தேடுதல் வேட்டை

Wednesday, March 28, 2007

நேர்முக தேர்வுக்கு தயார்செய்தல்...

இந்த பதிவில் நேர்முக தேர்வுக்கு முன்பு எப்படி தயாரிப்பது என்று பார்ப்போம்....

இப்போதைய காலகட்டத்தில் நேர்முக தேர்வுகள் பற்றிய விவரங்கள் பத்திரிக்கைகளிலோ, இணையத்திலோ வருகின்றன...சில சமயம் சில நிறுவனங்கள் இந்த நேர்முகத்தேர்வுக்காக உங்களிடம் நேரடியாக தொலைபேசியில் பேசி சரியான நேரத்தையும் இடத்தையும் அறிவிக்கிறார்கள்..சில சமயம் மின்னஞ்சலுக்கும் இந்த தகவல்கள் வந்துசேர்கின்றன...

முதலில் நேர்முக தேர்வு நடைபெறும் இடத்தை தெளிவாக குறித்துக்கொள்ள வேண்டும்...உங்களுக்கு முன்பே தெரிந்த இடமாக இருந்தால் கவலை இல்லை...அந்த இடத்துக்கு செல்வது உங்களுக்கு எளிதானதாக இருக்கும்...ஆனால் தெரியாத புதிய இடம் என்றால் முன்பே விசாரித்து தெரிந்துகொள்வது நல்லது...இதன்மூலம் கடைசி நேரத்தில் வியர்க்க விறுவிறுக்க நேர்முக தேர்வுக்கு சென்று படபடப்பாக பதில் அளித்து சொதப்புவதை தவிர்க்கலாம்....

இண்டர்வியூ வெளியூராக இருக்கும் பட்சத்தில் ( உதாரணமாக நீங்கள் சென்னையில் இருக்கிறீர்கள், ஒரு பெங்களூர் நிறுவனம் உங்களை நேர்முக தேர்வுக்கு அழைக்கிறது), நிறுவனத்தாரிடம், உங்கள் போக்குவரத்து செலவை தைரியமாக கேட்கலாம்...தயங்க வேண்டாம்..அட இவன் இப்போதே போக்குவரத்து செலவெல்லாம் கேட்கிறான் / ள் என்று உங்களை தவறாக நிறுவனத்தார் நினைத்துவிடுவார்கள் என்றுமட்டும் நினைக்கவேண்டாம்...இது இப்போதெல்லாம் பொதுவான விடயமே...நன்பர் ஒருவரை அழைத்த புனேவை சேர்ந்த நிறுவனத்தை தொல்லை செய்து போக வர விமான டிக்கெட்டை பெற்றுவிட்டார் அவர்...இண்டர்வியூவில் ஆங்கில புலமை இல்லாமல் அவர் சொதப்பியது வேறு விடயம்...:))

நேர்முக தேர்வுக்கு செல்லும் போது உங்கள் ரெஸ்யூமை எடுத்துக்கொண்டு செல்ல வேண்டுமா / வேண்டாமா என்று ஒரு கேள்வி எழுகிறது என் மனதில்..காரணம் இப்போதெல்லாம் நேர்முக தேர்வில், தேர்வை நடத்துபவர்களே உங்கள் ரெஸ்யூம் ப்ரிண்ட் அவுட் உடன் தான் வருகிறார்கள்...இருந்தாலும் உங்கள் கையில் ஒரு ரெஸ்யூம் இருக்கிறது என்று கொள்வோம்...நேர்முக தேர்வுக்காக நீங்கள் ஒரு பத்து நிமிடம் காத்திருக்கிறீர்கள் என்று கொள்வோம்...அந்த நேரத்தில் ரெஸ்யூமை ஒரு புரட்டு புரட்டி, எப்படி பதில் அளிக்கலாம் என்று உங்கள் எண்ணச்சிறகை பறக்க விட்டால் அருமை...நீங்கள் எதிர்பார்த்தபடி கேள்விகள் இருந்தால், இன்னும் தன்னம்பிக்கையோடு, புன்னகையோடு பதில் அளிக்கலாமே....

இவ்வளவு சொல்லிவிட்டு நேரம் தவறாமை பற்றி சொல்லாமல் விட்டால் எப்படி...உங்கள் நேர்முக தேர்வு 9:00 மணிக்கு என்று வைத்துக்கொள்வோம்...நீங்கள் இருக்கும் இடத்தில் இருந்து அந்த இடத்துக்கு செல்ல ஒரு அரை மணித்துளிகள் ஆகும் என்று கொண்டால் நீங்கள் 8:30 மணிக்கு கிளம்பினால் சரியாக இருக்கும் என்று நினைத்துத்தான் நீங்கள் கிளம்புவீர்கள்..ஆனால் போக்குவரத்து பிரச்சினையால் 9:30 மணிக்குத்தான் நீங்கள் போய் சேருகிறீர்கள் என்றால், கண்டிப்பாக் இது சரியானதல்ல...காரணம் ஏற்க்கனவே உங்களுடனே தேர்வுக்கு அழைக்கப்பட்ட பத்து பேர் முன்பே வந்து பதிவு செய்திருக்கலாம், அவர்கள் நேர்முக தேர்வுக்கும் சென்றுவிட்டிருக்கலாம்...கடைசியில் சென்றால் நேர்முக தேர்வர் ஏற்கனவே பார்த்த சிலரை தேர்ந்தெடுக்கலாம் என்ற மனநிலைக்கு வந்துவிட்டிருக்கலாம்...இது போன்ற பிரச்சினைகளை தவிர்க்க...

நேர்முக தேர்வுக்கு நேரத்துக்கு சென்றுவிடலாமே..!!!

காரணம் பல நிறுவனங்களில் நீங்கள் வந்தவுடன் உங்களிடம் ஒரு தகுதிச்சீட்டை கொடுத்து நிரப்ப செல்லுவார்கள்...அந்த நேரத்தில் பரபரப்பாக நிரப்பி அடித்தல் திருத்தலோடு சொதப்புவீர்கள்...அதனால், நேர்முக தேர்வு 9:00 மணிக்கு என்றால் 8:30 க்கு நிறுவனத்தில் இருக்குமாறு பார்த்துக்கொள்க...

வாக்கின் (Walk-In) எனப்படும் நேரடி நேர்முக தேர்வுகளில் பெருங்கூட்டம் சேர்ந்துவிடும் நிலை இப்போதெல்லாம்.....ஜாவா / .நெட் வாக்கின் என்று சொன்னால் ஆயிரக்கணக்கில் கூடிவிடுகிறார்கள் ( பெங்களூரில் இந்த நிலை / சென்னை நிலவரம் அடியேன் அறியேன்)...இது போன்ற ஒரு சூழ்நிலையில் தேர்வு நடக்கும் இடத்துக்கு காலையிலேயே (ஒரு எட்டுமணி வாக்கில்) சென்றுவிடுவது நல்ல பலன் தரும்...பதினோரு மணிக்கு சென்றால் வியர்த்து வழிய நீண்ட Q வில் நிற்கவேண்டிவரும்...

கடைசீயாக, கைவசம் நல்லதொரு பேனா வைத்திருப்பது நன்று....வரவேற்பறையில் கையொப்பமிட / தேர்வு எழுத / நேர்முக தேர்வில் உபயோகிக்க.......

மீண்டும் ஒரு முறை நான் இந்த கட்டுரையில் சொல்ல வந்த விடயங்களை சீர்தூக்கி பார்த்தால்

1. நேர்முக தேர்வுக்கு நேரத்துக்கு சென்றுவிடுவது
2. தேர்வு நடைபெறும் இடம் பற்றிய முழுமையாக அறிந்து வைத்திருப்பது
3. தகவல் தகுதி சீட்டை (Resume) கைவசம் வைத்திருப்பது போன்றவையாகும்...
4. நல்லதொரு பேனா கொண்டு செல்வது..

சில சமயங்களில் உங்கள் புகைப்படம் கூட தேவையாக இருக்கும்...அதனால் உங்கள் புகைப்படத்தையும் கைவசம் வைத்திருப்பது பலனளிக்கும்...

அடுத்த பதிவில்...

* இண்டர்வியூவில் நடந்துகொள்ளும் முறை (Body Language)
* நேர்முக தேர்வை எதிர்கொண்டு தேர்வரின் கருத்தை கவரும் விதம்

போன்ற விஷயங்களை விவாதிக்கலாம்...பதிவை படிப்பவர்கள், உங்களுக்கு தெரிந்த கருத்துக்களை தந்தால் உபயோகமாக இருக்கும்...

#########################################
THIS EMAIL MESSAGE IS FOR THE SOLE USE OF THE INTENDED RECIPIENT(S) AND MAY CONTAIN CONFIDENTIAL AND PRIVILEGED INFORMATION. ANY UNAUTHORIZED REVIEW, USE, DISCLOSURE OR DISTRIBUTION IS PROHIBITED.BEFORE OPENING ANY ATTACHMENTS PLEASE CHECK FOR VIRUSES AND DEFECTS.IF YOU ARE NOT THE INTENDED RECIPIENT, PLEASE NOTIFY US IMMEDIATELY BY REPLY E-MAIL AND DELETE THE ORIGINAL MESSAGE.
#########################################

4 comments:

சென்ஷி said...

ரொம்ப உபயோகமான தகவல்கள்..

நன்றி ரவி

சென்ஷி

Anonymous said...

unakku uruppadiyaa kooda ezutha varumaa da. super.

வடுவூர் குமார் said...

நம்மூரில் இப்போது எப்படி என்று தெரியவில்லை.ஆனால் கொரியன் & ஜப்பானியர்களிடம் பேசும் போது ஆங்கிலம் கொஞ்சம் மெதுவாக அவர்களுக்கு புரிகிற மாதிரி பேசவேண்டும்.
நான் "Can" என்று சொல்லியதை அவர்கள் "Can't" என்று புரிந்துகொண்டு வேலை போயே போன அனுபவம் உண்டு.

Anonymous said...

நன்றி சென்ஷி, செந்தில், வடுவூரார்