தேடுதல் வேட்டை

Tuesday, March 13, 2007

டேட்டா எண்ட்ரி ப்ராஜக்ட்கள் பெறுவது எப்படி ?

டேட்டா எண்ட்ரி ப்ராஜக்ட்கள் பெறுவது எப்படி ?

பதிவர் மீரா.அருண் இண்பர்மேட்டிவ் பதிவான விக்கி பசங்க பதிவில் டேட்டா எண்ட்டி ப்ராஜக்ட்களை எடுப்பது பற்றி கேட்டிருந்தார்கள்......முன்பே பெரிய தலை மா.சிவக்குமாரிடம் இது பற்றி ஒரு பேச்சு எழுந்தது...அப்போது இது பற்றி நல்லதொரு கட்டுரை உருப்படியாக எழுதுமாறு பணித்திருந்தார்...ஆனால் இதை ஒக்கே ஒக்க பதிவாக போடுவதற்க்கு பதில் சிறு தொடராக எழுதிவிடலாமே...என்ற எண்ணத்தில் இந்த முயற்சி..தொடர் தூங்கினால் தலையில் குட்டி எழுதவைக்க வேண்டியது உங்கள் பொறுப்பு..

( நேரமின்மையை இப்படி சுற்றி வளைத்துக்கூட சொல்லலாம் போலிருக்கிறதே )

பொதுவாக டேட்டா எண்டரி ப்ராஜக்டகள் ஆன்லைன் பேஸ்டு (Online Based) வகைகள்தான் அதிகம்..

உங்களிடம் நல்லதொரு வேகமுடைய கணிணியும், தரமான அகலப்பாட்டை இணைய இணைப்பும் (Brandband) இருந்தால் மாதம் ஆயிரம் டாலர் முதல் இரண்டாயிரம் டாலர் வரை வெகு எளிதாக சம்பாதிக்கலாம்...இது மேஜிக் அல்ல...உலகெங்கும் பல்லாயிரக்கணக்கானவர்கள் செய்துகொண்டிருப்பதுதான் இது...

இந்த டேட்டா எண்டரி ப்ராஜக்ட்டுகள் மற்றும் சிறிய வகை ப்ராஜக்ட்டுகள் இணையத்தில் தாராளமாக காணக்கிடைக்கின்றன..இதற்கான தகவல் தளங்களும் தனியாக உள்ளன...அது பற்றி பிறகு பார்ப்போம்...

பொதுவாக, எப்படிப்பட்ட ப்ராஜக்ட்கள் இணையத்தில் கிடைக்கும் ? ஹாட் கேக் போன்ற ப்ராஜக்ட்கள் டேட்டா ப்ராஸஸிங் / க்ராபிக்ஸ் டிசைன் / பேனர் டிசைன் போன்ற ப்ராஜக்ட்களுடன் ஹை லெவல் நுட்பங்களான .நெட் / ஜாவா போன்ற ப்ராஜக்ட்களும் காணக்கிடைக்கின்றன..

பல மொழி வித்தகர்களுக்கான மொழிபெயர்ப்பு வேலைகளும் மிகுதியாக காணக்கிடைக்கின்றன...

இந்த ப்ராஜக்ட்டுகளை முடித்து தந்தவுடன் பேமண்ட் உடனடியாக கைகளில் கில்லி போல் வந்துவிடும்...பையர்கள் (buyers) வேலை முடிந்தவுடன் பணம் தராமல் ஏமாற்றுவார்கள் / இழுத்தடிப்பார்கள் என்ற பேச்சுக்கே இடமில்லை...மிகவும் ரேர் கேஸ்கள் அப்படி நடந்துள்ளன...எப்போதும் இல்லை...நாம் பாஸிடிவ் திங்கிங் கொள்வோமே...


பொதுவாக இது ப்ராஜட்களை ஏலம் எடுத்தல் போன்றதொரு செட்டப் என்று சொல்லலாம்...பிட்டிங் (bidding) என்று சொல்வார்கள்...இது பற்றியும், இதன் நுணுக்கங்கள் பற்றியும், சிறப்பானதொரு பிட் எப்படி இருக்கும் என்பது பற்றியும் பிறகு பார்க்கலாம்...

பணி முடிந்தவுடன் பண பரிமாற்றம் பே-பாலில் (Pay-Pal) அல்லது வெஸ்டர்ண் யூனியன் மணி ட்ரான்ஸ்பரில் நடக்கும்...

உங்கள் பணி பையருக்கு (buyers) திருப்திகரமாக இருந்தால் உங்கள் பணி பற்றிய ரிவ்யூ கமெண்டுகள் நல்ல தரமானாதாக கிடைக்கும்...இது போல் நல்ல தரமான ரிவ்யூக்கள் பையர்களிடம் இருந்து அதிகரித்தால் ப்ராஜக்ட் தர தேடி வருவார்கள்...

சில தளங்களை இப்போதைக்கு பார்வையிடுங்கள்...மீதியை அடுத்த பதிவில் சொல்கிறேன்...

www.elance.com ( முன்பு இலவசமாக இருந்தது, இப்போது இல்லை)

www.getafreelancer.com ( இலவச தளம், சிறப்பாக செயல்படுகிறது )

பதிவை எழுத பணித்த மா.சிவக்குமார் அவர்களுக்கும் தூண்டிய விக்கி.பசங்களுக்கும் நன்றி..

தோழர்கள் அவர்கள் அனுபவங்களையும், தகவல்களையும் பகிர்ந்துகொள்ளுங்கள்...எனக்கு தெரியாத தகவல்களை உங்கள் மூலம் தெரிந்துகொண்டு நான் அப்டேட் செய்துகொள்கிறேன்...

8 comments:

Anonymous said...

www.devlance.com என்பதையும் பாருங்கள்...முன்பு சிறப்பாக செயல்பட்ட தளம்...

சென்ஷி said...

விடாமல் எழுதுங்கள்..
தூங்கிவிட்டால் பலமாக நானே குட்டுகிறேன்.. :))

சென்ஷி

சென்ஷி said...

விடாமல் எழுதுங்கள்..
தூங்கிவிட்டால் பலமாக நானே குட்டுகிறேன்.. :))

சென்ஷி

வடுவூர் குமார் said...

செந்தழல் ரவி
நல்ல தகவல்களை கொடுத்துள்ளீர்கள்.
நன்றி.

Anonymous said...

உங்க கொட்டுக்காக காத்திருக்கேன் :)))

SP.VR.சுப்பையா said...

உருப்படியான, உபயோகமான பதிவு ரவி!
பாராட்டுக்கள்!

Anonymous said...

நன்றி வடுவூர் குமார் அவர்களே.

Anonymous said...

நன்றி வாத்தியார் அவர்களே...