வேலைதேடும் இளைஞர்களுக்கு பயனளிக்கும் பகுதி இது. இன்டர்விïவின் போது கேட்கப்படும் கேள்விகளுக்கு எப்படி புத்திசாலித்தனமாக பதிலளிப்பது, நிர்வாகம் எப்படிப்பட்டவர்களை விரும்புகிறது போன்ற தகவல்கள் இந்த கேள்வி பதில் பகுதியில் இடம்பெறுகிறது. இந்த வாரம், ஏற்கனவே ஒரு நிறுவனத்தில் வேலை செய்தவர்கள் வேறு ஒரு நிறுவனத்தில் வேலைக்கான `இன்டர்விï' செல்வதாக இருந்தால், அப்போது அவர்கள் எதிர் நோக்க வேண்டிய கேள்விகள் எப்படி இருக்கும், அதற்கு பதில் எப்படி இருந்தால் நல்லது என்பது குறித்து பார்ப்போம். இனி இன்டர்விïவை சந்திக்க தயாராகுங்கள்.
புதிய வேலை தேடுபவரா?
1. கடந்த முறை நீங்கள் வேலை செய்த நிறுவனத்தின் பாஸ் அல்லது மேலாளரின் `பாசிடிவ்' மற்றும் `நெகடிவ்' குணங்களைப் பற்றி கூறுங்கள்?
வலை விரிக்கும் கேள்வி இது. நிதானிக்காமல் காலை எடுத்து வைத்தால் வசமாக சிக்கி விடுவீர்கள். எனவே நிதானமாக பதிலளிக்க வேண்டும். கேள்வி கேட்பவருக்கு உங்களின் பழைய பாஸைப் பற்றி தெரிந்து எதுவும் ஆகப் போவதில்லை. நாம் இல்லாத போது நம்மைப்பற்றி இவன் மற்றவர்களிடம் தவறாக பேசும் குணம் கொண்டவனா? என்பதை கண்டறியவே இந்தக் கேள்வி.
முடிந்தளவு பாசிட்டிவாகவே பதில் சொல்லுங்கள். இன்டர்விïவில் மட்டுமன்றி எப்போதும் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டிய விதி என்னுடைய `பாஸ்' எப்போதுமே சரியானவர் (விஹ் ஙிஷீææ வீæ ணீறீஷ்ணீஹ்æ க்ஷீவீரீலீå) என்பதுதான். எனவே பாசிட்டிவாகவே பேசினால் உங்களை கேள்வி கேட்பவர்களுக்கு பிடித்து போகும்.
2. வேலை கிடைத்தால் எங்கள் நிறுவனத்தில் வந்து என்னென்ன மாற்றங்களை செய்வீர்கள்?
வேலையே இன்னும் கிடைக்கல அதுக்குள்ளேயேவா...! என்று குழப்பம் அடைய வேண்டாம். வேலைக்கு தேர்வு செய்யப்பட்டு கையில் அப்பாயின்மென்ட் ஆர்டர் வாங்கும் வரை நீங்கள் அந்நிறுவனத்திற்கு வெளியாள்தான். எனவே நீங்கள் எதையாவது குத்துமதிப்பாக சொல்ல, பிள்ளையார் பிடிக்க, குரங்கு வந்த கதையாய், முடிந்துவிட வாய்ப்புள்ளது.
பிரச்சினை என்னவென்று தெரியாமல் அதற்கு தீர்வுகாண முடியாது. என்னை நீங்கள் தேர்வு செய்தவுடன் நிறுவனத்தில் நடக்கும் விஷயங்களை கூர்ந்து கவனிப்பேன். பின் அதற்கு தேவையான படி மாற்றங்களையும், செயல்பாடுகளையும் விரைவுபடுத்துவேன் என்று கூறிவிடுங்கள். பக்குவமான பதிலால் உங்களுக்கான வாய்ப்பு அதிகரிக்கும்.
3. உங்களது `பாஸ்' ஒருதிட்டத்தை பற்றி சொல்கிறார். அந்த திட்டம் வெற்றிப் பெறுவதற்கான வாய்ப்புகள் மிகவும் குறைவு எனத் தெரிகிறது. ஆனால் `பாஸ்' அத்திட்டத்தை நிறைவேற்றுவதில் உறுதியாக இருக்கிறார், எனில் இதுபோன்ற சூழலில் நீங்கள் என்ன செய்வீர்கள்?
விசுவாசத்திற்கும், நேர்மைக்கும் இடையே குழப்பம் ஏற்படும் சூழல் இது. திட்டம் சரியில்லை என்றால் அவர் கோபித்து கொள்வார். ஆமாம் சாமி! போட்டால் நேர்மைக்கு பங்கம் வரும். எப்போதுமே இதைப்போன்ற சூழலில் இரண்டையும் ஒன்று சேர்த்து புத்திசாலித்தனமாக பதிலளிக்கவேண்டும்.
என்னைவிட `பாஸ்' பலவிதங்களில் யோசிக்க கூடியவர். எனவே, பொறுமையாக அத்திட்டத்தில் உள்ள சாதக - பாதகங்களை அவரிடம் எடுத்துச் சொல்வேன். அவரின் திட்டம் முழு வெற்றியை பெற என்னுடைய கருத்துக்களை எடுத்துக் கூறி புரிய வைப்பேன். அதன் பிறகும் `பாஸ்' தனது முடிவில் உறுதியாக இருந்தால் நானும் பாஸின் திட்டத்தை முழுமையாக நம்பி களத்தில் இறங்கி விடுவேன்.
இந்த பதிலுக்கு கை தட்டல் கூட கிடைக்கும்.
#########################################
THIS EMAIL MESSAGE IS FOR THE SOLE USE OF THE INTENDED RECIPIENT(S) AND MAY CONTAIN CONFIDENTIAL AND PRIVILEGED INFORMATION. ANY UNAUTHORIZED REVIEW, USE, DISCLOSURE OR DISTRIBUTION IS PROHIBITED.BEFORE OPENING ANY ATTACHMENTS PLEASE CHECK FOR VIRUSES AND DEFECTS.IF YOU ARE NOT THE INTENDED RECIPIENT, PLEASE NOTIFY US IMMEDIATELY BY REPLY E-MAIL AND DELETE THE ORIGINAL MESSAGE.
#########################################
4 comments:
நன்றி : தினத்தந்தி இளைஞர் மலர்
அனைவருக்கும் பயனுள்ள பதிவு!
இண்டர்வியூ டிப்ஸ்! கண்டினியூ பண்ணுங்க!
இது புள்ள, இத வுட்டுட்டு மொக்கயா போட்டு சாவடிச்சா என்ன அர்த்தம்:-)))
//என்னைவிட `பாஸ்' பலவிதங்களில் யோசிக்க கூடியவர். எனவே, பொறுமையாக அத்திட்டத்தில் உள்ள சாதக - பாதகங்களை அவரிடம் எடுத்துச் சொல்வேன். அவரின் திட்டம் முழு வெற்றியை பெற என்னுடைய கருத்துக்களை எடுத்துக் கூறி புரிய வைப்பேன்//
என்னோட பாஸ் தொழில்நுட்ப ரீதியாக சாத்தியமில்லாத சில வேலைகளை வாடிக்கையாளர்களிடம் இருந்து பெற்று வந்தார். நான் ஆரம்பத்திலேயே இதெல்லாம் சரிப்பட்டு வராது என்று கூறிவிட்டேன். அதனை அவர் நெகட்டிவாகப் பேசுகிறான் என்று தவறாகப் புரிந்து கொண்டு இந்த ஆண்டு அப்ரைசலில் முதுகில் குத்தி விட்டார். இப்போது தொழில் நுட்பத்தில் ஜாம்பாவான்களும் நான் சொன்ன காரணங்களையே கூறி செயல்படுத்த இயலாது என்று கைவிரித்து விட்டனர். இப்போது பலிகடா நான். :(
Post a Comment