தேடுதல் வேட்டை

Monday, February 11, 2008

தகவல் தொழில்நுட்ப சுயதொழில் வாய்ப்புகள் (Part 2)

இந்த பதிவில் தகவல் தொழில்நுட்ப சுயதொழில் முனைவோருக்கான (Freelance Providers in IT Industry) அடிப்படை தேவைகள் (Basic Needs) என்ன என்ன என்று பார்ப்போம்...இவற்றில் சில விடயங்கள் உங்களுக்கு ஏற்கனவே தெரிந்திருக்கும், அல்லது முழுமையான அறிவு இருக்கும்...

கணிணி துறையில் பொட்டி தட்டும் உங்களில் சிலருக்கு சில விடயங்கள் "டப்பா" போல் தோன்றினாலும், எளிமையாக சொல்வதன் மூலம் பலரை சென்று சேர்வது தான் இந்த தொடரின் நோக்கம்...அதனால் ஏற்கனவே "பொட்டி" தட்டும் அன்பர்கள் மன்னித்து, பொறுத்தருளவேண்டும்...

மேலும் நான் ஏதாவது உளறல்ஸ் செய்தால், உடனடியாக "பஞ்ச்" கொடுக்கவும் தயங்கவேண்டாம் தோழர்களே....

சரி பேக் டு மேட்டர்...கீழே காணும் இவை தான் அடிப்படை தேவைகள்...பார்த்துக்கொள்ளுங்கள்..விரிவான விவரம் அடுத்த பதிவில் பார்க்கலாம்...

1.அட்டையுடன் கூடிய வங்கி கணக்கு (Bank A/C with Debit Card) அல்லது கடன் அட்டை (Credit Card) - இது கட்டாயமான ஒன்று (Mandatory)...இணையத்தில் பணப்பரிமாற்றம் செய்ய / பே-பால் கணக்கு உருவாக்க என இவை தேவைப்படும்...

2.மின்னஞ்சல் பயனர். (இ-மெயில் ஐடி கட்டாயம் இருக்கவேண்டும். மேலும் இந்த மின்னஞ்சலை கண்ட கண்ட இடத்தில் கொடுத்துவைக்காமல் இருக்கவேண்டும்.. (புதிய கணக்காக உருவாக்கிக்கொள்ளவேண்டும்)

3.பே பால் அக்கவுண்டு (an Account from Pay-Pal) - இது என்ன, எப்படி உருவாக்குவது என்பதை பின்னால் பார்க்கலாம்...

4.முழு நேர இணைய இணைப்பு. (24 hours Internet). இதனை கட்டாய தேவை என்று சொல்ல முடியாவிட்டாலும், முழு நேர இணைய இணைப்பு கண்டிப்பாக நல்ல பலன் தரும்..

5.என்ன வகையான பணிகளை செய்து பொருளீட்டப்போகிறீர்கள் என்று ஒரு ப்ரொபைலை வரையறுத்துக்கொள்ளுங்கள்...(Create a Resume). அடிப்படை கணினி அறிவு மட்டும் பெற்றவர் எனில் அதற்கு தகுந்தது போல உருவாக்கிக்கொள்ளுங்கள்...உங்களால் ஒரு இணைய தளத்தை வடிவமைக்க முடியும் எனில் அதற்கு தகுந்தது போல உருவாக்கிக்கொள்ளுங்கள்...பின்னால் வரும் பதிவுகளில் இதற்கான மாதிரி வடிவமைப்பை தருகிறேன்...இதில் உங்கள் சொந்த வலைப்பதிவு அல்லது சொந்த இணையத்தளம் (Own website) இருந்தால் இன்னும் சிறப்பு...

6.பணிகளை தரும் இணைய தளங்களில் கணக்கு www.getafreelancer.com, www.elance.com ஆகிய இரு தளங்களில் முதலில் ஒரு கணக்கை உருவாக்கிக்கொள்ளுங்கள்....இந்த தளங்களில் உள்ள உதவி பக்கங்களை (Help pages) நன்றாக படித்து தெளிந்துகொள்ளுங்கள்...

https://www.getafreelancer.com/news/articles.html
http://www.elance.com/p/help/index.html

7. ஓக்கே...இப்போது நாம் நமது சொந்த நிறுவனத்தை உருவாக்கலாமா ? ஆமாம்...உங்கள் நிறுவனத்தை உருவாக்குங்கள்...ஒரு இணைய தளத்தை உருவாக்குங்கள்...அதற்கான பெயரை தேர்ந்தெடுங்கள்...இனைய தளத்தை wordpress, blogger போன்ற இலவச போர்ட்டல்களிலும் உருவாக்கலாம்...அல்லது இணைய தளம் உருவாக்கித்தரும் தொழிலில் உள்ளவர்களை / அல்லது நல்ல அறிவு பெற்றவர்களை தொடர்புகொண்டு (உதாரணம் : ஓசை செல்லா / ரவிஷங்கர் கண்ணபிரான்) உங்கள் வலைப்பக்கத்தை உருவக்குங்கள்...உங்கள் வலைப்பக்கத்தை நீங்கள் தான் உருவாக்கவேண்டும்...சரியா...சொந்த வலைப்பக்கமாக இருந்தால் (உதாரணம் www.mypage.com) நல்ல வரவேற்பு இருக்கும்...ஒரு வலைப்பக்கத்தை உருவாக்குவது எப்படி என்பது பற்றி பின்னால் எழுதுகிறேன்...மொத்தமாக 500ல் இருந்து 1000 ரூபாய்க்குள் முடிந்துபோகிற சங்கதி இது...

8. ரெடி ஸ்டார்ட் மியூஸிக்...இனிமே நீங்கள் பணிகளை ஏலம் விடும் இணைய தளங்களில் சென்று நேரடியாக பணிகளை ஏலத்தில் கேட்கலாம்...என்ன ஏலமா என்று அதிராதீர்கள்...ஏலம் தான்...பணிகள் மொத்தமாக கொட்டிக்கிடக்கும்...உங்களுடைய அறிவு / வாய்ப்புகளை பொறுத்து, தகுதிவாய்ந்த ப்ராஜக்டுகளை நீங்கள் ஏலம் கேட்கலாம்.....ஏலம் விடுபவர் விரும்பினால் உங்களுக்கே அந்த பணி கிடைக்கும்...அந்த பணியை நிறைவேற்றி பணத்தை பெறலாம்...

மேலும் பின்னால் வரும் அத்தியாயங்களில் நான் எழுதப்போவது இவைகள் தான்..

1. பணியை செய்துமுடித்தபின் பணத்தை கொடுக்காமல் ஏமாற்றினால் என்ன செய்வது ? எனக்கு பாதுகாப்பு இருக்கிறதா ?
2. எப்படி ப்ராஜக்டை வெல்வது (பொதுவாக) உங்களுக்கு ப்ராஜக்ட் கிடைக்கிறது என்பதை விட, ப்ராஜக்டை ஜெயிப்பது என்றே ஆங்கிலத்தில் சொல்கிறார்கள்..(Winning the bid / Project)..ஏன் என்றால் ப்ராஜக்டை ஜெயித்து நீங்கள் வெற்றிகரமாக முடித்தால் உங்களுக்கு பெரும் தொகை அல்லவா வரப்போகிறது ?
3. பணிகள் எளிதாக கிடைக்குமா ? இந்த தொழிலில் ஏற்கனவே யாரும் இல்லையா என்ன ? போட்டி இருக்கிறதா ? எனில் எப்படி ?

7 comments:

வடுவூர் குமார் said...

நூல் புடிச்சி கரெக்டா கொண்டு போறீங்க.
தொடருங்கள்...

வவ்வால் said...

செந்தழல் ,

இப்போதான் சூடு பிடிச்சு இருக்கு... அடுத்த எபிசோடிற்காக வெயிட்டிங்!நல்லா சரளமாக போகுது பதிவு.

Santhosh said...

you can get projects from the site www.guru.com also.

Anonymous said...

தொடர் பயனுள்ளதாக உள்ளது. இத் தொழிலை எந்த நாட்டிலிருந்தும் செய்யலாமா.சந்தேகத்தைத் தெளிவுபடுத்துவீர்கள் என நம்புகிறேன்.

Expatguru said...

Great Post! By the way, Paypal requires a credit card, they do not accept debit cards.

Anonymous said...

Hi,
Thank you for the information about freelance projects.I just started looking free lance projects.I think this article would be really helpful to me.

Thanks

Unknown said...

மிக மிக உபயோகமுள்ள பதிப்பு ...

நான் கணினி நிபுணன் இல்லை என்றாலும்... நான் சாரிந்து இருப்பது கணினி வழி வியாபாரத்தை....

பே பால் கணக்கு தொடங்குதல்,முதற்கொண்டு நீங்கள் கூறுவது அனைத்தும் வருங்கால உலகின் அத்தியாவசிய காராணிகள்...

பகிர்தலுக்கு நன்றி