தேடுதல் வேட்டை

Thursday, April 12, 2007

வேலைத் தேடுறீங்களா?

வேலைத் தேடுறீங்களா? உங்களுக்காக இங்கே ஒரு பதிவு.


நெடுநாளாக எழுத நினைத்த பதிவு, ரவி என்னை அவரின் இந்த க்ரூப் ப்ளாகில்
சேர சொன்னவுடனே எழுதியிருக்க வேண்டியது. முதலில் சாப்ட்வேர் கம்பெனிகளில் சேர என்ன என்ன செய்ய வேண்டும் , எப்படி எல்லாம் உங்களை தயார் படுத்த வேண்டும் என்பதை சொல்லி விடுகிறேன், அப்புறம் எப்படி வேலைத் தேட வேண்டும் என்று சொல்கிறேன்.(இதையே எத்தினி தபா எழுதுறீங்கன்னு கேட்குறீங்களா? இது வழக்காமானது போல இருக்காது, படிச்சு பாருங்க).


தமிழ் வலை மக்களே உங்கள் கருத்துக்களையும் ,என் தவறுகளையும்
சொல்லுமாறு கேட்டுக் கொள்கிறேன்.


--------------**********--------------


1. வேலைத் தேடுறீங்களா?



நான் படித்த காலத்தில்(2001-2004) சாப்ட்வேர் கம்பெனிகளை பற்றிய அறிவு
எங்களுக்கு ரொம்பவே குறைவு.பிரபலமான ஒரு சில கம்பெனிகளை தவிர வேறு
கம்பெனிகளின் பெயர்கள் கூட தெரியாது.அப்போது வாய்ப்புகள் மிக குறைவு,
ஆன் கேம்பஸ் எனப் படும் தேர்வுகளும் புகழ் பெற்ற கல்லூரிகளில் மட்டுமே
நடைப்பெறும்.


அந்த மாதிரி வேறு காலேஜில் நடக்கும் ஆன் கேம்பஸ்(ஆப் கேம்பஸ்
எங்களுக்கு)தேர்வுகளில் வெளிக் கல்லூரிகளில் இருந்து மிகச் சொற்பமாகவே
மாணவர்களை தேர்வு செய்ய படுவார்கள்.


ஏனெனில் அந்த கல்லாரிகள் பெரும் செலவு செய்து கம்பெனிகளை தங்கள்
கல்லூரிக்கு அழைத்து வந்திருக்கும்.அவர்களுக்கே முன்னுரிமை,இதில் அந்த
கல்லூரிக்கு ஏற்கெனவே பிரபல சாப்ட்வேர் கம்பெனிகள் வந்திருந்தால்
இவர்கள் பொறாமையால் அந்த கல்லூரியிலிருந்து குறைவான மாணவர்களையே
எடுப்பர்.


அந்த கம்பெனிக்கும் , கல்லூரிக்கும் ஒரு உடன்படிக்கை இருக்கும். இதே
போல் தான் அண்ணா யுனிவர்சிட்டிக்கும் , மைக்ரோசாப்டுக்கும் உடன்படிக்கை
இருக்கிறது.

நகர புறங்களில் உள்ள கல்லூரியிலிருந்து மட்டும் மாண்வர்களை தேர்ந்தெடுக்கும் நிலை மாறி , இன்போசிஸ் போன்ற கம்பெனிகளின் முயற்சியால் எல்லா நகர , கிராமாங்களில் படிக்கும் மாணவர்களும் ஆப் கேம்பஸ் என்ற முறையில் தேர்ந்தெடுக்க படுகிறார்கள்.


அடுத்த வாரம்-கல்லூரியிலேயே உங்களை தயார் செய்தல்.

No comments: