தேடுதல் வேட்டை

Thursday, March 29, 2007

நேர்முக தேர்வினை சந்தித்தல்

கடந்த பதிவில் நேர்முக தேர்வுக்கான தயாரித்தலை சொல்லியாயிற்று. இந்த பதிவில் நேர்முக தேர்வை சந்திக்கும்போது எப்படி நடந்துகொள்ள வேண்டும் என்பதை எனக்கு தெரிந்தவகையில் சொல்கிறேன்...

கடந்த பதிவில் சொல்லியது போல நேர்முக தேர்வுக்கு சரியான நேரத்துக்கு சென்று அமர்ந்து காத்திருந்து சென்றால் படபடப்பின்றி கேள்விகளுக்கு நன்கு பதில் சொல்லலாம் என்று கூறினேன்...

நேர்முக தேர்வில் முக்கியமான விடயம் என்னவென்றால் நமது பாடி லாங்குவேஜ் (Body Language) சிறப்பாக இருக்கவேண்டும்...இது பற்றி பல புத்தகங்கள், பல இணைய தளங்கள் இருக்கின்றன...எனக்கு தெரிந்தவற்றை மட்டும் இங்கே கூறுகிறேன்...

பொதுவாக நீங்கள் ரிசப்ஷனில் அமர்ந்திருப்பீர், இண்டர்வியூ எடுப்பவர் வந்து உங்களை அழைத்து செல்வார், அல்லது ஹெச்சார் (HR) எக்ஸிகியூட்டிவ் வந்து அழைத்து செல்வார்....அல்லது உங்களை ஒரு அறையில் காத்திருக்கச்சொல்லி நேர்முக தேர்வை நடத்துபவர் உள்ளே வருவார், அல்லது நீங்கள் நேர்முக தேர்வை நடத்துபவர் அமர்ந்திருக்கும் அறைக்கு செல்லவேண்டியதாக இருக்கும்...இவை தான் எனக்கு தெரிந்த பாஸிபிள் சினாரியோக்கள்...

நேர்முக தேர்வை நடத்துபவர் இருக்கும் அறைக்குள் நீங்கள் நுழைந்தால் GooD Morning / Good Evening சமயத்துக்கு தக்கவாறு சொல்லி உள் நுழையுங்கள்...

தேர்வாளர் அமரச்சொன்னவுடன் மட்டும் அமருங்கள்..

தேர்வாளருடன் கை-குலுக்கி பணிவாக தலையை சற்றே முன்னே சாய்த்து உங்களை அறிமுகப்படுத்திக்கொள்ளலாம்...

இந்த நேரத்தில் உங்கள் பெயரை அழுத்தமாக உச்சரிக்கலாம்..

தேர்வருடைய பெயரை அவர் சொல்லும்போது தெளிவாக காதில் வாங்கிக்கொள்ளவேண்டும்...

கை குலுக்கும்போது உங்கள் இதய தன்னம்பிக்கை அந்த குலுக்கலில் வெளிப்படவேண்டும்...மொன்னையாக ஏனோதானோவென்று கை-குலுக்காமல் உறுதியுடன் இறுக்கமாக பிடித்து குலுக்கவேண்டும்...

புன்னகை தவழும் முகம் கொள்ளவும்...இறுக்கமாக முகத்தை வைத்துக்கொள்ளவேண்டாம்...

ஒன்றை மட்டும் நியாபகம் வைத்துக்கொள்ளுங்கள்...அவர் உங்கள் பள்ளி ஆசிரியரோ அல்லது நீங்கள் மாணவரோ அல்ல...வேலை கேட்கிறீர்கள்...கொடுப்பதோ கொடுக்காததோ அவங்க இஷ்டம்..நம்மளோட திறமையை பார்த்து வேலை கொடுக்கட்டும்...நாம ஒன்னும் பிச்சை கேக்கல...இவ்வளவு அழுத்தமான வார்த்தைகளை உபயோகப்படுத்துவதற்க்கு மன்னிக்கவும், இருந்தாலும் அதுதான் உண்மை..அதனால் உங்கள் தன்னம்பிக்கையை எந்த வினாடியிலும் குறைய விடவேண்டாம்...நாம் இருப்பது ஒரு டெக்னிக்கல் டிஸ்கஷன் (Tech Discussion) என்ற மனநிலையில் மட்டும் அமருங்கள்...அவர் கேள்வி கேட்டு நாம் பதில் சொல்லவேண்டும் என்ற மனநிலையில் இருக்காதீர்....நமக்கு தெரிந்ததை பற்றி அறிந்து கொள்ள அவர் விழைகிறார்...நாம் நமக்கு தெரிந்த விடயங்களை அவரிடம் பகிர்ந்துகொள்ளப்போகிறோம்...இது தான் சினாரியோ...ஆகவே 200 சதவீத தன்னம்பிக்கையோடு நெஞ்சை நிமிர்ந்து இதய உரத்துடன் அமர்ந்திருங்கள்....

நேர்முக தேர்வரை நேராக பார்க்கவும்...கண்களை நேராக சந்திப்பதில் பயம் வேண்டாம்...எந்த நிலையிலும் நீங்கள் தன்னம்பிக்கையை தளர விடவில்லை என்றால் இது ஒரு பெரிய விடயம் அல்ல...மிகவும் எளிது...நேரடியாக கண்களை சந்தித்து பேசும்போது உங்கள் தன்னம்பிக்கை பலமடங்கு அதிகரிக்கும்...

கைகளை முன்னால் உள்ள டேபிள் மேலோ, உங்கள் கால்களின் மீதோ வைத்துக்கொள்ளலாம்...எக்காரணத்தை கொண்டும் தலையை சொறிவதோ, கைகளை தேவையில்லாமல் அசைப்பதோ வேண்டாம்...சில கேள்விகளுக்கு நீங்கள் கைகளை வைத்து விவரிக்கும் பாணியில் சொல்வது கண்டிப்பாக தவறல்ல...ஆனால் சினிமா டைரக்டர் பாரதிராஜா பாணியில் "என் இனிய தமிழ்மக்களே" என்று தேர்வருக்கு கதை சொல்லும் வகையில் கையை காலை ஆட்டிக்கொண்டிருக்க வேண்டாம்...

உடை...மிகவும் முக்கியமானதொரு விஷயம்...ஆள் பாதி ஆடை பாதி என்று ஒரு பதம் உள்ளதே...கண்களை உறுத்தாத மென்மையான நிறங்களால வெளிர் நீலம், வெள்ளை போன்ற உடைகள் நன்று...ராமராஜன் பாணியில் அதிரடியாக கண்ணை குத்தி குருடாக்கும் பச்சை சட்டை, வெள்ளை பேண்டு என்று நேர்முக தேர்வரை டரியல் ஆக்கவேண்டாம்....ஏ.வி.எம் சரவணன் பாணியில் வெள்ளை பேண்டு, வெள்ளை சட்டை என்று ஆவி மாதிரியும் போகவேண்டாம்...எந்த உடை உங்களுக்கு பொருத்தமாக பாந்தமாக இருக்கும் என்று உங்களுக்கு தெரியும் இல்லையா...அதே போல் செல்லவும்....கலாச்சாரத்துக்கு தகுந்த உடை...பெண்கள் அதுக்காக ஸேரியிலே போகவேண்டும் என்று நான் சொல்லவில்லை...ஜீன்ஸில் போகாமல் இருந்தால் போதும்...வேலை கொடுத்த பிறகு ஒரே ஜீன்ஸை வாரம் முழுக்க போட்டு டரியல் ஆக்கலாம்...ஆனால் நேர்முக தேர்வில் வேண்டாமெ...மென்மையான நிறத்தில் உறுத்தாத ஒரு சுரிதார்...அவ்வளவுதேன்...

கேள்விக்கு பதில் தெரியலைன்னா என்ன செய்யறது...இது ரொம்ப முக்கியமான கேள்வி...பதில் தெரியாத கேள்வி வந்துவிட்டது...உங்களுக்கு நன்றாக தெரியும்...உங்கள் பதில் ஒரு நிச்சய சொதப்பல் என்று...பேசாமல் "I want to skip it" என்றோ "i dont have much idea about this sir" என்றோ அழகாக சொல்லலாம்...இது வீண் நேர விரயங்களையும், தேர்வர் உங்கள் மீது வைத்துள்ள மதிப்பை சரித்து விடாமலும் காக்கும்....இந்த வகையில் ஒரு சில கேள்விகளுக்கு பதில் அளிக்காமலும் நீங்கள் நேர்முக தேர்வில் வெற்றி பெறலாம்...

கேள்விகள் கேட்டுக்கொண்டிருக்கிறார் தேர்வாளார்...உங்களுக்கு நாக்கு மேல் அண்ணத்தில் ஒட்டி பேச்சு வர மறுக்கிறது...திடீர் படபடப்பு வந்து ஒட்டிக்கொள்கிறது...நாம் எப்படியும் தேர்வாகப்போவதில்லை என்று உள்ளம் கத்துகிறது...இந்த நிலையில் மென்மையாக "Can I have a Cup of Water" என்று கேட்டால் கண்டிப்பாக வரவழைத்து கொடுப்பார்கள்....இதன் மூலம் கிடைக்கு ஐந்து நிமிடத்தில் நீங்கள் கொஞ்சம் சுதாரிக்கலாம்...சூழ்நிலையை எடைபோடலாம்...தேர்வர் கேள்வி கேட்பதை விடுத்து வேறு விஷயம் ஏதாவது பேச முனையலாம்.....இதன் மூலம் தேர்வருக்கும் உங்களுக்கும் இடையேயான இறுக்கமான சூழ்நிலை சட்டென மறைந்து, இணக்கம் உருவாகும்...தேர்வர் உங்களுக்கு கிட்டத்தட்ட உதவி செய்யும் மன நிலைக்கு தள்ளப்படுவார்...இதெல்லாம் பயங்கர மனோதத்துவ கயமையில் சேரும்...இப்படி என்னால் கொடுக்கப்பட்ட சில ஐடியாக்கள் பாலோ செய்யப்பட்டு / பரிசோதிக்கப்பட்டு பெரிய வெற்றி அடைந்துள்ளது...ஹி ஹி..வெற்றின்னா, வேலை கிடைக்கறது தான்..

இறுதியாக நீங்கள் ஏதாவது கேட்க விரும்புகிறீர்களா என்ற கேள்விக்கு எந்த டெக்னிக்கல் கொஸ்டினையும் கேட்டுத்தொலையாதீர்கள்...கேள்வி கேட்காமலும் இருக்கவேண்டாம்..."What will be my role in this organization" என்று கேட்கலாம்..."what are all the upcoming projects in the company" என்று கேட்கலாம்.."what are all the projects you are currently working on" என்றும் கேட்கலாம்...அல்லது சந்தர்ப்பத்துக்கு தகுந்தமாதிரி இண்டலிஜெண்டாக ஏதாவது கேள்வி கேட்கலாம்...தமிழனுக்கு கேள்வி கேட்க என்ன சொல்லியா தரவேண்டும்...
"what is the possibility of getting this job" என்று நடைபெறும் நேர்முகத்தேர்வுக்கான ரிசல்ட்டை கண்டிப்பாக கேட்கக்கூடாது...

இறுதியாக விடைபெறும்போதும் மென்மையாக தலையை முன்பக்கம் சாய்த்து புன்னகையோடு விடைபெற வேண்டும்...உங்களை நேர்முக தேர்வை நடத்தியவரின் பெயரை கண்டிப்பாக நியாபகம் வைத்துக்கொள்ளவேண்டும்....உங்களை நேர்முக தேர்வு அறையில் இருந்து வெளியேறுமாறு கூறினால் கதவை மென்மையாக திறந்து வெளியேறும்போது மீண்டும் கதவை சாத்திவிட்டு செல்லலாம்...அது உங்கள் பொறுப்புணர்ச்சியை காட்டும் வகையில் அமையும்.....திரும்பி பார்ப்பதோ, பரிதாபமான வகையில் தேர்வரை நோக்குவதோ கூடாது...

நிறுவனத்தின் தொலைபேசி எண்ணை பெற்றுக்கொள்ளவேண்டும்..இரண்டு நாளில் ரிசல்ட் சொல்வதாக சொன்னால் இரண்டு நாளில் தொலைபேசியில் அழைத்து, உங்கள் நிலை பற்றி தெரிந்துகொள்ள வேண்டும்...தேவையின்றி காத்திருத்தல் தவிர்க்கப்படும்..அடுத்த தேர்வுகளுக்கு தயாரிக்கலாம் அல்லவா...


இதை விட மிக முக்கியமான விடயம், வீட்டுக்கு வந்தவுடன், என்ன என்ன கேள்விகள் கேட்கப்பட்டது என்று ஒரு சிறிய குறிப்பேட்டில் எழுதிக்கொள்ளவேண்டும்....ஏதாவது தெரியாத கேள்விகள் இருந்தால் அதற்கான விடையை நன்பர்களிடம் கேட்டோ, புத்தகங்களில் / இணையத்தில் படித்தோ தெரிந்துகொள்ள வேண்டும்...இது போது ஐந்து நேர்முக தேர்வுகளுக்கு பிறகு செய்தால் நீங்கள் வேலை தேடும் பிரிவில் என்ன என்ன கேள்விகள் வரும் என்பது தெரிந்துபோகும்...வேறு கேள்விகள் எழ வாய்ப்பே இல்லை தோழர்/தோழிகளே...

இந்த பதிவில் எனக்கு தெரிந்த / நியாபகம் வந்த சில விஷயங்களை கொடுத்துள்ளேன்...மற்ற பதிவர்கள் அவர்கள் அனுபவங்களையோ / ஐடியாக்களையோ பகிர்ந்துகொள்ளவேண்டும்...

அடுத்த பதிவில்

* ரெஸ்யூம் கயமை (Fake) - எப்படி செய்வது ?
* சர்ட்டிபிக்கேட் கயமை என்றால் என்ன ?
* ஆங்கில அறிவை வளர்த்துக்கொள்வது பற்றி
* வாசகர்கள் கேட்கும் கேள்விகளுக்கு பதில்கள்

மீண்டும் சந்திக்கிறேன், அதுவரை வாழ்த்துக்கள்...!!!!

#########################################
THIS EMAIL MESSAGE IS FOR THE SOLE USE OF THE INTENDED RECIPIENT(S) AND MAY CONTAIN CONFIDENTIAL AND PRIVILEGED INFORMATION. ANY UNAUTHORIZED REVIEW, USE, DISCLOSURE OR DISTRIBUTION IS PROHIBITED.BEFORE OPENING ANY ATTACHMENTS PLEASE CHECK FOR VIRUSES AND DEFECTS.IF YOU ARE NOT THE INTENDED RECIPIENT, PLEASE NOTIFY US IMMEDIATELY BY REPLY E-MAIL AND DELETE THE ORIGINAL MESSAGE.
#########################################

11 comments:

Anonymous said...

good post. keep it up man,

Anonymous said...

ஜடாயு புதிதாக எழுதி இருக்கும் பதிவின் குறிசொல்லைப் பாருங்கள்.

பெயரிலியின் அம்மாவைப் பற்றி தவறாக எழுதி இருக்கிறான்.

இதற்கும் மேலா அவன் தமிழ்மணத்தில் நீடிக்க வேண்டும்?

http://jataayu.blogspot.com/2007/03/blog-post_1084.html

வடுவூர் குமார் said...

தேர்வாளர் அமரச்சொன்னவுடன் மட்டும் அமருங்கள்..
இங்கு அப்படியில்லை.
நம்மூரில் கேட்பது மாதிரி "நான் உன்னை உட்காரச்சொல்லவில்லையே" என்று நக்கலாக கேட்டால்,கவுண்டமணி மாதிரி "அப்புறம் ஏண்டா இங்க சேரெ போட்டிருக?" என்று கேட்டுவிடுவார்கள்.
இந்த பழக்கம் இன்னும் அங்கு மாறவில்லை போல.

Anonymous said...

ஜடாயு புதிதாக எழுதி இருக்கும் பதிவின் குறிசொல்லைப் பாருங்கள்.

பெயரிலியின் அம்மாவைப் பற்றி தவறாக எழுதி இருக்கிறான்.

இதற்கும் மேலா அவன் தமிழ்மணத்தில் நீடிக்க வேண்டும்?

http://jataayu.blogspot.com/2007/03/blog-post_1084.html

Anonymous said...

///தேர்வாளர் அமரச்சொன்னவுடன் மட்டும் அமருங்கள்..///

இது வந்து ஒரு வகையான மனோதத்துவ அட்டாக்...நான் ரொம்ப நல்லவன், சொன்ன பேச்ச கேட்டுப்பேன் அப்படீங்கறமாதிரி...

:)))

நாமக்கல் சிபி said...

உருப்படியான அவசியமான பதிவு!

பயன்படுத்திக் கொள்ளாவிடினும் அநாவசியமான பின்னூட்டங்களைத் தவிர்க்கலாமே நண்பர்களே!

தகடூர் கோபி(Gopi) said...

செந்தழல் ரவி,

நல்ல பதிவு. பல நுனுக்கமான விசயங்களை தெளிவாக சொல்லியிருக்கீங்க.

ஏதாவது நிறுவனத்தின் நேர்முகத் தேர்வுக் குழுவுல இருக்கீங்களா/இருந்தீங்களா?

சில விசயங்களை பட்டுன்னு போட்டு உடைச்சீட்டீங்க.

உதாரணமா,

//இறுதியாக நீங்கள் ஏதாவது கேட்க விரும்புகிறீர்களா என்ற கேள்விக்கு எந்த டெக்னிக்கல் கொஸ்டினையும் கேட்டுத்தொலையாதீர்கள்...கேள்வி கேட்காமலும் இருக்கவேண்டாம்..."What will be my role in this organization" என்று கேட்கலாம்..."what are all the upcoming projects in the company" என்று கேட்கலாம்.."what are all the projects you are currently working on" என்றும் கேட்கலாம்...அல்லது சந்தர்ப்பத்துக்கு தகுந்தமாதிரி இண்டலிஜெண்டாக ஏதாவது கேள்வி கேட்கலாம்...தமிழனுக்கு கேள்வி கேட்க என்ன சொல்லியா தரவேண்டும்...
"what is the possibility of getting this job" என்று நடைபெறும் நேர்முகத்தேர்வுக்கான ரிசல்ட்டை கண்டிப்பாக கேட்கக்கூடாது...//

//கேள்விக்கு பதில் தெரியலைன்னா என்ன செய்யறது...இது ரொம்ப முக்கியமான கேள்வி...பதில் தெரியாத கேள்வி வந்துவிட்டது...உங்களுக்கு நன்றாக தெரியும்...உங்கள் பதில் ஒரு நிச்சய சொதப்பல் என்று...பேசாமல் "I want to skip it" என்றோ "i dont have much idea about this sir" என்றோ அழகாக சொல்லலாம்...//

நான் பார்த்த வரையில் உடை விசயத்தில் பொதுவாக பன்னாட்டு நிறுவனங்கள் பெரிதும் கவனிப்பதில்லை.

அது
ஜீன்ஸாகவோ சுரிதாராகவோ அல்லது வேறு எதுவாகவோ இருக்கலாம். உறுத்தாத உடையாய் இருந்தால் போதும்.

இந்திய நிறுவனங்களிலும் சேவை அடிப்படையிலான(Service Based) நிறுவனங்களிலும் தான் சமயத்துல தூக்கு கூட மாட்டிக்க வேண்டிய தொல்லை (Tie கட்டுறத நாங்க அப்படித்தான் சொல்லுவோம்) இருக்கு.

Anonymous said...

ஏதாவது நிறுவனத்தின் நேர்முகத் தேர்வுக் குழுவுல இருக்கீங்களா/இருந்தீங்களா?

ம்...:) அதுக்கு முன்னால வேலைக்கு அலைந்தேன், பல இண்டர்வீயூக்களில் முட்டி மோதினேன். ஹி ஹி

பின்னூட்டத்துக்கு நன்றி கோபி.

Anonymous said...

ravi,,thank u so much..

Anonymous said...

உருப்படியான அவசியமான பதிவு!

பயன்படுத்திக் கொள்ளாவிடினும் அநாவசியமான பின்னூட்டங்களைத் தவிர்க்கலாமே நண்பர்களே!

ALIF AHAMED said...

good post

ரெண்டு முனு வாட்டி படிக்கனும்


thanks