தேடுதல் வேட்டை

Wednesday, January 17, 2007

டெஸ்டிங் படிச்சா வேலை கிடைக்குமா? - 4

பாகம் 1 பாகம் 2 பாகம் 3
டெஸ்டிங் துறையில் இறங்கவேண்டும் என்று நினைத்தவர்கள், டெஸ்டிங் துறையில் அதிகமாக பயன்படும் ஒரு வார்த்தையை தெரிந்துகொள்ளாமல் இருக்க முடியாது....!!! அது பக் (Bug) அல்லது டிபெக்ட் (Defect). ஏதாவது ஒன்று வேலை செய்யவில்லை என்றால் அது 'பக்'..

மச்சான் இன்னைக்கு நீ எத்தனை 'பக்கு' கண்டுபுடிச்சே ?

அட இன்னைக்கு ஒரு நாலுதான் மாட்டுச்சு...நீ...

இங்கே என்ன வாழுது...ஒரு ரெண்டு அதிகமா ஆறு கண்டுபுடிச்சேன்....

இப்படி இரண்டு டெஸ்ட் எஞ்சினீயர்கள் பேசிக்கொண்டால் நீங்கள் ஆச்சர்யப்படக்கூடாதில்லையா ? அதனால்தான் முன்பே இதுபற்றிய விரிவான விளக்கம்...

இந்த 'பக்' என்ற வார்த்தை எப்படி வந்தது தெரியுமா...முன்பெல்லாம் கணிப்பொறிகள் அளவில் மிகப்பெரியதாக இருக்கும்...1946 ஆம் ஆண்டு புழக்கத்தில் இருந்த எனியாக் (ENIAC), சுமார் இருபதாயிரம் வாக்குவம் டியூபுகளை கொண்டிருந்தது...பிற்பாடு 1948 / 49 ஆம் ஆண்டுகளில் ட்ரான்ஸிஸ்டர் கண்டறியப்பட்ட பிறகு அளவில் சுருங்கியது.....இந்த எனியாக் கணிணியில் அவ்வப்போது பூச்சிகள் புகுந்துவிடுமாம்...அதானால் மொத்த கணினி இயக்கமும் நின்றுவிடுமாம்...பூச்சிகளுக்கு ஆங்கிலத்தில் 'பக்' என்று பெயர்...அதனால் கணிணியில் / மென்பொருளில் ஏற்படும் பிரச்சினைகளை 'பக்' என்று செல்லமாக அழைக்கும் முறை வந்தது...

இப்போதெல்லாம் கொஞ்சம் டீசண்டாக டிபெக்ட் (Defect) என்று அழைக்கிறோம்...ரெய்ஸிங் டிபெக்ட் (Raising Defect) ஒரு டெஸ்ட் எஞ்சினீயரின் தலையாய பணி...

காலையில் அலுவலகம் வந்தவுன், நேற்று எழுப்பிய டிபெக்ட் எல்லாம் ரிவ்யூ செய்வது முக்கால்வாசி நிறுவனங்களில் உள்ள முறை...(Defect Review Meetings)....இந்த குழுக்கூட்டங்களில் மென்பொருளுக்கு புரொக்ராம் எழுதுபவரும் இருப்பார்...அதனை டெஸ்ட் செய்த டெஸ்டரும் இருப்பார்...( சில சமயம் டெஸ்ட் லீடர்)...பிறகு மேனேஜர்கள் அமர்ந்திருப்பார்கள்...சில சமயம் நிறுவன தலைவரும், மென்பொருள் தயாரித்து தருமாறு உத்தரவிட்ட நிறுவனத்தில் பிரதிநிதிகளும் அமர்ந்திருப்பர்...

மென்பொருளில் உள்ள ஒவ்வொரு பிரச்சினையும் ( டெஸ்ட் எஞ்சினீயரால் எழுப்பப்பட்டது) இங்கே விவாதிக்கப்ப்டும்...(Issue based discussions)..அது அல்லாமல் இங்கே முக்கியமாக விவாதிக்கப்படும் ஒரு விஷயம், எத்தனை க்ரிட்டிகல் டிபெக்ட் இருக்கு ப்ராஜெக்ட்ல ? அவை எப்போது பூச்சியமாக மாறும்...( When Can we have Zero Defects in this Product / Project) என்பனவே...

க்ரிட்டிக்கல், மீடியம், லோ ( Critical / Medium / Low ) என்பது கண்டறியப்படும் குறைகள் ( Defects என்பதை குறைகள் என்று கூறலாமா இனிமேல் ? ) எத்தனை முக்கியமானது என்பதை அறிய / தெரிவிக்க பயன்படுத்தும் வார்த்தைகள்...க்ரிட்டிக்கல் குறை என்பது, உதாரணமாக நீங்கள் ஒரு சைக்கிளை வாங்குகிறீர்கள்...அதில் வேறுபட்ட செயலாக்கங்கள் ( Functionality) உள்ளன என்று வைத்துக்கொள்வோம்..ப்ரேக் பிடிப்பது ஒரு செயலாக்கம்...பெடலை மிதித்தால் சைக்கிள் முன்னே செல்வது ஒரு செயலாக்கம்...ட்யூபில் காற்று நிற்பது ஒரு செயலாக்கம்...பெல் அடிப்பது ஒரு செயலாக்கம்...நீங்கள் மட்கார்டில் "ஐஸ்வர்யா" என்று உங்கள் சகோதரி பெயர் கொண்ட ஸ்டிக்கரை ஒட்டியிருப்பது ஒரு செயலாக்கம்...என்று வைத்துக்கொள்வோம்...இதில் க்ரிட்டிக்கல் செயலாக்கம் ஒன்று சொல்லுங்கள் பார்ப்போம்...அட பெடலுங்க...பெடல் இல்லாமல் சைக்கிளை ஓட்ட முடியுமா ? காற்று இல்லாமல் கூட ஓட்டிடலாம்..ப்ரேக் இல்லாமல் கூட காலை வைத்து நிறுத்தலாம்...பெடல் இல்லாமல் ஓட்ட முடியுமா ? ஆகவே இதுவே உங்கள் மென்பொருள் என்று கொண்டால், க்ரிட்டிக்கல் ப்ங்ஷனாலிட்டி...இது இல்லை / வேலை செய்யவில்லை என்றால் எழுப்பப்படும் டிபெக்ட் க்ரிட்டிக்கல் டிபெக்ட் ( Critical Defect) எனப்படும்...

அடுத்தது..நீங்கள் நினைப்பது சரி...ப்ரேக் பிடிப்பது தான்...ப்ரேக் பிடிக்கவில்லை என்றால் முதலுக்கே மோசம் இல்லையா...ஆனால் ப்ரேக் இல்லாத சைக்கிளை ஓட்டுவது ஒன்றும் கம்ப சூத்திரம் இல்லை...காலை தரையில் தேய்த்து கண்டிப்பாக நிறுத்த முடியும்...இதுதான் மீடியம் டிபெக்ட்...

நீங்கள் ஒரு விஷயம் கவனித்தால், நம்ம ஊர்ல நிறைய சைக்கிளுக்கு பெல்லே இருக்காது...பெல்லில்லாம ஓட்டலாம்...ஆனாலும் ஒரு சைக்கிள் என்பது வாங்கும்போது பெல்லோடதான் வரும்...ஆனால் ஒருவேளை வாங்கும்போது கடைக்காரர் பெல் போட்டுத்தர மறந்துவிட்டாலும், மீண்டும் வண்டியை அண்ணாச்சியிடம் ஓட்டிக்கொண்டு போய், என்னவே, பெல்லு போட்டுத்தர மறந்துட்டீய என்று கேட்டால் கண்டிப்பாக போட்டுத்தருவார்....மென்பொருள் என்று கொண்டால், இது ஒரு லோ டிபெக்ட்...

இந்த விஷயம் டெஸ்டிங் துறையில் ஒரு பாலபாடம்...இது டெஸ்டிங் பொறியாளர்கள் மென்பொருளில் உள்ள குறைகளை கண்டறியும்போது தங்களுக்குள் முடிவு செய்து குறிப்பிட்ட குறைகளுக்கு ( Particular Defects) அளிப்பது..

ப்ரோக்ராமர் என்ன செய்கிறார் ? நீங்கள் அளிக்கும் குறைக்கு, P1, P2, P3, P4 என்று ப்ராயாரிட்டி (Priority) செட் செய்துகொள்கிறார்...எந்த குறையை உடனே நீக்கவேண்டும் என்பது போல...காரணம் உங்களது குறை, ஒரு க்ரிட்டிக்கல் குறை என்று கொண்டால், நீங்கள் கண்டிப்பாக மேற்க்கொண்டு டெஸ்டிங் செய்வது இயலாது...பெடல் இல்லாமல் சைக்கிளை எப்படி ஓட்டிப்பார்க்க முடியும் ? இணையத்தில் உதாரணம் சொல்லவேண்டும் என்றால், நீங்கள் யாகூ மெயில் மென்பொருளை டெஸ்டிங் செய்யவேண்டும்...( எம்.எஸ் வேர்டு மட்டுமல்ல, யாகூ, கூகிள் கூட மென்பொருள்தான்)...

விஷயத்துக்கு வருகிறேன்...யாகூ மென்பொருளை டெஸ்ட் செய்ய என்ன தேவை ? முதலில் உங்கள் பயனாளர் பெயரும், கடவுச்சொல்லும் ( User ID and Password)...அவை இரண்டுமே வேலை செய்யவில்லை எனில், நீங்கள் எப்படி உள்ளே சென்று மின்னஞ்சல் அனுப்ப முடிகிறதா ? அல்லது ஒரு கோப்பை இணைக்க முடிகிறதா ? அல்லது படங்கள் சரியாக தெரிகின்றனவா ? என்பதை எப்படி அறிய இயலும்...புரிந்திருக்கும் என்று நினைக்கிறேன்...

குறிப்பிட்ட டிபெக்ட்டுக்கு தகுந்த மாதிரி ப்ரோக்ராமர், P1, P2 என்று அழைத்துக்கொண்டு, பணியாற்றுவார்...காரணம் ஒரு மென்பொருளில் பல க்ரிட்டிகல் டிபெக்ட் வரலாம்...அவற்றில் எவை மேற்கொண்டு டெஸ்டிங் செய்ய தடையாய் உள்ள "குறைகள்" என்று வகைப்படுத்தி ( இவற்றை ( ஷோ ஸ்டாப்பர் - Showstoper அல்லது பேனிக் - panic) என்றும் அழைப்பர்...

ஓரளவு தெளிவாக விளக்கிவிட்டேன் என்று நினைக்கிறேன்...இனிமேல் டெஸ்டிங் ப்ராஸஸ் (Testing Process) மற்றும் டிபெக்ட் லைப் சைக்கிள் ( அட இது அந்த சைக்கிள் இல்லை - Defect Lifecycle) பற்றி கொஞ்சம் சொல்லுகிறேன்...தொடர் பிடிச்சிருந்தா உங்கள் கருத்தை சொல்லுங்க...எப்படி இம்ப்ரூவ் செய்யலாம் என்று...

6 comments:

Anonymous said...

good. keep it up.

இளங்கோ-டிசே said...

நன்றாக -அதேசமயம் எளிமையாக- எழுதுகின்றீர்கள். தொடர்ந்து எழுதுங்கள் இரவி.

Anonymous said...

Easily understand this.keep it up Ravi. I frequently read your blog.
Before one question who are the suitable person to learn this Testing Job.

regards,
G.L

வடுவூர் குமார் said...

எனக்கு இன்னொரு தடவை ஆழ்ந்து படிக்கவேண்டும்..அப்போது தான் சில விஷயங்கள் புரியும்.தவறு என் மீது.

நாமக்கல் சிபி said...

தொடர் அருமையாக இருக்கிறது ரவி!
என்னைப் போன்றவர்களுக்கு மிகுந்த பயனுள்ளதும் கூட!

Anonymous said...

It is a useful one. Why it was stopped suddenly? Please continue to write this article. Why it was stopped?