தேடுதல் வேட்டை

Saturday, March 24, 2007

இண்டர்வியூவை எதிர்கொள்ளுங்கள் - 1

வேலை தேடும் இளைஞர்களுக்கான பகுதி இது. இன்டர்விவில் பொதுவாக கேட்கப்படும் கேள்விகள், அதற்கான புத்திசாலித்தனமான பதில்கள் போன்றவற்றை தொடர்ந்து இப்பகுதியில் காணலாம்.

 

1. உங்களுக்கு சொந்தமாக தொழில் தொடங்கும் எண்ணம் உள்ளதா?

 

`இவங்ககிட்ட வேலை கேட்டு வந்தா நம்ம பத்து பேருக்கு வேலை கொடுப்பமான்னு கேட்கிறாங்களேன்னு' குழம்பி விடக்கூடாது. இதற்குள் இரண்டு விதமான பொருள் பொதிந்திருக்கலாம். ஒன்று - உங்களது கனவு எவ்வளவு பெரியது என்பதை தெரிந்து கொள்வது. அதாவது தனியாக நிறுவனம் தொடங்கும் கனவில் இருப்பவருக்கு கண்டிப்பாக தலைமை பண்பு இருக்கும். எனவே அதனை கண்டறிவதற்காக கேட்கலாம்.

 

இரண்டு - இவன் கொஞ்சநாள் கழித்து நமது நிறுவனத்தை விட்டு சென்று விடுவானோ என்ற பயம்தான் காரணம்.

 

அதனால் உங்களை கேள்வி கேட்பவர் எதனை அடிப்படையாக மனதில் கொண்டு கேட்கிறார் என்பதை பொறுத்து பதில் அளியுங்கள். முதலில் சொல்லப்பட் டதுதான் காரணம் எனில் தைரியமாக உங்களின் சுயதொழில் கனவுகளை பகிர்ந்து கொள்ளுங்கள். தப்பில்லை. அது உங்களின் மதிப்பை உயர்த்தும்.

 

இரண்டாவதாக சொல்லப்பட்டதுதான் காரணம் எனில், அப்படியே `அந்தர்பல்டி' அடியுங்கள். சுய தொழில் தொடங்கும் அளவிற்கு `ரிஸ்க்' எடுக்கும் எண்ணம் இல்லை என்பதை விளக்குங்கள். இப்படி சொல்லிவிட்டு கேள்வி கேட்பவரின் முகத்தைப் பாருங்கள் நம்பிக்கை ஒளி தென்படும்.

 

2. திருமணம் செய்து கொள்வீர்களா? அப்படி செய்துகொண்டால் எத்தனை குழந்தைகளைப் பெற்றுக் கொள்வீர்கள்?

 

இது போன்ற கேள்விகளுக்கு `தேவையற்ற கேள்விகள்' என்று பெயர். உங்களது மனைவி என்ன செய்கிறார்? உங்களுக்கு தீராத நோய் எதாவது உள்ளதா? நீங்கள் எந்த அரசியல் கட்சியை சேர்ந்தவர்? போன்ற கேள்விகளும் இதே வகையைச் சேர்ந்ததுதான். வேலையின் செயல்பாட்டிற்கு சம்பந்தமேயில்லாத இதுபோன்ற கேள்விகளை சில சமயம் எதிர்கொள்ள வேண்டிவரும். இதற்கு பதிலளிப்பது கத்தி மேல் நடப்பது போன்றது.

 

சில சமயங்களில் பதிலளிக்கவும் முடியாது, பதிலளிக்காமல் இருக்கவும் முடியாது. உங்களின் தனிப்பட்ட கருத்துக்கள், திட்டங்கள் ஒருவருக்கு பிடிக்கலாம், மற்றொருவருக்கு பிடிக்காமலும் போகலாம். சாதகமும், பாதகமும் கலந்திருப்பதால் இரண்டு பக்கமும் சேதாரம் ஆகாமல் பதிலளிக்கலாம். உதாரணமாக, எந்தக்கட்சியை சேர்ந்தவர் நீங்கள்? என்ற கேள்விக்கு, "நடுநிலையானவன் அல்லது கட்சியில் எல்லாம் ஆர்வம் இல்லை'', எனப் பதிலளிக்கலாம். `குழந்தைகள் பெற்றுக் கொள்வது சம்பந்தமாக தற்போதைக்கு எந்த திட்டமும் இல்லை', என்று பதிலளிக்கலாம். (திட்டங்கள் என்றாலே மாறக்கூடியதுதானே! வேலை கிடைத்து நன்றாக செயல்பட்டால், நீங்கள் பத்து குழந்தைகளைப் பெற்றாலும் யாரும் கேட்கப் போவதில்லை. எனவே சும்மா களத்தில் இறங்கி அடிச்சாடுங்கள்).

 

3. ஒரு பேனாவை என்னிடம் விற்றுக் காட்டுங்கள்?

 

விற்பனைப் பிரிவின் வேலைக்கான இன்டர்விïவில் இந்தக் கேள்வியை தாராளமாக எதிர்பார்க்கலாம்.

 

விற்பனையாளரின் அடிப்படையே தேவைப்படுபவருக்கு தேவையானதை விற்பதுதான். முதலில் அவரிடம் இருக்கும் பேனாவின் சிறப்பம்சங்கள், பிரச்சினைகள் பற்றி கேளுங்கள். இரண்டாவதாக விற்கப்போகும் பேனா அவர் வைத்திருக்கும் பேனாவைவிட எவ்வகையில் சிறந்தது என்பதையும் விளக்கி சொல்லுங்கள். இறுதியாக விற்கப்போகும் பேனாவின் விலை அதிகமாக இருந்தால்-விலை அதிகமாக இருந்தாலும் சிறப்பம்சங்கள் நிறைந்தது என்பதை உணர்த்துங்கள். விலை குறைவாக இருந்தால் இத்தனை சிறப்பம்சங்கள் இருந்தாலும் விலை மிகக்குறைவுதான் என்று சொல்லுங்கள். எந்த பொருளாக இருந்தாலும் இதுதான் விற்பனையின் அடிப்படை சூத்திரமே. வாயுள்ள பிள்ளை பிழைக்கும் என்று சும்மாவா சொன்னார்கள்?.

######################################### THIS EMAIL MESSAGE IS FOR THE SOLE USE OF THE INTENDED RECIPIENT(S) AND MAY CONTAIN CONFIDENTIAL AND PRIVILEGED INFORMATION. ANY UNAUTHORIZED REVIEW, USE, DISCLOSURE OR DISTRIBUTION IS PROHIBITED.BEFORE OPENING ANY ATTACHMENTS PLEASE CHECK FOR VIRUSES AND DEFECTS.IF YOU ARE NOT THE INTENDED RECIPIENT, PLEASE NOTIFY US IMMEDIATELY BY REPLY E-MAIL AND DELETE THE ORIGINAL MESSAGE. #########################################

2 comments:

Anonymous said...

நன்றி : தினத்தந்தி இளைஞர் மலர்

Anonymous said...

நன்றி : தினத்தந்தி இளைஞர் மலர்