தேடுதல் வேட்டை

Tuesday, March 27, 2007

சிறந்த ரெஸ்யூமை தயாரிப்பது எப்படி?

தகவல் தொழில்நுட்ப துறையில் பணிவாய்ப்பை தேடும் அனைவருக்குமானது இந்த பதிவு. புதிதாக படிப்பை முடித்த இளம்பொறியாளர்கள் யாரிடமாவது ஒரு ரெஸ்யூமை வாங்கி அதனை வெட்டி ஒட்டி தங்களுடையதை தயாரிப்பார்கள்...ஏற்க்கனவே பணியில் இருப்பவர்களோ நேரமின்மை காரணமாக அவசரம் அவசரமாக ஒரு ரெஸ்யூமை தயாரிப்பார்கள்...உண்மை என்னவென்றால் இந்த இரண்டு சாராரின் ரெஸ்யூமும் (தகவல் அறிக்கை என்று சொல்லலாமா) ஏனோதானோவென்றுதான் இருக்கும்...

எனக்கு பல ரெஸ்யூம்கள் வேலை தேடுவதில் உதவி செய்யவும், இண்டர்வியூ எடுக்கச்சொல்லியும் வந்தடைந்துள்ளன....எல்லாவற்றிலும் ஒரு பொதுவான விஷயம் உண்டு...அதுதான் ஏனோதானோவென்ற, சரியான முறையில் தயாரிக்கப்படாத, முறையான தகவல்கள் தொகுக்கப்படாத ரெஸ்யூம்கள்...சில ரெஸ்யூம்கள் கலையார்வத்தோடு அழகாக இருக்கும்...அவை பார்ப்பதற்க்கு அருமையானதாகவும், இண்டர்வியூவுக்கு வருபவர் மேல் ஒரு நல்ல அபிப்ராயத்தை ஏற்ப்படுத்துவதாகவும் இருக்கும்...

ஒரு சிறந்த ரெஸ்யூம் எப்படித்தான் இருக்கவேண்டும் ? என்று பார்த்தால்...ஒரு நல்ல தகவல் அறிக்கை, முழுமையான தகவல்களை கொண்டிருக்கவேண்டும்...சிறிது ஆழமாக பார்த்தால்

1. நல்லதொரு objective அல்லது Career Summary

இந்த அப்ஜெக்டிவ் வழமையானதாக " To Search for a Great Career " என்று மொக்கையாக ஆரம்பிக்காமல் சிறப்பானதாக, க்ரிஸ்ப்பாக (Crisp) அல்லது ஷார்ப் ஆனதாக எளிமையான வார்த்தைகளை கொண்டு அமைத்தல் நலம்...

அப்ஜெக்டிவ் தேவை இல்லை என்று நீங்கள் நினைத்தால் கரீயர் சம்மரியை எழுதலாம்...

உங்கள் ரெஸ்யூம் என்ன சொல்ல விழைகிறது என்பதை எளிமையான வார்த்தைகளில் சொன்னால் கூட தவறல்ல...

இந்த அப்ஜெக்டிவ்வை பாருங்கள்

Be technically proficient and refine my Software skills with experience of 6 months for a challenging career in Software Engineering and Information Technology

இந்த கரீயர் சம்மரியை பாருங்கள்...

Around 5 years of Mobile Application/Handheld Device Testing Experience in NEC, Falcon, /Windows/Palm Platforms. Good Knowledge in Application testing in Telecom domain. Good Exposure in Palm / Pocket PC Application Testing. Knowledge in Wireless Networks (GSM, GPRS, WCDMA, CDMA 2000, iDEN and WiDEN).

இந்த இரண்டில் ஏதாவது ஒன்று கண்டிப்பாக இடம்பெறவேண்டும்...(Objective or Career Summary)

2. Career Profile

இளம்பொறியாளர்களுக்கு முன்அனுபவ விவரங்களை எழுத வாய்ப்பு இல்லை, அதனால் அவர்கள் நேரடியாக அடுத்த பாயிண்டுக்கு செல்லலாம்..இந்த கரீயர் ப்ரொபைலை மிகவும் எளிதாக இரண்டு மூன்று புல்லட் பாயிண்டுகளில் அமைக்கலாம், அல்லது டேபிள் பார்மட்டில் அமைக்கலாம்...டேபிள் பார்மட்டில் அமைத்தால் கண்ணைக்கவரும் வகையில் இருக்கும்...

3.Technical Exposure

டெக்னிக்கல் எக்ஸ்போஷரில் உங்களுக்கு நன்றாக தெரிந்த விஷயங்களை மட்டும் பட்டியலிடவும்...விசுவல் பேசிக்கை பிரவுசிங் செண்டரில் ஒருநாள் பார்த்தேன்...அதனால் விசுவல் பேசிக்கை டெக்னிக்கல் எக்ஸ்போஷரில் போட்டுக்கொள்கிறேன் என்று எல்லாம் செய்ய வேண்டாம்...காரணம் ரெஸ்யூமில் இருப்பவை உங்களுக்கு நன்றாக தெரிந்தவை என்றே நாங்கள் எண்ணிக்கொள்வோம்...அதனால் அதில் இருந்து இடக்கு மடக்காக ஒரு கேள்வி கேட்கும்போது, "எனக்கு தெரியல" என்றோ "மறந்துட்டேன்" என்றோ சொன்னால் அது கண்டிப்பாக உங்களை பற்றியதான ஒரு நெகட்டிவ் இம்ப்ரஷனை உருவாக்கும்...

4.Overall Responsibilities or Roles and Responsibilities

இந்த பகுதியும் இளம்பொறியாளர்களுக்கானது அல்ல...இந்த பகுதியில் உங்கள் கடந்த நிறுவணத்தில் நீங்கள் செய்யக்கூடியதான பணிகள் குறித்து புல்லட் பாயிண்டுகளில் விளக்கம் அளித்துவிட்டால் இண்டர்வியூ எடுப்பவர்களுக்கு மிக எளிதாக போய்விடும்...தேவையற்ற குழப்பங்களையும் இது தடுக்கும்...

* Experience in Installation Testing (Different OS Simulation).
* Exposure in Creating MMI Specifications
* Experience in Mobile Applications testing Like J2ME Applications / Palm OS / Pocket PC
* Defect log preparation / bug reporting and regression testing the application.
* Proficiency in Mercury Interactive test tools like Win Runner and Test Director

மேலே உள்ள விவரங்கள் இந்த பகுதியில் அமைந்தால் இண்டர்வியூ எடுப்பவருக்கு மிகவும் எளிதாக அமைந்துவிடும்...மேலும் விஷயங்களை தெளிவாக கூறும் பாங்கு உங்களுக்கு இருப்பது உள்ளங்கை நெல்லிக்கனியாக இண்டர்வியூ எடுப்பவருக்கு தெரிந்துபோகும்...

5. Project ( ப்ராஜெக்ட்)

வழக்கமாக அதிக இடத்தை பிடிப்பது இந்த பகுதிதான்...இளம்பொறியாளர்கள் தங்கள் கல்லூரியில் சமர்ப்பித்த இரண்டு அல்லது ஒரு ப்ராஜக்ட்டை போட்டுக்கொள்ள வேண்டும்...பணியில் இருப்பவர்கள் தங்கள் சிறப்பாக பணியாற்றிய அத்துனை ப்ராஜக்ட்களையும் போடலாம்...ப்ராஜக்ட் டிஸ்க்கிரிப்ஷனை எளிமையாக அமைத்தால் அதிக இடம் பிடிக்காது.....ஒரு பக்கத்தில் நான்கு ப்ராஜக்டுகள் வரும்படி அமைக்கலாம்...உதாரணம் பாருங்களேன்...

Palm Game Zone :
This is a Game application for Palm OS. This Game Zone Contains 3 Games like pinball, car raze, and tennis. Being a application tester, we tested the applications for memory errors, user interface errors
Client : MCI, USA
Team Size : 6
Tool : Manual.
Duration : May 02 to Oct 02.
Role : Test Engineer.
Responsibilities:
* Preparing and executing the Test cases
* Manual Testing
* Gremlin Testing and ISO Documents

மேற்க்குறிப்பிட்ட அத்துனை விவரங்களும் இருத்தல் நலம்...கொஞ்சம் கூடக்குறைய சேர்த்துக்கொள்ளலாம்...உங்கள் ரெஸ்பான்ஸிபிளிட்டி அதிகம் என்றால் அதில் சிறந்தவைகளை சுட்டிக்காட்டலாம்...

6. அக்கடமிக் ப்ரொபைல்...

இது எக்பீரியன்ஸ் ஆனவர்களுக்கு இரண்டு லைனில் முடித்துக்கொள்ளக்கூடியது...இளம்பொறியாளர்கள் விரிவாக எழுதவேண்டும்...

Academic Profile:

M.Sc (C.S) Bharathidasan University, Trichy 1999-2001 61.66 %
B.Sc (C.S) Bharathidasan University, Trichy 1996-1999 60.00 %

இவ்வாறு எக்பீரியன்ஸ் உள்ளாவர்கள் எழுதலாம்...இளம்பொறியாளர்கள் டேபிள் பார்மட்டில் அழகாக வடிவமைக்கலாம்...(இளம்பொறியாளர்களுக்கான எடுத்துக்காட்டு ரெஸ்யூம் தரவிறக்கம் (Download) செய்யும் வகையில் கீழே வர உள்ளது...அதில் இருந்து இளம்பொறியாளர்கள் எடுத்துக்காட்டை பெற்றுக்கொள்ளலாம்..

7. பர்ஸனல் டீட்டெயில்

இந்த பகுதி எப்போதுமே இறுதிப்பகுதியாக வரும்படி அமைத்துக்கொள்ளவேண்டும்...குறைந்த பட்ச விவரங்களை எழுதலாம்...உங்கள் ரெஸ்யூமில் இது தனியான ஒரு பக்கத்தில் வரும்படி அமைக்கலாம்...(கடைசி பக்கத்தில்)...

Passport No : E1614326
Date of Expiry : 05/05/2012
Date of Birth : 15/06/1976
Marital status : Married
Language Known : English, Tamil.
Address ( Temp / Perm) :

இறுதியாக, உங்கள் ரெஸ்யூமில் உங்கள் புகைப்படத்தை போட்டால் மிகவும் நன்று...!!! நல்ல வரவேற்ப்பு கிடைக்கும்...வலது பக்க மூலையில் வரும்படி அமைக்கவும்...

உங்கள் ரெஸ்யூம் அல்லது தகவல் தகுதி சீட்டு பணிவாய்ப்புக்கான உங்களது விசிட்டிங் கார்டு...எப்படி ஒரு விற்பனை பிரதிநிதி தன்னுடைய பொருட்களை எல்லாம் தனது விசிட்டிங் கார்டில் பிரிண்ட் செய்து தருகிறாரோ, அதே போல் உங்களையே மார்க்கெட்டிங் செய்ய நீங்கள் அமைக்கும் விசிட்டிங் கார்டு தான் உங்கள் ரெஸ்யூம்...அதனை சிறப்பாக அமைக்க கவனம் செலுத்தினாலதான் நன்றாக விற்க முடியும் உங்களை :)...
கண்றாவியாக காட்சியளிக்கும் ரெஸ்யூமை குப்பைத்தொட்டிக்கு அனுப்பிவிட்டு தரமானதாக உங்கள் ரெஸ்யூமை மாற்றினால் வரவேற்பு நிச்சயம், பணிவாய்ப்பும் நிச்சயம்...

இங்கே சில ரெஸ்யூம் மாதிரிகள்

1. என்னுடைய ரெஸ்யூம்
2. நன்பன் ராம்கி ரெஸ்யூம்
3. அர்ச்சனா ரெஸ்யூம் ( இளம்பொறியாளர் - இப்போது இன்போசிஸில் )

#########################################
THIS EMAIL MESSAGE IS FOR THE SOLE USE OF THE INTENDED RECIPIENT(S) AND MAY CONTAIN CONFIDENTIAL AND PRIVILEGED INFORMATION. ANY UNAUTHORIZED REVIEW, USE, DISCLOSURE OR DISTRIBUTION IS PROHIBITED.BEFORE OPENING ANY ATTACHMENTS PLEASE CHECK FOR VIRUSES AND DEFECTS.IF YOU ARE NOT THE INTENDED RECIPIENT, PLEASE NOTIFY US IMMEDIATELY BY REPLY E-MAIL AND DELETE THE ORIGINAL MESSAGE.
#########################################

10 comments:

Anonymous said...

ரெஸ்யூம் இளம்பொறியாளர்கள் என்றால் இரண்டு பக்கமும், எக்ஸ்பீரியன்ஸ் மக்கள் என்றால் நான்கில் இருந்து ஐந்து பக்கங்களுக்கும் மிகாமல் இருத்தல் நலம்...

மியாவ் said...

//இங்கே சில ரெஸ்யூம் மாதிரிகள்

1. என்னுடைய ரெஸ்யூம்
2. நன்பன் ராம்கி ரெஸ்யூம்
3. அர்ச்சனா ரெஸ்யூம் ( இளம்பொறியாளர் - இப்போது இன்போசிஸில் )//

ரெஸ்யூம் மாதிரிகளைக் காணவில்லையே?

Anonymous said...

//ரெஸ்யூம் மாதிரிகளைக் காணவில்லையே? //

ரிபீட்டே..

Anonymous said...

நல்ல பணி! வாழ்த்துக்கள் செந்தழல்ரவி.

சீக்கரமே உங்களுக்கு கல்யாணம் நடக்கட்டும்.

Anonymous said...

உபயோகமான பதிவு. தேசிபண்டில் இணைத்துள்ளென். நன்றி.

http://www.desipundit.com/2007/03/28/resume/

Anonymous said...

நன்றி டுபுக்கு...!!!!

Hari said...

Ravi,
a small clarification. Diff between CV & Resume? Any idea on this?

Anonymous said...

ஹரி

சி.வி ன்னா எக்ஸ்பீரியன்ஸ் மக்கள் வைச்சிருக்கறது சி.வி. காரணம் அது ஒரு கரிக்குலம் ( ஏற்க்கனவே கரியர் ரெக்கார்ட் இருக்கவங்களுக்கு)

ரெஸ்யூம் என்பது பொதுவாக இளம்பொறியாளர்கள் வைத்திருப்பது...காரணம் அவர்களுக்கு முன் அனுபவம் எதுவும் கிடையாது இல்லையா...

இது தான் எனக்கு தெரிந்தது...மற்ற மக்கள் என்ன சொல்றாங்களோ...

Anonymous said...

links to the example resumes are broken please update them

Anonymous said...

Dear Sir,

i am thinking to start a small web design company... but i dont know how to get the license...can you give some ideas for my process...