்...வீட்டு புரோக்கர்: சேவைகளை ஒழுங்கு செய்யும் இணைய வலைமனைகள்..(உதாரணம்: getafreelancer.com, elance.com, guru.com)...

இப்போது தெளிவாக புரிந்திருக்கும் உங்களுக்கு...ஆனால் சொந்த இணைய தளம் வைத்திருப்பதற்கும், இந்த வீட்டு புரோக்கர் கதைக்கும் என்ன சம்பந்தம் ? இதென்ன கட்டைவண்டிக்கும் குட்டைப்பையனுக்கும் முடிச்சுபோடும் கதையாக உள்ளதே என்கிறீர்களா ? இருக்கிறது...சம்பந்தம் இருக்கிறது...

வீட்டு உரிமையாளர் வைக்கும் TOLET போர்டை எந்த வீட்டு புரோக்கராவது விரும்புவாரா ? அவரது தொழிலை பாதிப்பதே இந்த ஐந்தெழுத்து போர்டு தானுங்களே ? வீட்டு உரிமையாளருக்கும் வீட்டைத்தேடுபவருக்கும் நேரடியாக சம்பந்தம் ஏற்ப்படுத்தும் இந்த டுலெட் போர்ட் போலத்தான் சேவை அளிக்கும் நீங்கள் உங்கள் மின்னஞ்சலை சேவையை கேட்கும் நிறுவனங்களிடம் நேரடியாக அளிப்பது...

இதனை இந்த இணைய தளங்கள் (getafreelancer,elance,guru) போன்றவை கட்டாயம் தடுக்கும்...உங்கள் மின்னஞ்சலை நேரடியாக கொடுப்பதை மென்பொருள் நிரலிகளின் மூலம் (software coding) தடுப்பதோடு அல்லாமல், அடிக்கடி இணைய தளத்தை பார்வையிட்டு, மின்னஞ்சல் வழங்குவதை தடுத்துவிடுவார்கள்...

இங்கேதான் உங்கள் சொந்த இணைய தளம் உங்களுக்கு துணைபுரியப்போகிறது...உங்கள் சொந்த இணைய தளத்தில் உங்களது தொடர்புக்கான மின்னஞ்சல், தொலைபேசி போன்றவை இருந்தால், சேவை வழங்கும் நிறுவங்கள் உங்களை நேரடியாக தொடர்புகொள்ள வசதியாக இருக்கும்தானே...

சொந்த இணைய தளம் வைத்திருத்தலின் அவசியமான காரணம் இது என்பேன் நான்...மேலும் சில பயன்களும் சொந்த இணைய தளத்தில் உள்ளன...எல்லாவற்றையும் தொகுத்து தருகிறேன், பாருங்கள்...

1. சொந்த இணைய தளத்தில் உங்கள் சேவை திறன்களை பட்டியலிடலாம்...எடுத்துக்காட்டாக நீங்கள் Data Entry துறையில் சிறப்பானவர் என்றால் ஏற்கனவே நீங்கள் செய்த பணிகள் பற்றி சொல்லலாம்...

2. உங்கள் பணியிடம், பணியாளர்கள் திறன்கள் பற்றி புகைப்படம், அறிவிக்கைகள் மூலம் சொல்லலாம்...இது சேவையை உங்களிடம் வழங்குபவர்களிடம் ஒரு நம்பிக்கையை ஏற்ப்படுத்தும்...

3.உங்களது தொடர்பு எண் / மின்னஞ்சல் / முகவரி ஆகியவற்றை வெளியிடலாம்..

4.First Impression is the Best Impresstion என்று ஆங்கிலத்தில் சொல்லுவார்கள்..உங்கள் சொந்த வலைத்தளத்தின் அழகான, நேர்த்தியான வடிவமைப்பு மூலம் சேவை வாடிக்கையாளரை கவரலாம்..

(கூடுமானவரை, யார் உதவியையும் நாடாமல் நீங்களே இந்த வடிவமைப்பை செய்யவேண்டும் என்பது என்னுடைய அன்பான வேண்டுகோள்)

5.நீங்கள் ஏற்கனவே செய்த பணிகளின் பட்டியல், உங்கள் திறமைகளின் பட்டியல், உங்கள் வேலை நேரம், உங்களது குறைந்த செலவில் அதிக சேவையை தரும் திறன், உங்களது இணைய இணைப்பு போன்றவற்றை விரிவாக சொல்லலாம்...

உங்களை சொந்த இணைய தளம் உருவாக்க சொல்லிவிட்டென்...ஆனால் இதற்கு எவ்வளவு செலவாகும் என்று சொல்லி கட்டுரையை முடித்துக்கொள்கிறேன்...நீங்களே உங்கள் இணைய தளத்தை வடிவமைத்து பராமரித்துக்கொள்வீர்கள் என்றால் ஒரு ஆண்டுக்கு 500 ரூபாயில் இருந்து 1000 ரூபாய் வரை ஆகும்...(ஒவ்வொரு ஆண்டும் இணைய தளத்தை ரினியூவல் செய்யவேண்டும் - பிரிபெய்ட் மொபைலை ரீசார்ஜ் செய்வது போல்)

இணைய தள சேவை வழங்கும் நிறுவனமே உங்கள் வலைப்பக்கங்களை வடிவமைக்க வேண்டும் என்றால், உங்கள் தேவைக்கேற்ப, அந்த நிறுவனத்தின் உழைப்புக்கேற்ப தொகை மாறுபடும்...கூடுமானவரை எளிமையானதாகவும் அழகாகவும் உங்கள் வலைப்பக்கம் இருக்கும்படி பார்த்துக்கொள்ளுங்கள்...நீங்கள் வடிவமைத்தாலும் சரி, உங்கள் நன்பர் வடிவமைத்தாலும் சரி, உங்கள் இணையதள சேவை வழங்குபவர் வடிவமைத்தாலும் சரி...

டெய்ல் பீஸ்: NDA என்றால் என்ன ? நான் டிஸ்க்லோஸர் அக்ரீமெண்ட் என்பதாகும்...இது சேவையை வழங்குபவருக்கும் சேவை செய்பவருக்கும் இடையே ஏற்படுத்தப்படுவதாகும்...அதாவது சேவையை வழங்கும் நிறுவனத்தை பற்றியோ, அதன் செயல்பாடுகள் பற்றியோ நான் எங்கும் வெளியிடமாட்டேன் என்ற உறுதிமொழியை சேவை செய்பவர் (அதுதான் நீங்கள்) ஏற்பதாகும்...

நீங்கள் சொந்த இணைய தளம் உருவாக்க என்ன செய்யலாம்....ம்ம்ம்..இவரை தொடர்புகொள்ளலாம்...webmediaconsultant@gmail.com (திரு.ஓசை செல்லா). கோவையை சேர்ந்த செல்லா இணைய தளம் உருவாக்குதல் மற்றும் வடிவமைத்தல் பணிகளை செய்துவருகிறார்...என்னுடைய சொந்த இணைய தள சேவையை வழங்குபவர் திரு.செல்லா அவர்கள்...அவரது தொ.பே. எண் : 09994622423.

கட்டுரை பற்றி உங்கள் கருத்துக்களை தெரிவியுங்கள்...!!!!!!!!!!!!! கட்டுரையை மெருகேற்ற உங்கள் ஆலோசனைகளை தெரிவியுங்கள்...என்னுடைய மின்னஞ்சல் முகவரி : ravindran@lge.com

கட்டுரை கொஞ்சம் நீண்டுவிட்டது...அடுத்த கட்டுரையில், பணிகளை வழங்கும் வலைமனைகளில் உங்களது கணக்கை உருவாக்கி, பராமரிப்பதை பற்றி படங்களுடன் சொல்கிறேன்...

5 comments:

வடுவூர் குமார் said...

படங்களுடன் சொல்கிறேன்...

காத்திருக்கோம்.

அழகிய தமிழ்க் கடவுள் said...

நண்பரே,
தமிழ்மண முகப்பில் இன்றைய பதிவுகளை வாசித்து வரும் போது உங்கள் பதிவைக் கண்டேன் . மிகவும் உபயோகமான பதிவு. நன்றி! மேலும் தொடர வாழ்த்துக்கள்....
என்றும் பசுமையான நட்புடன்,
அழகிய தமிழ்க் கடவுள்.

உண்மைத்தமிழன் said...

தம்பி.. படித்தேன்.. படித்தேன்.. படித்தேன்..

மிக்க நன்றி..

அப்படியே செல்லாவோட பீஸ் எவ்வளவுன்னு கேட்டுச் சொன்னா நல்லாயிருக்கும்..

இத்துப்போன ரீல் said...

உங்கள் தொடர் மிகவும் பயனுள்ளதாக
இருக்கிறது.blogspot,googlepages
போன்றவைகள் தரும் வலைப்பக்கங்களை பயன்படுத்தலாமா?

Anonymous said...

கண்டிப்பா கூகிள்பேஜஸ், பிலாகர், வேர்ட் பிரஸ் போன்ற இலவச தளங்களையும் பயன்படுத்தலாம்...

நம்மக்கிட்ட இருக்க சரக்கு தான் முக்கியம்...

அதை எப்படி சொல்றோம் என்பது முக்கியம் இல்லை...